Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
மாடு உழுதல், வண்டி இழுத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் ஆணினத்தையும் பால்தரக் கூடிய பெண்ணினத்தையும் உள்ளடக்கிய, (கொம்புடைய) வீட்டுவிலங்கின் பொதுப்பெயர்common name for cow, ox and buffalo
மாண்பு உன்னதத் தன்மைdignity
மாணவன் பள்ளியிலோ கல்லூரியிலோ கல்வி கற்பவன்pupil
மாணவி மாணவன் என்பதன் பெண்பால்feminine of மாணவன்
மாணாக்கன் மாணவன்pupil
மாணிக்கம் கரும் சிவப்பு நிறத்தில் உள்ள விலை உயர்ந்த கல்ruby
மாத்திரை1சிறிய வில்லை வடிவ மருந்துtablet
மாதம் ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பிரிவுகளுள் ஒன்றுmonth
மாதர் பெண்கள்women
மாதவிடாய்/மாதவிலக்கு (பெண்களுக்கு) மாதம் ஒரு முறை ஏற்படும் இரத்த வெளியேற்றம்menstrual period
மாதா அன்னைmother
மாதா கோயில் மரியன்னையின் கோயில்church
மாதாந்தர/மாதாந்திர மாதத்திற்கு ஒரு முறையானmonthly
மாதிரி1(-ஆக, -ஆன) தினுசுkind
மாதிரி2(பெயரெச்சத்தின் பின்) உண்மைக்கு ஒத்த நிலையில் இருப்பதைக் காட்ட இணைக்கப்படும் சொல்used to indicate that sth. is close to the reality or sth. equals another
மாது பெண்woman
மாதுளை பவள நிறச் சதை ஒட்டிய முத்துகளை உள்ளீடாக உடைய, தடித்த மேல் தோல் உடைய பழம்/மேற்குறிப்பிட்ட பழம் காய்க்கும் மரம்pomegranate (fruit and tree)
மாந்தம் குழந்தைகளுக்குப் பல நோய்கள் வரக் காரணமாகும் ஒரு வித அஜீரணம்indigestion of infants
மாந்தர் மக்கள்human beings
மாந்திரீகம் தீய சக்திகளை மந்திரம் கூறி அடக்கும் அல்லது வெளியேற்றும் வித்தைart of controlling or driving out the evil spirits by means of incantation
மாந்திரீகன் மாந்திரீகம் தெரிந்தவன்sorcerer
மாநகரம் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகரம்city
மாநகராட்சி மாநகரத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்புcorporation of a city
மாநாடு பெருமளவில் உறுப்பினர்களும் பார்வையாளர்களும் கலந்துகொள்ளும் கூட்டம்conference
மாநிலங்களவை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, இந்தியப் பாராளுமன்றத்தின் ஓர் அவைupper house of the Indian parliament
மாநிலம் (இந்தியாவில் பொதுவாக) மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப் பகுதி(in India) state (organized on the basis of a common language)
மாநிறம் (மனிதர்களின் உடல் நிறத்தைக் குறிப்பிடும்போது) சிவப்பு என்றோ கறுப்பு என்றோ சொல்ல முடியாத, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம்complexion that is neither too fair nor too dark
மாப்பிள்ளை அழைப்பு திருமணம் நடக்கும் இடத்துக்கு மாப்பிள்ளையை உரிய மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரும் சடங்குthe ceremony of receiving and taking the bridegroom in a procession to the wedding
மாப்பிள்ளை மாடு பொலிகாளைstud bull
மாப்பு மன்னிப்புpardon
மாம்பழம் இனிப்புச் சுவைக்காக விரும்பி உண்ணப்படும், மாமரத்தின் பழம்mango fruit
மாமரம் முதலில் புளிப்பாகவும் பழுத்த பின் இனிப்பாகவும் இருக்கும் காயைத் தரும் மரம்mango tree
மாமன்னன் பேரரசர்emperor
மாமனார் கணவனுடைய அல்லது மனைவியுடைய தந்தைfather-in-law
மாமாங்கம் பன்னிரண்டு ஆண்டுகள் கொண்ட காலம்a period of twelve years
மாமிசப்பட்சிணி பிற விலங்கின் இறைச்சியை உணவாக உட்கொள்ளும் பிராணிcarnivorous animal
மாமிசம் (பொதுவாக விலங்கினத்தின்) தசை meat (of animals in general)
மாமியார் கணவனுடைய அல்லது மனைவியுடைய தாய்mother-in-law
மாமியார்வீடு சிறை(used ironically) prison
மாமூல் (-ஆக, -ஆன) (மக்களின் வாழ்க்கை நிலையைக் குறிப்பிடும்போது) சகஜம்normalcy
மாய்ச்சல் சோம்பல்laziness
மாய்ந்துமாய்ந்து மிகவும் சிரமப்பட்டுச் சக்தி முழுவதையும் செலவழித்துslaving away
மாயம் இல்லாதது இருப்பதாகத் தெரியும் பொய்மைillusion
மாயமான் தேடி அடையத் தூண்டுகிற வசீகரத் தன்மையுடையதாகவும் தேடிச் சென்றால் கிட்டாததாகவும் உள்ள ஒன்றுelusive
மாயாவாதம் புலன்களுக்குப் புலனாகிற இந்த உலகம் ஒரு மாயை என்பதை வலியுறுத்தும் சில இந்தியத் தத்துவங்களின் கொள்கைthe doctrine in certain Indian philosophies which advocates the theory of illusion
மாயாவி திடீரெனத் தோன்றி மறைதல், விரும்பிய உருவம் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்வதற்கு உரிய சக்தி படைத்தவன்one who can take different forms at will by a magical power
மாயை உண்மையில் இல்லாமல், இருப்பது போலத் தோற்றம் மட்டும் அளிப்பதுunreal
மார்1மார்புchest
-மார்2(பெரும்பாலும் உறவுப் பெயர்களுடன் இணைக்கப்படும்) பன்மை விகுதிplural suffix (mostly added to kinship terms)
மார்க்கம் வழிway
மார்க்சியம் பொதுவுடைமையே சமத்துவச் சமுதாயத்துக்கு வழிவகுக்கும், வர்க்கப் போராட்டமே வரலாற்றை நிர்ணயிக்கும் போன்ற கோட்பாடுகளைக் கொண்ட தத்துவம்marxism
மார்கழி ஒன்பதாவது தமிழ் மாதத்தின் பெயர்name of the ninth Tamil month, i
மார்தட்டு கர்வப்படுதல்boast of
மார்புக்கூடு இதயம், நுரையீரல் முதலியவற்றைச் சுற்றிக் கூண்டாக அமைந்திருக்கும் எலும்புகள்rib-cage
மார்புற மார்போடு சேர்த்துclose to the chest
மார்வாடி/மார்வாரி (தமிழ்நாட்டில்) வட இந்திய வியாபாரிa north Indian doing business (in Tamil Nadu)
மாரடிப் பாட்டு மாரடித்து அழும்போது பாடும் பாட்டுmourning song sung at the time of மாரடித்தல்
மாரடைப்பு (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒழுங்கில்லாத இதயத் துடிப்பையும் கடுமையான வலியையும் ஏற்படுத்தும்) இதயத்தின் இரத்த ஓட்டத் தடைheart failure
மாராப்பு (புடவையில்) மார்பை மறைக்கும் பகுதிthe portion of a saree that is drawn over the breast
மாரி1மழைrain
மாருதி சூறாவளிwhirlwind
மாலுமி கப்பலை இயக்கிச்செல்வதற்கு வேண்டிய பணி செய்பவர்sailor
மாலை1பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும்வரை உள்ள நேரம்evening
மாலை2(கழுத்தில் போடுவதற்கு ஏற்றதாக) பூ முதலியவற்றால் வளையமாகக் கட்டப்பட்டதுgarland (of flowers, etc.)
மாலைக்கண் மாலையில், மங்கலான ஒளியில் பார்க்க முடியாத வகையில் ஏற்படும் பார்வைக் குறைnight-blindness
மாலைமாற்று (மணமகனும் மணமகளும் கணவன் மனைவி ஆனதன் அறிகுறியாகத் தத்தம்) மாலையை மாற்றி அணிவித்தல்(of the bride and the groom) exchange garlands (as a wedding ritual)
மாலையிடு (மாலை போட்டு) திருமணம் செய்துகொள்ளுதல்marry (by garlanding)
மாவட்ட ஆட்சியர் ஒரு மாவட்டத்தில் வரி வசூலித்தல், நிர்வாகம், சட்டம், ஒழுங்கு முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள உயர் அரசு அதிகாரிhighest official in the district for revenue collection, law and order, development programmes, etc
மாவட்டம் (ஒரு மாநிலத்தில்) நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் (பல வட்டங்கள் கொண்ட) பிரிவு(administrative) district
மாவடு (ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுத்தும்) பிஞ்சு மாங்காய்tender mango (used as pickle)
மாவாட்டு (அரிசி, உளுந்து முதலியவற்றை) மாவாக ஆகும்படி அரைத்தல்grind (rice, etc.) to a paste
மாவிளக்கு (கடவுள் சன்னிதியில்) வெல்லம் சேர்த்துப் பிசைந்த அரிசி மாவில் நெய் ஊற்றித் திரியிட்டு ஏற்றும் விளக்குlamp with a wick lighted in the hollow of rice dough (in front of a deity)
மாவு (அரிசி, கோதுமை, கேழ்வரகு முதலிய தானியங்களைக் காய வைத்து) அரைப்பதால் கிடைக்கும் மெல்லிய தூள்flour (of some grains)
மாவுச்சத்து அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு முதலியவற்றில் உள்ளதும் உடல் உழைப்புக்குத் தேவையான சக்தியைத் தருவதுமான சத்துப் பொருள்carbohydrate
மாவுத்தன் யானைப் பாகன்mahout
மாழ்கு (இரக்கத்தில்) மூழ்குதல்be engrossed (in pity)
மாளிகை பெரிய பரப்பளவில் அமைந்த, நிறைய அறைகளைக் கொண்ட, பிரமாண்டமான இல்லம்palace
மாற்றம் இதுவரை இருந்துவந்தது வேறுபட்டு அமைவதுchange
மாற்றல் (ஆணை பிறப்பிக்கப்பட்டு) ஒரு பணியிடத்திலிருந்து மற்றொரு பணியிடத்துக்கு அல்லது ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்துக்குச் செல்லுதல்transfer (of an employee to another place or post)
மாற்றாந்தாய் (இறந்துபோன தாயின் இடத்தில் இருக்கும்) தந்தையின் இளைய தாரம்stepmother
மாற்றாந்தாய் மனப்பான்மை சமமாகக் கருதி நடத்தப்படவேண்டியவர்களில் தான் விரும்பியவருக்கு மட்டும் எல்லாச் சலுகையும் அளித்து விரும்பாதவரை முற்றாக ஒதுக்கும் போக்குstepmotherly attitude
மாற்றான் பகைவன்foe
மாற்று3(தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின்) கலப்பற்ற நிலை(of gold, etc.) degree of fineness
மாற்று ஒற்றையர் ஆட்டம் (சில விளையாட்டுகளில்) (ஒருவரை எதிர்த்து ஒருவர் ஆடும் இரு ஆட்டங்கள் முடிந்ததும்) முதல் ஆட்டத்தில் ஆடியவர் மற்றொரு ஆட்டத்தின் எதிரணி ஆட்டக்காரரோடும் மற்றொரு ஆட்டத்தில் ஆடியவர் முதல் ஆட்டத்தின் எதிரணி ஆட்டக்காரரோடும் விளையாடும் முறை(in games) reverse singles
மாறாக/மாறான (எதிர்பார்த்ததற்கு) எதிரான விதத்தில்on the contrary
மாறிமாறி முதலில் ஒன்று, பிறகு மற்றொன்று என்ற முறையில் மீண்டும் தொடர்ந்துalternately
மாறு1(இருக்கும் நிலையிலிருந்து) புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருதல்change
மாறு2முரண்opposite
மாறுகண் (கண்களின் இரு விழிகளும் வெவ்வேறு திசையில் பார்ப்பது போன்று) பார்வை சற்று விலகி உள்ள நிலைsquint
மாறுகால்மாறுகை வாங்கு (முற்காலத்தில் குற்றவாளியைத் தண்டிக்கும்போது) ஒரு பக்கத்துக் காலையும் மறுபக்கத்துக் கையையும் வெட்டுதல்cut off the limbs diagonally opposite to each other (of a person as a punishment)
மாறுபடு மாற்றம் தெரியும்படி காணப்படுதல்be different
மாறுபாடு மாற்றம்change
மாறுவேடப் போட்டி மாறுவேடத்தில் வந்து நடித்துக்காட்டும் பலரில் சிறப்பாகச் செய்தவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டிfancy dress competition
மான் (மருளும் குணத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறும்) வேகமாகத் துள்ளித்துள்ளி ஓடக் கூடிய ஒரு வகை விலங்குdeer
மான்மியம் மகிமைgreatness
மானசீகம் மனத்தில் மட்டும் இருப்பதுthat which is or which is done in the mind
மானத்தை வாங்கு (ஒருவருடைய) மதிப்பையும் கௌரவத்தையும் இழக்கச்செய்தல்cause or bring disgrace
மானநஷ்டம் (ஒருவருடைய) மதிப்புக்கும் கௌரவத்துக்கும் விளைவிக்கும் களங்கம் அல்லது இழிவுdefamation
மானபங்கம் மதிப்புக்கும் கௌரவத்துக்கும் ஏற்படும் குறைவு/(பெண்ணின்) மானக் குலைவுdisgrace
மானஸ்தன் தன்மானம் மிக்கவன்man of honour
   Page 171 of 204    1 … 169 170 171 172 173 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil