Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கலைவிழா ஒரு நாட்டின் பண்பாட்டை விளக்கும் வகையில் உள்ள கலை நிகழ்ச்சிகளைக் கொண்ட விழாcultural festival
கவ்வு (பற்களுக்கு, தாடைகளுக்கு அல்லது அலகுகளுக்கு இடையில்) அழுத்திப் பிடித்தல்hold
கவசம் (முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்கவும், இக் காலத்தில் குண்டுகள் துளைக்காமல் இருக்கவும் உடலில் அணிந்துகொள்ளும்) உலோகத் தகட்டாலான பாதுகாப்பு மேலுறைarmour
கவசவாகனம் (போரில் பயன்படும்) குண்டுகளால் துளைக்கப்படாத வகையில் சுற்றிலும் உறுதியான உலோகத் தகடு பொருத்தப்பட்டதும் பீரங்கி அல்லது இயந்திரத் துப்பாக்கி கொண்டதுமான வாகனம்armoured vehicle
கவட்டுக்கால் கைப் பக்கமாக வளைந்த கால்bandy legs
கவட்டை இரண்டாகப் பிரியும் மரத்தின் கிளைப் பகுதிfork of a branch
கவண் கயிற்றில் கட்டப்பட்ட பட்டையான தோலில் கல் வைத்து (பயிர்களைக் கொத்தும் பறவைகளை விரட்ட) சுழற்றி எறியும் சிறு கருவிsling (to drive away birds that destroy the crops)
கவர் (சிறப்பான தன்மை காரணமாக) கவனத்தை இழுத்தல்(விரும்பத் தகுந்த ஒன்றை அளிப்பதன்மூலம்) வசப்படுத்துதல்attract
கவர்னர் ஆளுநர்governor (of a state)
கவரிங் நகை தங்க முலாம் பூசப்பட்ட நகைjewellery plated with gold
கவரிமான் (இலக்கியங்களில்) தன் மயிரை இழந்தால் இறந்துவிடும் குணம் படைத்ததாகக் கூறப்படும் (மானமுள்ளவர்களுக்கு உதாரணமாகக் காட்டப்படும்) ஒரு விலங்குan animal which is said to give up its life if a single strand of its hair falls off (and shown as an analogy for people with honour)
கவலை1(ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால்) மனத்தில் நிம்மதியின்மைanxiety
கவலைக்கிடம் (ஒருவர் உயிர்பிழைப்பாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு) மோசமான நிலை(of health) critical condition or state
கவளம் கைப் பிடி அளவான சோற்று உருண்டைa handful of food
கவனஈர்ப்புத் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பிரச்சினை ஒன்றை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக அவைத்தலைவரின் அனுமதியுடன் உறுப்பினர் கொண்டுவரும் தீர்மானம்statement made by a member for calling the attention of a speaker to a matter of urgent public importance
கவனக்குறைவு (செய்வதில், கவனிப்பதில்) முன்னெச்சரிக்கை இல்லாத நிலைcarelessness
கவனம் (-ஆக, -ஆன) (ஒரு செயலைச் செய்யும்போது) ஐம்பொறிகளும் மனமும் இணையும் ஒருமைattention
கவனம்பண்ணு (செய்யுள், கவிதை) எழுதுதல்write
கவனிப்பு (ஒருவர் ஒன்றின் மேல் செலுத்தும்) கவனம்attention
கவி1(இருள், மேகம் முதலியவை குடை விரிவது போல்) கீழ்முகமாக இறங்குதல்(of darkness, clouds, etc.) descend
கவி2கவிதைpoem
கவிச்சை (மீன், இறைச்சி முதலியவற்றின்) நாற்றம்stink (of meat, esp
கவிஞன் கவிதை இயற்றுபவன்poet
கவித்துவம் கவிதைப் பண்புpoetical quality
கவிதை ஒருவர் தன் எண்ணத்தையோ அனுபவத்தையோ கற்பனை நயத்துடன் உணர்ச்சிபூர்வமாக (உரைநடை அல்லாத) சொல்லமைப்பில் சுருக்கமாகவும் செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்poetry
கவியரங்கம் ஏதேனும் ஒரு தலைப்பில் கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதைகளைப் படித்துக்காட்டக் கூட்டும் அவைpoets meet or forum (to read their poems composed on a common theme)
கவிராயர் புலவர்(a scholar) poet
கவிழ்1(குடம் போன்ற பாத்திரங்கள், பொருள்கள் இயல்பான நிலையிலிருந்து மாறி) கீழ் நோக்கிச் சாய்தல்(of vessels, objects) tip over
கவிழ்2(பாத்திரம், பெட்டி, கூடை போன்றவற்றை) தலைகீழாக மாற்றுதல் அல்லது விளிம்பு தரையைத் தொடுமாறு கீழ்நோக்கிச் சாய்த்தல்turn upside down
கவின் அழகுbeauty
கவுதாரி (இறைச்சிக்காக வேட்டையாடப்படும்) தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவைgrey partridge
கவுளி1(பெரும்பாலும்) நூறு வெற்றிலை அடங்கிய ஒரு கட்டுa pack of more or less hundred betel leaves
கவை1(ஒன்றிலிருந்து) கிளைத்துப் பிரிதல்fork (as a branch from the stem)
கவை2கவட்டைforked stick
கவைக்குதவாத நடைமுறைக்குப் பயன்படாதuseless
கழகம் அரசு பிறப்பிக்கும் தனிச் சட்டத்தால் ஏற்படுத்தப்படுவதும் தன் நிர்வாகத்துக்கான சட்டதிட்டங்கள் உடையதுமான பொது நிறுவனம்(any) statutory body or (any) body corporate
கழஞ்சு தங்கத்தை அளக்கும் (1.77 கிராம் எடை உள்ள) ஓர் அளவுa weight (1.77 gram) used for weighing gold
கழல்1(செருகப்பட்டிருப்பது, திருகப்பட்டிருப்பது, நகையாக அணியப்பட்டிருப்பது) தனியாக வருதல்(of a ring, handle, screw, etc.) come off
கழல்2(முற்காலத்தில் அரசர்களும் வீரர்களும் காலில் அணிந்திருந்த) குழல் வடிவக் கால் வளையம்anklet (worn by kings and warriors in those days)
கழலை வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் உண்டாகும் திசுக்களின் பெருக்கம்tumour
கழனி (நன்செய்) நிலம்(paddy) field
கழி1(காலம், வாழ்நாள்) செல்லுதல்(of time, days) pass
கழி2(பெரும்பாலும் மாட்டைக் குறிப்பிடும்போது) பேதியாதல்(of cattle) purge
கழி3(காலத்தை) செலவழித்தல் அல்லது போக்குதல்pass (the time, days, etc.)
கழி4(சிறுநீரை, மலத்தை) வெளியேற்றுதல்pass (urine, motion)
கழி5தடியான கம்புstick
கழிசடை ஒன்றுக்கும் உதவாத நபர் அல்லது பொருள்worthless person or thing
கழிசல் வேண்டாததாகத் தள்ளப்பட்டதுthat which is thrown away or discarded
கழித்தல் ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் குறைக்கும் முறைsubtraction
கழித்து கழிந்த பின்(in time) after
கழிப்பறை சிறுநீர் முதலியன கழிக்க (வீட்டில் அல்லது பொது இடங்களில்) ஏற்படுத்தப்பட்டிருக்கும் வசதிtoilet
கழிப்பிடம் (பொது இடத்து) கழிப்பறைpublic convenience
கழிபேருவகை பெரு மகிழ்ச்சிgreat joy
கழிமுகம் ஆறு கடலோடு கலக்கும் இடம்estuary
கழிவிரக்கம் நடந்துபோனதை எண்ணி ஒருவன் தன் மேல் கொள்ளும் மிகையான வருத்தம் அல்லது அனுதாபம்self-pity
கழிவு (தேவையற்றது என்று கழிக்கப்பட்டதாகிய) குப்பைகூளம்(தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட பின் சேரும் அல்லது வெளியேற்றப்படும்) ரசாயனக் கலப்புடைய பொருள்garbage
கழிவுநீர் (தொழிற்சாலை, வீடு முதலியவற்றிலிருந்து வெளியாகிற) அசுத்த நீர்(industrial) waste
கழுகு வளைந்த கூரிய அலகுடையதும் பிணம் தின்பதுமான பல வகைப் பறவைகளின் பொதுப்பெயர்a common term for vulture and eagle
கழுத்தறு (ஒருவரைச் சிறுசிறு காரியங்களுக்காக) துன்பத்துக்கு உள்ளாக்குதல்annoy
கழுத்தறுப்பு பெரும் துன்பம்big nuisance
கழுத்து தலைப்பகுதி உடலோடு இணைகிற இடம்neck
கழுத்துப்பட்டி (சட்டை போன்றவற்றில்) கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி(shirt) collar
கழுத்தைக்கொடு (ஒரு பெண்) திருமணத்துக்கு உட்படுதல்(of a woman) accept the inevitability of marriage
கழுதை (பொதி சுமப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற) வெள்ளை நிறத்தில் மூக்கும் நீண்ட காதுகளும் உடைய, குதிரை இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்குdonkey
கழுதைப்புலி (சிரிப்பதைப் போன்று கத்தும்) ஓநாய் போன்ற தோற்றமுடைய ஒரு காட்டு விலங்குhyena
கழுநீர் அரிசியைக் கழுவி அல்லது கொதிக்கவைத்து வடித்த நீர்water collected after rinsing rice or water drained after cooking
கழுமரம் (முற்காலத்தில் கடும் குற்றம் புரிந்த ஒருவரின் உயிரைப் போக்கப் பயன்படுத்திய) கூர்மையான முனையுடைய மரக் கம்பம்pointed stake (formerly used for impaling criminals)
கழுவாய் பரிகாரம்act performed in expiation (of sin)
கழுவு (நீர், எண்ணெய் போன்றவற்றால்) சுத்தம்செய்தல்wash (with water, oil, etc.)
கழுவேற்று (முற்காலத்தில் கடும் குற்றம்செய்த ஒருவரை) கழுமரத்தில் ஏற்றிக் கொல்லுதல்(formerly) impale (a person on a pointed stake)
கழைக்கூத்தாடி கழைக்கூத்து ஆடுபவன்pole dancer
கழைக்கூத்து (பெரும்பாலும்) கம்பத்தின் மேல் நின்று அல்லது கயிற்றின் மேல் நடந்து கீழே விழுந்துவிடாமல் திறமையாகச் செய்யும் வித்தைpole dancing
கள் தென்னை அல்லது பனை மரத்திலிருந்து எடுக்கப்பட்டுப் போதை தரக் கூடியதாக ஆக்கப்பட்ட பானம்toddy (tapped from palmyra or coconut palm)
கள்வன் திருடன்thief
கள்ள சட்டவிரோதமாகவும் லாப நோக்கத்தோடும் செய்யப்படுகிற அல்லது நடத்தப்படுகிறillegal
கள்ளக் கையெழுத்து (காசோலை, பத்திரம் முதலியவற்றில்) ஏமாற்றும் நோக்கத்தோடு பிறருடைய கையெழுத்தைப் போடுதல்forged signature
கள்ளச்சந்தை அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பொருள்களை உரிமை பெறாமலும் வரி செலுத்தாமலும் அதிக விலைக்கு விற்கும் வியாபாரம்black market
கள்ளச்சாவி திருடும் நோக்கத்துடன் (பூட்டைத் திறக்கப் பயன்படுத்தும்) மாற்றுச் சாவிforged key (for stealing)
கள்ளத்தோணி உரிய அனுமதி இல்லாமல் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு ஆட்களை அல்லது பொருள்களைக் கடத்தப் பயன்படுத்தும் படகுboat used for illegal transport (from one country to another)
கள்ளபார்ட் (நாடகத்தில்) திருடன் வேடம்the role of thief (in popular drama once in vogue)
கள்ளம் மறைக்கிற குணம்cunning or deceitful nature
கள்ளன் திருடன்thief
கள்ளி1பிறருக்குத் தெரியாமல் மறைத்த செய்தி தெரியவரும்போது ஒரு பெண்ணைக் கேலியாக அழைக்கும் அல்லது குறிப்பிடும் சொல்a term of endearment for a clever girl
கள்ளி2பச்சை நிறத் தண்டுகளில் முட்கள் நிறைந்த வறண்ட நிலத் தாவரங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்a general term for a variety of spurges
கள்ளிச்சொட்டு கள்ளிச் செடியிலிருந்து வடிகிற பால்(drop of) spurge milk (which is thick)
கள்ளிப்பெட்டி (பொருள்களை எடுத்துச்செல்வதற்கு) சாதிக்காய் மரப் பலகைகளால் செய்யப்பட்ட ஒரு வகைப் பெட்டிdeal (wood) box (for transporting things)
களங்கம் ஒருவருடைய நற்பெயருக்கு அல்லது குடும்பத்தின் பெருமைக்கு வந்துசேரும் கெட்ட பெயர்slur
களஞ்சியம் (தானியத்தை) கொட்டிவைப்பதற்கான இடம் அல்லது பெட்டி போன்ற அமைப்புgranary
களத்துமேடு (கிராமப்புறங்களில்) அறுவடை செய்த நெற் கதிரை அடிப்பதற்கான (வயலைவிடச் சற்று உயரமான) இடம்(in the countryside) threshing ground (a little elevated from the ground)
களப்படி (அறுவடை செய்தல், நெல் அடித்தல் போன்ற வேலைகளைச் செய்தவர்களுக்கு) களத்தில் கூலிக்கு மேல் இனாமாகத் தரப்படும் தானியம்extra quantity of grains given over and above the wages at the time of harvest (to agricultural labourers)
களப்பணி ஆய்வு, அறிக்கை முதலியவற்றிற்காக உரிய இடங்களுக்குச் சென்று தகவல் சேகரிக்கும் பணிfield work (for research, investigation, etc.)
களப்பலி (பழங்காலத்தில் போர்க்களத்தில்) வெற்றி கிடைக்கத் தெய்வத்திற்குத் தரும் பலி(human) sacrifice offered on the battlefield to the goddess of victory (in ancient times)
களப்பு உப்பங்கழிlagoon
களப்பூசை நல்ல விளைச்சலுக்காகக் களத்தில் செய்யப்படும் பூஜைworship offered at the threshing floor for a good harvest
களம் நெற் கதிர் அடிக்கும் இடம்threshing floor
களர்த்தன்மை உவர்த்தன்மைsalinity
களர்நிலம்/களர்பூமி உவர்நிலம்saline soil
களரி கூத்து நடக்கும் இடம் அல்லது மேடைstage (for folk play)
களரிகட்டு கூத்து தொடங்குவதற்கு முன் இசைக் கருவிகளோடு பாடுதல்set the stage (by playing music before the commencement of a folk play)
களவாடு திருடுதல்steal
   Page 34 of 204    1 … 32 33 34 35 36 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil