Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சுழல்நாற்காலி நாலா பக்கங்களிலும் திரும்பும் வசதி கொண்ட நாற்காலிrevolving chair
சுழல் முறையில் (தலைமைப் பதவி நியமனங்களின்போது) குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர், பிறகு மற்றொருவர் என்ற அடிப்படையில்(of appointments) in rotation
சுழற்கேடயம்/சுழற்கோப்பை (விளையாட்டுப் போட்டியில்) வெற்றிபெறும் வீரர் அல்லது அணி பரிசாகப் பெற்று அடுத்த போட்டி நடைபெறும்வரை வைத்திருக்கக் கூடிய (அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த) பரிசுக் கேடயம் அல்லது கோப்பை(in sports) shield or trophy retained in rotation
சுழற்சி ஒன்றை அச்சாக அல்லது மையமாகக் கொண்டு சுற்றுகிற விதம்rotation
சுழற்பந்து வீச்சு (கிரிக்கெட் விளையாட்டில்) தரையில் பட்டு எழும்போது திசைமாறிப் பாயத்தக்கதாக மெதுவாகப் பந்து வீசப்படுதல்(in cricket) spin bowling
சுழற்று (ஒன்றை) சுழலச்செய்தல்swing around
சுழிப்பு (ஆறு, கால்வாய் முதலியவற்றில் ஏற்படும்) நீரின் சுழல்whirlpool
சுழியன் கடலைப் பருப்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றால் செய்த பூரணத்தை கரைத்த மைதாமாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்த இனிப்புப் பண்டம்a ball shaped sweetmeat with a filling of coconut and jaggery wrapped in dough of maize and fried in oil
சுள்-என்று (உறைப்பு, வெயில், கோபம் முதலியவை) கடுமையாக உணரும்படியாகa term denoting severity (of the hotness of sun, severity of anger, etc.)
சுள்ளி உலர்ந்த சிறு குச்சிdry twig
சுள்ளெறும்பு சிவப்பு நிறத்தில் காணப்படும் (கடித்தால் சுள்ளென்று வலி ஏற்படுத்தக் கூடிய) சிறிய எறும்புred ant
சுளகு (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) வாய்ப் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்a narrow-mouthed winnowing pan (longer than முறம்)
சுளீர்-என்று (வலி, வெயில் முதலியவை உடலைத் தாக்கும்போது) கடுமையாகa term denoting the severity or sharpness (of pain, hot sun, etc.)
சுளுக்கு1(வலியும் வீக்கமும் ஏற்படும்படி) தசைநார்கள் அல்லது தசைநாண்கள் புரண்டுவிடுதல்get sprained
சுளுக்கு2தசைநார்களில் பிறழ்வுsprain
சுளுவு சுலபம்simple
சுளை (பலா, ஆரஞ்சு முதலிய பழங்களில்) கொட்டை உடையதும் தனித்தனியாகப் பிரிக்கக் கூடியதுமான சதைப் பகுதிpulp segment (in orange, jack fruit, etc.)
சுளையாக (கொடுக்கும் தொகை அதிகம் என்ற கருத்தில்) கணிசமாகa good, round sum
சுற்றத்தார் உறவினர்relatives
சுற்றம் உறவுrelation
சுற்றவும் (பார், நோக்கு, கவனி ஆகிய வினைகளுடன்) சுற்றுமுற்றும்around
சுற்றளவு (ஏதேனும் ஒரு) வடிவத்தின் வெளி விளிம்பின் மொத்த நீளம்circumference
சுற்றறிக்கை (ஓர் அலுவலகத்தில், அமைப்பில்) செய்திகளைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்க அனுப்பும் அறிக்கைcircular (in an office, etc.)
சுற்றி (ஒருவரை, ஒரு பொருளை) வட்டமாக வளைத்து(ஓர் இடத்தை மையமாகக் கொண்டு) எல்லாப் பக்கங்களிலும்around (a person, place or an object)
சுற்றித்திரி (குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) அங்குமிங்கும் சென்றுவருதல்roam
சுற்றிப்பார் (நேரில் சென்று) பார்வையிடுதல்inspect (a place)
சுற்றிப்போடு (மிளகாய், உப்பு, தெரு மண் முதலியவற்றைக் கையில் வைத்து ஒருவரின் தலைமேல் சுற்றிப் பிறகு நெருப்பில் போட்டு) பிறர் பார்வையின் தீய விளைவை நீக்குதல்ward off the effect of the evil eye (by waving chillies, salt and earth from street corner together around the head of the subject thrice and casting them into fire)
சுற்றிலும் சுற்றுமுற்றும்on all sides
சுற்றிவர சுற்றிலும்around (a place)
சுற்றிவளை (ஒரு விஷயத்தை) நேரடியாகச் சொல்லாமல் தொடர்பில்லாத விஷயங்களையும் சேர்த்தல்beat about the bush
சுற்று1(ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே) குறிப்பிட்ட திசையில் சுழலுதல்/(ஒரு பொருளை) சுழலச்செய்தல்spin
சுற்றுக்கட்டு வீட்டின் உட்புறத்தில் முற்றத்தைச் சுற்றி அமைந்திருக்கும் தாழ்வாரப் பகுதிenclosed verandah around the open space inside the house
சுற்றுச்சுவர் (கட்டடத்தின்) வெளி எல்லையாக எழுப்பப்படும் சுவர்wall surrounding a building
சுற்றுச்சூழல் உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவை அடங்கிய இயற்கை நிலைenvironment
சுற்றுப்பயணம் (பணி காரணமாகவோ மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ) பல இடங்களுக்குப் போய்வரும் பயணம்tour (for some purpose or sightseeing)
சுற்றுப்புறம் (குறிப்பிட்ட இடத்தை) ஒட்டியுள்ள அல்லது சார்ந்த பகுதிsurroundings
சுற்றுமுற்றும் நான்கு பக்கமும்on all sides
சுற்றுலா பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்tour
சுற்றுலா மாளிகை (அரசு) விருந்தினர் விடுதி(government) guesthouse
சுற்றுவட்டாரம் (ஓர் இடத்தை, ஊரை) சுற்றியுள்ள பகுதிvicinity
சுற்றுவாடை சுற்றுப்புறம்nearby places
சுறா பல வரிசை கூரிய பற்களைக் கொண்டதும் வலிமைமிக்க வாலால் வேகமாக நீந்தக் கூடியதுமான சாம்பல் நிறக் கடல் மீன்shark
சுறுசுறு-என்று (கோபத்தைக்குறித்து வருகையில்) மெள்ள அதிகரித்துfly into (a rage)
சுறுசுறுப்பு (சோம்பல் இல்லாமல்) செயல்படுவதற்கான ஊக்கம்stimulant
சுன்னத்துக் கல்யாணம் (இஸ்லாமிய ஆடவர்) ஆண்குறியின் முன்தோலை அகற்றும் சடங்குcircumcision and ceremony connected with it
சுனை (காடு, மலை முதலிய இடங்களில்) இயற்கையாக நீர் ஊறித் தேங்கும் சிறு குட்டைpool of water (in a mountain, forest, etc.)
சூசகம் (-ஆக, -ஆன) ஒன்றை ஊகித்து அறியும் வகையில் வெளிப்படுத்தும் முறைsuggestion
சூட்சுமம் மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம்intricacy
சூட்டடுப்பு சூட்டை எளிதில் விட்டுவிடாமல் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கரி அடுப்புcoke oven
சூட்டிகை (பொதுவாக) அறிவுக் கூர்மை/(ஒரு துறையில்) திறமை(generally) brightness/(in a specific field) smartness
சூட்டுக்கோல் (மாடு முதலியவற்றின் மேல் அடையாளம் இடுவதற்காகவோ நோய் நீக்கவோ பயன்படுத்தப்படும்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிbranding iron
சூட்டோடுசூடாக முந்தைய செயல் செய்த வேகத்திலேயே அல்லது நடந்த வேகத்திலேயேclose on sth
சூட்டடி (சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்தெடுக்கும் பணிcollecting the grains from the (paddy) sheaves kept in சூடு
சூடடி (சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்து எடுத்தல்collect grains from the (paddy) sheaves kept in சூடு
சூடம்/சூடன் கற்பூரம்camphor
சூடு1(தலையில் மலர் போன்றவற்றை அல்லது கழுத்தில் மாலையை) அணிதல்put on (flowers, crown on the head, garland around the neck)
சூடு2(-ஆக, -ஆன) தொட்டு அல்லது உணர்ந்து அறியக் கூடிய அளவில் இருக்கும் வெப்பத்தின் தன்மைwarmth
சூடு3(களத்துமேட்டில் ஒரு முறை அடித்த பிறகு குவித்துவைக்கப்பட்டிருக்கும்) நெல் மணிகள் சிறு அளவில் உடைய நெல் தாள்sheaves of paddy (which have still a few grains to be threshed)
சூடுசுரணை (அவமானப்படுத்தப்படும்போது) எதிர்த்துச் செயல்பட வேண்டும் என்று உந்துகிற உணர்ச்சிsense of shame
சூடுபிடி (வியாபாரம், விவாதம் முதலியவை) தீவிரம் அடைதல்(of business, discussion) warm up
சூத்திரக்கயிறு (பொம்மலாட்டத்தில்) பொம்மைகளை இயக்க அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிறுstring attached to a puppet
சூத்திரதாரி (கூத்தில்) கட்டியங்காரன்the clown and the announcer in கூத்து
சூத்திரம்1நூற்பாterse stanzaic form (used in grammatical or philosophical treatise)
சூத்தை கெட்டுப்போனது(of fruits) rotten
சூதகப்பெருக்கு இரத்தப் பெருக்கு அதிகமாக உள்ள மாதவிலக்குexcessive menstrual bleeding
சூதகம் மாதவிடாய்menses
சூதாட்டம் காசு வைத்துப் பந்தயம் கட்டி ஆடும் (சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற) ஆட்டம்gambling
சூதாடி சூதாட்டங்களில் ஈடுபடுபவன்gambler
சூதாடு சூதாட்டத்தில் ஈடுபடுதல்gamble
சூது கெடுக்கும் சூழ்ச்சி அல்லது தந்திரம்deceit
சூதுவாது கள்ளங்கபடம்guile
சூப்பு1வாய்க்குள் வைத்து நாக்கால் அழுத்தி உறிஞ்சுதல்suck (finger, nipple, etc.)
சூப்பு2இறைச்சி அல்லது காய்கறியை வேகவைத்துத் தயாரிக்கும் திரவ உணவுsoup
சூம்பு1(கை, கால் முதலிய உறுப்புகள்) குச்சியாக மெலிதல்(of limb) be or become thin
சூம்பு2(விரல்) சூப்புதல்suck (the finger)
சூ மந்திரகாளி மாயாஜால வித்தைகள் காட்டுபவர் மந்திரம் போல உச்சரிக்கும் தொடர்a magical incantation used by magicians while performing
சூரணம் அரைத்தோ பொடித்தோ பெறப்படும் தூள் வடிவ மருந்துmedicine obtained by grinding or powdering certain substances
சூரத்தனம் (கேலியாக) வீரம் அல்லது துணிச்சல்(sarcastically) daring
சூரப்புலி (கேலியாக) வீரம் அல்லது துணிச்சல் நிறைந்தவர்(sarcastically) daring one
சூரன் அநாயாசமான திறமை படைத்தவன்one who is extraordinarily smart
சூரிக்கத்தி கூர்மையான முனையையும் இரு பக்கங்களிலும் வெட்டு விளிம்பையும் கொண்ட ஒரு வகைக் கத்திsharp and pointed double-edged knife
சூரியகாந்தி சூரியன் இருக்கும் திசையை நோக்கி மலரக் கூடிய பெரிய மஞ்சள் நிறப் பூsunflower
சூரிய சக்தி சூரிய வெப்பத்திலிருந்து பெறும் சக்திsolar energy
சூரிய நமஸ்காரம் (இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்) காலையில் சூரியனை நோக்கிச் செய்யும் வழிபாடுworshipping the sun in the morning
சூரியன் பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்the sun
சூல் கரு embryo
சூல்முடி (பூவில்) மகரந்தத் தூள் ஒட்டிக்கொள்ளும் பசையுடைய குமிழ் போன்ற சூலகத்தின் மேல்பகுதிstigma
சூலகம் பூக் காம்பின் தொடர்ச்சியாக அடிப்பகுதி பருத்த, மெல்லிய தண்டாலான, பெண்பால் இனப்பெருக்க உறுப்புovary
சூலம்1நீண்ட தண்டின் நுனியில் மூன்று கூரிய முனைகளை உடைய ஒரு வகை ஆயுதம்trident
சூலம்2குறிப்பிட்ட கிழமையில் குறிப்பிட்ட திசையில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறும் தடைtraditional prohibition of journey in certain directions on certain days
சூழ் (ஒருவரை, ஒன்றை, ஓர் இடத்தை) சுற்றி அமைதல்(மேகம் முதலியன) போர்த்துவது போல் கவிதல் அல்லது வந்து அணைதல்surround
சூழ்ச்சி தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தந்திரமான திட்டம்plot
சூழ்நிலை மனிதர்கள் வாழும் இடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கைப் பொருள்களின் தொகுதி/மனிதர்களின் செயல்களுக்கான மன அம்சங்களின் தொகுப்புsetting
சூழ (கூட்டமாக) பின்தொடரaccompanied by (many or a group)
சூழல் மனிதர்களின் செயல்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் குடும்ப, சமூகப் பின்னணிmilieu
சூளுரை2சபதம்vow
சூளை (செங்கல், பானை முதலியவற்றை) சுடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புkiln (for baking bricks, pot, etc.)
சூறாவளி மிகுந்த வேகத்துடன் சுழன்று வீசும் காற்றுwhirlwind
சூறைக்காற்று சூறாவளிwhirlwind
சூறையாடு வன்முறையைப் பயன்படுத்தி விருப்பப்படி கொள்ளையடித்தல்plunder
   Page 74 of 204    1 … 72 73 74 75 76 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil