Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| காஜி | இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி | one who acts as a judge according to Islamic law |
| காஷாயம்1 | (சன்னியாசி போன்றோர் கட்டிக்கொள்ளும்) காவி நிறத் துணி | saffron cloth (worn by monks and religious heads) |
| காஷாயம் வாங்கிக்கொள் | காவி உடை தரித்துத் துறவியாதல் | take to wearing saffron robe |
| கிச்சடி | கொதிக்கும் நீரில் ரவையைப் போட்டு வேகவைத்த தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவற்றைச் சேர்த்து மஞ்சள் தூள் தூவிச் செய்யும் சிற்றுண்டி | a dish prepared by boiling semolina to which tomatoes, potatoes, etc are added |
| கிச்சிலி | நாரத்தை அளவுக்குப் பெரிதாக இருக்கும் எலுமிச்சை | (bitter) lime |
| கிச்சுக்கிச்சுத்தம்பலம் | மணலை ஒரு முழ நீளத்தில் சிறு கரை போலக் குவித்து வைத்து அதில் ஒருவர் குச்சியை ஒளிக்க மற்றவர் கையால் பொத்திக் கண்டுபிடிக்கும் விளையாட்டு | a game for two in which one runs his fingers into the sand leaving a small stick which is to be found by another by marking the area with his folded palms |
| கிச்சுக்கிச்சுமூட்டு | (ஒருவருடைய அக்குள், விலாப்புறம் முதலிய இடங்களில் கையால் வருடிச் சிரிப்பு வரும்படி) கூச்சம் உண்டாக்குதல் | tickle (so as to make one laugh) |
| கிஞ்சித்தும்/கிஞ்சித்தேனும் | சிறிதும் | even a little |
| கிட்ட | அருகில் | near |
| கிட்டங்கி | கிடங்கு | godown |
| கிட்டத்தட்ட | ஏறக்குறைய | about |
| கிட்டத்தில் | பக்கத்தில் | near |
| கிட்டப்பார்வை | தூரத்தில் இருப்பவை கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறை | short-sightedness |
| கிட்டி1 | (வெடிமருந்து முதலியவற்றைத் துப்பாக்கிக் குழாய் முதலியவற்றினுள் இறுக்கமாக) இடித்து அமுக்குதல் | ram (the gun powder into a gun) |
| கிட்டிப்புள் | இரு புறமும் செதுக்கப்பட்ட ஒரு மரத் துண்டை அதே அளவு பருமன் உள்ள மற்றொரு நீண்ட கோலால் அடித்து அது போகும் தூரத்தைக் கணக்கிடும் சிறுவர் விளையாட்டு | the game of tip-cat |
| கிட்டிபோடு | கிட்டியில் மாட்டுதல் | put in a clasp (so as to prevent moving) |
| கிட்டு1 | (ஒருவருக்கு) வந்துசேர்தல் | get |
| கிட்டு2 | (குளிர், காய்ச்சல் முதலிய காரணங்களால் தாடை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்) இறுகுதல் | (of jaws/teeth) be firmly locked together |
| கிட2 | முதன்மை வினை குறிப்பிடும் செயல் இயக்கமற்ற தன்மையை அடைந்துவிட்டதைக் காட்டும் ஒரு துணை வினை | an auxiliary verb to indicate that the state described by the main verb remains undisturbed |
| கிடங்கு | (பொருள்களை) பெருமளவில் சேமித்து வைக்கும் இடம் | (governmental or private) warehouse |
| கிடத்து | (குழந்தையை மடியில், கட்டிலில்) படுக்கவைத்தல்(உணர்வு இழந்தவரை, நோயாளியை, பிணத்தை) படுத்த நிலையில் போடுதல் | lay (a baby) down (in crib, etc.) |
| கிடந்து | (குறிப்பிட்ட நிலையில்) சிக்கி | (having got caught in a specified state) with no way out |
| கிடப்பில் இரு | (திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விட்டிருத்தல் | allow (a plan, etc.) to be in cold storage |
| கிடப்பில்போடு | திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விடுதல் | put (a plan, etc.) in cold storage |
| கிடுக்கிப்பிடி | விடுபட முடியாதபடி கையாலோ காலாலோ பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடி | vice-like grip |
| கிடுகிடு1 | (பழைய சுவர் முதலியன) பலமாக அதிர்தல் | (of wall, etc.) shake |
| கிடுகிடு2 | தலைச்சுற்றல் ஏற்படக் கூடிய அளவுக்கு ஆழமுடைய | deep (enough to cause dizziness) |
| கிடுகிடு-என்று | (ஒரு செயலைச் செய்கையில்) தடங்கல் எதுவும் இல்லாமல் | quickly |
| கிடுகு | கீற்று | thatched (palm) leaf (used as roofing or fencing) |
| கிடை1 | (ஒருவருக்கு) வாய்த்தல்(ஒன்றிற்கு) அமைதல் | get |
| கிடை2 | (வயல்களில் உரத்துக்காக மறித்துவைக்கப்படும் ஆடு மாடுகளின்) கூட்டம் | herd of cattle |
| கிடைமட்டம் | தரைமட்டத்திற்கு இணையான நிலை | horizontal |
| கிண்டல் | (ஒருவருடைய நடத்தை, செயல் முதலியவற்றைக்குறித்து மனத்தில் சற்று உறைக்கும்படியான) சிரிப்பான பேச்சு | making fun (of s |
| கிண்டு | (கம்பு, கை முதலியவற்றால், பறவைகள் காலால் ஒன்றை) மேல்கீழாகவோ பக்கவாட்டிலோ புரட்டுதல் | stir |
| கிண்ணம் | சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத (பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும்) சிறிய வட்ட வடிவப் பாத்திரம் | a small bowl |
| கிணற்றுக்கட்டு | கிணற்றைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவர்/கிணற்றுச் சுவரை ஒட்டிய பகுதி | parapet (wall) of a well/area surrounding the parapet of a well |
| கிணற்றுத்தவளை | தான் வாழும் சூழலுக்கு அப்பால் உள்ள எதையும் அறியாத நபர் | one who has no knowledge of things outside his or her own small sphere |
| கிணறு | பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி | well |
| கிணுகிணு | (மணி போன்றவை) குறைவான ஓசையுடன் ஒலித்தல் | tinkle |
| கித்தான் | (சாக்கு போன்ற) கனமான முரட்டுத் துணி வகை | a kind of coarse cloth (like gunny) |
| கிரகணம் | சந்திரனால் சூரிய ஒளி, பூமியால் சந்திரனின் பிரதிபலிப்பு ஒளி தற்காலிகமாக மறைக்கப்படும் நிலை | eclipse |
| கிரகப்பிரவேசம் | புதிதாகக் கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் சடங்குகள் செய்து குடியேறும் நிகழ்ச்சி | a ceremony performed at the time of occupying a newly built house |
| கிரகம் | சூரியனைப் போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான (பூமி, வெள்ளி, சனி போன்ற) விண்வெளிப் பொருள் | planet |
| கிரகி | மனத்தில் வாங்குதல் | comprehend |
| கிரகிப்பு | புரிந்துகொள்ளும் திறன் | comprehension |
| கிரணம் | (சூரியனின், சந்திரனின்) ஒளிக் கதிர் | (of sun, moon) ray of light |
| கிரந்தம் | சமஸ்கிருதத்தை எழுதுவதற்குத் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து | grantha script (that was used in Tamil Nadu for writing Sanskrit) |
| கிரந்தி | மேகப்புண் | syphilis |
| கிரந்திப்புண் | பால்வினை நோயின் அறிகுறியாக ஆண்குறி, உதடு, கைவிரல் முதலிய உறுப்புகளில் தோன்றும் ஒரு வகைப் புண் | chancre |
| கிரமம் | முறை | order |
| கிரயம் | (பெரும்பாலும் நிலம், வீடு போன்றவை பெறும்) விலை | (mostly of land, house, etc.) price (offered and accepted) |
| கிரவுண்டு | (இரண்டாயிரத்து நானூறு சதுர அடி உள்ள) வீடு கட்டும் மனை | a measure of land (of 2400 sq |
| கிராக்கி | (தேவை அதிகமாக இருக்கும்போது வாங்குவோர் ஒரு பொருளுக்காக அல்லது மக்கள் ஒரு நபருக்காக) வேண்டியிருக்கும் நிலை | demand |
| கிராக்கிப் படி | அகவிலைப் படி | dearness allowance |
| கிராக்கிபண்ணு | (ஒருவர் ஒன்றைச் செய்யும் முன் தனக்கு) பல வேலை இருப்பது போலவும் நேரமே இல்லாதது போலவும் காட்டுதல் | put on airs by making oneself unavailable |
| கிராதகம் | கொடுமை | cruelty |
| கிராதகன் | கொடூரமான தீமை இழைப்பவன் | cruel man |
| கிராதகி | கிராதகன் என்பதன் பெண்பால் | feminine of கிராதகன் |
| கிராதி | பாதுகாப்புக் கருதி ஜன்னல்களில் பொருத்தப்படும் அல்லது ஒரு இடத்தில் வேலியாக அமைக்கப்படும், உலோகத் துண்டுகளைப் பற்றவைத்து உருவாக்கப்படும் தடுப்பு | grille |
| கிராம்பு | (சமையலில் நறுமணப் பொருளாகவும் வைத்தியத்தில் எண்ணெய் எடுக்கவும் பயன்படும்) லவங்க மரத்தின் இதழ்கள் விரியாத கரிய நிற மொட்டு | clove |
| கிராமதேவதை | (பெரும்பாலும்) கிராமங்களில் உள்ள சிறு கோயில்களில் வணங்கப்படும் தெய்வம் | village deity |
| கிராமம் | பரப்பிலும் மக்கள் தொகையிலும் குறைவாகவும் நகர வாழ்க்கை வசதிகள் இல்லாததாகவும் உள்ள ஊர் | village |
| கிராம முன்சீப் | (முன்பு வருவாய்த் துறையால்) ஒவ்வொரு கிராமத்துக்கும் நியமிக்கப்பட்டவரும் நில சம்பந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தவருமான கிராம அதிகாரி | (formerly) munsif of the village who could try suits brought by the ryots of the village |
| கிராமாந்திரம் | கிராமமும் கிராமத்தை ஒட்டிய பகுதியும் | countryside |
| கிராமிய | கிராமத்தைச் சார்ந்த | of village or folk |
| கிரி | மலை | mountain |
| கிரிக்கட்டி | கண் இமையில் உண்டாகும் வீக்கம் | sty |
| கிரியா ஊக்கி | தான் எந்த வித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தான் சேர்ந்துள்ளதில் வேதியியல் மாற்றத்தைத் தூண்டுவதற்கான பொருள் | catalyst |
| கிரியை | இறுதிச் சடங்கு | funeral rite |
| கிரீடம் | (அரசன், அரசி போன்றோர் தங்கள்) அதிகாரத்தின் சின்னமாகத் தலையில் வைத்துக்கொள்ளும் (தங்கத்தால் செய்த) அணி | crown |
| கிருத்திரிமம் | (ஒருவருக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்தோடு செய்யப்படும்) தொல்லை | nuisance |
| கிருதயுகம் | (புராணத்தில்) நான்கு யுகங்களில் (நன்மைகள் நிறைந்த) முதல் யுகம் | (in purana) the first of the four aeons (said to be the age of virtues) |
| கிருதா | (ஆண்கள்) காதின் அருகில் அடர்த்தியாகவும் நீளமாகவும் தலைமுடியின் தொடர்ச்சியாக வளர்க்கும் முடி | sideboards |
| கிருதி | பாட்டின் ராகத்தை அதிகம் சார்ந்துள்ள இசை வடிவம் | a composition depending on and bringing out the form of a ராகம் set to a particular தாளம் |
| கிருபை | கருணை | compassion |
| கிருமி | (உடலில், உணவில் வாழும்) நோயை உண்டாக்கும் தன்மை கொண்ட, கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய உயிரினம் | microbe (such as bacteria, virus) causing disease |
| கிருமிநாசினி | தீமை விளைவிக்கும் கிருமிகளைக் கொல்லப் பயன்படும் (திட அல்லது திரவ வடிவில் இருக்கும்) மருந்து | germicide |
| கிருஷ்ணபட்சம் | தேய்பிறைக் காலம் | period of the waning moon |
| கில்லாடி | மிகுந்த சாமர்த்தியம் காட்டுபவன் | clever guy |
| கில்லிதாண்டு | கிட்டிப்புள் | tip-cat |
| கிலி | பயப்படுகிறபடி நடந்துவிடும் என்ற மனக் கலக்கம் | jitters |
| கிலேசம் | சஞ்சலம் கலந்த துக்கம் | anguish |
| கிழக்கத்திய | (உலகில்) கிழக்குத் திசையில் அமைந்துள்ள நாடுகளைச் சார்ந்த | eastern |
| கிழக்கு | சூரியன் உதிக்கும் திசை | east |
| கிழக்கோட்டான் | (இகழ்ச்சியாகக் கூறும்போது) (வீட்டில் நடக்கும் எல்லாச் செயல்களையும் கவனித்துக்கொண்டு இருக்கும்) வயதானவர் | (said contemptuously) old hag |
| கிழங்கு | சில வகையான தாவரங்களில் நிலத்திற்கு அடியில் விளையும் திரட்சியான பகுதி | tuber |
| கிழடன் | (வெறுப்பாகக் கூறும்போது) கிழவன் | (derogatorily) old man |
| கிழடுகட்டை | மிகவும் வயதாகி எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர் | (derogatorily) old person |
| கிழடுதட்டு | வெளிப்படையாகத் தெரியும் வகையில் முதுமைத் தோற்றம் ஏற்படுதல் | age (in a visible way) |
| கிழம் | கிழடு | aged person or animal |
| கிழமை | வாரத்தின் ஏழு நாட்களையும் பொதுவாகக் குறிப்பிடும் சொல் | day (of the week) |
| கிழவன் | வயது முதிர்ந்தவன் | old man |
| கிழவி | கிழவன் என்பதன் பெண்பால் | feminine of கிழவன் |
| கிழி1 | (துணி, தாள் போன்றவை) ஓர் இடத்தில் பிரிதல் அல்லது பிரிந்து துண்டாதல் | be torn |
| கிழி2 | (துணி, காகிதம், தோல் முதலியவற்றைக் கை முதலிய உறுப்புகளால் அல்லது ஒரு கருவியால்) ஓர் இடத்தில் பிரித்தல் அல்லது பிரிந்துபோகுமாறு செய்தல் | rip |
| கிழி3 | (வெறுப்புடன் பேசும்போது) சாதித்தல் | (said contemptuously) accomplish or achieve |
| கிழிசல் | கிழிந்திருப்பது | tear (in clothes) |
| கிள்ளவடு | கரண்டகம் | small metal box for keeping quicklime |
| கிள்ளு | (இலை, காம்பு முதலியவற்றை) நகத்தால் துண்டாக்குதல் | nip (a leaf, etc.) |
| கிள்ளுக்கீரை | (மிகச் சுலபமாகச் சமாளித்துவிடலாம் என்ற நோக்கில்) அற்பமான ஒருவர் அல்லது ஒன்று | one who can be easily tackled or cowed down |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.