Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| தொடங்கிவை | (சிறப்பு நிகழ்ச்சிமூலம் மாநாடு, விற்பனை முதலியவற்றின்) முதல் கட்டப் பணியை நடைபெறச்செய்தல் | inaugurate |
| தொடங்கு | (குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த) செயல்பாட்டில் இறங்குதல்/(ஒன்று நடைபெறுவதற்கான) சூழ்நிலை ஏற்படுதல் | begin |
| தொடர்1 | (ஒரு செயல், நிலை முதலியவை முடிவு அடையாமல்) நீளுதல் | continue |
| தொடர்2 | (வழக்கு) தொடுத்தல் | file (a suit) |
| தொடர்3 | ஒன்றை அடுத்து ஒன்றாக அமையும் வரிசை | row |
| தொடர் உண்ணாவிரதம் | குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருவர் அல்லது ஒரு குழு என்ற முறையில் இருந்து நடத்தும் உண்ணாவிரதம் | fasting in relay (by way of protest) |
| தொடர் ஓட்டம் | ஓட்டத் தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையைத் தந்து மற்றவர் அந்த இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் ஓட்டப் போட்டி | relay race |
| தொடர்கதை | (வார, மாதப் பத்திரிகைகளில்) பகுதிபகுதியாகத் தொடர்ந்து வெளியிடப்படும் நீண்ட கதை | serial (in a periodical) |
| தொடர்ச்சி | இருக்க வேண்டிய வரிசையில் அல்லது முறையில் தொடர்ந்து இருப்பது | continuity |
| தொடர்ச்சியாக | தொடர்ந்து | continuously |
| தொடர்ந்து | இடைவிடாமல் | continuously |
| தொடர்பாக/தொடர்பான | சம்பந்தமாக | in connection with/relating to |
| தொடர்பு | (பிறப்பு, நட்பு, தொழில் முதலியவற்றால் ஏற்படும்) உறவு | contact |
| தொடர்புகொள் | (தொலைபேசி, கடிதம் மூலமாக அல்லது நேரடியாக ஒருவரோடு) செய்திப் பரிமாற்றம் கொள்ள வழிஏற்படுத்துதல் | contact (through phone, letter, etc.) |
| தொடர்வட்டி | கூட்டுவட்டி | compound interest |
| தொடர்வைப்புக் கணக்கு | (வங்கி, அஞ்சல்நிலையம் முதலியவற்றில்) குறிப்பிட்ட ஆண்டுகள்வரை மாதாமாதம் தொடர்ந்து ஒரு தொகையைச் செலுத்திச் சேமித்து வட்டியோடு திரும்பப் பெறும் முறை | recurring deposit (in a bank, post office, etc.) |
| தொடரியல் | வாக்கிய அமைப்பின் விதிமுறைகளையும் வாக்கியங்களுக்கு இடையிலான உறவையும் விளக்கும் மொழியியல் பிரிவு | syntax |
| தொடி | (பெண்கள்) தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்துகொள்ளும் பிடிப்பான அணி வகை | a kind of armlet (worn by women in former times) |
| தொடுகறி | முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள் | dish prepared to go with courses of a meal |
| தொடுவானம் | அடிவானம் | horizon |
| தொடை | (மனிதரில்) இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள, (விலங்குகளில்) பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி | (of human beings) thigh |
| தொடைதட்டு | (ஒருவர் சண்டை, தகராறு முதலியவற்றிற்கு) உற்சாகத்துடனும் பரபரப்புடனும் தயாராதல் | get ready for a fight with gusto |
| தொடைநடுங்கி | பயந்து நடுங்குபவன் | timid person |
| தொடைநடுங்கு | மிகவும் பயப்படுதல் | feel timid |
| தொண்டர் | ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர் | worker (in a party) |
| தொண்டு | தன்னலம் கருதாமல், ஆதாயம் எதிர்பாராமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றிற்காகச் செய்யும் பணி | service |
| தொண்டு கிழம் | மிகவும் வயதான ஆண் அல்லது பெண் | very old person |
| தொண்டு நிறுவனம் | லாப நோக்கில் இல்லாமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சிக்காகப் பணியாற்றும் நிறுவனம் | service organization or society |
| தொண்டை | உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான கழுத்தின் உள் பகுதி | throat |
| தொண்டை அடைப்பான் | பெரும்பாலும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளான சாம்பல் நிறப் படலத்தை உண்டாக்கும் தொற்றுநோய் | diphtheria |
| தொண்டைக்கட்டு | சாப்பிடவும் பேசவும் முடியாமல் தொண்டை கட்டியிருக்கும் நிலை | sore throat |
| தொண்டைகட்டு | (ஜலதோஷம், தொடர்ச்சியான பேச்சு முதலியவற்றினால்) சரியாகப் பேச முடியாதபடி குரல் கம்முதல் | have a sore throat |
| தொண்ணூறு | பத்தின் ஒன்பது மடங்கைக் குறிக்கும் எண் | (the number) ninety |
| தொணதொண | எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்குகிற வகையில் ஒன்றையே திரும்பத்திரும்பப் பேசுதல் | pester |
| தொணதொணப்பு | எரிச்சலை ஏற்படுத்தும் தொடர்ந்த பேச்சு | nagging |
| தொத்தல் | சதைப்பிடிப்பு இல்லாமல் மிகவும் ஒல்லியாக இருப்பது | skinny |
| தொந்தம் | சம்பந்தம் | connection |
| தொந்தரவு | தொல்லை | trouble |
| தொந்தி | பருத்து முன்தள்ளிக் காணப்படும் வயிறு | paunch |
| தொப்பல் | உடல் முழுவதும் நீர் சொட்ட ஈரத்துடன் இருக்கும் நிலை | (soaking) wet |
| தொப்பி | தலையில் அணிந்துகொள்ளும், பல வடிவத்தில் இருக்கும் தலை உறை | hat (of various shapes and sizes) |
| தொப்புள் | வயிற்றின் நடுவில் சுழி போன்று குழிந்து காணப்படும் சிறு பகுதி | navel |
| தொப்புள்கொடி | தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய் | umbilical cord |
| தொப்பை | தொந்தி | pot belly |
| தொப்பைதள்ளு | வயிறு பெருத்து முன்பக்கம் சரிதல் | develop a pot belly |
| தொம்பக்கூத்தாடி | கழைக்கூத்தாடி | acrobat |
| தொம்பன் | கூடை முடைபவன் | basket weaver |
| தொம்பை | (நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்குப் பயன்படும்) மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடை | a huge bamboo basket (to store grains like paddy) |
| தொய் | இறுக்கம் அல்லது விறைப்பு இழந்து தளர்ந்து தாழ்தல் | become slack |
| தொய்வு | (-ஆக, -ஆன) (இறுக்கம் அல்லது விறைப்பு இழப்பதால் ஏற்படும்) தளர்வு | slackness |
| தொல் | தொன்மையான | ancient |
| தொல்பொருள் | முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், பாண்டம், கருவி முதலியவை அல்லது அவற்றின் சிதைவுகள் | artifacts of archaeological value |
| தொல்பொருளியல்/தொல்லியல் | தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வு | archaeology |
| தொல்லை | தொந்தரவு | annoyance |
| தொலை1 | (எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி) காணாமல்போதல் | lose |
| தொலை2 | (பேசுபவரின் நோக்கில்) எரிச்சலையும் வெறுப்பையும் வெளிப்படுத்த உதவும் ஒரு துணை வினை | an auxiliary verb expressing irritation, vexation, etc நான் புறப்படும் நேரத்தில் வந்துதொலைந்தான் |
| தொலை4 | (கட்டாயத்தினால் ஒரு செயலைச் செய்ய நேரும்போது) வெறுப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்தும் ஒரு துணை வினை | an auxiliary verb expressing impatience, irritation, etc |
| தொலை5 | தொலைவு | distance |
| தொலை எழுதி | ஒரு முனையில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் செய்தியை மறு முனையில் தானாகத் தட்டச்சுப் பதிவு செய்யும் மின் கருவி | teleprinter |
| தொலைக்காட்சி | ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப் படமாகக் காணும் முறை | television |
| தொலைக்காட்சிப் பெட்டி | தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படுவதை உள்வாங்கிக் காட்சிகளாக மாற்றிக் காட்டும் (திரை முதலியவை உள்ள) பெட்டி போன்ற கருவி | television set |
| தொலைத்தொடர்பு | தொலைபேசி, தந்தி முதலிய நவீனச் சாதனங்கள்மூலம் ஓர் இடத்திலிருந்து செய்திகளை அனுப்புதலும் பெறுதலுமான செயல்பாடு | telecommunications |
| தொலைதூரத் தொடர்பகம் | தொலைபேசிமூலம் தொலைவில் உள்ள இடங்களை இணைக்கும் நிலையம் | (of telephones) trunk exchange |
| தொலைதூரம் | வெகு தூரம் | long distance |
| தொலைநோக்கி | தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஆடிகள் பொருத்திய குழல் வடிவக் கருவி | binoculars |
| தொலைநோக்கு | எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நலனைக் கருத்தில்கொண்ட கணிப்பு | farsightedness |
| தொலைப்பதிவு | தொலை எழுதிமூலம் அனுப்பப்படும் தந்தி முறைச் செய்தி | telex |
| தொலைபேசி | பேச்சொலியை மின்னலைகளாகவும் மின்னலைகளைப் பேச்சொலியாகவும் மாற்றிக் கம்பிமூலம் அனுப்பித் தொலைவில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு பேசிக்கொள்வதற்கு உதவும் கருவி | telephone |
| தொலைபேசித் தொடர்பகம் | தொலைபேசிகளுக்கிடையே தேவைப்படுகிற இணைப்பை ஏற்படுத்தித் தருகிற நிலையம் | telephone exchange |
| தொலைவு | இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு(குறிப்பிடப்படும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிலிருந்து) விலகியிருக்கும் அளவுதூரம் | distance |
| தொழில் | (பொதுவாக) வேலை | profession |
| தொழில் காய்ச்சல் | தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமை | professional jealousy |
| தொழில் துறை | தொழில் துவங்குதல், மேம்படுத்துதல் முதலியவற்றைக் கவனிக்கும் அரசுத் துறை | (of government) department of industry |
| தொழில் நிறுவனம் | பெருமளவில் முதலீடு செய்து தொழில் நடத்தும் நிறுவனம் | industrial concern |
| தொழில்நுட்பக் கல்லூரி | இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்முறைக் கல்வியைப் பாடமாகக் கொண்டு தொழில் பயிற்சி அளிக்கும் கல்லூரி | educational institution providing training in trades connected with machines and tools |
| தொழில்நுட்பம் | உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய தொழில்பற்றிய அறிவும் வழிமுறைகளும் | technology |
| தொழில்மயமாக்கு | (ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் பொருளாதார முன்னேற்றம் கருதித் தொழிற்சாலைகளைப் பெருக்குவதன்மூலம்) தொழில் வளர்ச்சி பெறச்செய்தல் | industrialize |
| தொழில்முறை | ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானது | vocational |
| தொழில் முனைவோர் | மூலதனம் போட்டு ஒரு தொழிலைத் துவங்கத் திட்டமிடுபவர் | entrepreneur |
| தொழில்வரி | மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழிலை மேற்கொண்டவர்கள் மீது விதிக்கும் வரி | profession tax |
| தொழிலாளர் | உடல் உழைப்பைத் தந்து சம்பளம் பெற்று ஒரு தொழிலைச் செய்பவர் அல்லது தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கிப் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுபவர் | (manual or industrial) worker |
| தொழிலாளி | உடல் உழைப்பை வேண்டுகிற தொழிலைச் செய்பவர் | labourer |
| தொழிற்கல்வி | தொழில்முறைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பயிற்சியையும் அளிக்கும் கல்வி | technical education |
| தொழிற்கூடம் | தொழிற்சாலை | industrial plant or unit |
| தொழிற்சங்கம் | தொழிலாளர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்பு | trade union |
| தொழிற்சாலை | இயந்திரங்களின் உதவியால் பொருள்களை (பெருமளவில்) உற்பத்திசெய்யும் இடம் | factory |
| தொழிற்படு | இயங்குதல் | function |
| தொழிற்பாடு | செயல்பாடு | function |
| தொழிற்புரட்சி | (ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில்) புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் தொழில் துறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம் | industrial revolution |
| தொழிற்பெயர் | (பெயர்த் தன்மையோடு வினைத் தன்மையும் உடையதாக) வினையிலிருந்து பெறப்பட்டு வழங்கும் பெயர்ச்சொல் | verbal noun |
| தொழிற்பேட்டை | குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகி, பெருமளவில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் இடம் | cluster of industries in a place set aside by the government |
| தொழு1 | (கடவுளை) வழிபடுதல் | worship |
| தொழுகை | (முஸ்லிம்கள்) மனத்தில் இறைவனை நினைத்து மெக்கா இருக்கும் திசையை நோக்கிச் செய்யும் வணக்கம்/(கிறித்தவர்) புனித நூலிலிருந்து வாசகங்களைக் கூறிச் செய்யும் வழிபாடு | prayer |
| தொழுநோய் | தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய் | leprosy |
| தொழுவம் | (பெரும்பாலும்) மாடுகளைக் கட்டி வைக்கும் (கூரை போடப்பட்ட) இடம் | cattle shed |
| தொழுவுரம் | கால்நடைகளின் கழிவைச் சேமித்து நிலத்தில் இட்டுச் சேர்க்கும் உரம் | farmyard manure |
| தொளதொள | (தைக்கப்பட்ட ஆடைகளைக்குறித்து வருகையில்) உடலுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக இல்லாமல் பெரிதாக உள்ள | (of garments) loose |
| தொளதொள-என்று/-என்ற | (தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கையில்) உடலுக்குச் சற்றுப் பெரிதாக/உடலுக்குச் சற்றுப் பெரிதான | (hanging) loosely/loose |
| தொற்று1 | பாய்ந்து பிடித்தல் | catch hold of |
| தொற்று2 | (பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு | infection |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.