Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| போஜனம் | உணவு | food |
| போஷகர் | புரவலர் | patron |
| போஷணை | பராமரிப்பு | nursing |
| போஷாக்கு | (-ஆக, -ஆன) (உடலுக்கு வளர்ச்சியையும் வலிமையையும் அளிக்கிற) சத்துப் பொருள் | nutrition |
| போஷி | (குழந்தை முதலியோருக்கு) சத்துள்ள உணவைக் கொடுத்து ஆரோக்கியமாக வளர்த்தல் | nourish |
| பௌத்தம் | ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பதை அடிப்படையாகக் கொண்டு துன்பத்தை நீக்குவதற்கு வழிமுறைகளைக் கூறும் மதம் | buddhism |
| பௌத்திரம் | மூல நோய் | fistula |
| பௌதிக | திட, திரவ, வாயு ஆகிய நிலைகளுக்கு உட்பட்ட அல்லது உரிய | physical |
| பௌதிகம்/பௌதிகவியல் | இயற்பியல் | physics |
| பௌர்ணமி | முழு நிலவு | full moon (day) |
| பா | (யாப்பிலக்கணப்படி எழுதப்பட்ட) பாட்டு | poem |
| பாக்கியம் | பெரும் நன்மை | good fortune |
| பாக்கியவதி | பாக்கியம் பெற்றவள் | blessed woman |
| பாக்கியவான் | பாக்கியம் பெற்றவர் | blessed man |
| பாக்கு | (வெற்றிலையுடன் சேர்த்து மெல்லும்) துவர்ப்புச் சுவையுடய உருண்டையான ஒரு வகைக் காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் மரம் | areca nut/areca palm |
| பாக்கு வெட்டி | (பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) உறுதியான அடிப்பகுதியையும் கூர்மையான பதம் உள்ள மேற்பகுதியையும் கொண்ட கத்திரி போன்ற சாதனம் | an instrument for slicing areca nut |
| பாகம்1 | பகுதி | part (of a machine, etc.) |
| பாகம்2 | நான்கு முழ அளவு | (roughly) four cubits |
| பாகல் | கசப்புச் சுவை உடைய காயைத் தரும் ஒரு வகைக் கொடி | bitter-gourd (the plant) |
| பாகவதர் | தொழில்முறைக் கர்நாடக இசைப் பாடகர் | (in Carnatic music) vocalist |
| பாகற்காய் | பாகல் கொடியில் காய்க்கும் காய் | bitter-gourd |
| பாகன் | யானையைத் தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர் | mahout |
| பாகஸ்தன் | (சொத்தில் அல்லது நிறுவனம் போன்றவற்றில்) பங்கு உடையவன் | one who has a share (in property) |
| பாகு | காய்ச்சிய கரும்புச் சாறு, பதநீர் அல்லது வெல்லக் கரைசல் | treacle |
| பாகுபடுத்து | வேறுபாடு தெரியும் வகையில் பிரித்தல் | classify |
| பாகுபாடு | வேறுபாடு தெரியும் வகையில் பிரிக்கும் பிரிவு | difference |
| பாகை | கோணத்தை அளக்கப் பயன்படும் அலகு | degree (to measure angles) |
| பாகைமானி | (கோணத்தை வரையவும் அளக்கவும் பயன்படும்) பாகைகள் குறிக்கப்பட்டு அரைவட்ட வடிவில் இருக்கும் கருவி | protractor |
| பாங்கு1 | (செயலைச் செய்யும்) முறை | way |
| பாச்சா உருண்டை | (பாச்சை போன்ற பூச்சிகள் துணி, காகிதம் முதலியவற்றை அரித்துவிடாமல் தடுக்கப் பயன்படும்) வெள்ளை நிறத்தில் ஒருவித நெடி உடையதாக இருக்கும் ரசாயனப் பொருளால் ஆன சிறிய உருண்டை | naphthalene ball |
| பாச்சை | (பெரும்பாலும் வீடுகளில் காணப்படும்) தத்திச் செல்லக்கூடிய ஒரு வகைப் பழுப்பு நிறப் பூச்சி | house cricket |
| பாசக்கயிறு | (புராணத்தில்) (மனிதரின் உயிரைப் பறிக்க யமன் பயன்படுத்தும்) சுருக்குக் கயிறு | rope with a noose (said to be in the hands of Yama, the god of death) |
| பாசந்தி | சுண்டக் காய்ச்சிய பாலில் படியும் பாலாடையுடன் சீனி சேர்த்து (குளிரவைத்து) உண்ணும் இனிப்பு வகை | thick cream of milk with sugar (served cold) |
| பாசம் | இரத்த சம்பந்தமுடைய உறவினருக்கிடையே ஏற்படும் இயற்கையான பிணைப்பு | affection |
| பாசறை | (முற்காலத்தில்) போரிடச் செல்லும் அரசர் அல்லது தளபதி தங்கள் படைகளின் நடுவே தங்கியிருக்க அமைத்துக்கொண்ட இடம் | encampment |
| பாசனம் | பயிர்களுக்கு நீர் தரும் முறை | irrigation |
| பாசாங்கு | உண்மையிலேயே குறிப்பிட்ட நிலையில் இல்லாமல், ஒரு செயலைச் செய்யாமல் ஆனால் அந்த நிலையில் இருப்பதாக, அந்தச் செயலைச் செய்வதாகத் தோற்றம் தரும் நடிப்பு | pretence |
| பாசி1 | (நீரில் அல்லது நீர் படும் இடங்களில்) கரும் பச்சை நிறத்தில் படர்ந்து வளரும் ஒரு வகைத் தாவரம் | moss |
| பாசிசம் | அனைத்து முக்கியத் தொழில்களையும் தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும், அரசியல் ரீதியான எதிர்ப்பே எழாத வகையில் அடக்குமுறையைப் பிரயோகித்தும் நடத்தும் ஆட்சிமுறை | fascism |
| பாசிப்பயறு | பச்சை நிற மேல் தோலை உடைய சிறு உருண்டை வடிவப் பயறு | greengram |
| பாசிப்பருப்பு | உடைத்த பாசிப்பயறு | broken greengram |
| பாசிமணி | ஒரு வகை மண்ணால் செய்யப்பட்ட, பீங்கான் போன்ற பளபளப்பான தன்மை உடைய மணி | beads made of clay (for making necklace) |
| பாசுரம் | (திருமாலின் மேல் ஆழ்வார்கள் பாடிய) பக்திப் பாடல் | devotional poem (on Vishnu sung by the Alwars) |
| பாட்டம்1 | பெருமளவில் ஒரு முறை | down pour |
| பாட்டம்2 | (நில) குத்தகை/குத்தகைப்படி தர வேண்டிய நெல் | (land) lease/the grain to be given by the tenant as per agreement |
| -பாட்டம்3 | ஆட்டம் என்பதோடு இணைந்து வரும் சொல் | a word which occurs in combination with ஆட்டம் |
| பாட்டன் | பெற்றோரின் தந்தை | grandfather |
| பாட்டாளி | உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர் | worker |
| பாட்டி | பெற்றோரின் தாய் | grandmother |
| பாட்டிமை/பாட்டியமி | அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் (நல்ல காரியங்களுக்கு அல்லாத) திதி | the day after the full moon and also new moon (considered inauspicious) |
| பாட்டிவைத்தியம் | (பொதுவாகக் கிராமத்தில் நோய்களுக்கு) அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்து கைப்பக்குவமாகச் செய்யும் வைத்தியம் | household remedy |
| பாட்டு | பாடப்படுவது | song |
| பாட்டுக்கு | பிறரால் அல்லது பிறவற்றால் பாதிக்கப்படாமல் தன் போக்கில் | unmindful (of external circumstances, etc.) |
| பாட்டை | பாதை | highway |
| பாடகன் | (நன்றாக) பாடக் கூடியவன்/பாடுவதைத் தொழில் முறையில் செய்பவன் | singer/musician |
| பாடகி | பாடகன் என்பதன் பெண்பால் | feminine of பாடகன் |
| பாடசாலை | பள்ளிக்கூடம் | school |
| பாடத்திட்டம் | கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட படிப்பைப் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் கற்பிக்கப்பட வேண்டியவை, அதற்கு உரிய நூல்கள் முதலியவற்றை உரியவர்கள் நிர்ணயித்து வகுக்கும் திட்டம் | syllabus or curriculum for a course |
| பாடநூல் | மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு உதவும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகம் | textbook |
| பாடபேதம் | ஒரு நூலின் எழுத்து, சொல், தொடர் முதலியவை அதன் பல படிகளில் வெவ்வேறாகக் காணப்படும் நிலை | variant reading of a text |
| பாடம்1 | (மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்) குறிப்பிட்ட ஒரு துறையின் அறிவைத் தருவதாக அமையும் பிரிவு/மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த நூலின் பகுதி | subject/lesson (in a subject) |
| பாடம்2 | (மனித உடல், விலங்கின் தோல், புகையிலை முதலியவை) கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும்படி மேற்கொள்ளப்படும் முறை | (of body) embalming |
| பாடல் | பாட்டு (என்பதன் முதல் இரு பொருள்களிலும்) | (in the first two senses of ) பாட்டு |
| பாடல் பெற்ற | (சைவ, வைணவத் தலங்களைக் குறிப்பிடும்போது) பாடல் இயற்றப்பட்ட பெருமை உடைய | having the distinction of being sung by (saint-poets, etc.) |
| பாடவிதானம் | பாடத்திட்டம் | curriculum |
| பாடாவதி | தரக்குறைவானது | useless |
| பாடுபடு | (உடலை வருத்தி) உழைத்தல் | toil |
| பாடுபொருள் | (கவிதையின்) கருவாக அமையும் பொருள் | subject matter (of a poem, etc.) |
| பாடை | (பிணத்தைச் சுடுகாட்டுக்குச் சுமந்து செல்வதற்கான) இரு நீண்ட கழிகளின் இடையே சிறு கம்புகள் வைத்துக் கட்டி, பின்னிய பச்சைத் தென்னை ஓலையை விரித்த அமைப்பு | (funeral) bier (with poles to carry) |
| பாண் | ரொட்டி | bread |
| பாண்டம் | (பெரும்பாலும் மண்ணால் செய்த) பாத்திரம் | (mostly earthen) pot |
| பாண்டி | தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் (சிறுமியர்) விளையாட்டு | a kind of hopscotch game (played mostly by girls) |
| பாண்டித்தியம் | புலமை | scholarship |
| பாண்டியன் | (முற்காலத்தில் மீனை அரசுச் சின்னமாகக் கொண்டு) தமிழ்நாட்டின் தென்பகுதிகளை ஆண்ட இனத்தைச் சேர்ந்த மன்னன் | any king of Pandya dynasty which ruled in the southern regions of Tamil Nadu |
| பாண்டு1 | இரத்தச் சோகை காரணமாக வயிற்றில் வீக்கத்தை உண்டாக்கும் நோய் | chronic dropsy causing bloating of the stomach |
| பாண்டு2 | (சிமிண்டுக் கலவை, ஜல்லி முதலியவை எடுக்கப் பயன்படும்) அரைவட்ட வடிவ இரும்புச் சட்டி | iron bowl (for carrying cement, mortar, etc.) |
| பாணம் | அம்பு | arrow |
| பாணன் | (முற்காலத்தில்) யாழ் முதலிய இசைக் கருவிகளை இசைத்துப் பாடும் கலைஞன் | minstrel (of ancient times) |
| பாணி1 | (ஒருவரை அல்லது ஒன்றை) வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மையான விதம் | style |
| பாணி2 | காய்ச்சிய பதநீர் | boiled sweet toddy |
| பாத்தி | பாய்ச்சும் நீர் தேங்கியிருப்பதற்காகச் சிறு வரப்புகளால் பிரித்த அமைப்பு | garden plot |
| பாத்தியதை/பாத்தியம் | உரிமை | right (of possession, etc.) |
| பாத்திரம்1 | (பொருள்களை வைத்தல், நீர் பிடித்துவைத்தல் போன்ற பல காரியங்களுக்குப் பயன்படும்) உலோகம், மண் முதலியவற்றால் ஆன கொள்கலன் | vessel |
| பாத்திரம்2 | (கதை, நாடகம் போன்றவற்றில்) படைப்பாளியால் உருவாக்கப்படுபவர் | character (in a story, etc.) |
| பாதக்குறடு | (சன்னியாசி போன்றோர் அணியும்) முதல் இரு கால்விரல்களின் இடைவெளியில் நுழைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு கட்டையால் செய்த குமிழை உடைய காலணி | wooden sandals with a toe-grip |
| பாதசரம் | கொலுசு | ankle chain with tiny bells |
| பாதசாரி | (வாகனத்தைப் பயன்படுத்தாமல் சாலையில்) நடந்து செல்பவர் | pedestrian |
| பாதம்1 | (தரையில் படும்) காலின் கீழ்ப்பகுதி | foot |
| பாதம்2 | குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காலத்தில் நான்கில் ஒரு பகுதி | one fourth of the duration of the influence of a star |
| பாதயாத்திரை | (வேண்டுதலை முன்னிட்டுக் கோயில்களுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஓர் இடத்திற்கு) நடந்தே மேற்கொள்ளும் பயணம் | pilgrimage on foot (undertaken in fulfilment of a vow) |
| பாதரசம் | வெள்ளி நிறத்தில் பளபளப்புடன் திரவ நிலையில் இருக்கும் உலோகம் | mercury |
| பாதரட்சை | காலணி | slippers |
| பாதாம் அல்வா | பாதாம் பருப்பால் செய்யும் அல்வா | the sweetmeat அல்வா prepared with almonds |
| பாதாம்கீர் | காய்ச்சிய பாலில் பாதாம் பருப்பு, சர்க்கரை முதலியவற்றைப் போட்டுக் குளிரவைத்துத் தரும் பானம் | almond milkshake |
| பாதாம் பருப்பு | வாதுமை மரத்தின் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் பருப்பு | almond |
| பாதாளக்கரண்டி | (கிணற்றில் விழுந்துவிட்ட வாளி போன்ற பொருளை எடுக்கப் பயன்படுத்தும்) கொக்கிகள் நிறைந்த சாதனம் | grapnel (to take out things from the bottom of well) |
| பாதாளம் | (புராணத்தில்) பூமிக்கு அடியில் இருக்கும் உலகம் | (in purana) subterranean region |
| பாதி2 | (இரண்டாகப் பிரிக்கையில்) ஒரு பங்கு | one half |
| பாதிப்பு | இயல்பான தன்மைக்கு ஏற்படும் கேடு அல்லது சேதம் | damage |
| பாதிரி1 | மணம் மிக்க பெரிய மஞ்சள் நிறப் பூக்கள் பூப்பதும் உயரமாக வளரக் கூடியதுமான பெரிய மரம் | trumpet-flower tree |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.