Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பொட்டுக்கடலை வறுத்து உடைத்த கொண்டைக் கடலையின் வெளிர் மஞ்சள் நிறப் பருப்புbroken bengalgram
பொட்டை2(பெரும்பாலும் திட்டும்போது) குருடுblind
பொட்டை நெட்டுரு குருட்டுப்பாடம்blind way of learning
பொடி1(பொடிய, பொடிந்து) துண்டுதுண்டாகுதல்crumble to pieces
பொடி2தூளாக்குதல்powder
பொடி3பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளதுthat which is powdered or pulverized
பொடி4(வடிவத்தில்) மிகச் சிறிய அளவுanything small
பொடிசு (-ஆக) (வடிவத்தில்) பொடியாக இருப்பதுtiny or small
பொடிமட்டை மூக்குப்பொடி வைத்துக்கொள்வதற்கு அளவாக வெட்டி எடுத்து மடிக்கப்பட்ட காய்ந்த வாழை மட்டைa strip of dried folded plantain bark used for keeping snuff
பொடிமாஸ் உருளைக்கிழங்கையோ வாழைக்காயையோ துருவலாக ஆக்கி மிளகாய் முதலியன சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறிa kind of side dish made from the scrapings of potato or plantain seasoned with spices
பொடுகு தலையின் தோல் வறண்டு சிறுசிறு துண்டுகளாக உரிந்துவந்து ரோமக்கால்களில் தெரியும் பொருக்குdandruff
பொத்தல் (துணி, தாள் முதலியவற்றில்) துளைhole (in cloth, paper, etc.)
பொத்திப்பொத்தி (குழந்தைகளை வளர்க்கும் விதத்தைக் குறிக்கையில்) வாழ்க்கையின் எந்த விதச் சிரமத்துக்கும் உள்ளாக்காமல் மிகுந்த செல்லத்துடனும் பாதுகாப்புடனும்(of rearing children) with too much concern, care
பொத்துக்கொண்டுவா (ஆத்திரம், கோபம் முதலியவை) திடீரென வெளிப்படுதல்explode (with anger, rage, etc.)
பொதி1(ஒரு பொருளைத் தாள், துணி முதலியவற்றில் வைத்து) மூடுதல் wrap up
பொதி2(அளவில் பெரிய) மூட்டை(large) bundle
பொதிப்பருவம் பயிரின் இளம் கதிர் வெளிப்படுவதற்கு முன்பு கண்ணாடி இலையுள் பொதிந்திருக்கும் நிலைboot stage (of the earhead)
பொது (-ஆக, -ஆன) எல்லோரும் பயன்படுத்தக் கூடியதுcommon
பொது அறிவு உலக நடப்பு, அறிவியல் முதலியவை குறித்த அடிப்படை அறிவுgeneral knowledge
பொதுஊழியர் பொதுமக்களுக்குச் சேவைசெய்யும் அல்லது பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் துறையில் பணிபுரிபவர்public servant
பொதுக்கணக்குக் குழு அரசின் செலவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை உரிய வரம்பிற்குள் செலவிடப்பட்டுள்ளதையும் பொதுத் துறை நிறுவனங்களின் வரவுசெலவு மீதான அறிக்கையையும் பரிசீலிக்க (அமைச்சர் அல்லாத) பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு(parliamentary) committee on public accounts (abbreviated to P
பொதுக்குழு (பதிவு செய்யப்பட்ட) ஓர் அமைப்பின் எல்லா உறுப்பினர்களையும் கொண்ட, ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடும் குழுgeneral body (of a registered society, association, etc.)
பொதுக்கூட்டம் (அழைப்பின் பேரில் அல்லாமல்) அனைவரும் கலந்துகொள்ள அனுமதித்து நடத்தும் கூட்டம்public meeting
பொதுச்செயலர் ஓர் அமைப்பின் அன்றாட அலுவல்களைக் கவனிக்கப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு வகிப்பவர்general secretary (of any body)
பொதுத்தேர்தல் (இந்தியாவில்) பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க (ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை) நாடு முழுவதும் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்புgeneral election
பொதுத்தேர்வு நாடு அல்லது மாநில அளவில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்வுpublic examination
பொதுநலம் சமுதாயத்துக்கு உண்டாகும் பயன் அல்லது நன்மைcommon good
பொதுநிறம் மாநிறம்(of complexion) neither dark nor fair
பொதுப்படை-ஆக/-ஆன (ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி) குறிப்பிடுவதாக இல்லாமல்/குறிப்பிடுவதாக இல்லாதin a general way/general
பொதுப்பணித் துறை சாலைகள், பொதுக் கட்டடங்கள், பாசன வடிகால்கள் போன்றவற்றின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணியைச் செய்யும் அரசுத் துறைpublic Works Department (abbreviated to P
பொதுப்பெயர் இனப் பொருள்கள் அனைத்தையும் குறிப்பிடும் பெயர்general name
பொதுபொது-என்று (மண், காகிதம் முதலியவை ஈரத்தால்) இறுக்கம் இல்லாமல் அல்லது விறைப்பு இழந்து தளர்வாகin a loose or soft manner
பொதுமக்கள் (பிரபலமடைந்தவரைத் தவிர்த்து) ஒரு நாட்டின் அல்லது ஊரின் மக்கள்the general public
பொதுமன்னிப்பு அரசியல் குற்றவாளிகள் அனைவருக்கும் கொள்கை அடிப்படையில் அரசு ஒட்டுமொத்தமாக வழங்கும் மன்னிப்புamnesty
பொதுமு (நீரில்) ஊறிப் பருத்தல்bloat (being soaked in water)
பொதுமை அனைத்துக்கும் அல்லது அனைவருக்கும் பொதுவானதுuniversality
பொதுவாக்கெடுப்பு பொதுமக்களின் கருத்தை அறிகிற விதத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்புreferendum
பொதுவாக (கவனித்ததன் அடிப்படையில்) பெரும்பாலும்generally
பொதுவாழ்வு (ஒரு நபர் ஆற்றும்) மக்கள் நல்வாழ்விற்கான பணிpublic life
பொதுவுடைமை உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பு, தேவைக்கு ஏற்ற பங்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும், வர்க்கபேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடுcommunism
பொந்து (மரம், சுவர், நிலம் முதலியவற்றில்) தானாக ஏற்பட்டிருக்கும் குழிவுhole
பொம்மலாட்டம் பாவைக்கூத்துpuppet show
பொம்மை (மரம், மண் போன்றவற்றில்) நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்toy
பொம்மை ஆட்சி நியமிக்கப்பட்ட ஒருவர் அதிகாரம் எதுவும் இல்லாமல் பிறரால் இயக்கப்பட்டு நடத்தும் ஆட்சிpuppet regime
பொய்1(மழை) எதிர்பார்த்த நேரத்தில் பெய்யாமலிருத்தல்(rain) fail
பொய்2நடப்பில் இல்லாதது அல்லது நிகழாததுlie
பொய்க்கால் (சில வகை ஆட்டங்களில் தன்னை உயரமாகக் காட்டிக்கொள்ள) காலில் கட்டிக்கொள்ளும் கால் போன்ற மரக்கட்டைstilts (in some forms of dances)
பொய்க்கால் குதிரை பொய்க்கால் பொருத்தி இடுப்பில் குதிரைப் பொம்மையுடன் ஆடும் நடனம்a kind of dance with a dummy horse
பொய்கை (இயற்கையாக அமைந்த) நீர்நிலை(natural) pond
பொய்சாட்சி (நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முதலியவற்றில் உள்நோக்கத்துடனோ பணம் பெற்றுக்கொண்டோ) உண்மையை மறைத்து அல்லது திரித்துத் தரும் சாட்சியம்false witness
பொய்ப்பி பொய் என நிறுவுதல்prove false
பொய்மை உண்மை அல்லாததுthat which is unreal
பொய்யன் பொய் சொல்பவன்liar
பொய்யாமை பொய் சொல்லாத தன்மைtruthfulness
பொரி2(கொதிக்கும் எண்ணெய்யில் அல்லது நெய்யில் கடுகு, அப்பளம் முதலியவற்றை) வறுத்தல்fry (in oil)
பொரி3அரிசி, சோளம், அவல் போன்றவற்றைச் சட்டியிலிட்டு வறுத்துத் தயாரிக்கப்படும், உதிரிஉதிரியாக இருக்கும் ஒரு வகைத் தின்பண்டம்puffed grains such as corn, etc பொரி வாங்கி வழி நெடுகத் தின்றுகொண்டே போனார்கள்
பொரிகடலை பொட்டுக்கடலைfried chick-pea
பொரியல் காய்கறியை அல்லது முட்டையைப் பச்சையாகவோ வேகவைத்தோ எடுத்துப் பொரித்துச் செய்யும் தொடுகறிfried vegetables or scrambled egg
பொரிவிளங்காய் உருண்டை பாசிப்பருப்பு மாவுடன் நிலக்கடலையைச் சேர்த்து வெல்லப்பாகில் இட்டு உருண்டையாகப் பிடிக்கப்படும் (கடிப்பதற்குக் கடினமாக இருக்கும்) தின்பண்டம்a hard ball-shaped sweetmeat made of different kinds of flour
பொருக்கு (பாத்திரத்தில்) ஒட்டிக் காய்ந்த உணவுத் துண்டுbits of dried food sticking (to the vessel)
பொருக்கு விதை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ரக விதைimproved seed
பொருட்காட்சி பொதுமக்கள் பார்வையிடவும் வாங்கவும் ஏற்ற வகையில் பொருள்களைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி (சில நாட்கள் அல்லது மாதங்கள்) நடக்கும் நிகழ்ச்சிexhibition
பொருட்டு1(ஒரு என்பதோடு இணைந்தும் எதிர்மறை வாக்கியத்திலும்) கவனத்தில் கொள்ள வேண்டியதுmatter worth considering
பொருட்டு2(முன் குறிப்பிடப்பட்டதன்) காரணமாகbecause of
பொருட்படுத்து (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) முக்கியத்துவம் அளித்துக் கருத்தில் அல்லது கவனத்தில் கொள்ளுதல்give due consideration to
பொருட்பெயர் பொருளைக் குறிக்கும் பெயர்name of things
பொருண்மை (உண்மையான) பொருள் நிலைtrue meaning or substance
பொருண்மையியல் மொழியில் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறைsemantics
பொருத்தம் (ஏதேனும் காரணத்தால் அல்லது அம்சத்தால் ஒன்று மற்றொன்றுக்கு) ஏற்றதாகவோ இசைந்ததாகவோ இருப்பதுappropriateness
பொருத்து1இணைத்தல்join (one with another)
பொருத்து2(எண்ணெய் விளக்கு, அடுப்பு, மெழுகுவர்த்தி முதலியவற்றை) எரியச்செய்தல்light (a lamp, candle, etc.)
பொருத்து3ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் இடம் அல்லது இணைப்புjoint
பொருந்திய (ஒன்று) கொண்டwith (in the sense of possessing)
பொருந்து (ஒன்றில்) இணைந்து அல்லது சேர்ந்து அமைதல்fit (properly)
பொருபொருப்பு மொரமொரப்புcrispness
பொருமல் (அஜீரணம் முதலியவற்றால் வயிறு) உப்பி இரைகிற சத்தம்rumbling noise (of a flatulent stomach)
பொருமு (அஜீரணம் முதலியவற்றால்) (வயிற்றில்) இரைச்சல் உண்டாதல்(of stomach) rumble
பொருள்படு (சொல், பேச்சு முதலியவை குறிப்பிட்ட விதத்தில்) பொருள் தொனித்தல் அல்லது வெளிப்படுதல்give the meaning
பொருள்முதல்வாதம் உலகாயதம்materialism
பொருளடக்கம் புத்தகத்தில் தொடர்ச்சியாக வரும் அத்தியாயங்களின் தலைப்புகள், அவை தொடங்கும் பக்கம் முதலியவற்றின் வரிசைக்கிரமமான பட்டியல்contents (of a book)
பொருளாகுபெயர் ஒரு முழுப் பொருளின் பெயர் உறுப்புக்கு வழங்குவதாகிய ஆகுபெயர்a kind of metonymy in which the whole stands for a part
பொருளாளர் (ஓர் அமைப்பின்) நிதி நிர்வாகத்துக்குப் பொறுப்பு வகிப்பவர்treasurer (of an organization)
பொருளியல் மனிதனின் பொருள் தேவைகளை நிறைவுசெய்யும் சாதனங்கள், கிடைப்பதற்கு அரியதாகவும் கிடைத்தாலும் அவை வேறு பலவற்றிற்குப் பயன்படக் கூடியதாகவும் இருப்பதால் அத் தேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கும் துறைeconomics
பொல்லாங்கு தீமைanything bad or injurious
பொல்லாத்தனம் தீமை விளைவிக்கும் குணம்wickedness
பொல்லாத தீமை விளைவிக்கிறbad
பொல்லாப்பு (பிறருடைய) வெறுப்புdispleasure (of another)
பொலபொல-என்று (மண், காரை முதலியவற்றைக் குறித்து வருகையில்) பிடிப்பில்லாமல் உதிரிஉதிரியாக(in a) crumbling (manner)
பொலி1சிறப்புடன் வெளிப்படுதல்flourish
பொலி2(களத்தில்) குவித்து வைக்கப்பட்டிருக்கும் (தூற்றாத) நெல்heap of paddy (which is yet to be winnowed)
பொலிகடா/பொலிகாளை (எருமையில், ஆட்டில்) இனவிருத்தி செய்வதற்காக வளர்க்கப்படும் (கொழுத்த) கடாbull or ram reared for purposes of breeding
பொழி (மழை, பனி முதலியவை) அதிக அளவில் கீழே இறங்குதல்/(வானம் மழை, பனி முதலியவற்றை) கொட்டுதல்(of rain, snow, etc.) pour down or fall heavily/shower on
பொழிப்புரை (செய்யுளின்) பொருளைத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்த உரைparaphrase (of a poem or verse)
பொழில் சோலைgarden
பொழிவு (மழை, பனி முதலியவை) பெய்தல்(rain, snow) fall
பொழுதிருக்க பகல் பொழுது முடியும் முன்before sunset
பொழுது1(பொதுவாக) நேரம்time
பொழுதுபோ இனிமையாக நேரம் கழிதல்(of time) be spent
பொழுதுபோக்கு1(பொதுவாக ஒருவர் தன் விருப்பப்படி) நேரத்தைக் கழித்தல்spend time (in recreation)
பொழுதுபோக்கு2ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செய்வது அல்லது கழிப்பதற்கேற்ற வகையில் அமைவதுpastime
   Page 143 of 204    1 … 141 142 143 144 145 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil