Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
ஆவி (சூடான நீர் முதலியவற்றிலிருந்து அல்லது பனிக்கட்டியிலிருந்து அல்லது காற்றில் கரையும் பொருளிலிருந்து எழும்) வாயு(hot) vapour (from boiled water or hot drinks)
ஆவிபிடி (மூலிகையை அல்லது கரையும் மருந்தைக் கொதிக்கிற நீரில் போட்டு அதன்) ஆவியை (மூக்கடைப்பு முதலியவை நீங்க) சுவாசித்தல்inhale hot vapours (as a treatment to get rid of cold, etc.)
ஆவேசம் (-ஆக, -ஆன) உணர்ச்சிப் பெருக்குfrenzy
ஆழ்குழாய்க் கிணறு நிலத்தடி நீரை இயந்திரம்மூலம் எடுப்பதற்கு ஆழமாகத் துளையிட்டுக் குழாய் பொருத்தி அமைக்கப்படும் கிணறுborewell
ஆழ்த்து (மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்ச்சியில் அல்லது யோசனை போன்ற ஒன்றில்) உட்படுத்துதல்plunge
ஆழ்ந்த மனமார்ந்தheart-felt
ஆழ்ந்து கூர்ந்துintensely
ஆழ்வார் திருமால் மீது பாசுரங்கள் பாடிய பன்னிரண்டு வைணவ அடியார்களைக் குறிப்பிடும் பொதுப் பெயர்a general term for the early twelve saint-poets who sang the praise of Vishnu in their hymns
ஆழம் (-ஆன) மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம்வரையில் உள்ள அளவுdepth
ஆழம்பார் (ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதை) மறைமுகமான கேள்விகளால் அறிய முயலுதல்gauge (a person with careful questions)
ஆழாக்கு (முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் எட்டில் ஒரு பாகம்one eighth of a measure (which is roughly quarter of a litre)
ஆள்காட்டி விரல் ஒருவரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் விரல்index finger
ஆள்சேர் (படைக்கு அல்லது ஒரு தொழிற்சாலைக்கு) ஆட்கள் தேர்ந்தெடுத்தல்(பக்கத் துணையாக) ஆட்கள் திரட்டுதல்recruit (for the army, factory, etc.)
ஆள்படை உதவி செய்யச் சேர்ந்திருக்கும் நபர்கள்retinue of helpers
ஆள் மாறாட்டம் தவறுதலாக ஒருவரை மற்றொருவர் என நினைத்து நடந்துகொள்ளுதல்mistaking one for another
ஆள்விடு (ஒருவரை) அழைத்துவர அல்லது (ஒருவருக்கு) செய்தி சொல்ல ஒரு நபரை அனுப்புதல்send
ஆளாக்கு (மகிழ்ச்சி, துன்பம் முதலிய உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு ஒருவரை) உள்ளாக்குதல்plunge
ஆளாகு (மகிழ்ச்சி, துன்பம் முதலான உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) உள்ளாதல்become subject to
ஆளுநர் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும், மாநில நிர்வாகப் பொறுப்புடைய தலைவர்a person appointed by the President to govern a state
ஆளுமை ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத் தொகுப்புpersonality
ஆளோடி தேவையற்ற பொருள்களைப் போடப் பயன்படுத்தும் வகையில் வீட்டின் பின்புறம் இருக்கும் இடம்a place to dump unwanted things, situated at the back of a house
ஆற்றல் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்திcapability
ஆற்றாமை (ஒரு சூழ்நிலையில்) எதுவும் செய்ய முடியாத நிலைhelplessness
ஆற்று1(கொதிநிலையில் இருக்கும் ஒன்றின்) சூட்டைக் குறைத்தல்cool (hot water, etc.)
ஆற்று2(பணி, கடமை முதலியவற்றை) நிறைவேற்றுதல்do
ஆற்றுப்படுத்து (எதிர்ப்பு, அதிருப்தி முதலியவற்றை ஆக்கப் பணிக்கு உதவுமாறு) நெறிப்படுத்துதல்channelize
ஆற அமர நிதானமாகleisurely
ஆறப்போடு (ஒரு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணாமல்) தள்ளிப்போடுதல்defer
ஆறறிவு (புலன் உணர்வோடு கூடிய) பகுத்தறியும் திறன்rational faculty
ஆறு1(கொதிநிலையில் இருப்பது) சூடு குறைதல்(of anything which is hot) get cold
ஆறு2ஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண்(the number) six
ஆறு3இயற்கையான முறையில் இரு கரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்புriver
-ஆறு4(பெயரெச்சத்தின் பின்) படி(after relative participle) as in the manner
ஆறுதல் (வருத்தத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மனம் மீள) தெம்பு தருவதுwords of comfort
ஆன்மா உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள்soul
ஆன்மீகம் ஆன்மா தொடர்பானதுspirituality
-ஆன பெயரடை ஆக்கும் விகுதிadjectival suffix
ஆனந்தம் (-ஆக, -ஆன) மகிழ்ச்சிjoy
ஆனந்தி மகிழ்ச்சி அடைதல்feel happy
ஆனாலும் ஆயினும்nevertheless
ஆனானப்பட்ட (மிகுந்த) திறமையும் பலமும் வாய்ந்தeven the most (powerful, influential, etc.)
