Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
செல்1(ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி) நகர்ந்து பெயர்தல்go/(of vehicles) go
செல்2(பரிமாற்றத்திற்கு அல்லது விளைவைத் தருவதற்கு) தகுதிவாய்ந்ததாக அமைதல்be valid or current
செல்3கறையான்white ant
செல்4உயிரணுcell
செல்கதி உய்வுsalvation
செல்லப்பிள்ளை செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைpet child
செல்லரித்துப்போன (காலப் போக்கில்) மதிப்பிழந்துவிட்ட அல்லது பயன் இல்லாமல் போனold and worn-out
செல்லாக்காசு செல்வாக்கும் மதிப்பும் இழந்த நிலைnonentity
செல்லுபடியாகு உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல்be valid
செல்வந்தன் மிகுந்த செல்வம் உடையவன்rich man
செல்வம் (ஒருவருக்கு உரிய) மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்புwealth
செல்வன் திருமணமாகாத இளைஞனின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்a form of address for an unmarried young man (on ceremonial occasions)
செல்வாக்கு (பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றால்) பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச்செய்ய அல்லது வழிநடத்த இருக்கும் திறன்influence
செல்வி திருமணமாகாத இளம் பெண்ணின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்a form of address for an unmarried young woman (on ceremonial occasions)
செலவழி1(பணம், பொருள், நேரம் போன்றவை) தீர்தல்be spent
செலவழி2(பணம், நேரம் போன்றவற்றை) வசதி, சேவை முதலியவற்றுக்காகப் பயன்படுத்துதல்spend
செலவாளி தாராளமாகச் செலவு செய்பவர்one who spends freely
செலவினம் (பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு பணிகளுக்கான செலவு வகைitems of expenditure
செலவு (பணம், பொருள் முதலியவற்றுக்கான) தேவைexpenses
செலவுவை செலவழிக்கும் நிலைக்கு உள்ளாக்குதல்make (one) spend
செவ்வகம் நீண்ட சதுரம்rectangle
செவ்வட்டை உடலின் ஓரத்தில் சிவப்புப் பட்டைகள் கொண்டதும் சிறு கால்களால் ஊர்ந்து செல்வதுமான உயிரினம்millipede
செவ்வட்டை நோய் நெற் பயிரின் தோகையில் எள் வடிவத்தில் பழுப்பு நிறப் புள்ளிகளாகத் தோன்றிப் பச்சையத்தைச் சேதப்படுத்தும் பூசண நோய்helmin thosporium
செவ்வந்தி சாமந்திwild chamomile
செவ்வரளி சிவப்பு நிறப் பூப் பூக்கும் அரளிoleander rose bay
செவ்வனே (ஒரு செயல்) சிறந்த முறையில்in an excellent manner
செவ்வாய் சூரியனிலிருந்து நாலாவதாகவும் பூமியை அடுத்தும் உள்ள கிரகம்(planet) Mars
செவ்வாழை சிவப்பு நிறத் தோல் உடைய பருமனான பழங்களைத் தரும் ஒரு வகை வாழைa kind of plantain tree yielding red-skinned fruits
செவ்வி நேர்முகம்interview
செவ்விந்தியர் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்கிற பழங்குடியினர்american Indians
செவ்விய1(வாழ்க்கை, வழிமுறைகள் முதலியவற்றைக் குறிக்கையில்) சிறந்தmost proper
செவ்விய2சிவந்தred
செவ்வியல் மரபு வழிப்பட்ட சிறந்த கலை அல்லது இலக்கியம்classicalism
செவ்விளநீர் செந்நிற மட்டையோடு கூடிய இளநீர்tender coconut of the red-coloured variety
செவ்வை (ஒரு செயலைக் குறிக்கையில்) சீர்மைproper manner or order
செவல்காடு செம்மண் பூமிred soil
செவலை (பெரும்பாலும் மாடுகளைக்குறித்து வரும்போது) சிவந்த நிறமுடையது(of bovine animals) red-coloured one
செவி காதுear
செவிசாய் அங்கீகரிக்கும் வகையில் கேட்டல்(வேண்டுகோளுக்கு) இணங்குதல்lend ears to
செவிடன் கேட்கும் திறன் இல்லாதவன்deaf (man)
செவிடி செவிடன் என்பதன் பெண்பால்feminine of செவிடன்
செவிடு1கேட்கும் திறன் இல்லாமைdeafness
செவிடு2(காதுப் பக்கத்து) கன்னம்cheek (at the region of the ear)
செவிப்பறை காதின் உட்பகுதியில் ஒலியை உணர்வதற்காக இருக்கும் மெல்லிய தோலாலான உறுப்புeardrum
செவிலித்தாய் (பண்டைய இலக்கியங்களில்) தலைவியின் வளர்ப்புத்தாய்foster-mother of the heroine (in ancient literature)
செவிவழிச் செய்தி ஒருவர் கூற மற்றொருவர் கேட்பது என்ற முறையில் வழங்கிவரும் செய்திthat which is orally transmitted
செவுள் மீன் தலையின் இருபுறத்திலும் இருக்கும் சுவாச உறுப்புgills (of a fish)
செழி (செடி, கொடி, பயிர் முதலியன) நல்ல வளர்ச்சியுடன் அமைதல்flourish
செழித்த அடர்ந்த/ஊட்டமானthick/ chubby
செழிப்பு (பயிர் முதலியவை) வளத்துடன் காணப்படும் நிலை(of fields, crops) flourishing
செறி அடர்ந்து நிறைதல்be full of
செறிவு நெருக்கமாக அடர்த்தியுடன் அமையும் நிலைthickness
சென்ட்1நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடப் பயன்படும் ஓர் அலகு(of land measure) cent
சென்ட்2இனிய மணமுடைய திரவம்perfume
சென்ற (காலத்தைக் குறிக்கையில்) கடந்த/(புத்தகத்தின் பக்கம் முதலியவற்றைக் குறிக்கையில்) குறிப்பிடப்படுவதற்கு முன்னுள்ள(of time) last/(of book) previous (page, para, etc.)
சேகண்டி சிறு குச்சியால் தட்டி ஒலியெழுப்பக் கூடிய வட்ட வடிவத் தட்டுround shaped metal plate to produce sound by striking with a stick
சேகரம் சேகரிப்பு அல்லது தொகுப்புcollection
சேகரி (குறிப்பிட்ட ஒரு நோக்கம் கருதி) ஒன்றுதிரட்டுதல்(செய்தி) சேர்த்தல்collect (coins, etc.)
சேகரிப்பு (நோக்கம் கருதி ஒரு பொருளை) சேகரிக்கும் செயல்collection (of stamps, tales, etc.)
சேட்டு1(தமிழ்நாட்டில்) வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிற வட இந்தியர்a person belonging to mercantile community (from certain states of north India) doing business in Tamil Nadu
சேட்டு2சட்டைshirt
சேடி (முற்காலத்தில்) (இளவரசியின்) பணிப்பெண்(in olden times) maid (of a princess)
சேடை நடவு நடுவதற்கு ஏற்ற நிலையில் சேறாகும்படி தண்ணீரைத் தேக்கிக் கட்டியுள்ள வயல்puddled field made ready for transplantation
சேணம் (குதிரை போன்ற விலங்குகளின் முதுகில் உட்கார்ந்து) சவாரி செய்வதற்குப் போடப்படுகிற தோலினால் ஆன இருக்கைsaddle
சேதம் (புயல், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் உயிர், பொருள்) அழிவுloss (of life, property, things)
சேதாரம் (பொருள்களுக்கு ஏற்படும்) நஷ்டம்(of crops, commodities) loss
சேந்து (நீர்) இறைத்தல்draw (water, esp
சேப்பங்கிழங்கு (உணவாகப் பயன்படும்) வழுவழுப்புத் தன்மை கொண்ட பழுப்பு நிறக் கிழங்குindian kales root
சேம்பு நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பெரிய இலைகளோடு கூடிய, உணவாக உண்ணும் கிழங்கு தரும் ஒரு வகைச் செடிindian kales
சேமக்கலம்1(வெப்பமானி போன்ற உபகரணங்களில்) பாதரசத்தைக் கொண்டுள்ள சேமிப்புக்கலம்a structure at the bottom of thermometer, barometer, etc for keeping mercury
சேமக்கலம்2சேகண்டிa kind of gong
சேமநல நிதி பொதுநலனுக்காகச் சேமித்துவைக்கப்படும் பணம்welfare fund
சேமி (பணத்தைச் சிறிதுசிறிதாக) சேர்த்தல்(நீர் முதலியவற்றைப் பின்னர் பயன்படுத்துவதற்காக) நிறைத்தல்save (money, water, etc.)
சேமிப்பு (எதிர்காலத் தேவை கருதி வங்கி முதலியவற்றில் சிறிதுசிறிதாக) சேர்த்துவைத்தல் அல்லது சேர்த்துவைத்திருக்கும் பணம்savings (in a bank, etc.)
சேமிப்புப் பத்திரம் (அரசு நேரடியாகவோ அஞ்சலகம் முதலிய அமைப்புகள் வழியாகவோ) ஒருவர் சேமிப்பாகச் செலுத்திய தொகையைக் குறிப்பிட்ட கால முடிவில் வட்டியுடன் திருப்பித் தருவதாக எழுத்துமூலம் உறுதியளித்துத் தரும் பத்திரம்savings certificate
சேமியா (பாயசம், சிற்றுண்டி ஆகியவை செய்யப் பயன்படும்) கோதுமை, கிழங்கு முதலியவற்றின் மாவிலிருந்து மெல்லிய கம்பி போல் பிழிந்து உலர்த்திய உணவுப் பொருள்vermicelli
சேய் குழந்தைchild
சேய்மை தூரம்being at a distance
சேர்1கூட்டாக இருத்தல்(of men) come together
சேர்2(நபர்களை) ஒன்றுதிரட்டுதல்(பொருள்களை) சேகரித்தல்assemble (people)
சேர்3(தற்போது வழக்கில் இல்லாத) முந்நூற்றிருபது கிராம் கொண்ட நிறுத்தலளவை(a former) measure of weight, roughly about 320 grams
சேர்க்கை ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலைcombination
சேர்த்தி (ஒன்றுடன்) இணைத்துப் பார்க்கக் கூடியதுthat which can be identified with (something)
சேர்த்து (குறிப்பிடப்படுவதுடன்) கூடalso
சேர்த்துவை ஒத்துப்போகுமாறு செய்தல்reconcile
சேர்ந்த (குறிப்பிட்ட ஊர், நாடு முதலியவற்றை) பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ கொண்ட(ஒன்றை) எல்லையாகக் கொண்டு அதற்கு உட்பட்டbelonging to (a country, nation, etc.)
சேர்ந்தாற்போல் தொடர்ச்சியாகcontinuously
சேர்ந்து (செயலைச் செய்யும்போது) ஒன்றாகtogether
சேர்ப்பி (ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல்hand over
சேர்ப்பு (பட்டியலில்) பதிவுசெய்தல்enrolment
சேர்மம் பொருள்களின் அல்லது திரவங்களின் கலப்பால் ஏற்படும் கூட்டுப் பொருள்(chemical) compound
சேர்மானம் (நகை செய்வதற்காகச் சுத்தத் தங்கத்தில் செம்பின்) கலப்பு விகிதம்ratio of (copper) added (to pure gold)
சேரன் (முற்காலத்தில் வில்லையும் அம்பையும் அரசுச் சின்னமாகக் கொண்டு) கேரளத்தை உள்ளடக்கிய நிலப் பகுதியை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்any king of the Chera dynasty which ruled over modern Kerala and parts of Tamil Nadu
சேரி (கிராமங்களில்) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதிthat part of the village where people of certain castes (whose traditional occupation is agriculture) live
சேலை புடவைsaree
சேவகம் (இறைவனுக்கு அல்லது உயர்நிலையில் உள்ளவர்களுக்கு) தொண்டுworking as a servant
சேவகன் (அரசனின் அல்லது செல்வந்தரின்) பணியாள்servant (of a king or a rich man)
சேவல் (பெரும்பாலும் கோழிகளில்) ஆண் பறவை(in poultry) male bird
சேவார்த்தி (கோயில்களில் இறைவனை) வழிபட வரும் பக்தர்devotee
சேவாஸ்ரமம் சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்கள் தம் சேவைக்காக அமைத்துக்கொண்ட குடில்an establishment or institution where people who dedicate themselves to social service live and work together
   Page 76 of 204    1 … 74 75 76 77 78 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil