Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கச்சான் | (மேற்கிலிருந்து வீசும்) வறண்ட காற்று | dry westerly wind |
| கச்சான் கொட்டை | நிலக்கடலை | groundnut |
| கச்சிதம் | (சற்று அதிகம் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகவும்) சரியான அளவு | (most) apt |
| கச்சு | (முற்காலத்தில் பெண்கள்) மார்பில் கட்டும் துணி அல்லது மார்பிலிருந்து இடைவரைக்குமான ஆடை | (in ancient times) a kind of brassiere (sometimes extending up to the hip) |
| கச்சேரி1 | (இசை, நாட்டியம் முதலிய) கலை நிகழ்ச்சி | performance (of music, dance, etc.) |
| கச்சேரி2 | நீதிமன்றம் | court |
| கச | பாகற்காயில் இருப்பது போன்ற சுவை கொண்டிருத்தல் | have a bitter taste |
| கசக்கிப்பிழி | (ஒருவரை) கடுமையாக வருத்துதல் | squeeze |
| கசகச | (வியர்வையால்) பிசுபிசுப்பாக உணர்தல் | feel sticky (with sweat) |
| கசகசா | வெண்மை நிறத்தில் இருக்கும் அபினியின் சிறு விதை | poppy seed |
| கசங்கு | (துணி, தாள் போன்றவை) தாறுமாறான மடிப்புடையதாதல் | (of clothes, paper) get crumpled |
| கசடன் | கீழ்த்தரமான எண்ணம் உடையவன் | mean and unscrupulous person |
| கசடு | (எண்ணெய் போன்றவற்றின்) அடியில் கரிய நிறத்தில் படிந்திருப்பது | (mostly of oils) dregs |
| கசப்பு | பாகற்காய் முதலியவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை | bitter taste |
| கசமுச-என்று/-என்ற | (பேச்சைக்குறித்து வருகையில்) வெளிப்படையாக இல்லாமல்/வெளிப்படையாக இல்லாத | (spreading scandal) in whispers/juicy |
| கசாப்பு | ஆடு, மாடு போன்ற விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல் | slaughter |
| கசி | (இரத்தம், கண்ணீர், வியர்வை முதலியவை) மிகச் சிறிய அளவில் வெளிவருதல் | (of blood, tears, sweat, etc.) ooze out |
| கசிப்பு | கள்ளச் சாராயம் | illicit liquor |
| கசிர் | (ஏலச் சீட்டில்) சீட்டை ஏலம்விட்டுக் கிடைக்கும் லாபப் பணத்தில் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் பங்குத் தொகை | dividend |
| கசிவு | (நீர் முதலியவற்றின்) சிறிய அளவிலான ஒழுக்கு | (of water, etc.) oozing |
| கசை | (முற்காலத்தில் தண்டனை பெறும் ஆட்களை அடிப்பதற்குப் பயன்படுத்திய) தோலால் அல்லது கயிற்றால் பின்னப்பட்ட நீண்ட சவுக்கு | lashing whip |
| கசையடி | கசையைக்கொண்டு அடித்துத் தரப்படும் தண்டனை | whiplash (as punishment) |
| கஞ்சத்தனம் | அவசியமான செலவைக்கூடத் தவிர்த்துப் பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணம் | niggardliness |
| கஞ்சம் | கஞ்சத்தனம் | niggardliness |
| கஞ்சன் | கஞ்சத்தனமாக இருப்பவன் | niggard |
| கஞ்சா | (புகைத்தால்) போதை தரும் ஒரு வகைச் செடியின் இலை | (the leaves and the seed of) Indian hemp |
| கஞ்சி | சோறு வெந்த பிறகு வடித்து எடுத்த, கொழகொழப்புத் தன்மை உடைய நீர் | sticky, starchy water drained from the cooked rice |
| கஞ்சிகாய்ச்சு | (பலர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு ஒருவரை) அளவுக்கு அதிகமாகக் கிண்டல்செய்தல் | make fun of |
| கஞ்சிரா | வட்ட உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும் வளையத்தின் ஒரு பக்கத்தில் இழுத்துக் கட்டப்பட்ட தோலைக் கையால் தட்டி வாசிக்கும் இசைக் கருவி | a musical instrument of circular wood on the one side of which a hide is drawn tightly and whose frame is fitted with small cymbals, played by striking with the hand |
| கட்சிக்காரர் | வழக்கறிஞரிடம் தன் வழக்கை ஒப்படைத்து நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்பவர் | client (of a lawyer) |
| கட்சிகட்டு | (பிரச்சினை, தகராறு, விவாதம் போன்றவற்றில்) ஒரு தரப்பை ஆதரித்தல் | take sides |
| கட்சிதாவு | சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் தன் கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுதல் | switch over (to some other party after getting elected) |
| கட்சியாடு | கட்சிகட்டிக்கொண்டு வாதாடுதல் | argue in a partisan manner |
| கட்டடக் கலை | கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில்நுட்பக் கலை | architecture |
| கட்டடம் | (வசித்தல், வேலைசெய்தல் முதலியவற்றிற்காக) செங்கல், கல் முதலியவற்றால் எழுப்பிய சுவர்களின் மீது தளமோ கூரையோ கொண்டதாக உருவாக்கப்படும் அமைப்பு | building |
| கட்டணம் | பயன்படுத்திக்கொள்வதற்கு, அனுமதிக்கப்படுவதற்கு அல்லது சேவைக்குச் செலுத்தும் பணம் | fare |
| கட்டம் | நான்கு பக்கமும் கோடுகளால் அமையும் வடிவம் | square |
| கட்டம்கட்டு | (பத்திரிகைகளில் ஒரு செய்தி தனித்துத் தெரியும் வகையில் அதை) கோடுகளாலான பெட்டி போன்ற வடிவத்தினுள் அச்சிடுதல் | separate a news item (by putting it) within a box |
| கட்டமைப்பு | அமைப்பு முறை | structure |
| கட்டவிழ்த்துவிடு | (ஓர் அமைப்பு வன்முறை போன்ற அழிவுச் சக்திகளைப் போராடுபவர்கள் மீது) ஏவிவிடுதல் | let loose (repression, violence) |
| கட்டழகன் | கடுமையான பயிற்சிகளால் உடலைக் கட்டுக்குலையாமல் வைத்திருப்பவன் | one who has a well built physique |
| கட்டழகி | (கட்டுக்குலையாத) அழகான பெண் | beautiful woman |
| கட்டாக்காலி | தன்னிச்சைப்படி அலையும் மாடு | stray cattle |
| கட்டாடி | சலவைத்தொழில் செய்பவர் | washerman |
| கட்டாந்தரை | வறண்டு இறுகிக் கெட்டியாக இருக்கும் நிலப்பகுதி | hard set earth |
| கட்டாயக் காத்திருப்பு | (அரசாங்கத்தில்) ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்படும் அல்லது நீண்ட விடுமுறையிலிருந்து திரும்பும் உயர் அதிகாரி அடுத்த பதவி ஒதுக்கப்படும்வரை காத்திருக்க வேண்டிய காலம் | interim period of compulsory waiting (for higher officials for a change of portfolio) |
| கட்டாயம்1 | (ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதை) தவிர்க்க முடியாத நிலை(ஒருவரின்) வற்புறுத்தல்நிர்ப்பந்தம் | compulsory |
| கட்டாயம்2/-ஆக | அவசியம் | certainly |
| கட்டாரி | பிடியுடைய குத்துவாள் | cross-hilted dagger |
| கட்டி | (உடலில் தோன்றும்) கெட்டியான புடைப்பு | hard boil or swelling (on or in the body) |
| கட்டிக்கா | சிதறுண்டு போகாமல் நிலைப்படுத்துதல் | preserve (unity) |
| கட்டிக்கொண்டு | (பயன் இல்லை என்றோ இதைவிடப் பயனுள்ளது மற்றொன்று உண்டு என்றோ தெரிந்தும்) விடாமல் வைத்துக்கொண்டு | clinging to |
| கட்டிக்கொள்1 | இறுக அணைத்துக்கொள்ளுதல் | hold tightly |
| கட்டிக்கொள்2 | திருமணம் செய்துகொள்ளுதல் | marry (a person) |
| கட்டிப்பால் | (இனிப்புச் சுவை சேர்த்துச் சற்று) கெட்டியாக்கப்பட்ட பால் | condensed milk |
| கட்டிப்புரள் | (ஒருவர் மற்றொருவரை) பிடித்தபடியே உருளுதல் | roll over (one holding the other as in a fight) |
| கட்டிமேய் | (கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவிடாமல்) அடக்கி நடத்துதல் | manage or control (as one would a herd of cattle) |
| கட்டியங்காரன் | கூத்தில் பிற பாத்திரங்களை அறிமுகப்படுத்துதல், பார்வையாளர்களைச் சிரிக்கவைத்தல் முதலிய செயல்களைச் செய்யும் பாத்திரம் | a character in கூத்து who, among other things, introduces other characters to the audience and acts as a clown |
| கட்டியம் கூறு | வருகையைத் தெரிவித்து முன்னறிவிப்புச்செய்தல் | announce in advance |
| கட்டியாள் | அடக்கி ஆளுதல் | rule (with absolute authority) |
| கட்டில் | நான்கு கால்களால் தாங்கப்படுவதும் இரும்புத் தகடு, மரப் பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு, நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட, செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக்கொள்வதற்கான சாதனம் | bed (without mattress) |
| கட்டிவளர் | (கட்சி, குடும்பம் முதலியவற்றை) பிளவுபடாமல் பாதுகாத்து முன்னேற்றம் அடையச்செய்தல் | nurture |
| கட்டிவா | கட்டுப்படியாதல் | (of prices offered) be enough |
| கட்டிளம் | கட்டுடலும் இளமையும் உடைய | (of men) strong and youthful |
| கட்டு1 | (வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி) உருவாக்குதல்/(பறவை, தேனீ முதலியவை வசிப்பதற்கான) இடம் அமைத்தல் | construct (a house, bridge, etc.)/build (a nest, etc.) |
| கட்டு2 | (இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளில் வழங்கும்) முதன்மை வினையின் செயல் மிகவும் வன்மையுடனும் தீர்மானத்துடனும் நிறைவேற்றப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினை | an auxiliary used to indicate that the action expressed by the main verb will be carried out forcefully and with determination |
| கட்டு3 | (ஒருவரின் உடலில் காயம், எலும்பு முறிவு முதலியவை ஏற்பட்ட இடத்தில் போடப்படும்) துணி அல்லது மாவுச் சுற்று | bandage |
| கட்டு4 | பால், தேன் முதலியவற்றில் உரைத்துக் கொடுக்கப்படும் கெட்டிப்படுத்தப்பட்ட மருந்துப்பொருள் | medicine solidified given to the patient by rubbing it in milk, honey, etc |
| கட்டுக்கதை | முழுக் கற்பனை | pure imagination |
| கட்டுக்கழுத்தி | சுமங்கலி | married woman who has her husbsnd living |
| கட்டுக்காவல் | (ஒருவரை அல்லது ஓர் இடத்தைச் சுற்றிப் போடப்படும்) பலத்த காவல் | strict guard |
| கட்டுக்கோப்பு | கட்டுப்பாட்டோடு கூடிய ஒற்றுமை | being well knit or well disciplined |
| கட்டுச்சோறு | (பயணத்திற்காக) பொட்டலமாகக் கட்டப்பட்ட உணவு | food packed (for a journey) |
| கட்டுத்திட்டம் | கட்டுப்பாடு | discipline |
| கட்டுப்படியாகு | (பொருளின் விலை) போதுமானதாக இருத்தல் | be enough |
| கட்டுப்படு | அடங்கி நடத்தல் | submit (oneself) to (a decision, rule, etc.) |
| கட்டுப்பாட்டு அறை | ஒரு துறையின் அல்லது நிறுவனத்தின் பணிகள் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறும்போது தகவல்களைப் பெறுவதும் வேண்டிய இடங்களுக்கு அவற்றை அனுப்புவதுமாகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் (தொலைதொடர்புச் சாதனங்கள் அமைந்துள்ள) இடம் | control room (in police department, airport, etc.) |
| கட்டுப்பாடு | (-ஆக, -ஆன) வரம்பை மீறாத ஒழுங்கு | discipline |
| கட்டுப்பெட்டி | (புதிய மாறுதல்கள்பற்றி அறிந்துகொள்ளாமல்) பழைய வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றி வாழ்பவர் | an old fashioned person (who refuses to acknowledge the changes that are taking place) |
| கட்டுமரம் | (மீனவர் கடலுக்குச் செல்லப் பயன்படுத்தும்) நீண்ட மரக்கட்டைகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மிதவை | raft made of logs tied together (used for sea fishing) |
| கட்டுமஸ்து | உடல் வலிமை | (of body) robust |
| கட்டுமானம்1 | (கட்டடம் போன்றவற்றின்) உருவாக்கம் | construction (of a building, etc.) |
| கட்டுமானம்2 | கட்டுப்பாடு | restriction |
| கட்டுரை | ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல் தந்து உரைநடையில் எழுதப்படுவது | informative essay |
| கட்டுவிரியன் | கரும் சாம்பல் நிற உடலில் வெண்ணிற வளையம் போன்ற குறியுடைய ஒரு வகை நச்சுப் பாம்பு | poisonous snake with visible white rings on its body |
| கட்டுறுதி | (பெரும்பாலும் உடல் அமைப்பைக் குறிப்பிடும்போது) வலிமையும் உறுதியும் உடையது | (of body or structure) strongly built |
| கட்டெறும்பு | (சாதாரண எறும்பைவிடச் சற்றுப் பெரிய) கடித்தால் வலி ஏற்படுத்தக் கூடிய கரிய நிற எறும்பு | a kind of black ant (whose sting is painful) |
| கட்டைக்குரல் | அடித்தொண்டையிலிருந்து எழும் கனத்த குரல் | deep voice |
| கட்டை பிரம்மச்சாரி | திருமணம் செய்துகொள்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர் | confirmed bachelor |
| கட்டைவண்டி | (இருசுக் கட்டையின் இரு பக்கங்களிலும் பெரிய சக்கரங்களை உடைய) மூடும் அமைப்பு இல்லாத, பாரம் ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டி | a bullock cart without cover, used mainly for carrying loads |
| கட்டைவிரல் | கையில் மற்ற நான்கு விரல்களைவிட உயரத்தில் குறைந்தும் தனித்தும் (பொருளைப் பிடிப்பதற்கு வசதியாகவும்) இருக்கும் விரல்/காலில் மற்ற விரல்களைவிடத் தடியாக உள்ள முதல் விரல் | thumb/big toe |
| கட்டோடு | அடியோடு | completely |
| கட | (ஒரு பரப்பின்) ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்/(இடத்தை, பொருளை, நபரை) கழிந்து நீங்குதல் | cross (a road, a river, etc.)/go past |
| கடகட | (உறுதித் தன்மையுடன் அல்லது இறுக்கத்துடன் இருக்க வேண்டியவை) ஆட்டம்காணுதல் | become loose |
| கடகட-என்று1 | தடங்கல் இல்லாமல் | without break, interruption or pause |
| கடகட-என்று2/-என்ற | (பொருள்) உருள்வதைப்போன்று/உருள்வதைப்போன்ற | heartily and loudly/loud |
| கடகம்1 | நண்டைக் குறியீட்டு வடிவமாக உடைய நான்காவது ராசி | fourth constellation of the zodiac having crab as its sign |
| கடகம்2 | பனை ஓலையால் பின்னப்பட்ட பெரிய பெட்டி | a box-like basket made of palm leaves |
| கடத்தல் | (ஒருவரை, ஒரு பொருளை) கடத்துதல் | kidnapping |
| கடத்தி | வெப்பத்தை அல்லது மின்சாரத்தைத் தன் ஊடாகச் செல்ல அனுமதிக்கும் பொருள் | conductor (of heat and electricity) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.