Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
தூக்குவாளி (சாம்பார், ரசம் முதலியவற்றைப் பரிமாறுவதற்குப் பயன்படுகிற) வாளி போன்ற அமைப்புடைய சிறிய பாத்திரம்small bucket-like vessel for serving sauce, etc (at wedding dinners, etc.)
தூங்கிவழி தூக்கக் கலக்கத்துடன் காணப்படுதல்be sleepy
தூங்கு (ஓய்வெடுக்க) தூக்கம் கொள்ளுதல்sleep
தூங்குமூஞ்சி (செயலில்) சுறுசுறுப்புக் காட்டாமல் அசிரத்தையாக இருப்பவன்one who is slothful
தூங்குமூஞ்சி மரம் மாலை நேரத்தில் கண்மூடித் தூங்குவது போலக் கீழ்நோக்கி மடியும் இலைகளைக் கொண்ட ஒரு வகைப் பெரிய மரம்rain tree
தூசி (காற்றில் பறந்து வரும்) சிறு துகள்(மண்) புழுதிsmall particle
தூசிதும்பு தூசியும் தூசி போன்ற பிறவும்dust and the like
தூண் (கட்டடம், பாலம் முதலியவற்றில்) மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்புpillar
தூண்டில் (மீன் பிடிக்கப் பயன்படும்) தக்கை இணைக்கப்பட்ட, உறுதியான இழையின் நுனியில் கொக்கி போன்ற இரும்பு முள்ளையுடைய நீண்ட கோல்fishing rod
தூண்டில் முள் (புழு, உணவுத் துண்டு போன்றவற்றைத் தகுந்த வகையில் செருக) தூண்டில் இழையின் முனையில் இணைக்கப்பட்டுள்ள சிறு இரும்புக் கொக்கிfish hook
தூண்டிவிடு எதிராகச் செயல்படும்படி செய்தல்instigate
தூண்டு (எரிவதற்காக விளக்கின் திரியை) முன் தள்ளுதல்raise or draw out (the wick so that it may burn bright)
தூண்டுகோல் (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) எழுச்சி தருவதுmotivating force
தூதர் ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட அரசு உயர் அதிகாரிambassador
தூதரகம் (மற்றொரு நாட்டின் தலைநகரத்தில்) தூதுவரின் தலைமையில் இயங்கும் அலுவலகம்/முக்கிய நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைக் கவனிக்கும் விதத்தில் இயங்கும் கிளை அலுவலகம்embassy/consulate
தூதன் (முற்காலத்தில்) மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்(formerly) messenger (of a king)
தூது (ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு) செய்தி தெரிவிக்கும் பணிmessage (through a messenger)
தூதுக்குழு (அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில்) அரசின் சார்பில் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் குழுdelegation (of politicians, economists, artistes) visiting other countries on behalf of the government
தூதுவளை முள் உள்ள இலைகளையும் நீல நிறப் பூக்களையும் உடைய ஒரு வகைக் கொடிclimbing brinjal
தூபக்கால் (சாம்பிராணி போடும்) தணல் வைப்பதற்கு மேல்பகுதியில் கிண்ணம் போன்ற அமைப்பும் பிடித்துத் தூக்க வசதியாகக் கைப்பிடியும் கொண்ட கரண்டி போன்ற சாதனம்a device with a cup-like upper part for burning incense (used in rituals)
தூபம் (வழிபாட்டின்போது) சாம்பிராணி, அகில் முதலிய நறுமணப் பொருள்களைத் தணலில் போட்டு உண்டாக்கப்படும் புகைsmoke of incense (offered during worship)
தூபம்போடு (மேலும் தூண்டும்வகையில் தீய விளைவுக்கு) சாதகமாக இருத்தல்incense
தூம்பு (பாலம் முதலியவற்றில் அமைக்கப்படும்) நீர் செல்வதற்கான சிமிண்டுக் குழாய்drainpipe
தூமகேது (தீயது நடக்கப் போவதை அறிவிப்பதாகக் கருதும்) வால்நட்சத்திரம்comet (believed to be a bad omen)
தூய்மை (-ஆக, -ஆன) அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலைcleanliness
தூய்மைக்கேடு (கழிவு, அசுத்தம் போன்றவை காற்று, நீர் முதலியவற்றுடன் சேர்வதால்) சுவாசிப்பதற்கோ பயன்படுத்துவதற்கோ ஏற்றதாக இல்லாமல்போகும் நிலைpollution
தூய (பருப்பொருள் அல்லாதவற்றோடு மட்டும்) சற்றும் மாசுபடாத(of abstract concepts) pure
தூர்1(கிணற்றின் ஊற்றுக்கண்ணில் அல்லது ஆறு முதலியவற்றில் நீர் செல்லும் வழியில் மண் போன்றவை சேர்வதால்) அடைபடுதல்(of springs in a well, waterways, etc.) be choked
தூர்2(கிணறு, ஆறு முதலியவற்றை அல்லது வயல் போன்றவற்றை) மண், கல் போன்றவை கொட்டி மூடுதல்fill up (a well, a pit, etc.)
தூர்3(கிணறு, ஏரி, வாய்க்கால் முதலியவற்றின்) அடியில் சேர்ந்திருக்கும் மண், சகதி முதலியவைsilt (at the bottom of water sources and waterways)
தூர்4(செடிகளின்) கிளைத்த வேர்த் தொகுதிbranches of the root (of plants)
தூர்கட்டு (நட்ட நெற்பயிர்) கிளைத்து வருதல்ratoon
தூரதிருஷ்டி எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே அறியும் திறமைforesight
தூரப்பார்வை அருகிலிருப்பது கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறைlong-sightedness
தூவானம் (காற்று அடித்துக்கொண்டு வரும்) மழைத் துளிகளின் சிதறல்drizzle
தூவு (பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை) பரவலாக விழச்செய்தல்sprinkle
தூள் (ஒரு பொருள்) மாவாக அல்லது சிறு துகளாக இருக்கும் நிலைpowder or fine particles
தூள்கிளப்பு (பாராட்டும்போது) திறமை முதலியவை சிறப்பாக வெளிப்படுகிற வகையில் ஒன்றைச் செய்தல் அல்லது நிகழ்த்துதல்do extremely well
தூள்படு (காரியங்கள்) அமளியுடன் நிகழ்தல்be in a commotion
தூள்பற பலரும் அறியும்படி (அதிகாரம்) வெளிப்படுதல் அல்லது (பணம்) செலவழிதல்(of power or authority) be loudly displayed
தூளி (குழந்தையைத் தூங்கவைக்க) நீண்ட துணியின் இரு முனையையும் கட்டி ஒன்றில் தொங்கவிட்டிருக்கும் அமைப்புcradle made with a long piece of cloth
தூற்று1(நெல், பருப்பு போன்றவற்றில் உள்ள பதர் முதலியவற்றைப் போக்குவதற்காக) முறத்தில் வைத்து ஆட்டிச் சீராக விழச்செய்தல்separate chaff (from grains, etc by holding the winnowing fan raised and letting the grains fall)
தூற்று2(ஒருவரைப் பேச்சாலோ எழுத்தாலோ) பழித்தல்slander
தூறல் வேகமாகவோ பலமாகவோ இல்லாமல் தொடர்ச்சியாகச் சிறுசிறு துளிகளாக விழுகிற மழைlight shower
தூறு (மழை) சிறுசிறு துளிகளாக விழுதல்drizzle
தூஷி தூற்றுதல்abuse
தெண்டி முயலுதல்try
தெப்பக்குளம் நடுவில் சிறு மண்டபமும் கரையைச் சுற்றிப் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்ட (கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான) குளம்tank (attached to a temple for float festival)
தெப்பம் (ஆறு, குளம் முதலியவற்றில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும்) பெரிய கூடை போன்ற தோணிa kind of float
தெப்போற்சவம் விக்கிரகத்தைக் குளத்தின் மைய மண்டபத்துக்குத் தெப்பத்தில் எடுத்துச் சென்று பூஜை செய்யும் விழாthe temple festival in which the idol is placed on a float and taken to the மண்டபம் in the middle of the tank
தெம்பு (ஒருவர் செயல்படுவதற்குத் தேவையான) உடல் பலம்(physical) strength
தெம்மாங்கு (பெரும்பாலும் ஆண் ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போன்ற) நாட்டுப்புற இசைப் பாடல்a type of folk song set to a tune (sung in the mode of a lover addressing his beloved)
தெய்வச்செயல் (மனித முயற்சியால் இல்லாமல்) தெய்வத்தின் அருளால் நடைபெறும் செயல்providence
தெய்வம் கடவுள்god
தெய்வீகம் கடவுள் அம்சம்divinity
தெரி1(கண்ணுக்கு) புலனாதல்be visible
தெரிந்துகொள் (ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை) அறிதல்know
தெரிந்தே வேண்டுமென்றேdeliberately
தெரியப்படுத்து (செய்தி, தகவல் முதலியவற்றை எழுத்து அல்லது பேச்சு மூலமாக) தெரிவித்தல்inform
தெரியாத்தனமாக ஒரு செயலைப்பற்றியோ அதன் பின்விளைவுகளைப்பற்றியோ ஒன்றும் அறியாமல்inadvertently
தெரியாமல் (பெரும்பாலும் மன்னிப்புக் கோரும் சந்தர்ப்பத்தில்) தற்செயலாகunintentionally
தெரிவுசெய் தேர்ந்தெடுத்தல்select
தெரு (வீடுகளையோ கடைகளையோ ஒரு புறத்திலாவது கொண்டிருக்கும்) ஊரின் பொது வழிstreet
தெருக்கூத்து தெருக்களில் மேடையில்லாமல் இதிகாசக் கதைகளை இசைப்பாடல், வசனம் போன்றவற்றுடன் நடித்துக்காட்டும் (பெரும்பாலும் ஆண்கள் மட்டும் பங்கேற்கும்) நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிa folk performing art which combines dialogue, song and dance generally treating episodes from puranas and enacted mostly (by men) at Sakti temples
தெலுங்கு ஆந்திர மாநிலத்தில் பெரும்பான்மையினரால் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிtelugu (language)
தெவிட்டு திகட்டுதல்cloy
தெள்ளத்தெளிய/தெள்ளத்தெளிவாக மிகவும் தெளிவாகvery clearly
தெள்ளிய தெளிந்தclear
தெள்ளு தெளிந்தclear
தெள்ளென தெளிவாகclearly
தெளி1(திரவத்தில் உள்ள அழுக்கு, கசடு முதலியவை அடியில் தங்கித் திரவம்) கலங்கிய நிலையிலிருந்து மாறுதல்(of liquids) become clear (by allowing the sediments to settle)
தெளி2(நீர் முதலிய திரவத்தை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால்) பரவலாக விழச்செய்தல்sprinkle
தெளிப்பான் (பூச்சிமருந்தை அல்லது வர்ணத்தை) வேகமாகத் தெளிக்கப் பயன்படும் கருவிsprayer (for insecticide, paint)
தெளிப்பு நீர்ப்பாசனம் குழாய்மூலம் வரும் நீரைப் பீய்ச்சி அடிக்கும் சாதனத்தின்மூலம் சிதறச் செய்து பயிரின் அடிப் பகுதி நனையும்படி செய்யும் பாசன முறைsprinkler irrigation
தெளிவு மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக் கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக் கூடிய நிலைclear (to the sight, hearing)
தெளிவுபடுத்து (சந்தேகம் குழப்பம் ஆகியவை நீங்குமாறு) தெளிவாக விளக்குதல்clarify
தெற்கத்திய தெற்கிலுள்ளsouthern
தெற்கு ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும்போது அவருக்கு வலப் பக்கம் உள்ள திசைsouth
தெற்று (பேசும்போது சொற்கள் தொடர்ச்சியாக இல்லாமல் தடைபட்டும் முழு ஒலிப்புப் பெறாமலும்) திக்குதல்stutter
தெற்றுப்பல் ஒரு பல்லின் ஈற்றின் மேல் முளைத்திருக்கும் மற்றொரு பல்supernumerary tooth
தெற்றுவாய் திக்குவாய்stuttering
தெற்றென தெளிவாகclearly
தெறி (நீர்த்துளி, தீப்பொறி முதலியவை) சிதறி விசையுடன் விழுதல்(of water drops) spray
தென் தெற்கு என்பதன் பெயரடைadjective of தெற்கு
தென்படு (கண்ணுக்கு) புலப்படுதல்come into view
தென்றல் மென்மையாக வீசும் காற்றுgentle breeze
தென்னம்பிள்ளை தென்னை மரக் கன்றுcoconut sapling
தென்னு நெம்புதல்lift with a lever
தென்னை (நீர்வசதி உள்ள பகுதிகளில்) ஓலைகளோடு கூடிய மட்டைகளையே கிளைகளாகக் கொண்ட, தேங்காய் காய்க்கும் மரம்coconut tree
தெனாவட்டு திமிர்hauteur
தேக்கம் நீர் ஓடாமல் தடைபட்டிருக்கும் நிலைobstruction to the flow of water
தேக்கரண்டி (சற்றுக் குழிந்த முன்பகுதி கொண்டதும் அளந்து போடுவதற்குப் பயன்படுத்துவதுமான) சிறு கரண்டிteaspoon
தேக்கு1ஓடும் அல்லது வழியும் திரவத்தைத் தடுத்து (ஓரிடத்தில்) தங்கச்செய்தல்stop (so as) to form a pool
தேக்கு2(மரச் சாமான்கள் செய்யப் பயன்படும்) அகல இலைகளை உடைய உறுதியான உயரமான காட்டு மரம்teak (wood)
தேக்சா குண்டானைப் போன்ற ஆனால் அதைவிடப் பெரிய பாத்திரம்a vessel similar to, but larger than குண்டான்
தேகம் (மனித) உடல்(human) body
தேகாந்தம் முழு உடல்whole body
தேங்காய் (வெள்ளைப் பருப்பும் இனிய நீரும் கொண்ட) தென்னை மரத்தின் காய்coconut (fruit with or without the husk)
தேங்காய் எண்ணெய் முற்றிய தேங்காய்ப் பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்coconut oil
தேங்காய்த்துருவி தேங்காய்ப் பருப்பைத் துருவப் பயன்படும் சிறுசிறு பற்களையுடைய இரும்பாலான சாதனம்coconut scraper
   Page 109 of 204    1 107 108 109 110 111 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil