Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
தீரம்1பயம் இல்லாமல் எதையும் செய்யும் துணிவுbravery
தீரம்2(ஆற்றின்) கரைbanks (of a river)
தீரன் பயப்படாமல் எதையும் துணிந்து செய்பவன்one who is valiant
தீவட்டி (வெளிச்சத்துக்காகப் பிடிக்கப்படும்) தீப்பந்தம்torch
தீவட்டித்தடியன் (பெரும்பாலும் வசைச் சொல்லாக) (உடல் வலிமையுள்ள ஆனால்) உபயோகமில்லாத நபர்a hefty, but useless fellow
தீவனம் (வீட்டில் வளர்க்கப்படும் கால்நடை, பறவை ஆகியவற்றுக்கான) உணவுfeed (for domestic animals and poultry)
தீவாந்திரம் தொலை தூரத்தில் உள்ள தீவுremote or distant island
தீவிரச்சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இடைவிடாத கவனிப்பையும் சிகிச்சையையும் வழங்கும் பிரிவுintensive care unit (in a hospital)
தீவிரம் (-ஆக, -ஆன) (ஒரு செயலைச் செய்வதில்) வழக்கத்தைவிட அதிகமான கவனமும் கூடுதலான முனைப்பும்seriousness
தீவிரவாதம் (சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல்) பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்குextremism
தீவிரவாதி தீவிரவாதத்தைக் கடைப்பிடிப்பவர்extremist
தீவினை தீய செயலின் விளைவாகிய பாவம்sin
தீவு நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த நிலப் பகுதிisland
தீவைப்பு (விரோதம், கலகம் காரணமாக) வீடு, பொது உடமைகள் ஆகியவற்றுக்குத் தீ வைத்து எரிக்கும் அழிவுச் செயல்arson
தீற்று (மை, வர்ணம் போன்றவை) தீட்டுதல் apply
தீனம் (நோயால், வலியால் வருந்துவோரின் குரலைக் குறிப்பிடும்போது) சன்னம்(of the voice of the sick or the injured) faint
தீனி (விலங்கு, கோழி முதலியவற்றுக்குப் போடும்) உணவுfood for the animals
துக்கடா (அளவில்) சிறியது(மதிப்பில்) முக்கியமற்றதுதுணுக்குbit
துக்கம் (இழப்பால் ஏற்படும்) மன வருத்தம்sorrow
துக்கம் கொண்டாடு (ஒருவர் இறந்ததால் பண்டிகை, விழா முதலியவை கொண்டாடாமல் இருந்து) துன்பத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்துதல்mourn
துக்கம் விசாரி (இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய உறவினர்களுக்கு) ஆறுதல் கூறுதல்condole (with the bereaved)
துகள் ஒரு பொருளின் மிகமிகச் சிறிய பகுதி(minute) bit
துகில் (பொதுவாக) மெல்லிய ஆடை(குறிப்பாக) புடவை(generally) fine cloth
துச்சம் ஒரு பொருட்டாகக் கருதப்படாத, முக்கியத்துவமற்ற ஒன்றுanything which a person regards as nothing for him
துட்டி சாவுdeath
துட்டு பணம்money
துடக்கு தீட்டுperiod of defilement
துடி நடுக்கத்துடன் துள்ளி அசைதல்flutter
துடிதுடி (மிகுதியைக் காட்டி அழுத்தம் தருவதற்கு) துடி என்னும் வினையின் இரட்டித்த வடிவம்reduplication of the verb துடி (to intensify the meaning)
துடிப்பு உடனடியாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு/(அதிர்ச்சியால்) தவிப்புanxiety/nervousness
துடியாக/துடியான சுறுசுறுப்பாகactively/active
துடுக்கு தன்னுடைய வயதுக்கு மீறி அதிகப்பிரசங்கித்தனமாகவோ கேட்பவரின் தகுதியைக் கருதாமல் கேலியாகவோ பேசும் அல்லது செயல்படும் விதம்insolence
துடுப்பு (படகு ஓட்டப் பயன்படுத்தும்) அகன்ற பட்டையான முனையுடைய நீண்ட மரக் கோல்oar
துடை1(ஈரம், அழுக்கு முதலியவற்றை) தேய்த்து நீக்குதல்wipe
துடைப்பக்கட்டை துடைப்பம்broom
துடைப்பம் (வீடு முதலியவற்றைக் கூட்டிச் சுத்தம்செய்வதற்கான) தென்னை ஓலையின் ஈர்க்குகளையோ கோரை முதலியவற்றையோ கட்டிய தொகுப்புa broom (made with the ribs of the palm leaves or bulrushes tied up into a small bundle at one end)
துண்டம் (பழம், மாமிசம், காய் முதலியவற்றின் வெட்டப்பட்ட) துண்டுpiece (of meat, vegetable, etc.)
துண்டாடு (ஒரு நாடு, அமைப்பு போன்றவற்றைச் சிறுசிறு பிரிவுகளாக) பிரித்தல்(ஒற்றுமைக் குலைவு உண்டாகும்படி) சிதறடித்தல்dismember
துண்டி (ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ) தனித்தனிப் பகுதிகளாக்குதல்cut off
துண்டு1(-ஆக, -ஆன) (முழுமையிலிருந்து பிரிந்த அல்லது பிரிக்கப்பட்ட) சிறு பகுதிsmall block
துண்டு2(துடைக்க, துவட்டப் பயன்படும்) செவ்வக வடிவத் துணிtowel
துண்டுப் பிரசுரம் அறிவிப்பு, விளம்பரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட ஓரிரு பக்க வெளியீடுhandbill
துண்டுவிழு (செலவு, திட்டம் போன்றவற்றுக்குத் தேவைப்படும் பணத்தில்) பற்றாக்குறை ஏற்படுதல்(in a budget) incur a deficit
துணி1(பயமோ தயக்கமோ இல்லாமல் ஒன்றைச் செய்ய) தைரியம் கொள்ளுதல்/தைரியத்துடன் (ஒன்றை) எதிர்கொள்ள அல்லது செய்ய முன்வருதல்dare
துணி2பருத்தி, கம்பளி, பட்டு முதலியவற்றின் நூலால் அல்லது இழையால் நெய்யப்பட்ட பொருள்cloth
துணிகரம் (அச்சம் தரும் செயலை அல்லது அரிய செயலைத் தயக்கமின்றிச் செய்யும்) தைரியம்daring (act)
துணிபு முடிந்த முடிவுconsidered opinion
துணிமணி உடை, ஆடை, பயன்படுத்தும் பிற துணிகள் முதலியவற்றைக் குறிப்பிடும் ஒரு பொதுச்சொல்a general term used to refer to clothes, garments
துணிவு (ஒன்றைச் செய்வதற்கு வேண்டிய) மனத் திடம்courage
துணுக்கம் வெளியே காட்ட முடியாத, மனத்தைக் கவ்வும் பயம்a state of fear
துணுக்கு (ஒன்றின்) சிறு பகுதிsmall piece
துணுக்குறு (எதிர்பார்ப்பது இல்லாததால்) மன நடுக்கம் கொள்ளுதல்be startled
துணை2(ஒரு பதவிப் பொறுப்பில்) முதல் நிலைக்கு அடுத்த அல்லது முதல் நிலைக்கு வரக் கூடிய(in the official hierarchy) vice
துணைக்கண்டம் (தனிக் கண்டமாகக் கருதப்படத் தகுந்த) ஒரு கண்டத்தின் பகுதியாக இருக்கும் பரந்த நிலப் பகுதிsubcontinent
துணைக்கோள் கிரகத்தைச் சுற்றும் சிறிய கோள்(natural) satellite
துணைநிலை ஆளுநர் (இந்தியாவில்) தனி மாநிலமாக இல்லாத, மைய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள பகுதிகளுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்lieutenant Governor (of Union territories in India)
துணைநூற்பட்டியல் (ஆய்வுக்கட்டுரை, புத்தகம் முதலியவை உருவாவதற்கு) உதவிபுரிந்த நூல், கட்டுரை முதலியவற்றின் அகரவரிசைப்படுத்தப்பட்ட விபரத் தொகுப்புbibliography
துணைபோ (பெரும்பாலும் நியாயமற்றதாகக் கருதப்படும் ஒன்றிற்கு) உதவ முற்படுதல்abet
துணைவன்1நண்பன்friend
துணைவன்2(மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குப் பயன்படும் வகையில் பாடநூலுக்கு எழுதப்படும்) வினாவிடை நூல்guide (for the prescribed text providing answers to likely questions)
துணைவி மனைவிwife
துணைவேந்தர் (பல்கலைக்கழகத்தின்) நிர்வாகப் பணியையும் கல்விப் பணியையும் ஏற்றுத் தலைவராகச் செயல்பட ஆளுநரால் நியமிக்கப்படுபவர்vice-chancellor (of a university)
துத்தநாகம் இரும்புக் குழாய், தகடு முதலியவை துருப்பிடிக்காமலிருக்கப் பூசும் வெளிர் நீல நிறம் உடைய உலோகம்zinc
துதி1தொழுதல், வழிபடுதல்worship
துதி2(தெய்வத்திற்கு) வணக்கம்/(வணக்கத்திற்கான) தொழுகைப் பாடல்worship/a song of worship
துதிகை குமாரத்தி (பெரும்பாலும் திருமண அழைப்பிதழில்) இரண்டாவது பெண்(mostly in wedding invitation) second daughter
துதிபாடி (ஒருவரை) துதிபாடுபவர்sycophant
துதிபாடு (தான் பயன் அடைவதற்காகப் பதவியில் இருப்பவர்களை அல்லது வசதி படைத்தவர்களை) புகழ்ந்து பேசுதல்sing the praises of
துப்பட்டா தோளில் போட்டுக்கொள்ளும் பெரிய அகலமான துணிa kind of shawl
துப்பட்டி போர்வைsheet of cloth (used as a blanket)
துப்பறி (கொலை, திருட்டு, மோசடி போன்ற குற்றங்களில்) தடயங்களைச் சேகரித்தல்/(குற்றவாளியை) அறிவதற்காகத் தகவல் சேகரித்தல்(வழக்கை) ஆய்வுசெய்தல்collect evidence/investigate (a crime)
துப்பாக்கி நீண்ட குழாய் வழியே வெடிப்பொலியுடன் குண்டுகளை விசையுடன் செலுத்தும் ஆயுதம்gun
துப்பாக்கிச்சூடு (கலவரம், வன்முறை போன்றவை கட்டுக்கடங்காமல் போகும்போது நிலைமையைச் சமாளிக்கக் காவல்துறையினர்) துப்பாக்கியால் சுடும் நடவடிக்கைfiring (by the police)
துப்பு2(எதிர்மறைச் சொற்களோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சாமர்த்தியம்ability
துப்பு3(குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு உதவும்) தடயம்(of crime) trace
துப்புக்கெட்டு/துப்புக்கெட்ட (ஒன்றைச் செய்துமுடிக்கத் தேவையான) சாமர்த்தியம் இல்லாமல்/சாமர்த்தியம் இல்லாதwithout competence/having no competence
துப்புத்துலக்கு துப்பறிதல்gather more information (to trace the criminal, to find the motive, etc.)
துப்புரவாக முழுமையாகentirely
துப்புரவு (இடம், பொருள் முதலியவற்றின்) சுத்தம்cleanness
தும்பி தட்டான் பூச்சிdragonfly
தும்பு1(மாட்டையோ கன்றையோ கட்டிப்போடும்) நீளம் அதிகம் இல்லாத கயிறுtether
தும்பு2தேங்காய் மட்டையிலிருந்து உரித்த நார்coconut fibre
தும்பு3வம்பு என்பதோடும் தூசி என்பதோடும் இணைந்து வரும் சொல்a word which occurs in combination with வம்பு and தூசி
தும்புக்கட்டு தென்னந் தும்பினால் கட்டப்பட்ட துடைப்பம்broomstick
தும்பை (மருந்தாகப் பயன்படும்) சிறிய வெள்ளை நிறப் பூவைத் தரும் ஒரு சிறு குத்துச்செடிwhite dead nettle
தும்மல் மூக்கிலிருந்து வெடிப்பொலியோடு வெளிப்படும் மூச்சுக் காற்றுsneeze
துய் (இன்பத்தை, பயனை) அனுபவித்தல்enjoy (pleasure)
துயர் துடைப்புப் பணி (வறட்சி, வெள்ளம் முதலியவற்றால்) பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் போக்கும் நிவாரண நடவடிக்கைsteps to bring relief to the distressed
துயரம் (-ஆன) துன்பம்sorrow
துயில்1உறங்குதல்sleep
துயில்2உறக்கம்sleep
துயிலெழு தூக்கத்திலிருந்து விழித்தல்wake up
துர்க்கை வெற்றி வேண்டி வழிபடும் தெய்வமாகிய காளிgoddess of victory
துர்நாற்றம் பொறுத்துக்கொள்ள முடியாத நாற்றம்foul smell
துர்பாக்கியம் நற்பேறு இன்மைmisfortune
துர்மரணம் இயற்கையாக இல்லாமல் தற்கொலை, கொலை முதலியவை காரணமாக நேரும் மரணம்unnatural or violent death (as by suicide, murder, drowning, etc.)
துர்லபம் முடியாத ஒன்றுalmost impossible
துரத்தல் இருமல்cough
துரத்து (பிடிப்பதற்காக) ஓடிப் பின்தொடர்தல்chase
துரதிர்ஷ்டம் ஏன் என்று விளக்க முடியாத வகையில் நேரும் கெடுதல்bad luck
   Page 107 of 204    1 … 105 106 107 108 109 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil