Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
அயல்2 | பக்கம் | side (of s |
அயல்நாடு | வெளிநாடு | foreign country |
அயலவர் | அருகில் வாழ்பவர் | next door neighbour |
அயலான் | உறவினன் அல்லாதவன் | stranger |
அயலுறவு | வெளியுறவு | foreign affairs |
அயன் | (பிறவற்றோடு ஒப்பிடும்போது) மேம்பட்டது | excellence |
அயிரை | ஆறுகளில் கூட்டமாக வாழும் ஒரு வகைச் சிறிய மீன் | loach |
அயோக்கியன் | நேர்மையும் நாணயமும் இல்லாதவன் | dishonest person |
அர்ச்சகர் | (ஆகம விதிப்படி தீட்சை பெற்றுக் கோயிலில்) அர்ச்சனை முதலிய வழிபாடு நடத்துபவர் | priest properly initiated (to perform பூஜை in a temple) |
அர்ச்சனை | வழிபடும் இறைவனுக்கு உரிய பெயர்களைக் கூறி வழிபாடுசெய்யும் முறை | a mode of worship by praising the god with numerous names |
அர்ச்சி | அர்ச்சனை செய்தல் | perform |
அர்த்தசந்திரன் | அரைவட்ட நிலா | half moon |
அர்த்தசாம பூஜை | கோயிலில் பெரும்பாலும் இரவு பத்துமணிக்குச் செய்யப்படும் கடைசிப் பூஜை | the last பூஜை in a temple performed around 10 p |
அர்த்தபுஷ்டி | பொருள் பொதிந்தது | richness of meaning |
அர்த்தம் | (மொழியில்) சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது(சொல்லின்) பொருள் | sense (of a word) |
அர்த்தமாகு | பொருள்படுதல் | make sense |
அர்த்தராத்திரி | நள்ளிரவு | midnight |
அர்ப்பணி | அர்ப்பணம் செய்தல் | dedicate (totally to a noble cause) |
அரக்கப்பரக்க | அவசரம்அவசரமாக | hurriedly |
அரக்கன் | (புராணத்தில்) ராட்சசன் | a male demon |
அரக்கி | அரக்கன் என்பதன் பெண்பால் | female of அரக்கன் |
அரக்கு1 | (உள்ளங்கையில் ஒன்றை வைத்துக் கசக்கி அல்லது காலால் மிதித்து) அழுத்தித் தேய்த்தல் | crush |
அரக்கு2 | முத்திரையிடப் பயன்படுத்தும் கரும் சிவப்பு மெழுகு | sealing wax |
அரங்கம் | (நாடகம், நாட்டியம் முதலியவை நடக்கும்) மேடை | stage (for plays) |
அரங்கேற்று | அரங்கேற்றம் செய்தல் | make a debut/present a new work for acceptance |
அரங்கேறு | அரங்கேற்றம் செய்யப்படுதல் | have premiere |
அரசகரும மொழி | ஆட்சிமொழி | official language |
அரசமரம் | கூரிய முனையும் அகன்ற அடிப்பகுதியும் உடைய இலைகளைக் கொண்டதும் உயரமாக வளரக் கூடியதுமான மரம் | pipal |
அரசல்புரசலாக | அரைகுறை நிலையில் | in a way one cannot specify |
அரசன் | (பெரும்பாலும்) பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையைப் பெற்றவர் | king |
அரசாங்கம் | ஒரு நாட்டை நிர்வகிக்கும் (அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட) அமைப்பு | government |
அரசாட்சி | அரசனுடைய ஆளுகை | rule or reign of a king |
அரசாள் | (அரசன் நாட்டை) ஆட்சிபுரிதல் | (of a king) rule |
அரசி | (ஆண் வாரிசு இல்லாத) அரசனின் மகளாக இருந்து நாட்டை ஆளும் உரிமையைப் பெற்றவள் | queen |
அரசிதழ் | (அரசின் முக்கிய அறிவிப்புகள், பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் முதலியவை வெளியாகும்) அரசின் அதிகாரப்பூர்வமான ஏடு | gazette |
அரசியல் | நாட்டை ஆட்சிபுரியும் முறை | politics |
அரசியல் கைதி | ஓர் அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்ட நபர் | political prisoner |
அரசியல் சட்டம் | குடிமக்களின் உரிமை, அரசின் கடமை, அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படைச் சட்டம் | constitution (of a country) |
அரசியல் சாசனத் திருத்தம் | பாராளுமன்றத்தின் வழியாக அரசியல் சாசனத்தில் (இருப்பவற்றை மாற்றியோ நீக்கியோ புதிய ஷரத்துகளைச் சேர்த்தோ) செய்யப்படும் திருத்தம் | amendment to the constitution (made by the parliament adopting special procedure) |
அரசியல் யாப்பு | அரசியல் சட்டம் | constitution (of a country) |
அரசியல்வாதி | அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் | politician |
அரசுடமை | அரசின் உடமையாக இருப்பது | nationalized property |
அரசுடமை ஆக்கு | தனியாரால் தொடங்கப்பட்ட ஒரு தொழிலை அல்லது நிறுவனத்தை அரசு தன் உரிமையாக்குதல் | nationalize |
அரசுத் தலைமை வழக்கறிஞர் | மாநில, மைய அரசுகளின் சார்பில் வழக்குகளை நடத்த (அரசியல் சட்டத்தின் கீழ்) நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் | advocate-general (in states) |
அரசுரிமை | (முடியாட்சியில்) நாட்டை ஆளுகிற உரிமை | (in monarchy) the right to rule (over a country) |
அரசு வழக்கறிஞர் | அரசுத் தரப்பில் வழக்கை நடத்தும் வழக்கறிஞர் | public prosecutor |
அரசோச்சு | அரசாளுதல் | rule |
அரட்டை | பொழுதைப் போக்கக் கூடியிருந்து பேசும் பேச்சு | chat |
அரண் | பாதுகாப்பு | protection |
அரண்மனை | அரசன் வசிக்கும் மாளிகை | palace |
அரணை1 | அசையக் கூடிய இமையும் பளபளப்பான செதில்களும் உடைய பல்லி இனத்தைச் சேர்ந்த பிராணி | skink |
அரணை2 | (கணிதத்தில்) வகுத்தல் குறி | (in arithmetic) sign of division |
அரப்பு | (எண்ணெய்யைப் போக்குவதற்குப் பயன்படுத்தும்) சில வகை இலைகளை அல்லது பட்டையை அல்லது பாசிப் பயற்றை இடித்து உண்டாக்கிய பொடி | the flour of certain leaves, bark or lentils (used to remove oily or greasy substance from the body, vessels, etc.) |
அரம் | (இரும்பைத் தேய்ப்பதற்கும் வழவழப்பாக்குவதற்கும் பயன்படுத்தும்) முப்பட்டை முதலான வடிவங்களில் வரிவரியான கோடுகள் கொண்ட சிறு கருவி | file |
அரம்பையர் | (புராணத்தில்) தேவலோகப் பெண்கள் | celestial damsels |
அரவணை | (ஆதரவோடு) அணைத்தல் | take |
அரவணைத்துக் கொண்டுபோ | அன்பும் பரிவும் காட்டி நடத்துதல் | carry on by being tolerant and willing to make concessions |
அரவணைப்பு | பாதுகாப்பு | protection |
அரவம்1 | (ஆள், விலங்கு நடமாட்டத்தால் ஏற்படும்) சப்தம் | noise (made by the movement of human beings, animals) |
அரவம்2 | பாம்பு | snake |
அரவை | அரிசி, மிளகாய் முதலியவற்றைப் பொடியாகும்படி அல்லது நெல்லை அரிசியாகும்படி அரைத்தல் | milling (rice, dry chillies, etc.) or husking (paddy) |
அரள் | (பீதி தரும் நிகழ்ச்சியால்) மிரட்சி அடைதல் | get scared |
அரளி | (வழிபாட்டுக்குப் பயன்படும்) கரும் சிவப்பு அல்லது வெள்ளை நிறப் பூக்களையும் குறுகிய நீண்ட இலைகளையும் உடைய ஒரு வகைச் செடி | oleander |
அராவு | (அராவ, அராவி) அரத்தால் தேய்த்தல் | smooth (a hard surface, rough edge) with a file |
அராஜகம் | நியாயம் அற்ற அதிகாரப் போக்கு | anarchy |
அரி1 | சிறுசிறு துண்டுகளாக நறுக்குதல் | cut into pieces |
அரி3 | சொறியத் தூண்டும் உணர்வு உண்டாதல் | cause a feeling of irritation |
அரிக்கன் விளக்கு | காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட, கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு | a kind of hurricane lamp |
அரிச்சந்திரன் | (பெரும்பாலும் கேலியாக) பொய் பேசாதவர் | (often jocularly) an honest chap |
அரிச்சுவடி | எழுத்துகளையும் சில சொற்களையும் எண்களையும் கொண்ட ஆரம்பப் பாட நூல் | a primer (for children with the alphabet and numbers) |
அரிசி | உணவாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட நெல்மணி | rice (grain) |
அரிசிப் பல் | (குழந்தைகளுக்கு முதலில் தோன்றுவதைப் போன்ற) சிறிய பல் | little teeth (as of baby teeth) |
அரிதாரம் | (நாடகக் கலைஞர் போன்றோர்) முக ஒப்பனைக்குப் பூசிக்கொள்ளும் ஒரு வகைப் பொடி | cosmetic powder (applied by performing artistes to their face) |
அரிது | எப்போதாவது ஒரு முறை காணக் கூடியது அல்லது நிகழக் கூடியது | that which is unusual or rare |
அரிப்பு1 | (ஒன்றிற்கு ஏற்படும்) சேதம் | damage (to objects by erosion, corrosion, etc.) |
அரிப்பு2 | (உடம்பில் ஏற்படும்) நமைச்சல் | itch |
அரிய | அபூர்வமான | rare |
அரியணை | (அவையில்) அரசன் அல்லது அரசி அமரும் அலங்கார இருக்கை | throne |
அரிவரி | (முதல் வகுப்புக்கு முன் உள்ள குழந்தைகளுக்கான) ஆரம்ப வகுப்பு | preschool |
அரிவாள் | (பெரும்பாலும்) உள்வளைவான வெட்டும் பரப்புடைய இரும்புக் கருவி | different types of sickle |
அரிஜனம் | (இந்துச் சமூகத்தில்) தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் சார்ந்திருக்கும் சாதிகளைக் குறிக்கும் பொதுப்பெயர் | a term (coined by Gandhi) to refer to people of certain castes of Hindus who were considered untouchables |
அருகதை | தகுதி | competence |
அருகம்புல் | வேர் விட்டுப் பரவலாகப் படர்ந்து வளரும் ஒரு வகைப் புல் | a kind of grass |
அருகாமை | சமீபம் | proximity |
அருகால் | கதவு நிலை | door frame |
அருகில் | பக்கத்தில் | near |
அருகு2 | அண்மை | nearness |
அருங்காட்சியகம் | பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் சான்றாகும் பொருள்கள், அறிவியல் விளக்கப் பொருள்கள் முதலியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம் | museum |
அருணோதயம் | சூரியன் எழும் காலைப்பொழுது | daybreak, esp |
அருந்ததி | சப்தரிஷி மண்டலத்தில் உள்ளதும் காண்பதற்கு அரிதானதுமான ஒரு நட்சத்திரம் | scarcely visible Alcor (of the Great Bear constellation) |
அருந்ததி காட்டு | அருந்ததி நட்சத்திரத்தை மணமகள் பார்க்கும்படி செய்தல் என்னும் சடங்கை நிகழ்த்துதல் | perform the ceremony of making the bride see the star அருந்ததி |
அருந்து | (சுவைத்து) குடித்தல் | drink (with relish) |
அரும் | அரிய | precious |
அரும்பதவுரை | (இலக்கிய, இலக்கண நூல் பதிப்பில்) கடினச் சொற்களுக்குப் பொருள் விளக்கம் | meaning of difficult words (in an edition of literary and grammatical texts) |
அரும்பாடுபடு | பெரு முயற்சி செய்தல் | take great effort |
அரும்பு1 | (மொட்டு, தளிர்) துளிர்த்தல் | (of buds, tender leaves) sprout |
அரும்பு2 | (இள) மொட்டு | (tender) bud |
அரும்பு மீசை | சிறு கோடு போன்ற மீசை | moustache like a thin line |
அருமந்த | பிரியமான | dear |
அருமை | மிகவும் பாராட்டும்படியானது, உயர்வாகச் சொல்லக் கூடியது | that which is highly praiseworthy |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
