Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
நட்டநடு (காலத்திலும் இடத்திலும்) சரியான நடுப் பகுதிthe very middle (of time or space)
நட்டாற்றில் விடு (தன்னை நம்பி வந்த ஒருவரை) இக்கட்டான நிலையில் உதவாமல் கைவிடுதல்leave (s.o.) in the lurchlet (s.o.) down.
-நட்டு நகை என்பதோடு இணைந்து வரும் சொல்a word which occurs in combination with நகை
நட்டுவனார் மரபுப் பாணியில் நாட்டியம் கற்றுத் தருபவர்dance master who teaches South Indian classical dance
நட்டுவாக்காலி அளவில் பெரிதாகவும் நிறத்தில் கருப்பாகவும் இருக்கும், தேள் இனத்தைச் சேர்ந்த உயிரினம்a kind of large black scorpion
நட்டுவாங்கம் நாட்டியம் பயிற்றுவிக்கும்போது அல்லது ஆடும்போது தாளம் தட்டி நாட்டியத்தை இயக்கும் முறைthe technique of directing the dancer by delineating the rhythmic syllables with the help of cymbals
நட்பு ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் (பொதுவாக) உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவுfriendship
நட்புறவு (நபர்கள் அல்லது நாடுகளுக்கு இடையிலான) நேச உறவுamity or friendship (between persons or countries)
நட இடம்பெயரும் பொருட்டு இயல்பான வேகத்தில் கால்களை மாற்றிமாற்றி முன்வைத்தல்walk
நடத்து (ஒன்றைக் குறிப்பிட்ட முறைப்படி அமைத்து) நிகழ்த்துதல்conduct
நடத்துநர் பேருந்தில் பயணச்சீட்டுக் கொடுப்பது, பயணிகள் ஏறவும் இறங்கவும் வண்டியை நிறுத்தச்செய்வது முதலிய பணிகளைச் செய்யும் ஊழியர்(in a bus) one who issues tickets, signals the driver to stop, etc
நடத்தை (சமூகத்தில்) நடந்துகொள்ளும் விதம்behaviour
நடப்பு1(குறிப்பிடும் இடத்தில்) நிகழ்வதுstate of affairs
நடப்பு2நிகழ்ந்துகொண்டிருக்கிறcurrent (year, etc.)
நடம் நடனம்dance
நடமாட்டம் (மக்கள், விலங்கு, வாகனம் முதலியவற்றைக் குறித்து வருகையில்) (ஓர் இடத்தில்) செல்லுதல், வருதல் போன்ற செயல்பாடு அல்லது இயக்கம்movement (of people, animals, etc.)
நடமாடு (மனிதர் தொடர்பாகக் கூறும்போது) நடந்து இயங்குதல்/(விலங்கு தொடர்பாகக் கூறும்போது) உலவுதல்(of persons) walk
நடமாடும் பல இடங்களுக்கும் செல்லக் கூடிய வகையில் வாகனத்தில் அமைந்தmobile
நடராஜர் நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் சிவன் வடிவம்siva in a dancing pose
நடவடிக்கை (ஒருவரின்) செயல்பாடுbehaviour
நடவு நாற்றை அல்லது இளங்கன்றைப் பறித்துப் பண்படுத்தப்பட்ட நிலத்தில் நடுவது(in agriculture) transplantation
நடனம் இசைக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகளை அசைத்து முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி நிகழ்த்தும் கலைdance
நடாத்து மேற்கொள்ளுதல்conduct
நடி (திரைப்படம், நாடகம் முதலியவற்றில் ஒரு பாத்திரமாக வேடம் ஏற்று அந்தப் பாத்திரத்தின்) குண இயல்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுதல்act (in a film, drama, etc.)
நடிகன் திரைப்படம், நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிப்பவன்(of film, theatre) actor
நடிகை நடிகன் என்பதன் பெண்பால்actress
நடிப்பு திரைப்படம், நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் செயல்acting
நடு1(மரம், செடி முதலியவை வளர்வதற்கு அவற்றின் வேர்ப் பகுதியை நிலத்தில்) செருகிவைத்தல் அல்லது ஊன்றுதல்plant (a tree, seedling)
நடு2இடைப்பட்ட பகுதி அல்லது நிலைmiddle
நடுக்கம் (உடலில் அல்லது உடலின் பகுதியில் ஏற்படும்) கட்டுப்பாடற்ற அசைவுtrembling
நடுக்கு (உடலை) நடுங்கச்செய்தல்make one tremble
நடுகல் (பழங்காலத்தில்) இறந்த வீரனின் நினைவாக (பெரும்பாலும்) அவன் பெருமையை எழுதி நடும் கல்stone in memory of a dead hero usually with a citation
நடுகை நடவுtransplantation of seedlings
நடுங்கு (உடல் அல்லது உடலின் பகுதி) கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்tremble
நடுத்தர ஏழை, பணக்காரன் என்ற இரு நிலைக்கு இடைப்பட்டmiddle (class)
நடுத்தரம் (தரம், தன்மை, அளவு முதலியவை குறித்து வருகையில்) அதிகம், குறைவு அல்லது நல்லது, மோசம் அல்லது சிறியது, பெரியது போன்ற எதிர் நிலைகளுக்கு இடைப்பட்டதாக அமைவது(of quality, size, nature, etc.) medium
நடுநடுங்கு (பயத்தால்) அதிகமாக நடுங்குதல்tremble greatly
நடுநிசி நள்ளிரவுmidnight
நடுநிலை விருப்பு, வெறுப்பு இல்லாத சம நிலைimpartiality
நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்புவரை உள்ள பள்ளிmiddle school
நடுவண் அரசு மத்திய அரசு(in India) central government
நடுவர் நீதிபதி judge
நடுவர் மன்றம் இரு தரப்பினரும் பேசி முடிவு காணமுடியாத பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர்கள் ஏற்றுக்கொண்ட வகையில் நியமிக்கப்படும் நடுவர் குழுtribunal
நடுவழியில் இரு இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்midway
நடுவிரல் (கையில் அல்லது காலில்) மூன்றாவதாக உள்ள விரல்middle finger or toe
நடுவில்/நடுவே (காலத்தில், இடத்தில்) இடையில்in the middle
நடை1நடந்து செல்லும் செயல்walk
நடை2தனக்கென ஏற்படுத்திக்கொண்ட முறைstyle (in speech, writing)
நடைப்பயணம் கால்நடையாகவே செல்லும் பயணம்travel on foot
நடைப்பிணம் இயல்பான வாழ்க்கைக்குத் தேவையான துடிப்பை இழந்தவர்one who is weary of life
நடைபயில் மெதுவாக அல்லது நளினமாக நடத்தல்walk gracefully or daintily
நடைபாதை (தெருவின் இரு ஓரங்களிலும் மக்கள்) நடந்து செல்வதற்கான (சற்று உயர்வாக இருக்கும்) பாதைpavement
நடைபாவாடை (சில சடங்குகளில்) நடந்துசெல்வதற்காகப் பாதையில் விரிக்கும் துணிcloth spread on the path (for s
நடைபெறு நட (என்னும் வினையின் 2, 3, 4, 5 ஆகிய பொருள்களில்)see நட (in the senses of 2, 3, 4, 5 )
நடைபோடு பெருமிதத்துடன் முன்னேறுதல்take good strides
நடைமுறை (ஒரு திட்டம், கொள்கை முதலியவற்றை) செயல்படுத்தும் முறைpractice
நடைமுறைப்படுத்து (ஆட்சி, திட்டம், சட்டம் போன்றவற்றை) நடைமுறைக்குக் கொண்டுவருதல்bring into force
நடையன் நாய்dog
நடையியல் (பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகியவற்றின்) நடையைப்பற்றி ஆராயும் ஒரு மொழியியல் பிரிவுstylistics
நடையைக்கட்டு இருக்கும் இடத்தைவிட்டு நீங்குதல் அல்லது புறப்படுதல்buzz off
நடைவண்டி (குழந்தை நடை பழகுவதற்காக) நின்று பிடிப்பதற்கு ஏதுவாக மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட (விளையாட்டு) சாதனம்wooden frame with three wheels (which a child pushes along to support itself while learning to walk)
நண்டு இடுக்கியின் முன்பகுதி போன்ற இரு முன்னங்கால்களையும், ஓடு மூடிய உடலையும் கொண்ட நீரில் வாழும் உயிரினம்crab
நண்டுசிண்டுகள் சிறு குழந்தைகள்kids
நண்பகல் மதியம்noon
நண்பன் நட்பால் நெருங்கியவன்friend
நத்தார் இயேசு பிறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகைchristmas
நத்தை மிருதுவான உடலைத் தன் உடல் மேல் இருக்கும் சுருள் வடிவ ஓட்டினுள் நுழைத்துக்கொள்ளக் கூடியதும் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு வகை உயிரினம்snail
நதி ஆறுriver
நதிமூலம் நதி உற்பத்தியாகிற இடம்source of river
நந்தவனம் (பெரும்பாலும் கோயிலை அல்லது அரண்மனையைச் சார்ந்த) பூந்தோட்டம்flower garden (belonging to a temple or a palace)
நந்தாவிளக்கு (பெரும்பாலும் கோயில் கருவறையினுள்) எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் விளக்குa lamp that burns ceaselessly (in the sanctum sanctorum of temples)
நந்தி (சிவன் கோயிலில்) சன்னிதியின் நேரெதிராக ஒரு பீடத்தின் மேல் படுத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்ட (சிவனின் வாகனமான) காளைthe stone image of bull, the mount of Siva, placed on a pedestal facing the sanctum sanctorum
நந்தியாவட்டை (பூஜைக்குப் பயன்படுத்தும்) மணம் இல்லாத வெள்ளை நிறப் பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் ஒரு வகைக் குத்துச் செடிeast Indian rosebay (the flower or the plant, the flower used in prayers)
நப்பாசை (நிறைவேறாது அல்லது நிறைவேறுவது கடினம் என்று தெரிந்தும்) ஒன்று எப்படியாவது நிகழாதா என்ற எதிர்பார்ப்புfond hope
நபர் (ஆண் பெண், பெரியவர் சிறியவர் போன்ற பாகுபாடு இல்லாமல் பொதுவாகக் குறிக்கையில்) மனிதன்person
நபும்சகன் ஆண்தன்மை இழந்தவன்man who is impotent
நம்பகம் நம்பத் தகுந்ததுtrustworthiness
நம்பிக்கை (-ஆன) (ஒருவரின் அல்லது ஒன்றின் மேல்) அனுபவம் ஏற்படுத்தும் உறுதிfaith
நம்பிக்கை நட்சத்திரம் (குறிப்பிட்ட ஒரு துறையில்) சாதனை நிகழ்த்தும் விதத்தில் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பப்படும் நபர்person showing great promise
நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமைச்சரவையின் மேல் நம்பிக்கை இல்லை என்று கூறி அவையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் தீர்மானம்motion of no-confidence (moved by the opposition)
நம்பிக்கை வாக்கு அமைச்சரவையின் மேல் நம்பிக்கை இருக்கிறது என்பதை உறுதிசெய்யப் பிரதமர் அல்லது முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குthe casting of vote in a vote of confidence
நம்பிக்கை வாக்கெடுப்பு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது நடத்தப்படும் வாக்கெடுப்புvote of confidence
நம்பு உறுதியான எண்ணம் கொள்ளுதல்believe
நமர் (அப்பளம் முதலிய உணவுப் பொருள்கள் அல்லது பட்டாசு முதலியவை) ஈரம் ஏற்று மொரமொரப்புத் தன்மையை அல்லது தீப் பற்றும் தன்மையை இழத்தல்lose crispness
நமாஸ் தொழுகைprayer
நமூனா (விபரங்கள் இந்த வரிசையில் தரப்பட வேண்டும் என்று காட்டும் வகையில் அமைக்கப்படும்) விண்ணப்பப் படிவம்form (of application)
நமை நமைச்சல் ஏற்படுதல்itch
நமைச்சல் உடலில் ஏற்படும் சொறியத் தூண்டும் உணர்வுitch
நய (குறிப்பிட்ட காரணத்திற்காக ஒருவரிடம் பேசுதல், பழகுதல் போன்றவற்றில்) கனிவை வெளிப்படுத்துதல்cajole
நயம்1(கதை, கவிதை முதலியவற்றில்) மகிழ்விப்பதாக அமையும் தன்மை(artistic, literary) beauty
நயம்2(பொருளின்) விலைக் குறைவு(of price of commodities) inexpensiveness
நயவஞ்சகம் இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிக்கும் விதம்duplicity
நயனம் கண்eye
நர்த்தகி (தொழில்முறை) நாட்டியக்காரி(professional) dancer
நர்த்தனம் நடனம்dance
நரகம் (பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும்) கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்hell
நரகல் மலம்excrement
நரபலி (தெய்வத்துக்குக் காணிக்கையாகச் செலுத்தும்) மனித உயிர்ப் பலிhuman sacrifice
நரம்பியல் நரம்புகளின் அமைப்பையும் செயல்பாடுகளையும் நோய்களையும் பற்றிய மருத்துவத் துறைneurology
நரம்பு மூளையிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் உணர்வுகளைக் கொண்டுசெல்லும் மெல்லிய இழைnerve
   Page 113 of 204    1 111 112 113 114 115 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil