Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| நரம்புத் தளர்ச்சி | (கட்டுப்பாடு இல்லாமல் உடல் உறுப்புகள் ஆடுகிற வகையில்) நரம்பில் ஏற்படும் உறுதிக் குலைவு | nervous debility |
| நரம்பு மண்டலம் | (சிந்தித்தல், உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், உறுப்புகளை அசைத்தல் போன்ற செயல்களைச் செய்யும்) மூளை, தண்டுவடம், நரம்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு | nervous system |
| நரமாமிசம் | மனித உடலில் உள்ள சதை | human flesh |
| நரிக்குறத்தி | நரிக்குறவன் என்பதன் பெண்பால் | feminine of நரிக்குறவன் |
| நரிக்குறவன் | நரி முதலிய சிறிய காட்டு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி விற்றுப் பிழைப்பவன் | a person who hunts foxes and certain birds and makes a living by selling them |
| நரை1 | (பெரும்பாலும் முதுமையின் அறிகுறியாக முடி) வெள்ளை நிறமாக மாறுதல் | (of hair) grow grey |
| நரை2 | வெள்ளை நிறமாக மாறிய முடி | grey hair |
| நரைதிரை | (முதுமையின் அறிகுறியான) நரை முடியும் தோல் சுருக்கமும் | grey hair and wrinkles (as signs of old age) |
| நல் | நல்ல (என்பதன் முதல் மூன்று பொருளிலும்) | see நல்ல ( first three senses) |
| நல்கு | (பெரும்பாலும் பொருள் அல்லாத பிறவற்றை) அளித்தல் | bestow |
| நல்கை | (கல்வி நிறுவனங்களுக்கு) நிதி உதவி | grant (to educational institutions) |
| நல்ல | (மனிதர்களிடம்) எதிர்பார்க்கப்படும் ஒழுங்கு, முறை முதலியவை கொண்டமைந்த/(பிறவற்றில்) மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரக் கூடிய தன்மை கொண்ட | (a positive attribute) good |
| நல்லகாலமாக | அதிர்ஷ்டவசமாக | luckily |
| நல்லபடியாக | (வாழ்க்கையில்) வசதிகளுடன் சிறப்பாக | prosperously |
| நல்லபாம்பு | தலையை உயர்த்திப் படம் எடுத்துச் சீறக் கூடிய விஷப் பாம்பு | cobra |
| நல்லவிளக்கு | கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு சாமிக்கு முன் ஏற்றிவைக்கும் விளக்கு | a lamp with a wick burnt with certain kinds of oil, placed in front of a deity (at home) |
| நல்லுறவு | (நாடுகளுக்கிடையே அல்லது அமைப்புகளுக்கிடையே) இணக்கமான தொடர்பு | friendly and happy relations (between countries, etc.) |
| நல்லெண்ணம் | (நாடுகளுக்கிடையே) நல்லுறவைப் பேணும் நோக்கம் | good will |
| நல்லெண்ணெய் | எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் | sesame oil |
| நலங்கு | திருமணத்தில் மணமக்களை அமரச்செய்து சந்தனம் முதலியவை பூசி (மகிழ்ச்சி தரும்) சில விளையாட்டுகள் விளையாடச்செய்யும் சடங்கு | a ritual game at the time of wedding, played by the bride and the groom |
| நலமடி | காயடித்தல் | castrate (the bull) |
| நலி | மோசமான நிலைக்குத் தாழ்தல் | decline (in progress, prosperity, etc.) |
| நலிவு | நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போகிற சரிவு | decline |
| நலுங்கு1 | (பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில்) (உடல்) வருந்துதல் | strain (oneself) |
| நவ | பழமையிலிருந்து விடுபட்டுப் புதுமையை நோக்கிய | modern |
| நவச்சாரம் | (ஈயம் பூசப் பயன்படுத்தும்) பளபளப்பான வெள்ளை நிறமும் காரத் தன்மையும் உடைய பொருள் | (solid) ammonium chloride |
| நவதானியம் | அவரை, உளுந்து, எள், கடலை, கொள்ளு, கோதுமை, துவரை, நெல், பாசிப்பயறு ஆகிய ஒன்பது தானியங்கள் | nine kinds of grains, viz |
| நவம் | (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) ஒன்பது | (mostly a combined form) nine |
| நவமி | அமாவாசை அல்லது பௌர்ணமி கழிந்த ஒன்பதாவது நாள் | the ninth lunar day after the new moon and after the full moon |
| நவராத்திரி | (துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களுக்கு) புரட்டாசி மாதம் வளர்பிறையின் முதல் நாளிலிருந்து ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் பண்டிகை | a festival for the Goddesses Durga, Lakshmi, Saraswathi celebrated for nine days |
| நவரை | தாளடிக்குப் பிறகு பயிரிடப்படும் நெல் சாகுபடி | the third crop of paddy in a year cultivated after தாளடி |
| நவீனம்1 | (பழமையிலிருந்து மாறுபட்டு) புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மையையும் கொண்டமைவது | modernity |
| நவீனம்2 | புதினம் | novel |
| நவீனமயமாக்கு | (தொழில், கல்விமுறை போன்றவற்றை) புதிய சாதனங்கள், அணுகுமுறை ஆகியவற்றின் உதவிகொண்டு தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்தல் | modernize |
| நழுவல் | (பேச்சில் அல்லது நடத்தையில்) எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்கிற தன்மை | evasion |
| நழுவு | தடுப்போ பிடிப்போ இல்லாததால் மென்மையாக விலகுதல் அல்லது சரிதல் | slide |
| நள்ளிரவு | இரவு பன்னிரண்டு மணி அல்லது அதை ஒட்டிய நேரம் | midnight |
| நளபாகம் | தேர்ச்சி பெற்றவரின் சமையல் | excellent cooking |
| நற்சான்றிதழ் | (ஒருவரின்) நடத்தைகுறித்து அளிக்கிற சான்றிதழ் | conduct certificate |
| நற்செய்தி | இயேசுவின் வாழ்வு, போதனை ஆகியவற்றைக் குறித்துப் புதிய ஏற்பாட்டில் நால்வர் எழுதிய வாசகங்கள் | gospel |
| நற்செய்தியாளர் | புதிய ஏற்பாட்டில் நற்செய்தியை எழுதியவர்கள் | evangelist |
| நறணை | அரணை | skink |
| நறுக்-என்று | (குட்டுதல், கிள்ளுதல் குறித்து வருகையில்) சுள்ளென்று வலிக்கும்படியாக | (of knuckle, pinch) sharply |
| நறுக்கு1 | (காய்கறி, பழம் முதலியவற்றைக் கத்தி போன்றவற்றால் சிறு துண்டாக) வெட்டுதல் | cut (vegetables, fruits, etc into small pieces) |
| நறுக்கு2 | (ஓலை, புகையிலை போன்றவற்றின் நறுக்கப்பட்ட) துண்டு | piece (of tobacco, palm leaf, etc.) |
| நறுக்குத்தெறித்தாற்போல் | (ஒரு விஷயம் சொல்லப்படும் விதத்தில்) தெளிவாகவும் சுருக்கமாகவும் | succinctly |
| நறுங்கு | உரிய வளர்ச்சி இல்லாமல் இருத்தல் | be deficient |
| நறுமணம் | இனிய மணம் | fragrance |
| நன்கொடை | (கோயில், கல்வி நிறுவனம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக) மனம் உவந்து வழங்கும் தொகை அல்லது பொருள் | donation (of a large sum) |
| நன்செய் | (ஆறு, ஏரி முதலியவற்றின் மூலம்) பாசன வசதி பெற்று நெல் பயிரிடப்படும் நிலம் | wet land |
| நன்மை | (-ஆன) சாதகமாக இருக்கும் விளைவு | benefit |
| நன்றிக்கடன் | செய்த உதவிக்கு நன்றி செலுத்த விரும்பும் கடமை உணர்வு | debt of gratitude |
| நன்னாரி | சர்பத் தயாரிப்பதில் பயன்படுத்தும் ஒரு வகைக் கொடியின் மணம் நிறைந்த வேர் | sarsaparilla (added in sherbet) |
| நனவோடை | (உரைநடை இலக்கியத்தில்) குறிப்பிட்ட நேரத்தில் மனத்தில் எழும் எண்ணங்களையும் உணர்வுகளையும் தொடர்ச்சியாக எழுதுதல் | stream of consciousness (as a presentation technique in prose writing) |
| நனை1 | (தண்ணீர், இரத்தம் முதலிய திரவப் பொருளால்) ஈரமாதல் | get or become wet |
| நனை2 | நனையச்செய்தல் | drench |
| நஷ்ட ஈடு | (இழப்பை, சிரமத்தை) ஈடுகட்ட வழங்கப்படும் பணம் | compensation |
| நஷ்டம் | (வரவைவிடச் செலவு அதிகமாவதாலோ வர வேண்டியது குறைவதாலோ உண்டாகும்) இழப்பு | loss |
| நா | நாக்கு | tongue |
| நாக்கிளிப்புழு | மண்புழு | earthworm |
| நாக்குச் செத்துப்போ | (சில வினைமுற்று வடிவங்களில் மட்டும்) நாக்கு உணவின் சுவை அறியும் தன்மையை இழந்தது போல் உணர்தல் | (of tongue) lose sensation |
| நாக்குவழி | (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (மதிப்பற்றுப்போன ஒன்றைப்பற்றி எரிச்சலுடன் குறிப்பிடுகையில்) பலன் பெறுதல் | live on |
| நாகப்பாம்பு | நல்லபாம்பு | cobra |
| நாகரிகம் | குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கை முறை | civilization |
| நாகலிங்கம் | நாகத்தின் விரிந்த படம் போன்ற இதழையும் லிங்க வடிவத்திலான மகரந்தப் பகுதியையும் கொண்ட பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் உயரமான மரம் | cannonball tree and its flower |
| நாகு | இளம் பசு | young cow |
| நாங்கள் | பேசுபவர் முன்னிருப்பவரை உட்படுத்தாத தன்மைப் பன்மைச் சொல் | first person plural that does not include the hearer or addressee |
| நாசகாரம் | பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடியது | that which causes great destruction |
| நாசம் | (இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும்) பேரழிவு(பெருத்த) சேதம் | destruction |
| நாசமாய்ப்போ | (வாழ்க்கையில்) உருப்படாமல்போதல் | go to rack and ruin |
| நாசவேலை | ரகசியமாகச் செய்யும் கெட்ட நோக்கமுடைய செயல் | sabotage |
| நாசி | மூக்கு | nose |
| -நாசினி | (கூட்டுச்சொற்களில்) (குறிப்பிடப்படுவதை) அழிக்கக் கூடியது | (used in compound formation) -cide |
| நாசுக்கு/நாசூக்கு | (ஒருவரின் பழக்கவழக்கத்தைக் குறிக்கையில்) முரட்டுத்தனமற்ற மென்மை | polished or refined or polite way |
| நாட்டம் | (ஒருவர் மேல் அல்லது ஒன்றில்) விருப்பம் | keen desire |
| நாட்டாண்மைக்காரர் | (கிராமங்களில் முன்பு இருந்த) பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவதற்கு ஆட்களைத் திரட்டுதல், சில பணிகளை மேற்கொள்ளுதல் முதலியவற்றுக்கான ஊர்ப் பெரியவர் | leader of a village community (a system of the past) |
| நாட்டாமை | மூட்டை சுமப்பவன் | coolie |
| நாட்டார் வழக்காற்றியல் | நாட்டார் வழக்காறுகளை ஆராயும் துறை | study of folklore |
| நாட்டார் வழக்காறு | நாட்டு மக்களிடையே எழுதப்படாமல் தொடர்ந்து இருந்துவரும் (கலை அம்சம் உடைய) நிகழ்வுகளும் பழக்கவழக்கங்களும் | folklore |
| நாட்டிய நாடகம் | நாட்டிய வடிவில் நிகழ்த்தப்படும் நாடகம் | dance drama |
| நாட்டியம் | பாவங்களை அபிநயத்தோடு வெளிப்படுத்தும் ஆடல் முறை | dance which is a combination of dramatic art and gestures to present a theme |
| நாட்டு1 | நடுதல் | plant |
| நாட்டு2 | (தாவரம், விலங்கு குறித்து வருகையில்) (குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சார்ந்ததும்) கலப்பு இனமாகவோ உயர் இனமாகவோ இல்லாத | indigenous (breed) |
| நாட்டு ஓடு | பிளக்கப்பட்ட மூங்கில் துண்டு போல் இருக்கும் வளைவான ஓடு | country tile |
| நாட்டுக்கட்டை | கிராமத்தைச் சார்ந்த நல்ல உடல்வாகு கொண்ட ஆண் அல்லது பெண் | sturdy man of the countryside |
| நாட்டுச்சர்க்கரை | பழுப்பு நிறச் சர்க்கரைத் தூள் | unrefined sugar which is brown in colour |
| நாட்டுடமையாக்கு | அரசுடமையாக்குதல் | nationalize |
| நாட்டுப்பாடல்/நாட்டுப்புறப்பாடல் | நாட்டார் வழக்காற்றில் உள்ள (கதையைப் பொருளாகக் கொள்ளாத) பாடல் | folk song |
| நாட்டுப்புறம் | கிராமமும் அதை ஒட்டியுள்ள பகுதிகளும் | countryside |
| நாட்டுப்பெண் | மருமகள் | daughter-in-law |
| நாட்டு வைத்தியம் | உள்நாட்டிலேயே கிடைக்கும் மூலிகை, வேர் போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவம் | medical treatment based on local medicines |
| நாடகமாடு | (பிறரை நம்பச்செய்யும் பொருட்டு) நல்லவராக அல்லது நல்ல முறையில் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ளுதல் | feign innocence |
| நாடா | (உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்படும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்படும்) துணிப் பட்டை | ribbon |
| நாடாப்புழு | மனிதனுடைய குடலில் ஒட்டிக்கொண்டு (தனக்குத் தேவையான உணவை) உறிஞ்சி உயிர் வாழும் புழு | tapeworm |
| நாடாளுமன்றம் | (இந்தியாவில்) மக்களவையும் மாநிலங்களவையும் | (in India) parliament |
| நாடி2 | முகவாய் | chin |
| நாடித் துடிப்பு | இரத்தம் இதயத்திலிருந்து விட்டுவிட்டுப் பாய்வதால் இரத்தக் குழாய் (தமனி) விரிந்து சுருங்கி ஏற்படுத்தும் துடிப்பு | pulse |
| நாடி பார் | (மணிக்கட்டில் விரலால் அழுத்தி) நாடியை உணர்தல் | feel the pulse |
| நாடு1 | விரும்பித் தேடுதல் | seek |
| நாடு2 | குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி | country |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.