Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| சேவு | கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் (கார அல்லது இனிப்புச் சுவையுடைய) தின்பண்டம் | a savoury or sweet in the shape of short stick-strips made of chickpea paste fried in oil |
| சேவை1 | மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி | public service (by an individual, organization or government to people) |
| சேவை2 | அரிசி மாவை நூல் போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு | a noodle-like steamed rice preparation |
| சேவைநாழி | சேவை தயாரிப்பதற்காக மாவைப் பிழியும் சாதனம் | the press used in the preparation of சேவை |
| சேறு | நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண் | mud |
| சேனை1 | (அரசர்களின் ஆட்சிக்காலங்களில்) படை | (formerly) army (of a king) |
| சேனை2 | (சமையலில் பயன்படும்) கறுப்பு நிறத் தோலும் வெளிர்ச் சிவப்பு நிறச் சதைப் பகுதியும் கொண்ட அரைக் கோள வடிவத்தில் இருக்கும் ஒரு வகைக் கிழங்கு | a kind of yam |
| சைக்கிள் | மிதிவண்டி | bicycle |
| சைக்கிள் ரிக்ஷா | பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் மூன்று சக்கர மிதிவண்டி | a three wheeler (mostly pedalled) used as a passenger transport |
| சைகை | (செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்) அசைவு | gesture |
| சைத்தியம் | புத்த மதத்தினரின் ஆலயம் | buddhist shrine |
| சைத்திரிகன் | ஓவியன் | painter |
| சைவசித்தாந்தம் | இறைவன் (=பதி), ஆன்மா (=பசு), ஆன்மாவுக்குத் தடையாக இருப்பது (=பாசம்) ஆகிய மூன்று அடிப்படைகளில் அமைக்கப்பட்ட இந்து சமயத் தத்துவம் | a philosophical system of Hindu religion based on the three entities viz |
| சைவம்1 | சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்ட இந்து மதப் பிரிவு | (a sect of) Hindu religion which regards Siva as the Supreme God |
| சைவம்2 | (இறைச்சி, மீன் முதலியவற்றைத் தவிர்த்து) காய்கறிகளை உணவாகக்கொள்ளும் முறை | vegetarianism |
| சைவன்1 | இந்துக்களின் சைவப் பிரிவைச் சார்ந்தவன் | one who follows Saivism |
| சைவன்2 | சைவ உணவு உண்பவன் | vegetarian |
| சொக்கட்டான் | உருட்டிப் போடும் கட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விளையாடும் தாய விளையாட்டு | a game played according to the number obtained in the dice |
| சொக்கப்பனை | கார்த்திகைத் திருவிழாவில் கோயில் முன்பு வைத்து எரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் காய்ந்த பனை ஓலைகளைக் கொண்ட கூடு போன்ற அமைப்பு | a bonfire made in front of temples as part of கார்த்திகை festival |
| சொக்கு1 | (அழகு, திறமை முதலியவற்றால்) தன் வசம் இழத்தல் | be bewitched (by beauty, etc.) |
| சொக்கு2 | கன்னக் கதுப்பு | plumpness of the cheek |
| சொக்குப்பொடி | (ஒரு பெண் ஒருவரைத் தன் வசத்திலேயே வைத்திருக்கப் பயன்படுத்துவதாகக் கூறப்படும்) மயக்குப் பொடி | a magical powder (said to be used by women to enslave men) |
| சொகுசு | சகல ஆடம்பரமான வசதிகளும் நிறைந்தது | luxury |
| சொச்சம் | (குறிப்பிட்ட தொகைக்கும் சற்று) அதிகம் | a little more (than the specified sum) |
| சொட்டச்சொட்ட | வழிந்தோடும் அளவுக்கு | drenched |
| சொட்டு1 | (திரவம்) சிறுசிறு துளிகளாக விழுதல் | drip |
| சொட்டு2 | (திரவம் கீழே விழும்போது) சிறு உருண்டை வடிவ அளவிலானது | drop |
| சொட்டு3 | (தேங்காய்) கீற்று | (of coconut kernel) slice |
| சொட்டுநீர்ப் பாசனம் | மிக மெல்லிய குழாய்களின் வழியாக நீரைச் செலுத்திச் சொட்டுசொட்டாக விழவைத்து மரம், செடி, கொடிகளின் வேர்ப் பகுதியை நனையவைக்கும் பாசன வகை | dripirrigation |
| சொட்டுப்பால் | கெட்டியான தேங்காய்ப் பால் | juice extracted from coconut kernel |
| சொட்டுமருந்து | (கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றில்) சொட்டுசொட்டாக விடப்படும் திரவ மருந்து | (of medicines) drops |
| சொட்டை | (தலையில் ஒரு சிறு பகுதியில்) முடி உதிர்ந்து ஏற்படும் வெற்றிடம் | baldness (in patches) |
| சொட்டைசொள்ளை | (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறை | minor defects |
| சொடக்கு | கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டி எழுப்பும் ஒலி | snap (of the fingers) |
| சொடுக்கு | (சாட்டை முதலியவற்றை) சுண்டியிழுத்தல்(முதலை முதலியவை வாலை) ஒலி வரும்படி அடித்தல் | give a sharp, snapping sound |
| சொடுகு | பொடுகு | dandruff |
| சொண்டு | (பறவையின்) அலகு | beak (of a bird) |
| சொத்-என்று | (கடினத்தன்மை இல்லாத பொருள்) அதிக விசையும் சத்தமும் இல்லாமல் | (fall) with a thud |
| சொத்தி | ஊனம் | physical handicap |
| சொத்து | (நிலம், வீடு, வாகனம் முதலிய) பண மதிப்புடைய உடமை | wealth |
| சொத்துசுகம் | சொத்தும் சொத்து தரும் வசதியும் | wealth and comfort |
| சொத்தை | (உள்ளே அரிக்கப்பட்டு) கெட்டுப்போனது | that which is decayed (eaten by worms) |
| சொதசொத-என்று | (மண் முதலியன) ஈரப்பதத்துடன் | (of soil) wet and soft |
| சொதி | தேங்காய்ப் பாலால் செய்யப்படும் ஒரு வகைக் குழம்பு | a kind of vegetable sauce prepared from the extract of coconut |
| சொந்த | (இடத்தைக் குறிக்கையில்) தன் பிறப்பால் அல்லது தன்னுடைய முன்னோரின் பிறப்பால் உரிமையுடைய | (of place) native |
| சொந்தக்காரன் | (நிலம், வீடு, பொருள் முதலியவற்றிற்கு) உரிமை உடையவன் | owner (of a house, etc.) |
| சொந்தக்காரி | சொந்தக்காரன் என்பதன் பெண்பால் | feminine of சொந்தக்காரன் |
| சொந்தப் பெயர் | இயற்பெயர் | real name (as distinguished from pen name, etc.) |
| சொந்தம் | (நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவருக்கு உள்ள) உரிமை | ownership |
| சொப்பனம் | கனவு | dream |
| சொர்க்கபோகம் | (சொர்க்கத்தில் கிடைப்பது போன்ற) வசதியும் சுகமும் | a life of luxury |
| சொர்க்கம் | (புண்ணியம் செய்தவர்கள் இறந்த பின் அடைவதாக நம்பப்படும்) இன்பம் நிறைந்த மேலுலகம் | heaven |
| சொர்க்கவாசல் | வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்து ஏகாதசியன்று மட்டும் திறக்கப்படும் (வைகுண்டம் செல்வதற்கு வழியாக நம்பப்படும்) வடக்குப் பக்கம் அமைந்திருக்கும் வாசல் | the door in Vishnu temples which is opened once a year (believed to be the gateway to the abode of Vishnu) |
| சொர்ணம் | தங்கம் | gold |
| சொர்ணவாரி | (ஆனிமுதல் புரட்டாசிவரை உள்ள மாதங்களில் பயிரிடப்படும்) குறுகிய கால நெற் பயிர் | a short term paddy crop (cultivated between June and September) |
| சொரசொரப்பு | (ஒன்றின் மேற்பரப்பு) உராய்வை ஏற்படுத்துவதாக உள்ள நிலை | roughness (of a surface) |
| சொரிமணல் | புதைமணல் | quicksand |
| சொரூபம் | உருவம் | form |
| சொரூபி | (குறிப்பிட்ட குணத்தின்) முழு வடிவம் | one who is the embodiment of |
| சொல்2 | பொருள் குறிக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி | word |
| சொல்லடைவு | ஒரு நூலில் இருக்கும் அனைத்துச் சொற்களையும் அகர வரிசையில் தொகுத்துத் தயாரிக்கும் பட்டியல் | word-index (for texts, esp |
| சொல்லப்போனால் | உண்மையில் | in fact |
| சொல்லாக்கம் | (புதிய கருத்துகளை உணர்த்த ஒரு மொழியில்) புதிய சொற்களை உருவாக்குதல் | coining new words or terms |
| சொல்லாட்சி | சொற்களைப் பயன்படுத்தும் முறை | command over words |
| சொல்லாமல் சொல் | (ஒன்றை) நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துதல் | state |
| சொல்லிக்கொடு1 | கற்பித்தல் | teach |
| சொல்லிக்கொள் | (போய்வருவதாகச் சொல்லி) விடைபெறுதல் | take leave (of s |
| சொல்லியனுப்பு | (வரும்படியாக) செய்தி தெரிவித்தல் | send for |
| சொல்லிவை | முன்னரே கூறுதல் | inform beforehand |
