Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கருப்பை | (தாயின் வயிற்றில்) கரு முழுவளர்ச்சியடைந்து வெளிவரும்வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு | womb |
| கரும் | கரிய | black |
| கரும்பலகை | (பள்ளி, கல்லூரி முதலிய இடங்களில்) எழுதிக் காட்டப் பயன்படுத்தும் (பெரும்பாலும்) கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை | black board (in schools, etc.) |
| கரும்பு | (சர்க்கரை தயாரிக்கப் பயன்படும்) மூங்கில் போன்று நீண்டு வளர்வதும் இனிய சாறு நிறைந்ததுமான ஒரு வகைத் தாவரம் | sugarcane |
| கருமணல் | (கடல், ஆறு முதலியவற்றின் கரையில் அல்லது நிலத்தடியில் காணப்படும்) கரிய நுண் மணல் | fine black sand (on the sea shore, the bank of the river, etc.) |
| கருமாதி | (இறந்தவருக்கு) இறுதிச் சடங்கு | final obsequies |
| கருமான் | கொல்லன் | blacksmith |
| கருமி | கஞ்சன் | miser |
| கருமுட்டை | கருப்பையிலிருந்து வெளிப்படும் நுண்ணிய முட்டை | ovum |
| கருமை | கறுப்பு | blackness |
| கருவண்டு | ஒருவித ரீங்காரத்தை எழுப்பும் (நாவல் பழத்தைப் போன்ற) கறுப்பு நிற வண்டு | black beetle |
| கருவறை | (கோயிலில்) கர்ப்பக்கிரகம் | (in temples) sanctum sanctorum |
| கருவாடு | (உப்புச் சேர்த்து வெயிலில் நன்றாக) காயவைக்கப்பட்ட மீன் | salted and dried fish |
| கருவி | வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம் | tool |
| கருவிநூல் | (ஒன்றைக் கற்பதற்கும் கற்கும்போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும்) துணையாக அமையும், அடிப்படைத் தகவல்கள் அடங்கிய நூல் | reference work |
| கருவிமொழி | ஒரு மொழியைப்பற்றி விவரித்துக் கூறப் பயன்படுத்தும் மொழி | metalanguage |
| கருவிழி | கண்ணின் (நடுவில் உள்ள) கரு நிறப் பகுதி | iris |
| கருவுயிர் | கருக்கொள்ளுதல் | become pregnant |
| கருவுறு | கருத்தரித்தல் | conceive |
| கருவூலம் | மதிப்பு மிகுந்த பொருள்களைச் சேர்த்துவைத்துள்ள இடம் | treasure house |
| கருவேல் | முட்கள் நிறைந்த, கறுப்பு நிறப் பட்டையை உடைய வேல மர வகை | black babul |
| கரை4 | (நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில்) உயர்த்தப்பட்ட (மண்) மேடு | bank (of a river, etc.) |
| கரைகாண் | (ஒரு கலையில் அல்லது துறையில்) சிறந்த தேர்ச்சி பெறுதல் | attain consummate scholarship |
| கரைச்சல் | தொந்தரவு | trouble |
| கரைசல் | ஒரு திடப் பொருளோ வாயுவோ கலந்திருக்கும் திரவம் | solution |
| கரைத்துக்குடி | (ஒரு கலையின் அல்லது ஒரு துறையின்) சகல நுணுக்கங்களையும் அம்சங்களையும் தெரிந்துகொள்ளுதல் | know (a subject) inside out |
| கரைதட்டு | (கப்பல் அல்லது பெரும் படகு) கரையோரப் பகுதியில் சிக்குதல் | (of ship) run aground |
| கரைபுரள் | (மகிழ்ச்சி, உற்சாகம்) மிக அதிகமாக வெளிப்படுதல் | (of joy, enthusiasm) know no bounds |
| கரையேறு | (துன்பம், வறுமை முதலியவற்றிலிருந்து) மீள்தல் | get out or be saved (from distress, poverty, etc.) |
| கல் சட்டி | (புளி சேர்த்துச் சமைக்கும் கறி, ஊறுகாய் போன்றவற்றை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும்) மாக் கல்லால் செய்யப்பட்ட மூடி இல்லாத பாத்திரம் | a lidless vessel made of soft stone (used to keep sour dishes,pickles, etc.) |
| கல்தா | (அவமானப்படத் தக்க வகையில்) வெளியேற்றம் | expel |
| கல்நார் | சாம்பல் நிறத்தில் இழைஇழையான தாதுவாகக் கிடைப்பதும் தீயால் எரிக்கப்பட முடியாததுமான ஒரு பொருள் | asbestos |
| கல்நெஞ்சம் | இரக்க உணர்வு சிறிதும் இல்லாத மனம் | hard heartedness |
| கல்மழை | ஆலங்கட்டி மழை | shower of hailstones |
| கல்மிஷம் | சூதுவாது | cunning |
| கல்மூங்கில் | குறுகிய சுற்றளவு கொண்ட கெட்டியான மூங்கில் | a variety of bamboo |
| கல்யாணச்சாவு | முதிர்ந்த வயதுடையோரின் இயற்கையான சாவு | natural death of a person at a ripe old age (which is not considered a sorrowful event) |
| கல்யாணம் | திருமணம் | marriage |
| கல்லறை | இறந்தவரைப் புதைத்த இடம் | cemetery |
| கல்லா | (பெரும்பாலும் பழைய பாணியில் நடத்தப்படும் கடையில்) (பொருளுக்கான) பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இடம் | cash counter |
| கல்லீரல் | வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பு | liver |
| கல்லுப்பு | பொடியாக்கப்படாத உப்புக் கட்டி | crystalline salt |
| கல்லுளிமங்கன் | தான் நினைப்பதையோ தன் உணர்ச்சிகளையோ வெளிவிடாத அழுத்தமான ஆள் | a man who maintains strong silence when confronted |
| கல்லூரி | பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் கலை, அறிவியல், தொழிற்கல்வி முதலியவற்றில் உயர் கல்வி பெறுவதற்கான நிறுவனம் | college |
| கல்வாழை | இரு புறமும் விரிந்த வெளிர்ப் பச்சை நிற இலைகளை ஒன்றின் மீது ஒன்றாகக் கொண்ட ஒரு வகைச் செடி | indian shot |
| கல்வி | படித்துப் பெறும் அறிவு | education |
| கல்வி ஆண்டு | (பெரும்பாலும் ஜூன் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடியும்) கல்வி நிறுவனங்கள் செயல்படும் ஆண்டு | academic year (in India from June to April) |
| கல்விக்கூடம் | (பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற) கல்வி கற்பிக்கும் இடம் | educational institution |
| கல்விமான் | நன்றாகக் கற்றவர் | scholar |
| கல்வியாளர் | கல்வித் துறை தொடர்பான எல்லாப் பணிகளிலும் தேர்ச்சி பெற்றவர் | educationist |
| கல் விளக்கு | மாக் கல்லால் செய்யப்பட்ட எண்ணெய் விளக்கு | lamp made of soap stone |
| கல்வீச்சு | (கட்டடம், வாகனம் முதலியவற்றின் மீது) கற்களை வீசிச் சேதம் ஏற்படுத்தும் வன்முறைச் செயல் | pelting of stones (at buildings, vehicles, etc an act of vandalism) |
| கல்வெட்டு | (பெரும்பாலும் அரசர் பெற்ற வெற்றி, அளித்த கொடை முதலியவற்றைக் குறித்து) பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வாசகம் | inscription (of historical value found on rock or stone slab) |
| கல | (ஒரு திட அல்லது திரவப் பொருளோடு மற்றொரு திட அல்லது திரவப் பொருளை) சேர்த்தல் | mix (a liquid, powder or solid substance with another) |
| கலக்கம் | (உறுதியான முடிவை எடுக்க இயலாத) தெளிவற்ற மனநிலை | state of confusion or disturbance |
| கலக்கு | (ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டு) சுழலச்செய்தல்(தெளிந்த நீர் முதலியவற்றை) கலங்கச்செய்தல் | stir |
| கலகம் | அமைதியைக் குலைக்கும் சண்டை | clash |
| கலகல | (ஒன்றாக இருக்கும் சிறு பொருள்கள் ஒன்றோடொன்று) மோதி அல்லது உருண்டு ஒலி உண்டாக்குதல் | produce a rattling noise |
| கலகலப்பு | (பேச்சும் சிரிப்புமாக அல்லது ஆட்கள் நடமாட்டத்தால்) ஆரவாரத்தோடு இருக்கும் நிலை | liveliness (resulting from noisy chatter and laughter) |
| கலங்கரைவிளக்கம் | கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி நெறிப்படுத்தும் நிலையம் | lighthouse |
| கலங்கல் | (நீர், எண்ணெய் போன்ற திரவங்களின்) கலங்கிய நிலை | (of liquids) turbidity |
| கலங்கு | (நீர், எண்ணெய் போன்ற திரவங்கள் பிறவற்றுடன் சேர்ந்து) தெளிந்த நிலை கெடுதல் | (of liquids) get stirred or disturbed |
| கலசம் | கோபுரத்தின் மேல் இருக்கும் செம்பு வடிவ அமைப்பு | pot-like structure on the top of temple towers |
| கலந்துகொள் | (ஒரு நிகழ்ச்சி, விழா போன்றவற்றில் ஒருவர்) பங்குகொள்ளுதல் | take part (in an activity, a competition, etc.) |
| கலந்துரையாடல் | (ஏதேனும் ஒரு பொருள்குறித்து) ஒன்றுகூடி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம் | discussion |
| கலப்படம் | ஒரு பொருளில் அதே மாதிரியான வேறொரு தரம் குறைந்த அல்லது மலிவான பொருளைச் சேர்த்து ஒன்றாக்குதல் | adulteration (in foodstuff, etc.) |
| கலப்பினம் | ஓர் இனத்தின் இரு வகைகளை ஒன்றுசேர்த்து உருவாக்கும் வீரிய வகை | (of animal, seed, etc.) hybrid |
| கலப்பு | ஒன்றில் (தேவையற்ற) மற்றொன்றின் சேர்க்கை | mixing (of two that ought to be kept separate) |
| கலப்புத் திருமணம் | வேறு ஜாதி அல்லது மதத்தைச் சார்ந்தவருடன் செய்துகொள்ளும் திருமணம் | intercaste or interreligious marriage |
| கலப்பை | (மாட்டைப் பூட்டி) நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்துகிற மரத்தாலான கருவி | plough |
| கலம்1 | (தானியங்களை மதிப்பிடும்) முகத்தலளவையில் பன்னிரண்டு மரக்கால் கொண்ட ஓர் அளவு | a measure of capacity for grains (twelve மரக்கால்) |
| கலம்2 | (உண்பதற்கான) கும்பா போன்ற பாத்திரம் | a large shallow bowl |
| கலம்பகம் | (தெய்வத்தையோ அரசனையோ தலைவனாகக் கொண்டு) பல வகைச் செய்யுளாலும் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை | a kind of poem composed of different kinds of metric stanzas (having a deity or a king for its protagonist) |
| கலயம் | (கஞ்சி, கள் முதலியவை குடிக்கப் பயன்படுத்தும்) சற்று நீண்ட கழுத்தும் குறுகிய வாயும் உடைய சிறிய மண் பானை | an earthen pot having raised neck and a narrow mouth (used for drinking rice gruel, toddy, etc.) |
| கலர் | (பல நிறங்களில் கிடைக்கும்) தாகத்தைத் தணிக்கப் பருகும், கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்படும் இனிப்புச் சுவை கொண்ட நீர் | soft drink (which is available in several colours) |
| கலவரம் | கலகம் | revolt |
| கலவி | (ஆண், பெண்) சேர்க்கை | sexual union |
| கலவை | பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு | mixture (of many things) |
| கலன் | (நீர் முதலியவற்றைக் கொதிக்கவைத்தல், எரிவாயு ஆக்குதல் முதலியவற்றுக்குப் பயன்படும்) பெரிய உலோகப் பாத்திரம் | boiler-like metal container |
| கலாச்சாரம் | பண்பாடு | culture |
| கலாசாலை | (மொழி கற்பிக்கும் அல்லது பயிற்சி தரும்) கல்லூரி | school (of languages) |
| கலாட்டா | கூச்சல்போட்டு (நாகரிகம் அற்ற முறையில் நடந்து) ஏற்படுத்தும் வீணான தகராறு | fracas |
| கலாநிதி | (இசை, நாட்டியம் முதலிய) கலைகளில் சிறந்தவருக்கு வழங்கப்படுகிற கௌரவப் பட்டம் | a title given to a great master of fine arts such as music, dance, etc சங்கீதக் கலாநிதி/ நாட்டியக் கலாநிதி |
| கலாபூர்வம்-ஆக/-ஆன | கலை அம்சம் பொருந்தியதாக/கலை அம்சம் பொருந்திய | artistically/artistic |
| கலாய்பூசு | ஈயம்பூசுதல் | tin (the vessels) |
| கலால் வரி | உள்நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பொருளுக்கு விதிக்கப்படும் (மறைமுக) வரி | excise duty |
| கலி1 | நான்கு வகையான தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்று | one of the four major metres of Tamil prosody |
| கலிகாலம் | தீமையும் அதர்மமும் பெருகிவிட்ட காலம் | time in which evils and atrocities abound |
| கலெக்டர் | மாவட்ட ஆட்சியர் | district Collector |
| கலை1 | (அடுக்கு, வரிசை முதலியன) சீர் இழத்தல் | become disorderly |
| கலை3 | பார்ப்பவர், கேட்பவர் முதலியோர் மனத்தில் அழகுணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் (அந்தந்தப் பண்பாட்டுச் சூழலில்) வெளிப்படுத்தப்படுவது | art |
| கலைக்களஞ்சியம் | எல்லாத் துறைகளின் கருத்துகளையும் பல தலைப்புகளில் எழுதி அவற்றை அகரவரிசையில் அமைத்துத் தரும் (கருவி) நூல் அல்லது நூல் தொகுதி | encyclopaedia |
| கலைச்சொல் | ஒவ்வொரு துறையிலும் வழங்கும் கோட்பாட்டுக்கான சொல்(பொதுவான பொருளில் வழங்காத) துறைச் சிறப்புச் சொல் | technical term |
| கலைஞன் | கலைப் படைப்பில் தேர்ச்சி பெற்றவன் | artist |
| கலைநிகழ்ச்சி | நாட்டியம், நாடகம் முதலிய கலை வடிவங்களில் வழங்கும் நிகழ்ச்சி | programme of entertainment |
| கலைமகள் | கலைகளுக்கான தெய்வம் | goddess of all branches of learning |
| கலைமாணி | இளங்கலை | undergraduate |
| கலைமான் | செம்பழுப்பு நிற உடலில் வெள்ளைப் புள்ளிகள் உடைய மான் | spotted deer |
| கலையரங்கு | நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடக்கும் இடம் | auditorium |
| கலைவாணன் | கலைஞன் | artist |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.