Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கடத்து | (ஒருவரை) விருப்பத்துக்கு மாறாகக் கொண்டுபோதல்(அரசால் தடைசெய்யப்பட்ட பொருளை) அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்லுதல் | kidnap (a person) |
| கடந்த | (காலத்தைக் குறிக்கையில்) கழிந்துபோன | (of time) past |
| கடப்பாடு | (தானே உணர்ந்து செய்ய வேண்டிய) கடமை | bounden duty |
| கடப்பாரை | (இடித்தல், நெம்புதல் போன்ற செயல்களுக்குப் பயன்படும்) பட்டை முனையும் கொண்டைத் தலையுமாக உள்ள கனத்த இரும்புக் கம்பி | a long iron bar (used for digging pits, raising heavy objects, etc.) |
| கடப்பைக்கல் | (கட்டடங்களின் தரையில் பதிப்பதற்குப் பயன்படுத்தும்) கடினமான கறுப்பு நிறக் கல் | a kind of granite (used for paving floors) |
| கடம்பு | வழவழப்பாகக் காணப்படும் முடிச்சுமுடிச்சான கிளைகளைக் கொண்ட பெரிய காட்டு மரம் | common cadamba (tree) |
| கடம்போடு | (பாடங்களை) மனப்பாடம்செய்தல் | learn by rote |
| கடமான் | (காடுகளில் வசிக்கும்) நீண்டு கிளைத்த கொம்புகளை உடைய ஒரு வகைப் பெரிய மான் | sambar |
| கடமை | (ஒருவர் தான்) இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி/(ஓர் அரசு, அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு | duty/obligation |
| கடமைப்பட்டிரு | நன்றி தெரிவிக்க வேண்டியிருத்தல் | be indebted to |
| கடல் | உப்புக் கரிக்கும் நீர் நிறைந்த, அலைகள் எழும் பெரும் பரப்பு | sea |
| கடல்மட்டம் | நிலப்பகுதியில் உயரத்தையும் நீர்ப்பகுதியில் ஆழத்தையும் கணக்கிட ஏற்படுத்திக்கொண்ட பொது அளவு | mean sea level |
| கடலியல் | கடலில் உள்ள பொருள்கள், வாழுகிற உயிரினங்கள் ஆகியவற்றை ஆராயும் அறிவியல் துறை | oceanography |
| கடலை | சில தாவரங்களின் தோல் மூடிய பருப்பு அல்லது விதை | a general term for some seeds or nuts covered with husk |
| கடலை எண்ணெய் | வேர்க்கடலையை ஆட்டி எடுக்கப்படுகிற எண்ணெய் | groundnut oil |
| கடலைப் பருப்பு | (வடை முதலியவை செய்வதற்குப் பயன்படுத்தும்) இரண்டாக உடைத்த கொண்டைக்கடலை | the pulse known as bengalgram |
| கடலை மாவு | கடலைப் பருப்பின் மாவு | flour of bengalgram |
| கடலை மிட்டாய் | வறுத்த வேர்க்கடலையை வெல்லப் பாகில் போட்டுச் சிறு சதுரமாகவோ செவ்வகமாகவோ வெட்டி எடுத்த தின்பண்டம் | peanut candy |
| கடலோடி | (முற்காலத்தில் ஒரு நாட்டுக்குச் செல்ல அல்லது நாட்டைக் கண்டுபிடிக்கத் தரை வழியாகச் செல்வதைவிட) கடல் வழியாகப் பயணம்செய்வதை விரும்பி மேற்கொண்டவர் | seafarer (of olden times) |
| கடவுச்சீட்டு | (வெளிநாடு செல்வதற்கு அரசு தரும்) பயண அனுமதிக்கான கையேடு அல்லது பத்திரம் | passport |
| கடவுள் | உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும், மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி | god |
| கடற்கரை | கடல் அலைகள் நிலத்தைத் தொடும் மணல் நிறைந்த பகுதி | seashore |
| கடற்படை | கப்பல்படை | navy |
| கடற்பாசி | கடல் நீரில் வளரும் கொத்தாக உள்ள பாசி வகை | seaweed |
| கடன்படு | கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருத்தல் | be a debtor |
| கடனாளி | கடன் வாங்கியவன் | one who is in debt |
| கடனுக்கு | (ஒன்றைச் செய்வதில்) எந்த வித ஈடுபாடும் இல்லாமல் வெறும் கடமை என்ற அளவில் | for the sake of formality |
| கடா | ஆட்டில் ஆண் | male of sheep |
| கடாசு | வீசி எறிதல் | throw |
| கடாமுடா-என்று | பெருத்த ஒலியோடு | with a tumbling or rumbling noise |
| கடாய் | வாணலி | (a kind of) frying pan |
| கடாரங்காய் | ஒரு வகை நாரத்தை | a kind of seville orange |