| சொல்லிவைத்தாற்போல | முன்கூட்டியே திட்டமிட்டது என்று தோன்றும்படி | as if agreed upon or preplanned |
| சொலவடை | பழமொழி | proverb |
| சொள்ளு | (குழந்தை) எச்சில் | dribbling (from the mouth of a child) |
| சொற்கட்டு | கால அளவைக் காட்டும் (பொருளற்ற) ஒலிக்குறிப்புகளின் தொகுதி | a way of ordering and rendering the rhythmic groups |
| சொற்கோவை | (ஒரு மொழியிலுள்ள அல்லது ஒருவர் அறிந்துவைத்துள்ள) சொற்களின் தொகுப்பு | vocabulary |
| சொற்சிலம்பம் | (பேச்சில் அல்லது எழுத்தில்) வார்த்தைகளின் அலங்காரம் | rhetorical flourish |
| சொற்பம் | (மிகவும்) குறைவு | (too) little or short |
| சொற்பிறப்பியல் | சொல்லின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் முதலியவற்றை விளக்கும் மொழியியல் பிரிவு | etymology |
| சொற்பொழிவு | (ஒரு பொருளைப்பற்றிய) நீண்ட மேடைப் பேச்சு | speech |
| சொற்றொடர் | தன்னளவிலோ ஒரு வாக்கியத்திலோ ஒரு தனித்த அலகாக முழுமை அடையாத சொல்தொகுதி | phrase |
| சொறி1 | (உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் நகத்தால் அல்லது ஏதேனும் ஒன்றால்) தேய்த்தல் | scratch (with fingernails or with something else) |
| சொறி2 | அரிப்புடன் கூடிய தோல் நோய் | skin disease causing itching |
| சொறிசிரங்கு | தோலில் சொரசொரப்பான தடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய் | scabies |
| சொஜ்ஜி | ரவையுடன் சீனி கலந்து முந்திரிப்பருப்பு, ஏலக்காய் முதலியவற்றைச் சேர்த்து நெய் அல்லது பாலில் செய்யப்படுகிற இனிப்புப் பண்டம் | a kind of sweetmeat prepared with semolina in ghee or milk with cashew nuts, etc |
| சொஸ்தமாக்கு | குணமாக்குதல் | cure |
| சோ-என்று | (மழை) வேகமாக இரைச்சலுடன் | (of rain) in a downpour |
| சோகம் | (இழப்பு, தோல்வி முதலியவற்றால்) மனத்தை வருத்தும் துக்க உணர்வு | sorrow |
| சோடா | கரியமிலவாயு கலந்து புட்டிகளில் அடைக்கப்படும் நீர் | soda (water) |
| சோடா உப்பு | சமையல் சோடா | baking soda |
| சோடை2 | (மாட்டு வண்டிகள் போய்வருவதால் ஏற்பட்ட) தடம் | rut (left by carts on soft earth) |
| சோதனை | ஒரு பொருளின் உண்மையான தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞானரீதியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை | experiment |
| சோதனை ஓட்டம் | (இயந்திரங்களையும் வாகனங்களையும்) சோதிப்பதற்காக இயக்கிப்பார்த்தல் | trial run (of machines, vehicles) |
| சோதனைக்குழாய் | (சோதனைக்கூடத்தில் பயன்படுத்தும்) ஒருபுறம் அடைப்புடைய குறைந்த சுற்றளவுடைய கண்ணாடிக் குழாய் | test-tube |
| சோதனைக்கூடம் | (மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவற்றில்) ஆராய்ச்சி, சோதனை முதலியவற்றை மேற்கொள்வதற்கான அறிவியல் கருவிகள் நிறைந்த இடம் | laboratory (in a hospital, factory, school, etc.) |
| சோதனைபூர்வம்-ஆக/-ஆன | (கலை, இலக்கியத்தில்) புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையில்/புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையிலான | (in arts, literature) experimentally/experimental |
| சோதா | உடலில் வலுவில்லாதவன்/ஒன்றுக்கும் உதவாதவன் | weak person/weakling |
| சோதி1 | (ஒருவரின் நோய் அல்லது ஒன்றின் குறைபாடுகளை) சோதனைமூலம் அறிதல் | examine |
| சோதிடம் | (கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலைகளிலிருந்து அல்லது கைரேகையிலிருந்து ஒருவரின்) கடந்தகாலத்தையும் எதிர்காலப் பலனையும் கூறும் கலை | astrology |
| சோதிடர் | சோதிடக் கலை தெரிந்து பலன் கூறுபவர் | astrologer |
| சோப்(ப)ளாங்கி | சோதா | weakling |
| சோப்பு | (உடலைச் சுத்தம் செய்வதற்கானது, துணி துவைப்பதற்கானது என இரு தனித்தனி வகைகளில் கிடைக்கும்) நீரில் நுரை தரும் தன்மையுடையதாகத் தாவர எண்ணெய்யிலிருந்தோ ரசாயன முறையிலோ தயாரிக்கப்படும் கட்டி | soap |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.