Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
அறியா(த) அறிவு முதிர்ச்சி அடையாதimmature
அறியாமல் (ஒருவர் தன்னை) கட்டுப்படுத்த முடியாமல்(கட்டுப்பாட்டை மீறி) அனிச்சையாகunknowingly
அறியாமை அறிவு இல்லாமைignorance
அறிவாளி கூர்ந்த அறிவு உடையவர்man of knowledge
அறிவிப்பு நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடுannouncement
அறிவிப்புப் பலகை (சில அலுவலகங்களில் அல்லது பொது இடங்களில்) அறிவிப்புத் தாங்கிய அல்லது ஒட்டப்பட்ட பலகைnotice board (in offices or public places)
அறிவியல் உலகில் இருப்பவற்றை, இயற்கை நியதிகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு அல்லது மேற்குறிப்பிட்ட அறிவை வகைப்படுத்திய ஒரு துறைscience or branch of science
அறிவியல் கூடம் அறிவியல் செய்முறைப் பயிற்சி செய்வதற்குத் தேவையான கருவிகளுடன் அமைக்கப்படும் இடம்science laboratory
அறிவிலி அறிவு இல்லாதவர்ignorant person
அறிவீனம் முட்டாள்தனம்ignorance
அறிவு அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றுத் தெரிந்துவைத்திருப்பதுunderstanding gained by experience, thinking, etc
அறிவுரை நன்மை விளைவிக்கும் என்னும் நோக்கில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்துadvice
அறிவுறுத்து (தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல்instruct
அறிவுஜீவி சிந்தனையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்intellectual
அறு1(கயிறு, இழை, தந்திக் கம்பி முதலியன) துண்டாதல்(of rope, metal string, etc.) be cut off
அறு2(கூரிய பரப்புடைய ஒன்றை) முன்னும் பின்னும் நகர்த்தி வெட்டுதல்cut (as with a saw)
அறுகோணம் ஆறு (சம) கோணமுடைய வடிவம்hexagon
அறுசுவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு, கசப்பு ஆகிய ஆறு சுவைகள்the six kinds of tastes in relation to food viz
அறுதி (மாற்ற முடியாத) முடிவுfinal
அறுதிப்பெரும்பான்மை பிற கட்சிகளின் கூட்டு இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கைabsolute majority (for a political party)
அறுதியிடு வரையறுத்தல்state
அறுப்புக் கூலி பயிர் அறுவடை செய்பவர்களுக்கு அல்லது மரம், செங்கல் போன்றவற்றை அறுப்பவர்களுக்குத் தரப்படும் கூலிwages given to the workers employed for harvesting, sawing wood or making bricks, etc
அறுபதாம் கல்யாணம் ஒருவருக்கு அறுபது வயது நிறைகிறபோது, அவருடைய மகனாலும் மகளாலும் (மீண்டும் ஒரு திருமணம் போலவே) நடத்தப்படும் சடங்குa ceremony similar to marriage celebrated by the sons and daughters of one on his completing sixty years
அறுபது பத்தின் ஆறு மடங்கைக் குறிக்கும் எண்(the number) sixty
அறுவை (நோயுற்ற பாகத்தைக் குணப்படுத்த) அறுத்துச் செய்யப்படும் மருத்துவம்surgery
அறை2(விரித்த கை முதலியவற்றால் ஒரு பரப்பில்) வேகத்துடன் வந்து விழும் வலிக்கும்படியான தாக்கம்slap
அறை3வீட்டின் அல்லது கட்டடத்தின் உள்ளே கதவு, ஜன்னல் முதலியன வைத்துச் சுவரால் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்room (in a house)
அறைகூவல் (ஒரு பொது நன்மைக்கு) ஒத்துழைக்குமாறு விடுக்கப்படும் அழைப்புa call (for action or for cooperation)
அறைந்து (மூடு, சாத்து போன்ற வினைகளுடன்) சத்தத்துடன் பலமாக(with verbs such as மூடு, சாத்து) with a bang
அன்பளிப்பு ஒருவர் மீது கொண்டுள்ள அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவருக்குக் கொடுக்கப்படும் பொருள் அல்லது பணம்gift (given as an expression of affection)
அன்பு (-ஆக, -ஆன) ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வுaffection
அன்மொழித்தொகை விளக்கத் தொடராக உள்ளது அந்த விளக்கத்துக்கு உரியவரைச் சுட்டும் பொதுவான தொடராக ஆவதுan epithet which is transferred from the object to the person
அன்றாட தினசரிday-to-day
அன்றாடங்காய்ச்சி அன்றைய வருமானத்தைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை நடத்தும் ஏழைa poor person who makes his living only through his daily wages
அன்றாடம் ஒவ்வொரு நாளும்daily
அன்றி தவிரexcept
அன்றியும் (அதுவே) அல்லாமலும்apart from (what has been stated)
அன்று1அந்த நாள்that day
அன்று2(குறிப்பிட்ட) அந்த நாளில்on the (specified) day
அன்றைய அந்த நாளில் நடைபெற்றof the day (mentioned)
அன்னக்காவடி (அரிசி முதலியவற்றைப் பிச்சையாக ஏற்க) நீண்ட கழியின் இரு முனைகளிலும் பாத்திரத்தைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும் அமைப்புa long pole with a suspended bowl on either end to receive rice as alms
அன்னதானம் (ஓர் அறப்பணியாக அல்லது தெய்வக் கடனாக) ஏழைகளுக்கு வழங்கும் இலவச உணவுthe free distribution of food to the poor (as an act of charity or in fulfilment of a vow to a deity)
அன்னபூரணி பொருள் தருபவளாகக் கருதி வழிபடப்படும் தெய்வம்goddess of plenty
அன்னம்1உணவுfood
அன்னம்2(புராணத்தில்) பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடையதாகவும் (இலக்கியத்தில்) பெண்களின் அழகான நடைக்கு உதாரணமாகவும் கூறப்படும் ஒரு வெண்ணிறப் பறவைa white bird mentioned in legends said to have the discriminating capacity of isolating and drinking milk out of a mixture of water and milk and whose gait is a standard comparison for the elegance of a woman
அன்னவெட்டி (சோறு பரிமாறப் பயன்படுத்தும்) உள்ளங்கை வடிவில் அமைந்த உலோகக் கரண்டிa large flat metal spoon with a short handle, slightly hollow in the shape of the palm (to serve cooked rice)
அன்னாசி செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்ட ஒரு பெரிய பழம்pineapple
அன்னார் (முன்னர்) குறிப்பிடப்பட்டவர்person referred to (earlier)
அன்னியில் (முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல்apart from
அன்(னி)யோன்(னி)யம் (அன்பால் அல்லது நட்பால் ஏற்படும்) உறவின் நெருக்கம்intimacy
அன்னை தாய் mother
அனந்தம் கணக்கிட முடியாததுcountless
அனர்த்தம் தவறாகவும் திரித்தும் கொள்ளப்படும் பொருள்perverse or wrong sense
அனல் சூடு(radiating) heat
அனல் மின்நிலையம் நிலக்கரியை அல்லது எண்ணெய்யை எரித்துப் பெறும் வெப்பச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்திசெய்யும் நிலையம்thermal power station or plant
அனாதரவு உதவி அல்லது ஆதரவு அற்ற நிலைstate of helplessness
அனாதி தொடக்கம் இல்லாததுthat which has no beginning
அனாதி காலம் மிகப் பழங்காலம்ancient
அனாமத்து (பொருள்களைக் குறிப்பிடும்போது) யாருக்கும் சொந்தம் இல்லாததுthat which is not claimed by anyone
அனிச்சம் (இலக்கியத்தில்) முகர்ந்ததும் வாடிவிடக் கூடியதாகக் கூறப்படும் மென்மையான மலர்a flower said to be so delicate as to wilt and wither even at a slight sniff
அனிச்சை (மூளையின் கட்டளை இல்லாமல்) பழக்கத்தின் காரணமாக அல்லது தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்கிற தன்மைthat which is involuntary
அனுக்கிரகம் அருள்grace
அனுகூலம் (-ஆக, -ஆன) தேவையை நிறைவு செய்வதற்கான வகையில் அமைவது(of conditions) favourable
அனுங்கு (வேதனையில்) முனகுதல்groan (in pain)
அனுசரணை (ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் அல்லது ஒருவருடைய வேலையை எளிதாக்கும்) உதவிhelp (that is mutual or to ease the work load of another)
அனுசரி (கொள்கை, விரதம் முதலியவற்றை) மேற்கொள்ளுதல்observe
அனுசரித்து (ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்adjusting
அனுதாபம் (-ஆக) மற்றவர் அனுபவிக்கும் துன்பத்தைக் கண்டு ஒருவர் கொள்ளும் வருத்த உணர்வுsympathy
அனுதாபி (ஓர் அரசியல் கட்சியில் உறுப்பினராக இல்லாமல்) ஆதரவு தருபவர்sympathizer (mostly of a political party)
அனுதினமும் ஒவ்வொரு நாளும்every day
அனுப்பு (ஒருவரை) ஓர் இடத்துக்குப் போகச்செய்தல்(ஒன்றை) ஓர் இடம் சென்றடையச்செய்தல்send
அனுபந்தம் புத்தக முடிவில் இணைக்கப்படும் துணைத் தகவல்கள் appendix
அனுபல்லவி பல்லவியின் இரண்டாவது எழுத்தோடு ஒத்த இரண்டாம் எழுத்தைக் கொண்ட கீர்த்தனையின் இரண்டாவது உறுப்பு(in a musical composition) the second unit, the first word of which alliterates with the first word in the first unit
அனுபவசாலி நிறைந்த அனுபவம் உள்ளவன்a man of (rich) experience
அனுபவி (இன்பம் தருவதை) உணர்ந்து மகிழ்தல்enjoy
அனுபூதி உணர்ந்து பெறும் அறிவுknowledge through realization
அனுபோகம் ஒருவர் தன் வசத்தில் உள்ள உடமையை அனுபவிக்கும் உரிமைpossession
அனுமதி1(செய்ய/இருக்க/போக) விடுதல்/(ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு) சம்மதம் தருதல்allow
அனுமதி2(ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும்) சம்மதம்permission
அனுமானம் குறிப்பான நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக்கொள்ளும் கருத்து அல்லது முடிவுguess
அனுமானி (அறிகுறிகளிலிருந்து) ஓர் உத்தேசமான முடிவுக்கு வருதல்guess
அனுஷ்டானம் புறச் சுத்தம் அல்லது பூஜை தொடர்பாகக் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள்observance
அனுஷ்டி (நோன்புகளை, சடங்குகளை அல்லது விரதமாக ஏற்றதை) கடைப்பிடித்தல்observe (rites, rituals)
அனுஷம் இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினேழாவதுthe seventeenth of the twentyseven stars
அனைத்து மொத்தwhole of
அனைவரும் எல்லாரும்all (persons)
அஜாக்கிரதை கவனமின்மைcarelessness
அஜீரணம் (உணவு) செரிக்காத நிலைindigestion
அஷ்டகோணம் எண்கோணம்octagon
அஷ்டகோணல் பலவிதமாக வளைந்து நெளிந்த நிலைcontortion
அஷ்டதரித்திரம் அதிக வறுமைpenury
அஷ்டமத்துச் சனி சந்திர லக்கினத்துக்கு எட்டாவது இடத்தில் இருப்பதால் தீமை பயக்கும் சனி Saturn in the eighth house from the position of the moon having malignant power
அஷ்டமி வளர்பிறையில் அல்லது தேய்பிறையில் எட்டாவது நாள்the eighth day of the waxing or waning moon
அஷ்டாவதானம் ஒரே நேரத்தில் நிகழும் எட்டுச் செயல்களைக் கவனித்து நினைவில் இருத்தும் கலைத் திறமைthe skill of attending to many (eight) acts simultaneously and the ability to remember them
அஷ்டாவதானி அஷ்டாவதானம் செய்பவர்one who performs அஷ்டாவதானம்
அஸ்கா சீனி(loose) sugar
அஸ்தம் இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்மூன்றாவதுthe thirteenth of the twentyseven stars
அஸ்தமனம் (சூரியனின் அல்லது சந்திரனின்) மறைவுsetting (of the sun or moon)
அஸ்தமி (சூரியன், சந்திரன்) மறைதல்(of sun, moon) set
அஸ்தி இறந்தவரை எரித்த பின் எஞ்சும் சாம்பல்ash obtained by cremation
   Page 8 of 204    1 6 7 8 9 10 204