Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கிருத்திரிமம் | (ஒருவருக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்தோடு செய்யப்படும்) தொல்லை | nuisance |
| கிருதயுகம் | (புராணத்தில்) நான்கு யுகங்களில் (நன்மைகள் நிறைந்த) முதல் யுகம் | (in purana) the first of the four aeons (said to be the age of virtues) |
| கிருதா | (ஆண்கள்) காதின் அருகில் அடர்த்தியாகவும் நீளமாகவும் தலைமுடியின் தொடர்ச்சியாக வளர்க்கும் முடி | sideboards |
| கிருதி | பாட்டின் ராகத்தை அதிகம் சார்ந்துள்ள இசை வடிவம் | a composition depending on and bringing out the form of a ராகம் set to a particular தாளம் |
| கிருபை | கருணை | compassion |
| கிருமி | (உடலில், உணவில் வாழும்) நோயை உண்டாக்கும் தன்மை கொண்ட, கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய உயிரினம் | microbe (such as bacteria, virus) causing disease |
| கிருமிநாசினி | தீமை விளைவிக்கும் கிருமிகளைக் கொல்லப் பயன்படும் (திட அல்லது திரவ வடிவில் இருக்கும்) மருந்து | germicide |
| கிருஷ்ணபட்சம் | தேய்பிறைக் காலம் | period of the waning moon |
| கில்லாடி | மிகுந்த சாமர்த்தியம் காட்டுபவன் | clever guy |
| கில்லிதாண்டு | கிட்டிப்புள் | tip-cat |
| கிலி | பயப்படுகிறபடி நடந்துவிடும் என்ற மனக் கலக்கம் | jitters |
| கிலேசம் | சஞ்சலம் கலந்த துக்கம் | anguish |
| கிழக்கத்திய | (உலகில்) கிழக்குத் திசையில் அமைந்துள்ள நாடுகளைச் சார்ந்த | eastern |
| கிழக்கு | சூரியன் உதிக்கும் திசை | east |
| கிழக்கோட்டான் | (இகழ்ச்சியாகக் கூறும்போது) (வீட்டில் நடக்கும் எல்லாச் செயல்களையும் கவனித்துக்கொண்டு இருக்கும்) வயதானவர் | (said contemptuously) old hag |
| கிழங்கு | சில வகையான தாவரங்களில் நிலத்திற்கு அடியில் விளையும் திரட்சியான பகுதி | tuber |
| கிழடன் | (வெறுப்பாகக் கூறும்போது) கிழவன் | (derogatorily) old man |
| கிழடுகட்டை | மிகவும் வயதாகி எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர் | (derogatorily) old person |
| கிழடுதட்டு | வெளிப்படையாகத் தெரியும் வகையில் முதுமைத் தோற்றம் ஏற்படுதல் | age (in a visible way) |
| கிழம் | கிழடு | aged person or animal |
| கிழமை | வாரத்தின் ஏழு நாட்களையும் பொதுவாகக் குறிப்பிடும் சொல் | day (of the week) |
| கிழவன் | வயது முதிர்ந்தவன் | old man |
| கிழவி | கிழவன் என்பதன் பெண்பால் | feminine of கிழவன் |
| கிழி1 | (துணி, தாள் போன்றவை) ஓர் இடத்தில் பிரிதல் அல்லது பிரிந்து துண்டாதல் | be torn |
| கிழி2 | (துணி, காகிதம், தோல் முதலியவற்றைக் கை முதலிய உறுப்புகளால் அல்லது ஒரு கருவியால்) ஓர் இடத்தில் பிரித்தல் அல்லது பிரிந்துபோகுமாறு செய்தல் | rip |
| கிழி3 | (வெறுப்புடன் பேசும்போது) சாதித்தல் | (said contemptuously) accomplish or achieve |
| கிழிசல் | கிழிந்திருப்பது | tear (in clothes) |
| கிள்ளவடு | கரண்டகம் | small metal box for keeping quicklime |
| கிள்ளு | (இலை, காம்பு முதலியவற்றை) நகத்தால் துண்டாக்குதல் | nip (a leaf, etc.) |
| கிள்ளுக்கீரை | (மிகச் சுலபமாகச் சமாளித்துவிடலாம் என்ற நோக்கில்) அற்பமான ஒருவர் அல்லது ஒன்று | one who can be easily tackled or cowed down |
| கிள்ளை | கிளி | parrot |
| கிளப் | ஓட்டல் | restaurant |
| கிளம்பு | (ஓர் இடத்திலிருந்து) புறப்படுதல் | leave |
| கிளர் | (உணர்ச்சி முதலியவை) வெளிப்படுதல் | (of anger, feeling, etc.) be aroused |
| கிளர்ச்சி | (உள்ளம் அடையும்) உணர்ச்சிமயமான மனநிலை | arousal |
| கிளர்த்து | (ஆர்வம், பயம் முதலியவற்றை) வெளிப்படச்செய்தல் | arouse (interest, fear, etc.) |
| கிளவி | (பெரும்பாலும் இலக்கணத்தில்) சொல் | (mostly in grammatical works) word |
| கிளறு | கிண்டுதல் | stir |
| கிளி | பச்சை நிறத்தில் சிறகையும் சிவந்த நிறத்தில் வளைந்த மூக்கையும் உடைய (அழகிற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும்) ஒரு வகைப் பறவை | parakeet |
| கிளிஞ்சல் | இரு (சம) ஓடுகளால் மூடப்பட்டிருக்கிற உடல் அமைப்பை உடைய கடலில் வாழும் உயிரினம்/அந்த உயிரினத்தின் ஓடு | oyster or (its) shell |
| கிளிஞ்சல் சுண்ணாம்பு | கிளிஞ்சலை நீற்றியெடுக்கும் சுண்ணாம்பு | shell lime |
| கிளி ஜோசியம் | பரப்பி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுகளில் ஒன்றைக் கிளியை விட்டு எடுக்கச்செய்து ஒருவருக்குச் சொல்லப்படுகிற சோதிடம் | a kind of fortune-telling where trained parrots pick out cards containing readings regarding the fortunes of individuals |
| கிளுகிளு | (உடலுறவு நினைவால்) சிலிர்ப்புத் தன்மை அடைதல் | get titillated (by sexual thoughts) |
| கிளுகிளுப்பு | (ஆண்பெண் இடையே ஏற்படும்) சிலிர்ப்பான உணர்வு | sexual excitement |
| கிளை1 | (மரத்தின் தொடர்ச்சியாக) பல பிரிவுகள் ஏற்படுதல் | branch out |
| கிளை2 | மரத்தின் தொடர்ச்சியாகப் பிரிந்து இலை, பூ, காய் ஆகியவற்றைத் தாங்கியிருக்கும் பகுதி | branch (of a tree) |
| கிளைநதி | ஓர் ஆற்றிலிருந்து பிரிந்து வேறு வழியில் செல்லும் ஆறு | (of a river) branch |
| கிளைமொழி | இலக்கண அமைப்பு, சொற்கள், உச்சரிப்பு ஆகியவற்றால் பொது மொழியிலிருந்து (அல்லது தரப்படுத்தப்பட்ட மொழியிலிருந்து) சில மாறுபாடுகளுடன் ஒரு வட்டாரத்தில் அல்லது ஒரு பிரிவினரால் பேசப்படும் மொழி வகை | dialect |
| கிறக்கம் | (மிகுந்த தூக்கம், குடிபோதை முதலியவற்றால்) கண்கள் உள்ளிழுத்துக்கொள்ளும் மயக்க நிலை | stupor |
| கிறக்கு | (ஒருவரைத் தூக்கம், காமம் முதலியன) நிலைதடுமாறச்செய்தல் | induce languor, stupor, etc தூக்கம் கிறக்குகிறது |
| கிறங்கு | (ஒருவர் தூக்கம், குடிபோதை முதலியவற்றால்) நிலைதடுமாறுதல் | be in languor, stupor, etc போதைப்பொருள்கள் நரம்பைத் தூண்டிக் கிறங்கவைக்கும் |
| கிறித்தவம் | கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் வாழ்க்கை நெறியாகக் கொண்ட மதம் | christianity |
| கிறிஸ்து | (அர்ச்சிக்கப்பட்ட) இயேசு | jesus, the anointed one |
| கிறுக்கல் | புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதப்பட்டிருப்பது | illegible handwriting |
| கிறுக்கன் | தான் செய்வது இன்னதென்று அறியாதபடி இருக்கும் அறிவு கலங்கியவன் | lunatic |
| கிறுக்கு1 | படித்து அறிந்துகொள்ள இயலாதபடி எழுதுதல் | write illegibly |
| கிறுக்கு2 | பைத்தியம் | lunacy |
| கிறுகிறு | (ஏதேனும் ஒன்றால் கவரப்பட்டு) தன் நிலை அல்லது வசம் இழத்தல் | be bewitched or charmed |
| கிறுகிறு-என்று | தலைச்சுற்றலும் மயக்கமுமாக | groggy |
| கிறுகிறுப்பு | தலைச்சுற்றல் | giddiness |
| கிஸ்தி | நிலவரி | land revenue |
| கிஸ்மிஸ்பழம் | உலர்ந்த திராட்சை | raisin |
| கீச்சுக்குரல் | காதைத் துளைப்பது போன்ற ஒலி எழுப்பும் குரல் | shrill voice |
| கீதம் | (இனிய) இசை | song |
| கீர்த்தனை | பாட்டின் பாடத்தை அதிகம் சார்ந்துள்ள இசை வடிவம் | a composition with more stress on the text than on ராகம் |
| கீர்த்தி | (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி எங்கும் பரவியுள்ள) புகழ் | fame |
| கீரி | உடலிலும் வாலிலும் அடர்த்தியான முடியுடையதும் பாம்புக்குப் பகையாக இருப்பதுமான ஒரு விலங்கு | mongoose |
| கீரிப்பல் | கூர்மையான சிறிய பல் | sharp little tooth |
| கீரை | தோட்டங்களில் வளர்க்கப்படும் செடியின் அல்லது முருங்கை, அகத்தி ஆகிய மரங்களின் (வேகவைத்து உண்ணக் கூடிய) இலை | greens (including the leaves of certain trees such as முருங்கை) |
| கீல்1 | பெட்டியின் மூடி, கதவு முதலியவற்றைத் திறந்து மூடுவதற்குப் பயன்படுத்தும் உலோகப் பட்டை | hinge |
| கீல்2 | (கறையான் அரிக்காமல் இருக்க மரச் சாமான்களுக்குப் பூசப்படும் திரவநிலையில் உள்ள) தார் | tar (applied on timber to guard against termites) |
| கீல்வாதம் | (அழற்சி காரணமாக) மூட்டுகளில் ஏற்படும் வலியும் விறைப்புத் தன்மையும் | arthritis |
| கீலம் | பிளவு | crack |
| கீலம்கீலமாக | துண்டுதுண்டாக | into pieces |
| கீழ்1 | கிழக்கு | east |
| கீழ்2 | தரக் குறைவு | lowness |
| கீழ்3 | (மேல்பகுதிக்கு அல்லது நிலைக்கு மாறான) அடிப்பகுதி | lower or bottom part (opposite of upper or top) |
| கீழ்க்கண்ட/கீழ்க்காணும் | (விளம்பரம், கேள்வித்தாள் முதலியவற்றில்) கீழே கொடுக்கப்பட்டுள்ள | (in a test, examination, application, etc.) the following |
| கீழ்த்தட்டு | (மக்களைக் குறிக்கையில்) சமூகத்தில் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் உள்ள | (people in the) lower economic stratum |
| கீழ்த்திசையியல் | உலகில் கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்த மக்கள், அவர்களின் வரலாறு, கலை முதலியவற்றைப்பற்றிய படிப்பு | area studies of the Orient |
| கீழ்ப்படி | (ஆணை, உத்தரவு முதலியவற்றுக்கு) எதிர்ப்புத் தெரிவிக்காமல் பணிந்துபோதல் | obey |
| கீழ்ப்படு | உட்படுதல் | come under |
| கீழ்ப்பாய்ச்சிக் கட்டு | (செய்யும் வேலைக்கு இடைஞ்சலாக இல்லாத வகையில்) வேட்டியின் முனையைக் கால்களுக்கு இடையேவிட்டு இறுக்கமாக இழுத்துப் பின்பக்கம் செருகிக் கட்டுதல் | wear a வேட்டி with one end tucked up (when doing some manual work) |
| கீழ்மை | இழிவு | lowliness |
| கீழாடை | (கூத்து முதலியவற்றில்) ஆண்கள் இடுப்புக்குக் கீழ் அணியும் ஆடை | outer garments worn below the hip (by male folk artistes) |
| கீழாநெல்லி | காய் போன்ற பகுதிகளை உடைய காம்பையும் சிறு இலைகளையும் கொண்ட (மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்தும்) ஒரு வகைச் செடி | a small herb with slender green branches (used in the treatment of jaundice) |
| கீழே1 | தரையில் | below |
| கீழை | கிழக்கத்திய | eastern |
| கீற்று1 | (வீடுகளுக்குக் கூரை போட அல்லது பந்தல் போடப் பயன்படும்) முடைந்த தென்னை ஓலை | plaited coconut leaf (used for roofing) |
| கீற்று2 | (சில காய்கறிகளை அல்லது பழங்களை) அறுத்து எடுத்த துண்டு | (of vegetables such as pumpkin, fruits such as mango) slice |
| கீறல் | (கூரிய முனையுடைய பொருள் ஏற்படுத்தியதால் அல்லது ஒன்றோடு ஒன்று உராய்வதால்) பதிந்த கோடு | scratch |
| கீறு1 | (கூரிய முனையுடைய பொருள் ஒரு பரப்பில்) கிழித்தல் | scratch |
| கீறு2 | (தேங்காய் முதலியவற்றின்) கீற்று | slice |
| குக்கல் | கக்குவான் | whooping cough |
| குக்கிராமம் | (நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும்) வசதிகள் குறைந்த மிகச் சிறிய கிராமம் | hamlet (far away from the town) |
| குங்கிலியம் | வர்ணம், மருந்து ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தும் பாலைத் தரும் ஒரு வகை மரம் | a kind of dammar (tree) |
| குங்குமப்பூ | சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய்த் துருவலைப் போல் இருப்பதும் பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைப் பூ | saffron |
| குங்குமம் | (பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக) நெற்றியில் இட்டுக்கொள்ளும் கரும் சிவப்புப் பொடி | saffron powder (worn on the forehead usually by women as a sign of auspiciousness) |
| குச்சி | உலர்ந்து கறுத்துக் காணப்படும் மெல்லிய கிளை | twig |
| குச்சு | (பெரும்பாலும்) ஓலையால் வேயப்பட்ட சிறிய (குடிசை போன்ற) அமைப்பு | a small (hut like) structure with a thatched roof |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.