Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| அப்பேர்ப்பட்ட | (சிறுமைக்கும் உயர்வுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்) அந்த மாதிரியான | (while exemplifying meanness or greatness) such a kind of |
| அப்பொழுது/அப்போது | (நிகழ்ச்சி நடந்த/நடைபெறும்) அந்த நேரத்தில் | at the time |
| அப்போதைக்கப்போது | உடனுக்குடன் | at once |
| அப்போதைக்கு | அந்த நேரத்தில் | for a while |
| அபகரி | பிறருக்கு உரியதை நேர்மையற்ற முறையில் எடுத்துக்கொள்ளுதல் | take away (what belongs to another by unfair means) |
| அபகாரம் | தீங்கு | harm |
| அபசகுனம் | ஒருவருக்குத் தீங்கு நேரப்போவதாக அறிவிக்கும் முன் நிகழ்வுக் குறிப்பு | bad or ill omen |
| அபசாரம் | தெய்வத்துக்கும் மகான்களுக்கும் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய பொருள்களுக்கும் (அறிந்தோ அறியாமலோ) செய்துவிடும் தவறு அல்லது அவமரியாதை | desecration |
| அபத்தம் | பகுத்தறிவுக்குப் பொருந்தாதது | absurdity |
| அபராதம் | பணம் அல்லது பொருள் செலுத்த வேண்டும் என்ற தண்டனை | fine (in cash or kind) |
| அபரிமிதம் | மிக அதிகம் | enormity |
| அபலை | ஆதரவற்ற பெண் | helpless woman |
| அபவாதம் | கெட்ட பெயர் | bad reputation |
| அபஸ்வரம் | (குரல், இசைக் கருவி முதலியவை இசைத் தன்மை கெடும் முறையில்) ஒலிக்க வேண்டிய நிலையிலிருந்து விலகுதல் | singing or playing a discordant note (owing to failure of voice or loss of control) |
| அபாக்கியம் | துர்ப்பாக்கியம் | misfortune |
| அபாண்டம் | (ஒருவரை) களங்கப்படுத்தும் நோக்கத்தோடு கூறப்படுவது | atrociousness |
| அபாயச் சங்கிலி | புகைவண்டியின் பெட்டியில் பயணிகள் ஆபத்து நேரத்தில் வண்டியை நிறுத்த இழுக்க வேண்டிய சங்கிலி பொருத்தப்பட்ட சாதனம் | alarm chain (in trains) |
| அபாயச்சங்கு | அபாயத்தை அறிவிப்பதற்கான ஒலிக் கருவி | siren (for warning or to signify danger) |
| அபாயம் | ஆபத்து | danger |
| அபாரம் | பாராட்டத் தகுந்த முறையில் சிறப்பாக இருப்பது | exceptionally good |
| அபிநயம் | ஆடல் கலையில் களம், கருத்து, காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல் | communication and interpretation of meaningful ideas and emotions through facial expressions and rhythmic gestures of hands |
| அபிநயி | ஆடல் கலையில் உடல் உறுப்புகளை (உணர்ச்சியோடு) அசைத்தல் | show in gestures and postures (the feelings, emotions, etc.) |
| அபிப்பிராய பேதம் | கருத்து வேற்றுமை | difference of opinion |
| அபிப்பிராயம் | (ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்த) சொந்தக் கருத்து | personal opinion |
| அபிமானம் | நன்மதிப்பு | esteem |
| அபிமானி | (ஒருவரின் அல்லது ஒன்றின்) நலனில் ஆர்வமுடையவர் | enthusiast |
| அபிலாஷை | விருப்பம் | desire |
| அபிவிருத்தி | (தொழில், பொருளாதார உற்பத்தி அளவில்) வளர்ச்சி | development |
| அபின்/அபினி | (கசகசா விதையிலிருந்து தயாரிக்கப்படும்) ஒரு வகை போதைப்பொருள் | opium |
| அபிஷேகம் | நீர், தேன் முதலியவற்றைக் கடவுளின் முழு உருவத்திலும் படும்படி சொரிதல் | pouring fluid substances such as water, honey, etc over the consecrated idol |
| அபூர்வம் | எப்போதோ ஒரு முறை நிகழ்வது அல்லது காணப்படுவது | that which occasionally occurs or is seen |
| அபூரிதக் கரைசல் | கலக்கப்படும் பொருளைத் தொடர்ந்து கரைய விடும் திரவம் | unsaturated solution |
| அபேட்சகர் | வேட்பாளர் | candidate (for an election) |
| அபேஸ்செய் | திருடிக்கொண்டுபோதல் | walk off with |
| அம்சம் | பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம், ஆலோசனை முதலியவற்றில் குறிப்பிட்ட ஒரு பகுதி | aspect (of an affair, idea, plan, etc.) |
| அம்பர் சர்க்கா | பஞ்சை இழையாக்கப் பயன்படுத்தும், கையால் இயக்கப்படும் சாதனம் | hand spinning wheel |
| அம்பலம் | (முன்னாளில்) கிராமத்தில் ஊர்ப் பொதுக் காரியங்கள் விவாதிக்கப்படும் அல்லது மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொது இடம் | community place in a village where (in former times) public hearing was held or public entertainment took place |
| அம்பறாத்தூணி | (முற்காலத்தில் வீரர் அல்லது வேடர் முதுகில் தொங்கவிட்டு) அம்பு வைத்துக்கொள்ளும் கூம்பு வடிவக் கூடு | (in former times) quiver |
| அம்பாரம் | (தானியம் முதலியவற்றின்) பெரும் குவியல் | huge heap or pile (of grains, etc.) |
| அம்பாள்/அம்பிகை | கோயிலில் பார்வதியைக் குறிக்கும் பொதுப்பெயர் | a general term of the Goddess Parvati in temples |
| அம்பு | கூரிய முனை கொண்டதாகச் செய்து வில்லின் நாணில் வைத்து எய்யப்படுவது | arrow (of a bow) |
| அம்புலி | நிலா | moon |
| அம்போ-என்று விடு | ஆதரவு அற்ற நிலையில் விடுதல் | leave (someone) in the lurch |
| அம்மட்டில் | அந்த அளவில் | at that point |
| அம்மட்டுக்கு | அந்த அளவுக்கு | to that extent |
| அம்மணம் | உடை உடுத்தாத நிலை | nakedness |
| அம்மணம் பேசு | அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசுதல் | talk in obscenities |
| அம்மம்மா | அம்மாவின் அம்மா | maternal grandmother |
| அம்மன் | அம்பாள் | the Goddess Parvati |
| அம்மா1 | பெற்றோரில் பெண் | mother |
| அம்மாள் | வயதான பெண்ணை மரியாதையுடன் குறிப்பிடும் சொல் | (old fashioned) term of respect to refer to a woman |
| அம்மான் | தாய்மாமன் | maternal uncle |
| அம்மி | குழவிகொண்டு மசாலா முதலிய பொருள்களை அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல் | a (rectangular) slab of stone with a stone roller used for grinding (spices, etc.) |
| அம்மி மிதி | திருமண நாளில் மணமகள் வலது காலை அம்மியின் மீது வைத்தல் என்னும் சடங்கை நிகழ்த்துதல் | perform the ceremony of placing the right foot (of the bride) on the grinding stone on the wedding day |
| அம்மை2 | தாய் | mother |
| அம்மைக்கட்டு | தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் உண்டாகிற வகையில் உமிழ்நீர்ச் சுரப்பிகளைப் பாதிக்கும் நோய் | mumps |
| அம்மை குத்து | அம்மை நோய் வராமல் இருக்கத் தடுப்பு ஊசி போடுதல் | vaccinate against small pox |
| அம்மைத் தழும்பு | அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறிய பின் அவை விட்டுச்செல்லும் குழிவான தடம் | pock-mark |
| அம்மைப் பால் | பெரியம்மை நோய் வராமல் இருப்பதற்குப் போடப்படும் தடுப்பு ஊசிக்கான மருந்து | small pox vaccine |
| அம்மையார் | பொதுவாழ்வில் புகழ் பெற்ற பெண்மணியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு மரியாதைச் சொல் | a respectful way of referring to a lady, a public figure |
| அம்மை வார் | (ஒருவருக்கு) அம்மை நோய் உண்டாதல் | have an attack of small pox |
| அமங்கலம் | மங்கலம் அல்லாதது | that which is inauspicious |
| அமங்கலி | கணவன் இறந்த பின் மங்கலமாகக் கருதப்படும் பொருள்களை அணிவதற்கும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கும் உரிமை இழந்த பெண் | woman who is considered to have lost the right to auspicious things |
| அமர் | உட்கார்தல் | sit |
| அமர்க்களம் | (-ஆக, -ஆன) கோலாகலம் | grandness |
| அமர்த்தல் | வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத விதம் | thinly veiled manner |
| அமர்த்து2 | அணைத்தல் | put out |
| அமர்வு | (ஒத்த நோக்கத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குக் குறிப்பிட்ட இடத்தில்) பங்கேற்போர் கூடியிருத்தல் | session (in a conference, meeting) |
| அமர | (புகழுடன்) என்றும் நிலைத்துநிற்கக் கூடிய | immortal |
| அமரத்துவம் | (புகழுடன்) என்றும் நிலைத்துநிற்கும் தன்மை | eternity |
| அமரர் | (அழிவு அற்றவராகிய) தேவர் | (immortal) devas |
| அமல் | (இயற்றப்பட்ட சட்டத்தை அல்லது வகுத்த திட்டத்தை) நடைமுறைப்படுத்துதல் | being in force or bringing |
| அமளி | (கூச்சல் நிறைந்த) குழப்பம் | tumult |
| அமாவாசை | தேய்பிறையின் (இருள் மிகுந்த) கடைசி நாள் | dark side of the moon |
| அமானுஷ்யம் | மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது | that which is superhuman |
| அமிர்தம் | (புராணத்தில்) சாகாமையைத் தரக் கூடிய தேவர் உணவு | food of the celestial beings (devas) |
| அமிலம் | அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம் | acid |
| அமிழ் | (நீர், சதுப்பு நிலம் முதலியவற்றில்) ஆழத்தை நோக்கிக் கீழ் இறங்குதல் | go down (under the surface of water, mire, etc.) |
| அமிழ்த்து | (நீர், சேறு முதலியவற்றில்) அமுக்குதல் | cause to go down (under the surface of water) |
| அமினா/அமீனா | உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுகளை உரியவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பிற்கான அலுவலர் | subordinate officer of civil court to serve legal processes |
| அமுக்கம்-ஆக/-ஆன | கமுக்கமாக/கமுக்கமான | secretively/secretive |
| அமுங்கு | (பளு காரணமாக) அமிழ்தல் | be pressed down |
| அமுதசுரபி | (புராணத்தில்) அள்ளஅள்ள வற்றாமல் உணவு தரக் கூடிய கலம் | a mythical vessel which never becomes empty of food |
| அமுது | அமிர்தம் | ambrosia |
| அமை1 | உருவாகுதல் | form |
| அமை2 | உருவாக்குதல் | (generally) make |
| அமைச்சகம் | ஓர் அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் அரசு நிர்வாகத் துறை | ministry |
| அமைச்சர் | (முதல் அமைச்சரால்/பிரதம மந்திரியால்) அரசுத் துறையைத் தலைமை வகித்து நடத்தத் தேர்ந்தெடுக்கப்படுபவர் | minister (in a cabinet) |
| அமைச்சரவை | அரசுத் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு | council of ministers |
| அமைதி | சப்தமோ பேச்சோ இல்லாத நிலை | silence |
| அமைதிப்படுத்து | சப்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல் | quieten |
| அமைப்பாக | வசதியாகவும் எடுப்பாகவும் | in proportion |
| அமைப்பியல் | ஒரு முழுமையில் அதன் பகுதிகள் அமைந்துள்ள முறையையும் அவற்றிடையே உள்ள உறவையும் விளக்கும் ஆய்வு | structural approach |
| அமைப்பு | (ஒன்றின்) பல்வேறு கூறுகள் தம்முள் இணைந்து நிற்கும் முறை | structure |
| அமோகம் | (பாராட்டத் தகுந்த வகையில்) அதிகம் அல்லது சிறப்பு | abundance |
| அயச்சத்து | (உணவுப் பொருள்களில் இயற்கையாக இருக்கும்) இரும்புத் தாதுவின் சத்து | iron (content) |
| அயர் | அதிக ஆச்சரியம் அடைதல் | be greatly surprised |
| அயர்ச்சி | (உடல்) சோர்வு | fatigue |
| அயர்ந்து | ஆழ்ந்து, தன்னை மறந்து (உறங்குதல்) | (sleep) sound |
| அயல்1 | தொடர்பற்றது | that which has no connection or relation |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.