Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| மேகம் | வான வெளியில் திரண்டிருக்கும் நீராவித் திரள் | cloud |
| மேகலை | (பழங்காலத்தில்) பெண்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற ஓர் ஆபரணம் | a belt-like golden ornament (formerly) worn by women round the waist |
| மேகவெட்டை | ஆணின் பிறப்புறுப்பில் சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாதல் முதலிய அறிகுறிகளைக் கொண்ட ஒரு பால்வினை நோய் | gonorrhea |
| மேட்டுக்குடி | பொருளாதாரத்திலும் கல்வியிலும் உயர்ந்த நிலை பெற்ற வகுப்பினர் | the elite |
| மேடிடு | (அடித்துவரப்படும்) மண்ணால் (பள்ளம்) நிரப்பப்படுதல் | silt up |
| மேடு | (அடுத்து இருக்கும் பரப்பைவிட) உயரமான பகுதி | raised ground |
| மேடை | (கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம் | raised platform |
| மேடையேற்று | (நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பலரும் கண்டு களிக்குமாறு) மேடையில் நிகழ்த்துதல் | stage (a drama, etc.) |
| மேடையேறு | நாடகம், நாட்டியம் முதலியன) நிகழ்ச்சியாக மேடையில் அளிக்கப்படுதல் | (of drama, dance, etc.) be staged |
| மேதாவி | (பெரும்பாலும் கேலித் தொனியில்) மேதை | (often jocularly) intellectual |
| மேதாவிலாசம் | (ஒரு துறையில்) அசாதாரணமான தேர்ச்சியின் வெளிப்பாடு | sign of profound knowledge |
| மேதினம் | தொழிலாளர்களைச் சிறப்பிக்கிற வகையில் கொண்டாடப்படும் மே மாத முதல் நாள் | may Day |
| மேதை | (குறிப்பிட்ட துறையில்) நிரம்பிய அல்லது அசாதாரணமான தேர்ச்சி அடைந்தவர் | genius |
| மேம்படு | (இருக்கும் நிலையிலிருந்து வளர்ச்சி அடைந்து) உயர்வான நிலையை அடைதல் | reach a better state |
| மேம்படுத்து | (இருக்கும் நிலையிலிருந்து) உயர்வான அல்லது சிறப்பான நிலை அடையச்செய்தல் | uplift |
| மேம்பாடு | (இருக்கும் நிலையிலிருந்து அடையும்) உயர்வான நிலை | upliftment |
| மேம்பாலம் | (போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் பொருட்டு) சாலையின் அல்லது இருப்புப்பாதையின் மேல் ஏற்படுத்தப்பட்ட பாலம் | flyover |
| மேம்போக்கு | மேலோட்டம் | superficiality |
| மேய்1 | (பெரும்பாலும் கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை) அலைந்து திரிந்து தேடித் தின்னுதல் | (mostly of cattle) graze (in the fields) |
| மேய்2 | (பெரும்பாலும் கால்நடைகளைப் புல்பூண்டு உள்ள இடங்களுக்கு ஓட்டிச்சென்று) மேயச்செய்தல் | graze (mostly the cattle) |
| மேய்ச்சல் | மேய்தல்/மேய்த்தல் | grazing |
| மேய்ச்சல் நிலம் | (கால்நடைகளை) மேய்ப்பதற்காக விடப்படும் நிலம் | pasture |
| மேல்1 | மேற்கு | west |
| மேல்2 | உடம்பு | body |
| மேல்3 | (ஒன்றோடு ஒப்பிடும்போது குறிப்பிடப்படுவது) சிறந்தது | (when a comparison is made) (far) better |
| மேல்4 | கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரான பகுதி | upper or top part |
| மேல்துண்டு | (ஆண்கள்) தோளில் போட்டிருக்கும் துண்டு | towel worn over the shoulder |
| மேல்நாடு | (பொதுவாக) வெளிநாடு(குறிப்பாக) அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் | (generally) foreign country |
| மேல்பூச்சு | வெளிப்பக்கம் பூசப்பட்டது அல்லது மெருகேற்றப்பட்டது | outer plastering |
| மேல்பேச்சு | ஒருவர் சொல்வதற்கு எதிர்த்தோ அல்லது மறுத்தோ பேசும் பேச்சு | counter (argument) |
| மேல்முறையீடு | ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடு | appeal (by one aggrieved by a decree or order of a court) |
| மேல்வட்டி | (வட்டிக்கு வாங்கிய) கடனைத் திரும்பக் கடனாகக் கொடுத்துப் பெறும் அதிக வட்டி | sum taken on loan which is lent in turn with higher interest by the borrower |
| மேல்வரி | வரியாக விதிக்கப்படும் தொகையின் மீது குறிப்பிட்ட விகிதப்படி வசூலிக்கப்படும் கட்டணம் | surcharge |
| மேல்வரும்படி | (சம்பளம் போன்ற வருமானம் தவிர்த்து) அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம் | income in addition to the salary |
| மேலதிகம் | தேவைக்கு அதிகம் | additional |
| மேலதிகாரி | தன் கீழ் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குப் பணிக்கான உத்தரவுகளையிடும் அல்லது பணியைக் கண்காணிக்கும் பொறுப்புடைய அதிகாரி | superior |
| மேலவை | (சில மாநிலங்களில்) சட்டமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் முதலியோராலும் சுயாட்சி அமைப்புகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் ஆளுநரால் நியமனம் செய்யப்படுவோரையும் கொண்ட அவை | upper chamber in the bicameral legislature (of a state) |
| மேலாக்கு | (பெண்கள் அணியும் ஆடையில்) மார்பை மறைக்கும் பகுதி | the part of a saree drawn over the breasts and shoulders |
| மேலாக1 | மேல்பரப்பை ஒட்டிய பகுதியில் | on the surface |
| மேலாக2 | (காலத்தைக் குறிக்கையில்) அதிகமாக | more than |
| மேலாடை | (உள்ளாடைக்கு மேல்) வெளியே தெரியும்படியாக அணியும் ஆடை | outer garments |
| மேலாண்மை | (ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றால்) பிறரைக் கட்டுப்படுத்தக் கூடிய பலம் | dominance |
| மேலாண்(மை) இயக்குநர் | நிர்வாகத்துக்காக அரசின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் விசேஷ அதிகாரங்கள் தரப்பட்ட உயர் அதிகாரி | managing director (appointed with the approval of government) |
| மேலாதிக்கம் | (மற்றொரு அரசின், இனத்தின் மீது செலுத்தும்) முறையற்ற அதிகாரம் | hegemony (of a country) |
| மேலாளர் | (அலுவலகம், நிறுவனம், விற்பனை நிலையம் முதலியவற்றில்) முதன்மை நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர் | manager |
| மேலான | (குறிப்பிடப்படும் அளவுக்கு) அதிகமான | more than |
| மேலிடம் | (கட்சி, நிறுவனம் முதலியவற்றில்) செயல்பாடுகளை நிர்ணயிக்கும் தலைமைப் பொறுப்புக் கொண்ட உயர்மட்ட அமைப்பு அல்லது குழு | (in a political party, organization, etc.) decision making body |
| மேலிடு | (உணர்ச்சி) பொங்குதல் | (of emotions) overcome |
| மேலீடு | மேலிடுதல் | being overwhelmed |
| மேலுக்கு | (மருந்தைப் பயன்படுத்தும் முறையாகக் கூறும்போது) உடம்பின் மேல்பகுதியில் | (in connection with application of medicine) over the body |
| மேலுரம் | நிலத்தில் பயிர் நட்ட பிறகு இடப்படும் உரம் | (of application of fertilizer) top-dressing |
| மேலெழுந்தவாரியாக/மேலெழுந்தவாரியான | ஊன்றிக் கவனிக்காமல் | superficially/superficial |
| மேலே | (பொருளை) ஒட்டியபடி மேல் | over (an object) |
| மேலை | மேற்கத்திய | western |
| மேலைக் காற்று | மேற்கிலிருந்து வீசும் காற்று | westerly wind |
| மேலோங்கு | (குறிப்பிடப்படும் ஒன்று மற்றவற்றைவிட) கூடுதலாகத் தெரிதல் | prevail over |
| மேலோட்டம்-ஆக/-ஆன | ஊன்றிக் கவனிக்காமல்/ஊன்றிக் கவனிக்காத | superficially/superficial |
| மேவு | (பள்ளத்தில் அல்லது ஒரு பரப்பில் மணல் முதலியவை) படிதல் | spread |
| மேளக்காரர் | தவில் வாசிப்பவர் | one who plays on தவில் |
| மேளதாளத்துடன் | (மேளம் போன்ற இசைக் கருவிகள் முழங்க) கோலாகலமாக | in a rousing manner (accompanied by music) |
| மேளம் | (பொதுவாக) தாள வாத்தியக் கருவி(குறிப்பாக) தவில் | (generally) musical instruments |
| மேற்கட்டி | விதானம் | canopy |
| மேற்கண்ட | (விளம்பரம், கேள்வித்தாள், கட்டுரை முதலியவற்றில்) மேலே கொடுக்கப்பட்டுள்ள | given above |
| மேற்கத்திய | (இந்தியாவுக்கு) மேற்கில் உள்ள, (பெரும்பாலும்) அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சேர்ந்த | western |
| மேற்கு | சூரியன் மறையும் திசை | west |
| மேற்கூரை | மேல்தளம் | ceiling |
| மேற்கொண்டு | (குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அல்லது நேரத்துக்குப் பிறகு) தொடர்ந்து | further |
| மேற்கொள் | (திட்டம், முயற்சி போன்றவற்றை) நடத்துதல் | conduct |
| மேற்கோள் | வேறொருவர் கூறியதைக் கூறப்பட்ட வடிவத்திலேயே எடுத்துக்காட்டுவது | quotation |
| மேற்சொன்ன | மேலே குறிப்பிட்ட | mentioned above |
| மேற்பட்ட | (குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகமான | more than |
| மேற்படாத | (குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகம் இல்லாத | not exceeding |
| மேற்படி | முதலில் அல்லது முன்னால் குறிப்பிட்ட | given above |
| மேற்படிப்பு | (படித்து முடித்த கல்விக்கு அடுத்த கட்டமாக இருக்கும்) மேல்நிலைப் படிப்பு | further studies |
| மேற்பரப்பு | பார்க்கும் விதத்தில் உள்ள பரப்பு | surface |
| மேற்பார்வை | பணிபுரிபவர்களையும் நடைபெறும் பணிகளையும் கண்காணிக்கும் பொறுப்பு | supervision |
| மேற்பார்வையாளர் | மேற்பார்வையிடும் பணி புரிபவர் | supervisor (in an examination hall, a polling booth, etc.) |
| மேன்மேலும் | தொடர்ந்து அதிகமாக | more and more |
| மேன்மை | சிறப்பு | excellence |
| மேனாமினுக்கி | பகட்டாக ஆடை அணிந்து பேசித் திரிபவள் | woman of show and vanity |
| மேனி1 | (மனித) உடல் | (human) body |
| மேனி2 | (நிலத்தின்) சராசரி விளைச்சல் | average yield (of a crop) |
| மேனி3 | வீதம் | per |
| மேனிக்கு/மேனியாக | (பெயரெச்சத்தின் பின்) படி | as |
| மேனிலைப் பள்ளி | பத்தாம் வகுப்பிற்கு மேல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்புத் திட்டம் கொண்ட உயர்நிலைப் பள்ளி | higher secondary school (which has a two year course after the tenth standard) |
| மேஜஸ் | கொழுப்பு | fat |
| மேஜை | (பெரும்பாலும்) நான்கு கால்களின் மேல் பொருள்களை வைப்பதற்கும், எழுதுதல் போன்ற செயல்கள் செய்வதற்கும் உரிய பரப்புக் கொண்ட சாதனம் | table |
| மேஷம் | ஆடு என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய முதல் ராசி | first constellation of the zodiac having the ram as its sign |
| மேஸ்திரி | (கட்டட வேலையில் கொத்தனாரையும் சித்தாளையும்) கண்காணிப்பவர் | head mason |
| மை | (பெரும்பாலும் பெண்கள் கண்ணில் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்தும்) ஒட்டும் தன்மையுடைய கருப்பு நிற அலங்காரச் சாதனம் | black pigment (applied on the edge of the eyelashes mostly by women) |
| மைசூர்ப்பாகு | கடலை மாவைச் சீனிப் பாகில் போட்டுக் கிளறித் தட்டில் ஊற்றிச் சிறுசிறு துண்டுகளாக ஆக்கிய இனிப்புப் பண்டம் | a kind of sweet made by adding chick-pea flour to sugar treacle and cut to pieces |
| மைதா | கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும், நார்ச்சத்துக் குறைந்த, வழுவழுப்புத் தன்மை கொண்ட மாவு | refined wheat flour |
| மைதானம் | (பொதுக்கூட்டம், விளையாட்டு முதலியவை நடக்கும்) திறந்தவெளி இடம் | (play) ground |
| மைதுனம் | உடலுறவு | copulation |
| மைந்தன் | மகன் | son |
| மை போடு | (தீமை விளைவிக்க அல்லது தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிக்க) மந்திர மையைப் பயன்படுத்துதல் | employ magic pigment (for sorcery or to trace lost property) |
| மைய அரசு | மத்திய அரசு | (in India) the union or central government |
| மையம் | (இடத்தில், பரப்பில்) நடு | midpoint |
| மையம்கொள் | (கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்) நகராமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுழன்றுகொண்டிருத்தல் | (of cyclone, etc.) be centred |
| மையல் | காதல் மயக்கம் | infatuation |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.