| கடாவு | (ஆணி, ஆப்பு முதலியவற்றை) செலுத்துதல் | drive (a nail, wedge, etc.) |
| கடி1 | கடிந்துகொள்ளுதல் | scold |
| கடி2 | (பொருளை நொறுக்குதல், துண்டாக்குதல் போன்றவற்றிற்காக) பற்களைப் பதித்துப் பலமாக அழுத்துதல்(நாய், பாம்பு முதலியன) பல் பதித்துக் கவ்வுதல் | bite (with teeth) |
| கடி3 | பல்லின் பலமான பதிவு | biting (with teeth) |
| கடிகாரம் | ஒரு நாளின் நேரத்தை மணி, நிமிடம், நொடி ஆகியவையாக அளவிடும் கருவி | clock |
| கடிதப் போக்குவரத்து | (இருவருக்கிடையே நிகழும்) கடிதப் பரிமாற்றம் | exchange of letters |
| கடிதம் | ஒருவர் மற்றொருவருக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தியை எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பும் தாள் | letter (sent through a person or by post) |
| கடிவாய் | (நாய், தேள் முதலியவை) பல்லால் கடித்து அல்லது கொடுக்கால் கொட்டிக் காயம் ஏற்படுத்திய இடம் | wound caused by the bite |
| கடினம் | (-ஆன) (செயலைக் குறிக்கும்போது) எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது | (when referring to acts) difficult |
| கடு | (கை அல்லது கால் ஒரு செயலைத் திரும்பத்திரும்பச் செய்வதால் அல்லது நீண்ட நேரம் செய்வதால்) குத்துவது போன்று வலித்தல்(வயிற்றில்) பிசைவது போன்ற வலி ஏற்படுதல் | (of hands and legs) have a throbbing pain |
| கடுக்கன் | (ஆண்கள் அல்லது சிறுவர்கள்) காது மடலின் கீழ்ப்பகுதியில் போட்டுக்கொள்ளும் கல் வைத்துக் கட்டிய காதணி | a kind of stud (worn by men or boys) inlaid with stone |
| கடுக்காய் | கரும் பழுப்பு நிற ஓடும், துவர்ப்புச் சுவையும் கொண்ட (மருந்தாகப் பயன்படுத்தும்) சிறிய காய் | gall-nut |
| கடுக்காய் கொடு | (ஒருவர் மற்றொருவரை அவர் கண் எதிரிலேயே தன் சாமர்த்தியம், தந்திரம் முதலியவற்றால்) ஏமாற்றித் தப்பித்தல் | give |
| கடுகடு | (பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின்) கடுமையை வெளிப்படுத்துதல் | scowl |
| கடுகடுப்பு | (கோபத்தால் பேச்சில், செயலில் வெளியாகும்) கடுமை | scowl |
| கடுகதி | (பேருந்து, ரயில் போன்றவற்றைக் குறிக்கையில்) விரைவு | (of bus, train) express |
| கடுகு | (எண்ணெய் எடுப்பதற்கும் சமையலில் தாளிப்பதற்கும் பயன்படும்) மிகச் சிறியதாகவும் உருண்டையாகவும் இருக்கும் கரிய நிற விதை | mustard (seed) |
| கடுகுமாங்காய் | ஆவக்காய் | a kind of mango pickle |
| கடுங்காப்பி | பால் சேர்க்கப்படாத காப்பி | black coffee (with sugar) |
| கடுங்காவல் தண்டனை | சில கொடிய குற்றங்களுக்கு விதிக்கப்படும் கடுமையான சிறைத் தண்டனை | rigorous imprisonment |
| கடுதாசி | கடிதம் | letter |
| கடும் | (பொறுக்க முடியாத) அளவுக்கு அதிகமான | extreme |
| கடுமை | (பொறுக்க முடியாத) அளவுக்கு அதிகம் | severity |
| கடுவன் | குரங்கு, பூனை ஆகியவற்றில் ஆண் | male monkey |
| கடூரம் | மிகையான கடுமை | harshness |
| கடை1 | (மத்து, கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து) வலமாகவும் இடமாகவும் மாறிமாறிச் சுழலச்செய்தல் | churn (butter-milk) |
| கடை2 | (பொருள்) விற்கப்படும் நிலையம் | shop |
| கடை3 | (காலத்தில், இடத்தில்) முடிவு | end (in time and space) |
| கடைக்காரன் | கடைக்குச் சொந்தக்காரன் அல்லது கடையில் வேலை செய்பவன் | shop-keeper or employee in a shop |
| கடைக்கால் | அஸ்திவாரம் போடுவதற்குத் தோண்டப்படும் பள்ளம் | foundation pit |
| கடைக்குட்டி | (ஒரு குடும்பத்தில்) கடைசிக் குழந்தை | youngest (of the children) |
| கடைக்கோடி | (ஓர் இடம்) முடியும் முனை | the very end (of a street, etc.) |
| கடைகண்ணி | கடை | bazaar |
| கடைசல் | (மரக் கட்டை, உலோகம் முதலியவற்றை) தேவையான வடிவம் பெறும்படி கடைதல் | shaping wood or metal (on a lathe) |
| கடைசி | (தொடர்ச்சியில், வரிசையில், காலத்தில்) முடிவு | last |
| கடைத்தெரு | (ஊரில்) கடைகள் அதிகம் உள்ள பகுதி | bazaar |
| கடைத்தேற்று | ஈடேற்றுதல் | save |
| கடைத்தேறு | ஈடேறுதல் | be redeemed or saved |
| கடைந்தெடுத்த | (நல்லது அல்லாததற்கு அடையாக) முற்றிலும் | somebody bad |
| கடைநிலை | பல நிலைகளைக் கொண்ட பணி அமைப்பில் கடைசி நிலை | last grade (in the hierarchical structure of any service) |
| கடைப்பிடி | (கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றை) பின்பற்றுதல் | follow |
| கடைபோடு | (ஓர் இடத்தில் நிலையாக அல்லது தற்காலிகமாக) கடைவைத்தல் | open a shop |
| கடையடைப்பு | (ஒரு கோரிக்கைக்காகவோ எதிர்ப்பாகவோ) அனைத்துக் கடைகளையும் வியாபாரம் நடக்காதபடி மூடுதல் | shut down |
| கடையாணி | அச்சாணி | axle pin (of a wheel) |
| கடைவாய் | வாயில் உதடுகள் பிரியும் ஓரம் | corner of the mouth |
| கடைவாய்ப் பல் | உணவைக் கூழாக்க உதவும், தட்டையான தலைப்பாகத்தைக் கொண்ட பெரிய பல் | molar tooth |
| கடைவிரி | (சாலை ஓரத்தில் அல்லது சந்தையில்) பொருள்களை விற்பனைக்குத் தயாராகப் பரப்பி வைத்தல் | (of hawking) set up makeshift open stalls |
| கண்1 | பார்ப்பதற்குப் பயன்படும் உறுப்பு | eye |
| -கண்2 | ஏழாம் வேற்றுமை உருபு | locative case marker |
| கண்கட்டு வித்தை | கண் எதிரிலேயே சில பொருள்களைத் திடீரென்று தோன்ற அல்லது மறையச் செய்யும் (கண்களால் பார்த்தும் நம்ப முடியாத) ஜால வித்தை | art of conjuring |
| கண்கண்ட தெய்வம் | தான் உண்டு என்பதை உணரச்செய்வதாக இருக்கும் தெய்வம் | god whose grace one experiences personally |
| கண்கலங்கு | துன்பத்துக்கு உள்ளாதல் | be in tears |
| கண்கவர் | பார்வையை இழுக்கும் | fascinating |
| கண்காட்சி | (பார்வைக்காகவும் தகவல் அறிவிப்பதற்காகவும் விற்பனைக்குக் கிடைக்கும்படியாகவும் பொருள்களை) ஓர் இடத்தில் விளம்பரப்படுத்தி வைக்கும் தற்காலிக ஏற்பாடு | show |
| கண்காணாத | எளிதில் போக வர முடியாத | remote |
| கண்காணி1 | (தடுக்கும் வகையில்) நடவடிக்கை மேற்கொள்ளுதல் | keep watch |
| கண்காணிப்பாளர் | ஒரு நிர்வாக அமைப்பு, அதன் பிரிவு, பணி, நடவடிக்கை ஆகியவை முறையாக உள்ளனவா என்று கவனிக்கும் பொறுப்புடைய அதிகாரி | superintendent |
| கண்காணிப்பு | (ஓர் அமைப்பின் மீது அல்லது ஒருவருடைய செயல்களின் மீது அல்லது ஓர் இடத்தைச் சுற்றி) கூர்ந்த, தொடர்ந்த கவனிப்பு | vigilance |
| கண்குத்திப்பாம்பு | உடல் பச்சை நிறமாகவும் நாக்கு மஞ்சளாகவும் இருக்கும் விஷமற்ற பாம்பு | green whip snake |
| கண்கூடு | மிகவும் தெளிவு | plain |
| கண்கொள்ளா(த) | (காட்சியின்மூலம்) வியப்பைத் தோற்றுவிக்கக் கூடிய அளவிலான | (of beauty, sight) surpassing |
| கண்சிமிட்டு | கண்ணால் குறிப்புக் காட்டுதல் | wink (at s |
| கண்ட | திட்டம், தீர்மானம், அவசியம் எதுவும் இல்லாத | (of places, time) all and sundry |
| கண்டங்கத்தரி | மஞ்சள் நிறத்தில் சிறு பழங்கள் கொண்ட முட்கள் நிறைந்த கொடி | a thorny plant which bears small yellow fruits |
| கண்டந்துண்டமாக | (உருத் தெரியாதபடி) துண்டுதுண்டாக | into pieces |
| கண்டபடி1 | எந்த வித ஒழுங்கும் இல்லாமல் | without observing any norm or standard or rule |
| கண்டபடி2 | குறிப்பிட்டிருக்கிறபடி | as found or specified |
| கண்டம்2 | பூமியின் நிலப்பரப்பைப் பிரித்திருக்கும் பெரும் பிரிவுகளுள் ஒன்று | continent |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.