Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
மிரளமிரள (பார், விழி ஆகிய வினைகளோடு) விழிகளை அங்குமிங்குமாக உருட்டியபடி(to look at s
மிராசு/மிராசுதார் ஒரு கிராமத்தின் அங்கமாகச் சொந்த நிலத்தில் பண்ணை முறையில் விவசாயம் செய்து அந்தஸ்தோடு இருப்பவர்(formerly) a freeholder of some status who manages his farm himself as part of a village
மிருகக்காட்சிசாலை உயிரியல் பூங்காzoo
மிருகசீருடம் இருபத்தேழு நட்சத்திரங்களில் ஐந்தாவதுthe fifth of the twentyseven stars
மிருதங்கம் இருபுறமும் விரல்களால் தட்டி வாசிக்கப்படும், சிறிய உருளை வடிவத் தோல் கருவிa kind of cylindrical two-sided drum played by both hands
மிருது (தொடு உணர்வால் அறியும்) மென்மைsoftness
மிளகாணம் (தேங்காய், மிளகாய் சேர்க்காமல்) மிளகு சேர்த்துச் செய்யப்படும் கறிக்குழம்புa kind of sauce with pepper as the main ingredient
மிளகாய் பச்சைமிளகாய்green chilli
மிளகாய்ப்பொடி (இட்லி, தோசை போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ள) மிளகாய் வற்றலை வறுத்து இடித்துப் பெருங்காயம் போன்றவை சேர்த்துத் தயாரித்த தூள்chilli powder with other ingredients (mixed with oil to go with இட்லி, etc.)
மிளகாய் வற்றல் செடியிலிருந்து பறித்து வெயிலில் காய வைத்த மிளகாய்dried chilli
மிளகு (சமையலில் பயன்படுத்தும்) சின்னஞ்சிறிய, காரமான கறுப்பு நிறக் காய்/அந்தக் காய் காய்க்கும் கொடிblack pepper and also the creeper
மிளாறு (சவுக்கு, புளி முதலிய மரத்தின் வளைந்துகொடுக்கும்) இளம் கொம்பு(the flexible) twig (of certain trees, such as tamarind)
மிளிர் ஒளிர்தல்glitter
மின் மின்னல் lightning
மின்கலம் வேதியியல் முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனம்cell
மின்காந்தம் (கம்பிச் சுருள் வழியாக) மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும்வரை காந்த சக்தியைப் பெற்றிருக்கும் உலோகத் துண்டுelectromagnet
மின்சாரம் (விளக்குகளை ஒளிரச்செய்தல், இயந்திரங்களை இயக்குதல் முதலியவற்றிற்குப் பயன்படும்) மின்னணுக்களின் ஓட்டத்தால் கிடைக்கும் சக்திelectricity
மின்சார ரயில் மின்சாரத்தால் இயங்கும் ரயில்electric train
மின் தடங்கல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மின்னோட்டம் இடையே நின்றுவிடுதல்power failure
மின்தொகுப்பு பல்வேறு உற்பத்தி நிலையங்களிலிருந்து வரும் மின்சாரத்தைப் பெற்று அதை உபயோகத்துக்கெனப் பங்கிட்டு அனுப்பும் அமைப்புgrid
மின்மயமாக்கு முழுவதுமாக மின்சாரத்தால் இயங்குமாறு மாற்றி அமைத்தல்electrify
மின்மாற்றி (வெகு தூரம் கம்பிகளின்மூலம் கொண்டுசெல்வதற்கு அல்லது பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்) மின்சாரத்தின் அழுத்தத்தையும் அளவையும் அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யும் சாதனம்transformer
மின்மினிப்பூச்சி (இருட்டில்) பறக்கும்போது ஒளிவிட்டு மின்னும் உறுப்பை வால் பகுதியில் கொண்ட ஒரு சிறு பூச்சிglow-worm
மின்முலாம் (பொருள்களில்) மின்னியல் ரசாயன முறைப்படி பூசப்படும் உலோகப் பூச்சுelectroplating
மின்விசிறி காற்று வீசச்செய்யக் கூடிய இறக்கைகளை மின்சாரத்தால் இயக்கும் சாதனம்electric fan
மின்விளக்கு மின்சார சக்தியால் ஒளிரும் விளக்குelectric light
மின்வெட்டு மின்சார உற்பத்தி குறையும் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் அனுப்பாமல் நிறுத்தும் செயல்powercut (as a means of regulating the supply of electricity when there is shortage)
மின்னணு மின்னோட்டம், ரசாயன மாற்றம் முதலியவற்றுக்குக் காரணமாக அமைவதும் எதிர் மின்சக்தியைக் கொண்டதுமான அணுவின் கூறுelectron
மின்னணுவியல் மின்னணுவின் இயக்கம்குறித்தும், அதனை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தும் சாதனங்கள்குறித்தும் விவரிக்கும் துறைelectronics
மின்னல் (பெரும்பாலும் மழைக் காலத்தில் மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னோட்டத்தின் விளைவாக) வானில் கணப் பொழுதில் மிகுந்த வேகத்துடன் பரவி மறையும் (பெரும்பாலும்) இடியுடன் கூடிய ஒளிப் பிழம்புlightning
மின்னியல் மின்சார உற்பத்தி, பயன்பாடு முதலியவை குறித்தும் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் குறித்தும் விவரிக்கும் துறைthe study of electricity
மின்னு மின்னல் பளீரெனத் தோன்றுதல்(of lightning) flash
மின்னோட்டம் மின்னணுக்களின் ஓட்டம்flow of current
மினுக்கு1பளபளப்பாக்குதல்polish
மினுக்கு2பளபளப்புsheen
மினுக்மினுக்-என்று (விளக்கு முதலியவை) பிரகாசமின்றி விட்டுவிட்டுglimmering
மினுங்கு ஒளிர்தல்glitter
மினுமினு (விட்டுவிட்டு) பிரகாசத்துடன் ஒளிர்தல்shine brightly but intermittently
மினுமினுப்பு (விட்டுவிட்டுப் புலப்படும்) ஒளிர்வுglitter
மீசை (ஆணின்) மேல் உதட்டில் இருக்கும் முடிmoustache
மீட்சி (ஒரு நிலையிலிருந்து) விடுபடுதல்redemption
மீட்டு1(வீணை போன்ற இசைக் கருவிகளின்) தந்தியை விரலால் அதிரச்செய்தல்pluck the strings (of musical instruments)
மீட்டு2(அடகு வைத்ததை) திரும்பப் பெறுதல்get back (what is pledged)
மீட்டு3நினைவுகூர்தல்recall
மீட்பு (வெள்ளம், பூகம்பம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை) காப்பாற்றும் நடவடிக்கைrescue
மீண்டும் (செயலை) மறுபடியும்again
மீதம் மீதி(what is) left
மீதான (ஒருவர்) மேல் உள்ளagainst
மீதி மிச்சம்that which is left over
மீள்2(விபத்து, ஆபத்து முதலியவற்றில் சிக்கியவர்களை) காப்பாற்றுதல்rescue
மீறல் (சட்டம், உரிமை முதலியவற்றை) மீறும் செயல்violation (of rules, rights, etc.)
மீறு (சட்டம், விதி போன்றவற்றை) பின்பற்றாமல் விடுதல்transgress
மீன்காட்சியகம் விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும் நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம்aquarium
மீன்கொத்தி (ஆறு, குளம் முதலிய நீர்நிலைகளில் உள்ள மீன்களைப் பிடித்துத் தின்னும்) நீண்ட அலகுடன் நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் ஒரு சிறு பறவைkingfisher
மீனம் மீனைக் குறியீட்டு வடிவமாக உடைய பன்னிரண்டாவது ராசிtwelfth constellation of the zodiac having fish as its sign
மீனவன் மீன் பிடிக்கும் தொழிலாளிfisherman
முக்கல் முக்கும் செயல்groan made while struggling
முக்காடு தலையை மறைத்துத் தொங்கும்படி விட்டிருக்கும் துணிcloth covering the head
முக்கால் நான்கில் மூன்று பகுதிthree quarters
முக்கால் புள்ளி எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தில் விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவை தரப்படுவதற்கு முன் பயன்படுத்தும் ( என்னும்) குறிcolon
முக்காலி (உட்காருவதற்கான அல்லது பொருள்களை வைப்பதற்கான) மூன்று கால்கள் கொண்ட (சாய்வதற்கு முதுகு இல்லாத) இருக்கைstool with three legs
முக்காலும் பெரும்பாலும்mostly
முக்கிமுனகி (ஒன்றைச் செய்வதற்கு) மிகவும் சிரமப்பட்டுwith much difficulty
முக்கியத்துவம் முக்கியம் பொருந்திய தன்மைimportance
முக்கியம் (-ஆக, -ஆன) உடனடிக் கவனத்தை வேண்டுவதாக அல்லது இன்றியமையாத தன்மை கொண்டதாக இருப்பதுthat which is important or main or significant
முக்கியமாக குறிப்பாகparticularly
முக்கியஸ்தர் செல்வாக்கும் சிறப்பும் உடையவர்person of importance
முக்கு1(ஒரு செயலைச் செய்வதற்காக) மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி அழுத்தம் தருதல்strain
முக்கு2(நீர் முதலிய திரவத்தில்) முழுக்க நனையச்செய்தல்dip
முக்கு3(சாலை, தெரு முதலியவற்றின்) முனைcorner (of a street, etc.)
முக்குளி (நீரில்) அமிழ்ந்து உள்ளே செல்லுதல்dive
முக்கோணம் மூன்று பக்கங்களையும் மூன்று கோணங்களையும் உடைய ஒரு வடிவம்triangle
முகடு (மலை) உச்சிpeak
முகத்தலளவை படி, மரக்கால் போன்றவற்றைக் கொண்டு திரவங்களையும் தானியங்களையும் முகந்து அளவிடும் முறைmeasure of quantity
முகத்தான் பொருட்டுwith the intention of
முகத்திரை முகத்தை மறைக்கும் முறையில் போட்டுக்கொள்ளும் மெல்லிய துணிveil
முகத்துவாரம் கழிமுகம்mouth of a river
முகப்படாம் யானையின் மத்தகத்தில் போடும் அலங்காரத் துணிornamental cloth put on the head of an elephant
முகப்பு (வீடு, கட்டடம் முதலியவற்றின்) வாசலும் வாசலை ஒட்டிய பகுதியும்front part (of a house, etc.)
முகப்பூச்சு (ஒப்பனைக்காக) முகத்தில் பூசிக்கொள்ளும் பசை அல்லது மாவுப் பொருள்painting or powder for the face
முகபாவம் உணர்ச்சியைக் காட்டும் முகத் தோற்றம்facial expression
முகம்கொடுத்துப் பேசு (இன்முகம் காட்டி) மதித்துப் பேசுதல்talk directly and in a friendly way
முகமதியர் இஸ்லாமியர்followers of the Prophet Muhammad
முகமன் (ஒருவரை) புகழ்ந்து கூறும் சொற்கள்flattery
முகமூடி முகத்தை மறைத்து அணிந்துகொள்ளும், கண் மட்டும் தெரியும்படியான திறப்பை உடைய தோல், துணி முதலியவற்றாலான சாதனம்mask (of cloth, paper, etc.)
முகர்1வாசத்தை உணர்தல்smell
முகர்2முகத்தல்take (water in a vessel)
முகராசி முகத்தின் வசீகரத் தோற்றம்pleasing countenance
முகவர் (ஓர் அமைப்பின், நிறுவனத்தின் சார்பாக) பொருள் வாங்கி விற்பனைசெய்து கழிவுத்தொகை பெறுபவர்agent (of an organization, firm, etc.)
முகவரி (வசிக்கும் அல்லது பணிபுரியும்) ஊர், தெருவின் பெயர், கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்புaddress (of a person, etc.)
முகவாய்/முகவாய்க் கட்டை கீழ்த்தாடையின் குறுகிய பகுதிchin
முகவுரை உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரைpreface
முகவெட்டு (பெரும்பாலும் திரைப்படத்தில், நாடகத்தில் பாத்திரம் ஏற்பவருக்கு வேண்டிய) முகத் தோற்றம்facial features
முகஸ்துதி புகழ்ச்சிflattery
முகாந்தரம்/முகாந்திரம் ஆதாரம்basis
முகாமையாளர் மேலாளர்manager
முகிழ் தோன்றுதல்appear
முகூர்த்தம் (திருமணத்தில் குறித்த நல்வேளையில் நடத்தும்) தாலி கட்டும் நிகழ்ச்சிthe main event of tying the தாலி (in a wedding ceremony in an auspicious hour)
முகை அரும்புbud
முங்கு திரவத்தினுள் செல்லும்படி அமிழ்தல்dip
   Page 164 of 204    1 … 162 163 164 165 166 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil