Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| தொற்றுநோய் | நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன்மூலம் பரவும் நோய் | contagious disease |
| தொன்மை | காலத்தால் மிகவும் முற்பட்டது | antiquity |
| தொன்றுதொட்டு | மிக நீண்ட காலமாக | from time immemorial |
| தொன்னை | வாழை இலையையோ வேறு இலைகளையோ சுருட்டித் தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம் | plantain leaf or any other large leaf rolled into a cup-like form (for serving eatables) |
| தொனி1 | நேரடியாக வெளிப்படுத்தப்படாமல், குறிப்புப் பொருளாக வெளிப்படுதல் | imply |
| தொனி2 | நேரடியாக இல்லாத குறிப்புப் பொருள் தரும் வெளிப்பாடு | implication |
| தோகை | சில பறவைகளின் வால் பகுதியில் உள்ள நீண்ட இறகுகளின் தொகுதி | tail feathers (of a peacock, etc.) |
| தோசை | அரிசி மாவையும் உளுந்து மாவையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புளிக்கவைத்துத் தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் | griddle cake (by roasting the paste of rice and blackgram) |
| தோசைக் கல் | தோசை சுடுவதற்கான வட்ட வடிவ இரும்புத் தட்டு | griddle for making தோசை |
| தோசைத் திருப்பி | தோசைக் கல்லில் உள்ள தோசையைப் புரட்டிப் போடவும் எடுக்கவும் பயன்படும் பட்டையான முன்புறமும் கைப்பிடியும் உடைய ஒரு வகைக் கரண்டி | ladle-like utensil for turning griddle cakes |
| தோட்டக்கலை | பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடிகளையும் மரங்களையும் வளர்த்துப் பராமரிக்கும் முறை | gardening |
| தோட்டக்கால் | புன்செய்ப் பகுதியில் கிணற்றுப் பாசனம்மூலம் சாகுபடிசெய்யப்படும் நிலம் | garden land |
| தோட்டந்துரவு | தோட்டமும் அது போன்ற பிறவும் | landed property |
| தோட்டப் பயிர் | மேட்டுப்பாங்கான நிலத்தில் நீர்ப் பாய்ச்சி விளைவிக்கும் பயிர் | garden land crop |
| தோட்டம் | மலர்ச் செடிகள் அல்லது (சிறிய அளவில்) காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம் | garden (adjacent to a house) |
| தோட்டா | துப்பாக்கிக் குண்டு | cartridge |
| தோட்டி | தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர் | sanitary worker |
| தோடா | ஆண்கள் கையில் மணிக்கட்டுப் பகுதியில் அணிந்துகொள்ளும் வளையல் போன்ற பெரிய உலோக வளையம் | large bracelet (worn on the wrist by men as a mark of honour) |
| தோடு1 | (பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட) வட்ட வடிவத் தங்கக் காதணி | ear stud (normally studded with precious stones, such as diamonds and worn by women) |
| தோடு2 | (புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடு | shell (of certain fruits, esp |
| தோண்டி | (தண்ணீர் எடுப்பதற்கான) மண் அல்லது உலோகக் கலம் | (earthen or metal) pot (for drawing and carrying water) |
| தோண்டு | (கையால் அல்லது கருவியால்) மண்ணை (பள்ளம் ஏற்படும்படி) அகற்றுதல் | dig (the earth so as to make a hole or pit) |
| தோணி | துடுப்பால் தள்ளப்படும் படகு | (rowing) boat |
| தோது | (ஒன்றைச் செய்வதற்கு ஏற்ற) வசதி | convenience |
| தோதுப்படு | சௌகரியப்படுதல் | be convenient |
| தோப்பு | ஒரே வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைய வளர்க்கப்பட்டுள்ள இடம் | grove |
| தோப்புக்கரணம் | இடது கைவிரலால் வலது காதையும் வலது கைவிரலால் இடது காதையும் பிடித்துக்கொண்டு முழங்கால் மடங்குமாறு உட்கார்ந்து எழுந்திருத்தல் | the act of squatting and standing alternately, holding the ears with hands in a cross-wise manner (as a mode of worship or punishment) |
| தோய்1 | (துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல் | be soaked |
| தோய்2 | (நீர், பால் முதலிய திரவங்களில்) முக்கி நனைத்தல் | dip |
| தோரணம் | (விழாக் காலத்தில்) மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்துத் தொங்கவிடப்படுவது | festoon of mango leaves, palm leaves, etc கல்யாணப் பந்தல் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது |
| தோரணை | (-ஆக, -ஆன) (ஒருவர் வகிக்கும் பதவி, மனத்தில் உள்ள எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும்) பாவனை | posture |
| தோராயம் | (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கையில்) சரியானதற்குச் சற்றுக் கூடவோ குறையவோ உள்ளது | approximation |
| தோல்1 | (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில்) வெற்றி (வாய்ப்பை) இழத்தல் | be defeated |
| தோல்2 | (மனிதன், விலங்கு முதலியவற்றின்) தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி | skin |
| தோல்வி | (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் ஒருவருக்கு ஏற்படும்) வெற்றி இழப்பு | defeat |
| தோலான்துருத்தி | (மிகவும் அலட்சியப்படுத்திக் கூறுகையில்) எந்த விதத் தகுதியும் இல்லாத ஆட்கள் | tom, Dick and Harry |
| தோழமை | நட்பு | friendship |
| தோழர் | (சில அரசியல் இயக்கங்களில்) ஓர் உறுப்பினர் மற்றோர் உறுப்பினரை அல்லது ஆதரவாளரை அழைக்கும் சொல் | (in certain political movements) comrade |
| தோழன் | நண்பன் | friend |
| தோள் | (மனித உடலில்) கழுத்தின் இரு பக்கங்களிலும் நீண்டு அமைந்து கைகள் துவங்கும் பகுதி | shoulder |
| தோள்கொடு | (ஒரு செயலில் ஈடுபட்டிருப்பவருக்கு) உதவிசெய்தல் | extend support |
| தோள்பட்டை | தோளின் தட்டையான பகுதி | shoulder blade |
| தோள்பை | தோளில் தொங்கவிடும்படி பட்டை வைத்துத் தைத்த பை | shoulder bag |
| தோற்கடி | (போட்டியில்) தோல்வி அடையச்செய்தல் | (in sports, competition, etc.) defeat |
| தோற்பாவை | ஒளி ஊடுருவக் கூடிய வகையில் தோலால் செய்யப்பட்டு குச்சி, கயிறு போன்றவற்றால் ஆட்டப்படும் (கதைப் பாத்திர) பொம்மை | leather puppet |
| தோற்றம் | பார்வைக்குத் தெரியும் புற வடிவம் | figure |
| தோற்று | புலப்படுதல் | be seen or perceived |
| தோற்றுவாய் | (ஒன்றின்) ஆரம்பம் | beginning |
| தோற்றுவி | (ஒன்றை) உருவாக்குதல் | cause |
| -தோறும் | (பெயர்ச்சொல்லின் பின்) குறிப்பிட்ட காலத்தில் அல்லது இடத்தில் நிகழ்ச்சி தவறாமல் நடப்பதைக் காட்டுவதற்குப் பயன்படுவது | (after a noun) every (day, week, etc.) |
| தோன்றல் | வம்சம் நிலைக்கப் பிறந்தவன் | descendent |
| தோன்று | (பார்வைக்கு) தெரிதல் | appear |
| தோஷம் | (கிரக நிலை, தீய செயல் போன்றவற்றின்) தீங்கு விளைவிக்கக் கூடிய அம்சம் | malignant influence (believed to be the effect of the planetary position at the time of birth or from evil deed) |
| நக்கீரத்தனம் | யாருக்கும் அஞ்சாமல் தவற்றைத் தவறு என்று சுட்டிக்காட்டும் குணம் | the quality of not fearing to criticize the authority |
| நக்சலைட் | பொருளாதார ஏற்றத் தாழ்வைச் சீர்ப்படுத்த ஜனநாயக அமைப்பில் இயங்காமல் வன்முறைமூலம் பொதுவுடைமைக் கொள்கையை நிறைவேற்ற முயலும் தீவிரவாதி | extremist |
| நகக்கண் | விரல் நுனிக்கும் நகத்துக்கும் இடைப்பட்ட பகுதி | the part between the tip of the finger and the nail |
| நகச்சுற்று | நக ஓரத்தில் உள்ள சதைப் பகுதியில் ஏற்படும் வலியுடன் கூடிய வீக்கம் | whitlow |
| நகச்சூடு | கை பொறுக்கக் கூடிய சூடு | heat that the finger nail can stand |
| நகப்பூச்சு | விரல் நகங்களுக்கு நிறம் தருவதற்குப் பயன்படுத்தும் அழகுசாதனம் | nail polish |
| நகம் | (கை அல்லது கால்) விரல் நுனியின் மேல்புறத்தில் வழுவழுப்பாகவும் வளரக் கூடியதாகவும் உள்ள பகுதி | (finger or toe) nail |
| நகர்1 | மெதுவாக இடம் விட்டு இடம் பெயர்தல் | move slowly |
| நகர்2 | நகரம் | city |
| நகர்த்து | (தள்ளுவதன்மூலம் ஒன்றை) இடம்பெயரச்செய்தல் | move (an object by pushing) |
| நகர்ப்புறம் | நகரமும் நகரத்தைச் சார்ந்த பகுதியும் | city and its suburbs |
| நகரத் தந்தை | மாநகராட்சி உறுப்பினர்களால் ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நகரின் முதல் குடிமகனாக மதிக்கப்படுபவர் | mayor (of a city council, etc.) |
| நகரம் | சில லட்சம் மக்கள் தொகை உள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர் | city |
| நகரா | (முற்காலத்தில் போர்க்களத்திலும் அரச ஊர்வலத்திலும் பயன்படுத்தப்பட்ட) பெரிய அரைக்கோள வடிவத் தோல் கருவி | big hemispherical drum (used formerly as battle drum and played in royal processions) |
| நகராட்சி | நகரத்துக்கான உள்ளாட்சி அமைப்பு | municipality |
| நகராட்சி மன்றம் | நகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவை | municipal council |
| நகரியம் | குறிப்பிட்ட தொழிலை ஒட்டி உருவாகிய நகரின் பராமரிப்புக்காகத் தேர்தல்மூலம் அல்லாமல் அமைக்கப்படும் உள்ளாட்சி நிர்வாகம் | township |
| நகல் | (ஓவியம், புகைப்படம், கடிதம் முதலியவை குறித்து வருகையில்) மூலத்திலிருந்து அதைப் போலவே உருவாக்கப்படும் அல்லது கருவியால் எடுக்கப்படும் மற்றொன்று | duplicate |
| நகாசு வேலை | (நகை, புதிய கட்டடம் முதலியவற்றுக்கு) மெருகேற்றுதல், வர்ணமடித்தல் போன்ற அலங்கார வேலை | work of embellishment |
| நகை1 | சிரித்தல் | laugh |
| நகை2 | சிரிப்பு | laughter |
| நகை3 | தங்கம், வெள்ளி முதலியவற்றால் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு அழகுக்காக அணிந்துகொள்ளும் சங்கிலி, வளையல் போன்ற அணிகலன் | jewels |
| நகைச்சுவை | (-ஆக, -ஆன) சிரித்து மகிழக் கூடிய தன்மை | humour |
| நகைநட்டு | நகையும் நகைபோன்ற பிறவும் | jewels and other valuables |
| நகைப்பு | சிரிப்பு | laughter |
| நங்கிணம் | மைனா | mynah (bird) |
| நங்கூரம் | (கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும்பொருட்டு நீருக்குள் இறக்கப்படும்) இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம் | anchor |
| நங்கூரம் பாய்ச்சு | (கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்பதற்காக நீருக்குள்) நங்கூரத்தை இறக்குதல் | cast anchor |
| நங்கை | (இளம்) பெண் | young girl |
| நச்சரி | (ஒருவரிடம் ஒன்றை வேண்டி) எரிச்சலைத் தரும் விதத்தில் தொடர்ந்து கேட்டல் அல்லது வற்புறுத்துதல் | pester |
| நச்சிலக்கியம் | பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகத் தூண்டும் வகையில் எழுதப்படும் நூல் | pulp literature |
| நச்சு1 | (எரிச்சல் ஏற்படுத்தும் வகையில்) ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அதிக முயற்சி வேண்டுவதாக அமைவது | vexing |
| நச்சு2 | (பெரும்பாலும் பிற சொற்களுடன் இணைந்து) நஞ்சு | (combining with other words) poison |
| நச்சுநச்சு-என்று | (எரிச்சல் தரும்படியாக) விடாமல் தொடர்ந்து | exasperatingly |
| நசநச-என்று | ஈரமாக | damply |
| நசி1 | (ஓர் இனம்) எண்ணிக்கையில் குறைதல்/(குடும்பம், கலை முதலியவை) வளர்ச்சியில் பின்தங்கி அல்லது செல்வாக்கு, மதிப்பை இழந்து நலிவடைதல் | become extinct/decline |
| நசி2 | குறைதல் | become extinct |
| நசிவு | நலிவு | decadence |
| நசுக்கு | (ஒன்றை ஒரு பரப்பில்) அழுத்தித் தேய்த்தல், (ஒன்றின் பரப்பை) இரு பக்கங்களிலும் விசையுடன் அழுத்துதல் | crush |
| நசுங்கு | (விழுவதால், அழுத்தப்படுவதால்) சிதைதல் | get crushed |
| நஞ்சு | விஷம் | poison |
| நஞ்சுக்கொடி | குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து வெளியாவதும் கருப்பைக்குள் இருப்பதும் கடல் பஞ்சு போன்றதுமான சவ்வுப் படலம் | placenta |
| நட்சத்திர இரவு | (நிதி திரட்டுவதற்காக) பிரபல திரைப்பட நடிகர்கள் கூடி இரவில் நடத்துகிற கலை நிகழ்ச்சி | star night (to raise funds for a charitable purpose) |
| நட்சத்திர ஓட்டல் | தங்குதல் உள்ளிட்ட பல வசதிகளின் அடிப்படையில் தரத்தைக் காட்டும் வகையில் (பெரும்பாலும் மூன்று அல்லது ஐந்து) நட்சத்திரங்களைக் குறியீடாகப் பெற்ற உணவு விடுதி | star hotel |
| நட்சத்திரக்குறி | உடுக்குறி | asterisk |
| நட்சத்திரம் | பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதும் இரவில் கண்ணுக்குத் தெரியக் கூடியதும் தன்னிடத்திலேயே ஒளியையும் வெப்பத்தையும் கொண்டதுமான மின்னும் விண்வெளிப் பொருள் | star |
| நட்சத்திர மண்டலம் | ஓர் இடத்தில் அடர்த்தியாகக் காணப்படும் நட்சத்திரங்களின் கூட்டம் | galaxy |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.