Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கண்டம்3 | (மீன் அல்லது இறைச்சி) துண்டு | piece |
| கண்டமாலை | குறிப்பிட்ட சுரப்பிகள் வீங்குவதால் கழுத்தில் ஏற்படும் கட்டி | tubercular glands in the neck |
| கண்டமேனிக்கு | கண்டபடி | in an unrestrained way |
| கண்டவன் | எந்த விதத் தொடர்பும் இல்லாதவன் | inconsequential (and often unfamiliar) person“Tom, Dick and Harry" |
| கண்டறி | (இதுவரை அறியப்படாதிருப்பதை அல்லது போதிய தகவல் இல்லாததை) தெரிந்துகொள்ளுதல் | enquire into (what is little known so far) |
| கண்டனம் | (நிகழ்ச்சி, கருத்து முதலியவை குறித்து எழும்) கடும் எதிர்ப்பு அல்லது மறுப்பு | strong protest |
| கண்டாங்கி | கட்டம்போட்ட நூல்புடவை | a chequered cotton saree |
| கண்டாமணி | அளவில் பெரிய மணி | a large sized bell |
| கண்டி | (தவற்றைச் சுட்டிக்காட்டி இவ்வாறு செய்யக்கூடாது என) திருந்தும்படி கடுமையாகக் கூறுதல் | rebuke |
| கண்டிக்கல்/கண்டிச்செங்கல் | கட்டடத்தின் கைப்பிடிச் சுவர், மாடம் முதலிய பகுதிகள் கட்டப் பயன்படும் தட்டையான சிறு செங்கல் | a flat small-sized brick (used for building parapet, niche, etc.) |
| கண்டிப்பாக | நிச்சயமாக | without fail |
| கண்டிப்பு | விட்டுக்கொடுக்காத உறுதி | strictness |
| கண்டு | பந்து வடிவில் சுற்றப்பட்ட நூல் அல்லது கயிறு | length of thread or twine coiled into a ball |
| கண்டுகளி | (கலைநயம் உடையவற்றைப் பார்த்து) மகிழ்தல் | enjoy oneself |
| கண்டுகொள் | இனம் தெரிதல் | find out |
| கண்டுபிடி | (புதிய பொருள், கொள்கை முதலியவற்றை) உருவாக்குதல்(இதுவரை அறியப்படாது இருந்த ஒன்றை) வெளி உலகின் பார்வைக்குக் கொண்டுவருதல் | invent |
| கண்டுபிடிப்பு | புதிதாக உருவாக்கப்பட்டது | invention |
| கண்டும்காணாமல் | பொருட்படுத்தாமல் | without making much of |
| கண்டுமுதல் | மகசூல் | (in agriculture) gross yield |
| கண்டெடு | (ஒரு பொருளை) தற்செயலாக எடுத்தல் | find |
| கண்ணயர் | (அசதி, களைப்பு முதலியவற்றால்) (சிறிது நேரம்) தூங்குதல் | doze off |
| கண்ணளவு | கண்திட்டம் | visual estimate |
| கண்ணாக இரு | (லட்சியம் நிறைவேறும்வரையில், ஒன்றை அடைய வேண்டும் என்பதில்) குறியாக இருத்தல் | be intent or keen on |
| கண்ணாடி | (ஒரு வகை மணலை உச்ச வெப்ப நிலையில் உருக்கித் தயாரிக்கப்படும்) ஒளி ஊடுருவக் கூடியதும் எளிதில் உடையக் கூடியதுமான ஒரு பொருள் | glass |
| கண்ணாடி இலை | நெல், கம்பு முதலியவற்றின் இளம் கதிரை அல்லது வாழையின் இளம் தாரைப் பொதிந்திருக்கும் சிறு இலை | flag leaf |
| கண்ணாடி இழை | கண்ணாடியை அல்லது சில ரசாயனப் பொருள்களை இழைகளாக்கியதன்மூலம் ஏற்படுத்திய மூலப்பொருள் | fibre glass |
| கண்ணி1 | (பறவைகளைப் பிடிப்பதற்கான) கயிற்றுச் சுருக்கு | (round or square) noose (to catch birds) |
| -கண்ணி2 | கடை என்பதோடு இணைந்து வரும் சொல் | a word which occurs in combination with கடை |
| கண்ணியம் | தன் மதிப்பை இழக்காமல் இருப்பதும் பிறருக்கு உரிய மரியாதையை அளிப்பதும் நாகரிகம் என்று கொள்ளும் போக்கு | sense of decency |
| கண்ணியவான் | கண்ணியமான நடத்தை உள்ளவர் | gentleman |
| கண்ணில் காட்டு | பார்க்க அனுமதித்தல் | allow (one) to see or have a look at |
| கண்ணிவெடி | (கண்ணில்படாதவண்ணம் நிலத்தின் அல்லது நீரின்) அடியில் வைக்கப்பட்டு வாகனம் அல்லது ஆள் கடக்கும்போது வெடிக்கக் கூடிய அல்லது தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யக் கூடிய குண்டு வகை | (land or sea) mine |
| கண்ணீர் | (உணர்ச்சியால் அல்லது எரிச்சலால்) கண்ணிலிருந்து வெளிப்படும் நீர் | tears |
| கண்ணீர்ப்புகை | (கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தும்) கண்களில் எரிச்சலை ஏற்படுத்திக் கண்ணீர் வரச்செய்யும், குண்டு வடிவக் கலனில் அடைக்கப்பட்ட ரசாயன வாயு | tear-gas |
| கண்ணீரும்கம்பலையுமாக | கண்ணீர் வழிய சோகத்துடன் | tearful |
| கண்ணும்கருத்துமாக | மிகுந்த பொறுப்புடன் | showing great concern or care |
| கண்ணுறங்கு | (பெரும்பாலும் தாலாட்டுப் பாடல்களில்) கண்மூடித் தூங்குதல் | (often in lullabies) go to sleep |
| கண்ணுறு | பார்த்தல் | see |
| கண்ணூறு | திருஷ்டி | evil eye |
| கண்ணை உறுத்து | (பொறாமை உணர்ச்சியால், பொருளின் கவர்ச்சியால்) பாதிப்படைதல் | provoke jealousy |
| கண்ணைக் கசக்கு | வருத்தத்தை வெளிப்படுத்துதல் | show visible signs of distress |
| கண்ணைக் கட்டு | (மந்திரத்தால்) கண்ணை மறைத்தல் | blindfold (by magic) |
| கண்ணைக் காட்டு | கண்ணால் குறிப்புக் காட்டுதல் | give |
| கண்ணைப்பறி | (பிரகாசமான ஒளி) கண்களைக் கூசச்செய்தல் | dazzle the eyes |
| கண்ணை மூடிக்கொண்டு | எந்த விதத் தயக்கமும் இல்லாமல் | blindfold |
| கண்ணை மூடு | இறந்துபோதல் | die |
| கண்ணோட்டம் | (ஒரு நிலையிலிருந்து ஒன்றை) அணுகும் அல்லது பார்க்கும் முறை | perspective |
| கண்திட்டம் | (உரிய கருவிகொண்டு அளக்காமல்) பார்வையால் சொல்லும் மதிப்பு | visual approximation or estimate |
| கண்துஞ்சு | தூங்குதல் | sleep |
| கண்துடைப்பு | (உண்மையாக அல்லாமல்) நம்பவைப்பதற்காகப் பேசப்படும் பேச்சு அல்லது நடத்தப்படும் செயல் | mere words |
| கண்பஞ்சடை | (பசியால், மரணத்தின் அறிகுறியாக) கண்பார்வை மங்குதல் | become dim sighted (because of hunger or approaching death) |
| கண்பட்டை | (வண்டியில் பூட்டப்படும் குதிரைக்கு) கண்ணை மறைத்தாற்போல் கட்டப்படும் தோல் பட்டை | blinkers |
| கண்படு | (சிலருடைய) பார்வையால் தீங்கு நேர்தல் | get affected by the evil eye |
| கண்பார்வை | பார்க்கும் சக்தி | eyesight |
| கண்பிதுங்கு | (வேலை அல்லது சூழ்நிலை) மிகவும் கடுமையாக இருத்தல் | experience severe strain |
| கண்பூ | (ஒன்றை வெகு நேரம் பார்த்துக்கொண்டு இருப்பதால்) கண்பார்வை குறைதல் | (of vision) become blurred (on account of looking for or at s |
| கண்மங்கு | பார்க்கும் திறன் குறைதல் | (of vision) become dim |
| கண்மண் தெரியாமல்/தெரியாத | கட்டுப்பாடு இல்லாமல்/கட்டுப்பாடு இல்லாத | recklessly/reckless |
| கண்மாய் | (பாசனத்திற்கான) சிறிய ஏரி | small lake |
| கண்மூடு | தூங்குதல் | sleep |
| கண்வலி | கண்ணில் எரிச்சல் ஏற்படுத்துவதும் பீளை சேர்வதுமான நோய் | conjunctivitis |
| கண்விழி | தூக்கத்திலிருந்து எழுதல் | get up (from bed) |
| கண்வை | தீமை வரும்படியாகப் பார்த்தல் | cast the evil eye |
| கணக்கர் | (அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில்) பண வரவுசெலவுக் கணக்கைக் கவனிக்கும் பணியைச் செய்பவர் | accountant |
| கணக்காக1 | அளவில் | (hours, days, months, years) together |
| கணக்காக2 | (மிகவும்) சரியாக | exactly |
| கணக்காக3 | (சொல்லப்பட்ட ஒன்றின்) தன்மையில் | like |
| கணக்கான | (நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப் பெயர்களோடு இணைந்து வரும்போது) (குறிப்பிடும் அந்த) எண்ணிக்கை அளவிலான | in the region of |
| கணக்கிடு | (வரவுசெலவு) கணக்குப்பார்த்தல் | make an estimate |
| கணக்கியல் | வணிகத் துறை சார்ந்த கணக்குப்பற்றிய படிப்பு | accountancy |
| கணக்கில் எடு | (தொடர்புடையதாகவோ ஆதரவாகவோ) கவனத்தில் கொள்ளுதல் | take |
| கணக்கீடு | (ஒத்த) மதிப்பீடு | valuation |
| கணக்கு | கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற முறைகள் அடங்கிய படிப்பு | arithmetic |
| கணக்குப்பதிவியல் | (கடையின் அல்லது நிறுவனத்தின்) கணக்குவழக்குகளை (பதிவேடுகளில்) பதிவுசெய்யும் முறைபற்றிய படிப்பு | book-keeping |
| கணக்குப் பார் | (வரவுசெலவில்) மிகவும் கவனமாக இருத்தல் | calculate |
| கணக்குப்பிள்ளை | (கடை முதலியவற்றில்) வரவுசெலவு கணக்குகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர் | a person employed to maintain accounts (in shops, in the houses of landowners) |
| கணக்குவழக்கு | (குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை) சரிபார்க்கப்படும் வரவுசெலவு | accounts |
| கணக்குவிடு | கதைவிடுதல் | tell tales |
| கணக்கெடு | (எத்தனை என்று) எண்ணுதல் | count |
| கணக்கெடுப்பு | (பெரும் தொகையாக உள்ளவற்றை) அதிகாரபூர்வமாக எண்ணிச் சொல்லும் முறை | official reckoning |
| கணகண | (காய்ச்சல் போன்றவற்றால் உடல்) சூடாக இருத்தல் | (of body) feel hot |
| கணகண-என்று | அடங்கி உஷ்ணத்துடன் | (in a glowing state) with a glow/red hot |
| கணப்பு | குளிர்காய்வதற்காக மூட்டப்படும் நெருப்பு | fire (for warming) |
| கணபதி | விநாயகர் | the elephant-headed god |
| கணம்1 | (கண் இமைப்பதற்குள் கடந்துவிடக் கூடிய) மிகக் குறைந்த காலம் | moment |
| கணம்2 | (பெரும்பாலும் சோதிடத்தில்) பிரிவு | class |
| கணம்3 | பொதுவான அம்சங்கள் கொண்ட பொருள்களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு | (in mathematics) set |
| கணவன் | ஒரு பெண்ணைச் சட்டப்படி மணந்து வாழ்பவன் | husband |
| கணவாய் | (போக்குவரத்துக்குப் பயன்படும் அளவில்) இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்துள்ள பாதை | (mountain) pass |
| கணி | (இன்னது என்று அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்று) மதிப்பிடுதல் | predict |
| கணிகை | (கலைகளில் தேர்ச்சி பெற்ற) விலைமகள் | courtesan |
| கணிசம்-ஆக/-ஆன | (குறைவு என்று சொல்ல முடியாதவாறு) குறிப்பிடத் தகுந்தபடியாக/குறிப்பிடத் தகுந்தபடியான | considerably |
| கணிதம் | எண்களையும் அளவுகளையும் குறித்து விவரிக்கும் அறிவியல் | mathematics |
| கணிப்பு | (இன்னது என்றும் அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்றும் செய்யப்படும்) நிர்ணயம் | forecast |
| கணிப்பொறி | கொடுக்கப்படும் தகவல்களைத் தன்னுள் பதிவுசெய்துகொண்டு அவற்றைத் தொகுத்துப் பகுத்துத் தருதல் போன்ற பணியையும் கணக்கிடுதல் போன்ற பணியையும் மிக விரைவாகச் செய்யும் மின்னணுக் கருவி | computer |
| கணினி | கணிப்பொறி | computer |
| கணீர்-என்று/-என்ற | (குரல், ஒலி, மணி ஓசை) உரத்துத் தெளிவாக/உரத்துத் தெளிவான | (of voice, clang of bell) clear and loud |
| கணு | (கரும்பு, மூங்கில் முதலியவற்றில்) ஒரு துண்டுப் பகுதியும் மற்றொரு துண்டுப் பகுதியும் இணைந்தது போல் காணப்படும் வரையுள்ள இடம் | (of sugar-cane, bamboo, etc.) node |
| கணுக்கால் | பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம் | ankle |
| கணை1 | அம்பு | arrow |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.