ஆனி மூன்றாம் தமிழ் மாதத்தின் பெயர்the name of the third Tamil month, i
ஆஜர்படுத்து (குற்றம் சாட்டப்பட்டவரை) விசாரணைக்காக (நீதிமன்றத்திற்கு) கொண்டுவருதல்produce (the accused before a court of law)
ஆஜராகு (சாட்சி, வழக்கறிஞர் முதலியோர் நீதிமன்றத்தில்) விசாரணை செய்ய அல்லது விசாரணைக்கு வந்திருத்தல்(of a witness, lawyer) appear (in a court of law, before a committee, etc.)
ஆஜானுபாகு நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம்a tall and hefty figure
ஆஷாடபூதி வெளித்தோற்றத்துக்குப் பொருத்தம் இல்லாத (முரணான) செயலைச் செய்பவன்one who does things which are not appropriate to his appearance
ஆஸ்திகம் கடவுள் உண்டு என்று நம்பும் கொள்கைtheism
ஆஸ்துமா மூச்சுவிடுவதில் தடை ஏற்படும் நுரையீரல் தொடர்பான நோய்asthma
ஆஸ்பத்திரி மருத்துவமனைhospital
இக்கட்டு தீர்வுக்கான வழி தோன்றாமல் தடைபட்டிருப்பதுpredicament
இகம் இந்த உலக வாழ்வுlife in this world
இகழ் தூற்றுதல்vilify
இகழ்ச்சி நிந்தனைvilification
இங்காலே இந்தப் பக்கம்this side
இங்கிதம் சூழ்நிலைக்கும் குண இயல்புக்கும் ஏற்ற இணக்கம்propriety
இங்கே இந்த இடத்தில்here
இங்ஙனம்1/-ஆகஇப்படிin this manner
இச்சகம் (காரியம் நிறைவேறுவதற்காகச் செய்யும்) புகழ்ச்சிflattery
இச்சி (ஒன்றை அடைய) தீவிரமாக விரும்புதல்desire strongly or greedily
இச்சை (ஒன்றை அடைய வேண்டும் என்பதில் காட்டும்) தீவிர விருப்பம்strong desire
இசகு??பிசகாக எதிர்பாராத விதமாக எதிர்பாராத இடத்தில்unexpectedly in a place and manner difficult to describe
இசிவு திடீரென ஏற்படுவதும் வலியைத் தருவதுமான தசை இறுக்கம்spasm
இசை2பாடுதல்sing (a song)
இசை3வாயால் பாடி அல்லது இசைக் கருவியால் இசைத்து முறைப்படுத்திய ஓசைகளாலான கலைvocal or instrumental music
இசைக் கருவி சங்கீதத்திற்கு ஏற்ற (தோல், துளை, நரம்பு) கருவிmusical instrument
இசைக் குழு மெல்லிசை நிகழ்ச்சி நடத்தும் இசைக் கலைஞர் குழுa musical troupe especially for light music
இசைகேடு-ஆக/-ஆன உரிய முறையில் இல்லாமல்/உரிய முறையில் இல்லாதawkward
இசைத்தட்டு இசை, பேச்சு முதலியன வளைவுக் கோடுகளாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் உலோகம் அல்லாத சாதனம்gramophone disc
இசையமை (திரைப்படம், நாட்டியம் முதலியவற்றுக்குத் தேவையான) பின்னணி இசையையோ பாடுவதற்கான இசையையோ உருவாக்குதல்compose music (for a film, play, dance, etc.)
இசையமைப்பாளர் (திரைப்படம், நாடகம் முதலியவற்றுக்கு) இசையமைப்பவர்music director (of a film, play, etc.)
இசைவாணர் இசைக் கலைஞர்musician
இசைவு (ஒரு கருத்து, ஆலோசனை முதலியவற்றுக்குத் தரும்) ஒப்புதல்acceptance
இஞ்சி (உணவிலும் நாட்டுமருந்திலும் சேர்க்கும்) உறைப்புச் சுவை மிகுந்த கிழங்குginger
இட்டுக்கட்டு (இல்லாததை இருப்பதாக அல்லது நிகழாததை நிகழ்ந்ததாக) கற்பித்துக் கூறுதல்concoct
இட்டுச்செல் (ஒருவரை ஓர் இடத்துக்கு) அழைத்துச்செல்லுதல்take
இட்லி அரைத்த அரிசியையும் உளுந்தையும் (குறிப்பிட்ட விகிதத்தில்) கலந்து குழிவுடைய தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்an eatable prepared by mixing rice dough with blackgram (in certain ratio) and by steaming it on a perforated or porous plate with pits
இட்லித்தட்டு இட்லி அவிப்பதற்கு ஏற்றதாக அமைத்த குழிவுகளை உடைய தட்டுround plate with slight depressions which are filled in by rice dough and kept inside a vessel for steaming
இடது (பெரும்பாலோர்) எழுதுவதற்குப் பயன்படுத்தாத கையுள்ள பக்கம்left
இடதுசாரி தொழிலாளர் வர்க்க உரிமைகளையும் பொதுவுடைமைத் தத்துவங்களையும் ஆதரிப்பது அல்லது ஆதரிப்பவர்leftist
இடம்2இடது புறம்left
இடம்கொடு (கண்டிப்புக் காட்ட வேண்டிய நபருக்கு) சுதந்திரமாக இருக்க வாய்ப்பளித்தல்show (one) some consideration
இடம்பெறு (குழுவில், பட்டியலில், நிகழ்ச்சியில் அல்லது பார்வைக்காக) சேர்க்கப்படுதல்find a place
இடமாற்றம் மாற்றல்transfer
இடர் இடையூறுtrouble
இடர்ப்பாடு இடையூறுக்குள்ளான நிலைtrouble
இடாப்பு (பள்ளி, அலுவலகம் முதலியவற்றின்) பதிவேடுregister
இடி1(கட்டப்பட்ட அமைப்பு) உடைதல்(of a building, bridge, etc.) come down
இடி2(கட்டப்பட்ட அமைப்பு ஒன்றைக் கருவியால் தாக்கி) உடைத்தல்demolish (a building)
இடி3(இடி) பேரொலியை எழுப்புதல்(of thunder) thunder
இடி4(முழங்கை முதலியவற்றால் பக்கவாட்டில் கிடைக்கும்) குத்து(தலை முதலியவை ஒன்றில் மோதுவதால் கிடைக்கும்) அடிa forceful blow (by an elbow, shoulder)
இடி5மழை வருவதற்கு அறிகுறியாக வானத்தில் கேட்கும் (மின்னலுடன் கூடிய) பேரொலிthunder
இடித்துரை (அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு) கண்டித்தல்rebuke
இடிதாங்கி (மின்னல் தாக்கிச் சேதம் அடைவதைத் தடுப்பதற்கு உயரமான கட்டடத்தில் வைத்திருக்கும்) மின்னலின் மின்சக்தியைத் தரைக்குக் கொண்டுசெல்லும் பாதுகாப்பு அமைப்புlightning conductor or rod
இடிபாடு (கட்டடம் போன்றவை) தகர்ந்து விழுந்த நிலைruins
இடியாப்பம் அரிசிமாவை நூல் போலப் பிழிந்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்steamed rice noodles
இடு1(உணவு, மாவு போன்றவற்றைப் பாத்திரம் போன்றவற்றில்) போடுதல்put (food, flour, etc, into a vessel, etc.)
இடுக்கண் துன்பம்distress
இடுக்கி உருண்டை வடிவ அல்லது பட்டை வடிவக் கம்பியைச் சம நீளத்தில் வளைத்து அல்லது இரு நீளக் கம்பிகளை இணைத்து ஒரு பொருளை எடுப்பதற்கும் பிடித்துக்கொள்வதற்கும் அமைத்த கருவிvarious kinds of tongs-like tool
இடுக்கு2(சுவர் முதலியவற்றில்) வெடிப்பு(இரு பொருள்கள் இணையும் இடத்திலுள்ள அல்லது இரு உறுப்புகளுக்கு இடையே உள்ள) குறுகிய வெளிதிறப்புnarrow gap
இடுகாடு இறந்தவரைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்a place where the dead is buried or burnt
   Page 11 of 204    1 9 10 11 12 13 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil