Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
ஆணையர் குறிப்பிட்ட துறை தொடர்பான மேல்முறையீடு முதலியவற்றில் நீதி வழங்கும் முறையில் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நிர்வாக அதிகாரிcommissioner
ஆத்தா(ள்) தாய் mother
ஆத்மசுத்தி மனத் தூய்மைpurity of heart
ஆத்ம ஞானம் தன்னைப்பற்றி அல்லது ஆன்மாவைப்பற்றி உணர்ந்து அறிவதுself-realization
ஆத்ம ஞானி தன்னைப்பற்றியும் ஆன்மாவைப்பற்றியும் உணர்ந்து அறிந்தவன்one who has achieved self-realization
ஆத்ம நண்பன் உயிர் நண்பன்bosom friend
ஆத்மார்த்தம் (நட்பு, பழக்கம், பேச்சு முதலியவை குறித்து வருகையில்) எந்த விஷயத்தையும் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளக் கூடிய நெருக்கம்oneness of mind
ஆதங்கம் (இவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டாம் அல்லது நிகழ வேண்டும் என்ற) கவலைfeeling of regret or feeling of anxiety
ஆதர்ச மிகச் சிறந்தideal
ஆதரவாளர் (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் வளர்ச்சிக்கு) ஆதரவு தருபவர்supporter
ஆதரவு (ஓர் அமைப்பின் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் உறுப்பினருக்கும்) துணைநிற்கும் ஒத்துழைப்புsupport
ஆதரி ஒத்துழைப்பு வழங்குதல்support
ஆதலால் ஆகையால்therefore
ஆதனம் சொத்துproperty
ஆதாம் கடவுள் படைத்த முதல் மனிதன்adam
ஆதாயம் லாபம்(monetary) profit
ஆதாரபூர்வமாக/ஆதாரபூர்வமான தகுந்த சான்றுகளுடன்/தகுந்த சான்றுகளுடன் கூடியauthentically
ஆதாரம் (ஒன்றின்) ஆரம்ப இடம் அல்லது மூலம்origin
ஆதிதிராவிடர் (தமிழ்நாட்டில்) அரிஜனம்(in Tamil Nadu) member of the Harijan community
ஆதியோடந்தமாக ஆரம்பம்முதல் முடிவுவரைfrom the beginning to the end
ஆதிவாசி தொன்றுதொட்டு வாழும் சமூகம்ancient community (of a land)
ஆதினம்/ஆதீனம் ஒரு குருவால் தோற்றுவிக்கப்பட்டுச் சைவத்தைப் பரப்புவதற்குச் சைவத் துறவிகளால் நிர்வகிக்கப்படும் அமைப்புan organization founded by a religious teacher for the propagation of Saivism and later managed by his celibate disciples
ஆந்தை (மரப் பொந்தில் வாழும்) இரவில் இரை தேடும், பெரிய கண்களை உடைய பறவைowl
ஆப்பம் நடுப்பகுதி தடிப்பாகவும் ஓரம் மெல்லியதாகவும் இருக்கும் தோசை போன்ற உணவுப் பண்டம்rice preparation similar to தோசை but thicker in the middle
ஆப்பு (மரம் முதலியவற்றைப் பிளக்க அதன் வெடிப்பில் வைத்து) அடித்து உள் இறக்கப்படும் கூம்பு வடிவ மரக்கட்டை அல்லது இரும்புத் துண்டுwedge
ஆபத்து இழப்பு அல்லது தீங்கு ஏற்படும் சாத்தியக்கூறுdanger
ஆபரணம் (பெரும்பாலும் தங்கத்தாலான) அணிகலன்(mostly gold) ornament
ஆபாசம் கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டிவிடக் கூடியதுpornography
-ஆம்3(ஓர் எண்ணோடு இணைக்கப்படும்போது) தொடர்ச்சியில் வரிசையை அல்லது நிலையைக் காட்டப் பயன்படுத்தப்படுவதுordinal suffix
ஆமணக்கு விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் கரும் பழுப்பு நிற விதை/மேற்குறிப்பிட்ட விதையைத் தரும், ஐந்து பிரிவாகப் பிரிந்த இலையைக் கொண்ட செடிcastor seed or plant
ஆமவடை மசால் வடைa kind of வடை
ஆமை பாதுகாப்புக்காகக் கால்களையும் தலையையும் தன் மேலோட்டின் உள்ளே இழுத்துக்கொள்வதும் மெதுவாக நகர்ந்து செல்வதுமான பிராணிtortoise
ஆமோதி ஒப்புக்கொள்ளுதல்approve
ஆய்1(கீரை, அவரை முதலியவற்றிலிருந்து காம்பு, வேர் போன்ற வேண்டாத பகுதிகளை) கிள்ளிக் களைதல்/(மீனின் செதில், நண்டின் ஓடு முதலியவற்றை) நறுக்கி எடுத்தல்nip off (the unwanted parts such as stalk, root, etc, from greens, beans, etc.)/remove (the scales of a fish)
ஆய்2ஆக2 என்பதன் (மூன்றாவது பொருளையும் நான்காவது பொருளையும் ஏழாவது பொருளையும் தவிர்த்து) எல்லாப் பொருள்களிலும்in all the senses of ஆக2 (except 3, 4 and 7)
ஆய்தம் இரு புள்ளிகள் கீழும் ஒரு புள்ளி மேலுமாக உள்ள (ஃ) வரிவடிவத்தையும் குரல்வளையில் உரசிக்கொண்டு வரும் உச்சரிப்பு முறையையும் கொண்ட ஒலிone of the letters of the Tamil alphabet represented by three dots (ஃ) and pronounced as a velar fricative
ஆய்வாளர் ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது தேர்ந்தெடுத்த தலைப்பில் ஆராய்ச்சி செய்பவர்researcher
ஆய்வு ஆராய்ச்சிresearch
ஆய்வுக்கூடம் (அறிவியல் துறை முதலியவற்றில்) சோதனைகளுக்குத் தேவையான கருவிகள் இருக்கும் இடம்laboratory
ஆய்வேடு (பெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்களில்) ஒரு குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தும் கட்டுரைthesis
ஆயக்கட்டு பாசன வசதிமூலம் பயன் பெறும் நிலப் பரப்புthe area which is benefited by irrigation
ஆயத்த ஆடை தேவையான அளவுகளில் தைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கும் ஆடைready-made garments
ஆயத்தம் (நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக அல்லது செயலுக்காக மேற்கொள்ளும்) திட்டமிட்ட ஏற்பாடுpreparations
ஆயத்தீர்வை (உள் நாட்டில்) தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் தீர்வைexcise duty
ஆயம் ஆயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிdiocese
ஆயர் இடையர் cowherd
ஆயா (வீட்டில் அல்லது பள்ளியில்) குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் பணிப்பெண்housemaid (looking after children at home or in school)
ஆயாசம் (உடல்) களைப்பு(மன) சோர்வு(physical) tiredness
ஆயிரம் நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு(one) thousand
ஆயில்யம் இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்பதாவதுthe ninth of the twentyseven stars
ஆயுத பூஜை நவராத்திரிப் பண்டிகையின் கடைசி நாளில் அவரவர் தம் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்குச் செய்யும் பூஜைworship of the tools, implements that the artisans, farmers and others use in their profession, on the last day of நவராத்திரி
ஆயுதம் போரில் பயன்படுத்தும் கருவிweapons of war
ஆயுர்வேதம் பெரும்பாலும் மூலிகை மருந்துகளைக் கொண்டு நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் இந்திய மருத்துவ முறைan Indian system of medicine which administers herbal preparations to cure diseases
ஆயுள் உயிர் வாழும் காலம்life-time
ஆயுள் காப்பீடு உயிர் இழப்புக்கு ஈட்டுத்தொகை கிடைக்க வகைசெய்யும் ஒப்பந்தம்life insurance
ஆயுள் கைதி ஆயுள் தண்டனை பெற்ற கைதிperson sentenced to life imprisonment
ஆயுள் தண்டனை கொலை, தேசத் துரோகம் போன்ற கொடிய குற்றங்கள் புரிந்தவர் தம் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படியாகப் பெறும் தண்டனைlife imprisonment
ஆயுள்ரேகை (கைரேகை சோதிடத்தில்) ஒருவரின் ஆயுள்காலத்தைக் காட்டுவதாக இருக்கும் ரேகை(in palmistry) line of life
ஆர்ப்பரி (கடல், அலை) ஓசை எழுப்புதல்(of sea, waves) roar
ஆர்ப்பாட்டம் (ஒரு கோரிக்கையை வலியுறுத்தி அல்லது ஒன்றை எதிர்த்து) பலர் கூடி எழுப்பும் கோஷங்களுடன் கூடிய கூச்சல்demonstration
ஆர்மோனியம் காற்றை உட்செலுத்தி மேற்புறக் கட்டைகளை விரலால் அழுத்தி வாசிக்கும், பெட்டி வடிவமுள்ள ஓர் இசைக் கருவிharmonium
ஆர்வம் முயற்சிசெய்யத் தயாராக இருக்கும் உந்துதல்interest
ஆர்வலர் (ஒரு குறிப்பிட்ட துறையில்) ஈடுபாடு உடையவர்enthusiast
ஆர்ஜிதம் (தனிப்பட்டவர் நிலத்தை நஷ்ட ஈடு கொடுத்து) ஏதேனும் ஒரு பொது நன்மைக்கு அரசு எடுத்துக்கொள்ளுதல்acquisition (of land)
ஆரக்கால் வண்டிகளில் பொருத்தப்படும் மரச் சக்கரத்தின் குறுக்குக் கால்spoke of a wooden wheel (of a cart)
ஆரத்தி (மணமக்கள், பெரியவர்கள் முதலியோரை வரவேற்கும்போது) மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த சிவந்த நீர் கொண்ட தட்டுa plate containing water mixed with turmeric and lime waved before newly married couple or important persons
ஆரம்1மாலை garland
ஆரம்பச் சுகாதார நிலையம் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்கு அல்லது இத்தனை கிராமங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைக்கப்படும் அடிப்படை மருத்துவ வசதி நிறைந்த ஓர் அரசு மருத்துவமனைprimary Health Centre (organized by the government)
ஆரம்பம் தொடக்கம்beginning
ஆரம்பி தொடங்குதல்begin
ஆரவாரி (அலை) பெரும் ஓசையிடுதல்(of waves) roar
ஆராதனை (மலரிடுதல், தீபம் காட்டுதல் போன்றவற்றால் தெய்வத்துக்குச் செய்யும்) வழிபாடுworship (by offering flowers, lighting lamps, etc.)
ஆராதி வழிபடுதல்worship
ஆராய் (பின்புலத் தகவல்களை அறிவதற்காக) விசாரித்தல்(உண்மையை அறிவதற்காக) பரிசீலித்தல்make a thorough search
ஆராய்ச்சி ஒன்றின் தன்மை, தரம், அடிப்படை முதலியவற்றை அல்லது புதிய உண்மைகள் போன்றவற்றைக் கண்டறிவதற்காகக் கருவிகளைக்கொண்டோ அறிவின் திறத்தாலோ செய்கிற சோதனைresearch
ஆரியம் சமஸ்கிருதம்sanskrit
ஆருடம் ஒருவர் மனத்தில் நினைத்து வந்த காரியம் எவ்வாறு முடியும் என்பதைச் சில குறிகளால் அறிந்து கூறும் ஒரு வகைச் சோதிடம்foretelling by divination
ஆருயிர் (காதலிப்பவரைக் குறிக்கும்போது) உயிருக்கு உயிரானவர்term of endearment used by lovers
ஆரோக்கியம் நோய் இல்லாமல் சுகமாக இருக்கும் நிலைgood health
ஆரோகணம் ஏழு ஸ்வரங்களையும் படிப்படியாகக் கீழிருந்து மேலாக ஒலி அளவில் உயர்த்தும் முறைascending scale of the seven notes from the basic to the highest
ஆரோகணி (ஒன்றின் மீது ஏறி) அமர்தல்mount (a horse, etc.)
ஆலக்கரண்டி (நெருப்பில் காட்டித் தாளிக்கப் பயன்படுத்தும்) நீண்ட கைப்பிடியுடைய இரும்புக் கரண்டிiron ladle with a long handle (to be kept on the fire to fry the spices for seasoning)
ஆலங்கட்டி உறைந்து கட்டியாகி விழும் மழை நீர்hail (stone)
ஆலமரம் உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பி விழுதுகள் விட்டு நீண்ட காலம் இருக்கக் கூடிய பெரிய மரம்banyan (tree)
ஆலயம் கோயில்temple
ஆலவட்டம் (பழங்காலத்தில்) கோயில் உற்சவத்தில் அல்லது அரச ஊர்வலத்தில் முன்னால் எடுத்துவரும் (துணி, நறுமண வேர் அல்லது பனையோலை ஆகியவற்றால் ஆன) வட்ட வடிவப் பெரிய விசிறிa large circular fan (made of cloth, fragrant roots or palm leaf) taken in front of the procession of idols of deities, kings and great persons
ஆலா பருந்துeagle
ஆலாபனை ராகத்தின் வடிவத்தைப் பாடமோ தாளமோ இல்லாமல் விரிவாக வெளிப்படுத்தும் முறைthe free rendering of a ராகம் in such a way as to bring out its form without reference to தாளம் or words
ஆலாய்ப்பற குறிப்பிட்ட ஒன்றை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடித்தல்lust or clamour for
ஆலிங்கனம் தழுவுதல்embrace
ஆலை இயந்திரங்கள்மூலம் பொருள்களை (பெரும் அளவில்) தயாரிக்கும் கூடம் அல்லது மூலப் பொருள்களிலிருந்து ஒன்றைப் பெறும் பணி நடக்கும் கூடம்factory
ஆலோசகர் (குறிப்பிட்ட துறையில் வல்லுநராக இருந்து) ஆலோசனை கூறுபவர்adviser
ஆலோசனை ஒருவர் மற்றொருவருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதன்மூலம் காட்டும் வழிமுறைguidance
ஆலோசி (ஒன்றை எவ்வாறு செய்யலாம் என்பதைப்பற்றி மற்றொருவருடன்) கலந்து பேசுதல்consult
ஆவக்காய் ஊறுகாய் ஒரு வகை மாங்காயை அரைத்த கடுகு முதலியவற்றோடு கலந்து தயாரிக்கும் ஊறுகாய்a kind of mango pickle with mustard paste, etc
ஆவணக்காப்பகம் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இடம்archives
ஆவணம் ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவுசெய்திருக்கும் படிவம்document
ஆவணி ஐந்தாம் தமிழ் மாதத்தின் பெயர்the name of the fifth Tamil month, i
ஆவல் (எதிர்பார்ப்புடன் கூடிய) விருப்பம்eagerness
ஆவனசெய் தேவையானவற்றைச் செய்தல்do what is needed or required
   Page 10 of 204    1 8 9 10 11 12 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil