Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சீர்1(பல்வேறு காலங்களில் அல்லது நிலைகளில் தொடரும்போது) மாறுபாடு இல்லாதது(ஒரே) அளவுuniformity
சீர்2திருமணத்தின்போது அல்லது விசேஷ நாட்களில் மகளுக்குக் கொடுக்கும் பொருள்gifts
சீர்3அசைகள் ஒன்று சேர்ந்த செய்யுளின் உறுப்புmetrical foot
சீர்குலை1(சகஜமான நிலை) மோசமாகப் பாதிக்கப்படுதல்be affected
சீர்குலை2ஒழுங்கை அல்லது இணக்கத்தைக் கெடுத்தல்disturb (peace)
சீர்கெடு தன்மை மாறுதல் அல்லது கெடுதல்deteriorate
சீர்கேடு ஒழுங்கு குலைந்த நிலைமைirregularity
சீர்செய்1குறை நீக்கி நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்repair
சீர்திருத்தம் (சட்டம், சமுதாயம் முதலியவற்றில்) நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைreform
சீர்திருத்து தரத்தை உயர்த்தும் வகையில் மாற்றம் செய்தல்/சீர்கேடுகளை அல்லது தவறுகளை நீக்குதல்reform
சீர்திருந்து தவறு நீங்கி மாற்றம் ஏற்படுதல்get reformed
சீர்தூக்கு நன்மையையும் தீமையையும் அல்லது குறையையும் நிறையையும் எடைபோடுதல்weigh (considering the good and the bad)
சீர் மரபினர் (ஆங்கிலேயர்களால்) வகைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்து பின்னர் நீக்கப்பட்டுப் பின்தங்கிய இனத்தவராக அறிவிக்கப்பட்டவர்communities once listed (by the British) and later transferred to the list of backward communities
சீரகம் (சமையலில் பயன்படுத்தும்) ஒரு வகைக் குத்துச் செடியின் பழுப்பு நிறச் சிறு விதைcumin
சீரமை (கட்டடம், சாலை முதலியவற்றை) செப்பனிடுதல்repair
சீரழி1(உயர்ந்த நிலை கெட்டு) மோசமான நிலையை அடைதல்degenerate
சீரழி2மோசமான நிலையை அடையச்செய்தல்cause to degenerate
சீரழிவு (தரத்தில்) மோசம்(தகுதியில்) தாழ்வு(நிலைமையில்) கேடு
சீராக்கு (ஒரு நெறியில் இருக்குமாறு) ஒழுங்குபடுத்துதல்regulate
சீராகு இயல்பான நிலைக்குத் திரும்புதல்(of condition, function, etc.) become all right or normal
சீராட்டு (வேண்டியவை அனைத்தும் செய்து) போற்றிப் பாராட்டுதல்tend lovingly
சீராடு (பெண் தாய் வீட்டில் வேண்டியவற்றை) அனுபவித்து மகிழ்தல்enjoy affection
சீரிய உயர்ந்தexcellent
சீருடை (பள்ளி மாணவர், ராணுவத்தினர் முதலியோர் அல்லது தொழிற்சாலை முதலியவற்றில் பணி செய்வோர்) குறிப்பிட்ட நிறத்தில் குறிப்பிட்ட பாணியில் (ஒரேமாதிரியாக) அணியும் உடைuniform (dress)
சீலம் உயர்ந்த பண்புexemplary or noble conduct
சீலன் (பெரும்பாலும் குணத்தைக் குறிப்பிட்டுக் கூறும் சொற்களுடன் இணைந்து) உயர்ந்த குணமுடையவன்person of character (mentioned)
சீலை சேலைsaree
சீலைப்பேன் (சாதாரணப் பேன்களைப் போல் அல்லாமல்) ஆடைகளில் முட்டைகளை இடும் ஒரு வகைப் பேன்body louse
சீவல் மெல்லியதாகச் சீவி எடுக்கப்பட்ட பாக்குத் துண்டுparings of areca nut (to be chewed with betel leaves)
சீவாளி (நாதஸ்வரம் போன்ற வாத்தியங்களில்) ஊதுவதற்குத் தேவையான இடைவெளி உடையதாகத் தக்கை, மட்டை முதலியவற்றால் செய்யப்பட்ட சிறு துண்டுreed (in certain windpipe instruments)
சீவான்மா ஜீவாத்(து)மாindividual soul
சீவு1(கத்தி முதலியவற்றால்) மெல்லிய சுருளாக வெட்டி நீக்குதல்make sharp or pointed
சீவு2(முடியை) சீப்பினால் இழுத்து ஒழுங்குபடுத்துதல்comb (the hair)
சீழ் புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்pus
சீழ்க்கை சீட்டிwhistle
சீற்றம் (பாம்பு, காளை முதலியவற்றின்) உக்கிரமாக வெளிப்படும் மூச்சு ஒலி(of animals esp
சீனாக்கற்கண்டு ஒரு வகைக் கற்கண்டுcrystal sugar (with rough edges)
சீனி கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் தூள்தூளான வெண்ணிறப் படிகம்(loose) sugar
சீனிக்கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்குtapioca
சீனிவெடி சுண்டுவிரல் நீளத்தில் அமைந்திருக்கும் சிறிய பட்டாசு வகைa kind of small fire cracker
சுக்கல் (உடைந்த) சிறு துண்டு(broken) piece
சுக்கல்சுக்கலாக சுக்குநூறாகin pieces
சுக்கா ரொட்டி தணலில் வாட்டி எடுக்கப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டிa kind of சப்பாத்தி roasted without using oil
சுக்கா வறுவல் மசாலா தடவி வறுத்த இறைச்சித் துண்டுpieces of fried meat slightly spiced
சுக்கான் (படகு, கப்பல் போன்றவற்றில் அவற்றை) தேவையான திசையில் திருப்புவதற்காக அமைந்திருக்கும் கருவிrudder (of a boat, etc.)
சுக்கிரதசை ஒருவருடைய ராசியில் அவருக்கு நல்ல பலனைத் தரக் கூடிய சுக்கிரன் ஆட்சிசெய்யும் இருபதாண்டு காலம்the twenty year period of Venus ascendant
சுக்கிரன் வெள்ளி என்னும் கிரகம்venus
சுக்கிலம் விந்துsperm
சுக்கு உலர்ந்த இஞ்சிdried ginger
சுக்குநூறாகு சிறுசிறு துண்டுகளாதல்break or burst into pieces
சுகக்கேடு உடல்நலக் குறைவுphysical indisposition
சுகந்தம் இனிய மணம்fragrance
சுகப்படு (பெரும்பாலும் எதிர்மறை வினையோடு) பயனுடையதாக அமைதல்get better
சுகப்பிரசவம் சிக்கல் எதுவும் இல்லாமல் இயல்பாக நிகழும் பிரசவம்(of child birth) normal delivery
சுகபோகம் புலன்சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சிenjoyment of worldly pleasures
சுகவீனம் உடல்நலக்குறைவுphysical indisposition
சுகஜீவனம் (தானே உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் பரம்பரைச் சொத்தைக் கொண்டு நடத்தும்) வசதியான வாழ்க்கைhappy and comfortable life (resulting from inherited property)
சுகஜீவி சுகஜீவனம் நடத்துபவர்one who leads a life of ease and comfort
சுகாதாரம் (நோய் இல்லாமல் உடலை) ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ற நிலை அல்லது வழி முறைhygiene
சுகி (பெண்ணோடு) கூடி மகிழ்தல்have pleasure (with women)
சுகிர்தம் இன்பம்pleasure
சுங்கச்சாவடி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்கவும் அவை ஏற்றிச்செல்லும் சரக்குகளுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதைப் பரிசோதிக்கவும் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் சாவடிtollgate (which collects nominal fee from the vehicles for the use of bridge, etc and checks whether the tax is paid for the goods transported)
சுங்கடி (இடையிடையே முடிச்சிட்டுச் சாயத்தில் நனைப்பதால்) பின்புல நிறத்திலிருந்து வேறுபட்டுத் திட்டுத்திட்டாகச் சாயம் தெரியும் நூல் புடவைa kind of dyed saree with undyed spots
சுங்கவரி ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அரசு விதிக்கும் வரிcustoms duty
சுங்கான் புகையிலையை அடைத்துவைப்பதற்கு ஒரு முனையில் சிறிய கிண்ணம் போன்ற குழிவைக் கொண்ட புகைப்பதற்கான சிறு குழாய்tobacco-pipe
சுசியம் சுழியன்a kind of sweetmeat
சுட்டி2(சிறுவர், சிறுமியரைக் குறிக்கையில்) கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி(of girls or boys) one who is smart
சுட்டிக்காட்டு தெளிவாகக் குறிப்பிட்டுக்காட்டுதல்point out
சுட்டு1குறிப்பிடுதல்indicate
சுட்டுப்பெயர் (ஒன்றை அல்லது ஒருவரை) சுட்டிக்காட்டி நிற்கும் பெயர்demonstrative pronoun
சுட்டுவிரல் ஆள்காட்டி விரல்index finger
சுட்டெரி (வெயில், நெருப்பு) கடுமையாகக் காய்தல்(of heat, fire) scorch
சுடச்சுட (உணவுப் பொருள்களைக் குறிக்கையில்) (அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு) மிகுந்த சூட்டுடன்(of food) right from the oven
சுடர்1ஒளிவிடுதல்glow
சுடர்2(விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றின் திரியில் எரியும்) தளிர் வடிவ நெருப்புflame (of a lamp or candle)
சுடலை சுடுகா??டுground for burning the corpses
சுடு1(வெப்பம், வெயில் ஆகியவற்றால்) உஷ்ணம் அடைதல்(உடல் காய்ச்சலால்) அதிக வெப்பம் அடைதல்get hot
சுடு2(துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றிலிருந்து) குண்டுகளைச் செலுத்துதல்shoot (with a gun, etc.)
சுடுகாடு இறந்தவரின் உடலை எரிக்கும் இடம்cremation ground
சுடுதண்ணீர் வெந்நீர்hot water
சுண்டக்கறி சமைத்ததில் மிச்சமிருக்கும் பொரியல் முதலியவற்றைக் குழம்பில் இட்டுச் சூடுபடுத்திச் சுண்ட வைத்துத் தயாரிக்கும் கறிa dish prepared by adding the leftovers to the sauce and by heating it for a while
சுண்டல் பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்boiled and spiced pulses served as snacks
சுண்டி இழு ஆர்வத்தைத் தூண்டிக் கவனத்தை ஈர்த்தல்captivate
சுண்டு1(நீர் அல்லது பால், குழம்பு முதலியவற்றில் உள்ள நீர்) வற்றுதல்evaporate (by heating)
சுண்டு3ஒரு கொத்தில் கால் பங்குa quarter of a கொத்து
சுண்டுவிரல் (கட்டைவிரலிலிருந்து கடைசியாக உள்ள) சிறுவிரல்little finger
சுண்டெலி (வீட்டு எலியைவிட அளவில்) சிறிய எலிmouse
சுண்டைக்காய் (வற்றல் போடப் பயன்படும்) படரும் செடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய சிறு உருண்டை வடிவக் காய்a berry that tastes bitter (used in certain sauces or fried and eaten)
சுண்ணம் (விழாக் காலங்களில் ஒருவர் மேல் ஒருவர் தூவும்) வண்ணப் பொடிcolour powder (thrown at each other on festive occasions)
சுண்ணாம்பு காளவாயில் சுட்ட சுண்ணாம்புக் கல்lime (burnt in the kiln)
சுண்ணாம்புக்கல் (இயற்கையாகப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) வெள்ளை நிறக் கல்limestone
சுணக்கம் (ஒரு வேலையை உடனடியாகச் செய்யாமல் ஏற்படுத்தும்) தாமதம்delay
சுணக்கு (வேலை ஆரம்பிப்பதை அல்லது செய்யும் வேலையை) தாமதப்படுத்துதல்delay
சுணங்கு (வேலை ஆரம்பமாக அல்லது நடக்கும் வேலை) தாமதமாதல்(of work, action, etc.) be delayed
சுணை (நெல், கரும்பு போன்ற பயிர்களின் மேல் காணப்படும்) வெண்மையான சிறு முள்sticky prickle (found in leaves, stalks, etc.)
சுத்தம் அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலைcleanliness
சுத்தமாக அறவேcompletely
சுத்தி2(மன) சுத்தம்purity
சுத்திகரி (பெரும்பாலும் திரவத்தை) சுத்தம்செய்தல்purify (mostly liquids esp
சுத்திகரிப்பு சுத்திகரிக்கும் செயல்முறைpurifying process
   Page 72 of 204    1 … 70 71 72 73 74 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil