Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சாம்பு வாடுதல்lose lustre
சாம்ராஜ்யம் பேரரசு empire
சாமக்கோழி நள்ளிரவு கடந்த பின் விடிவதற்குச் சில மணி நேரம் இருக்கும்போது கூவும் சேவல்cock crowing in the wee hours of morning
சாமந்தி மஞ்சள், வெள்ளை, ஆகிய நிறங்களில் மாலை நேரத்தில் மலரும் பூ/மேற்குறிப்பிட்ட பூப் பூக்கும் ஒரு குத்துச் செடிwild chamomile (the flower and the plant)
சாமம் இரவு அல்லது நள்ளிரவுnight or midnight
சாமர்த்தியச் சடங்கு பூப்பு நீராட்டு விழாpurificatory ceremony for the girl who has attained puberty
சாமர்த்தியப்படு வயதுக்கு வருதல்come of age
சாமர்த்தியம் திறமைskill
சாமரம்/சாமரை (கோயிலிலும் அரண்மனையிலும் பயன்படுத்தும்) அடர்ந்த வெண்ணிற ரோமங்களை உடைய தலைப் பகுதியையும் வெள்ளிக் கைப்பிடியையும் கொண்ட ஒரு வகை விசிறிfly-flapper made of bush tail of an animal (used as a fan for idols, kings, etc.)
சாமான் (ஓர் இடத்திற்கு எடுத்துச்செல்லக் கூடிய) அன்றாடப் புழக்கத்துக்குத் தேவையான பொருள்(manufactured) goods
சாமானியம் (தரம், தன்மை, நிலை முதலியவற்றைக் குறித்து வருகையில்) சாதாரணம்ordinary
சாமானியன் (பெரும்பாலும் பன்மையில்) சாதாரண மனிதன்(often in plural) man of ordinary capacity
சாமி கடவுள்god
சாமி கொண்டாடி/சாமியாடி தெய்வ அருளால் ஆவேசம் வந்து ஆடிக் குறிசொல்பவர்one who dances and foretells while possessed by a spirit
சாமியாடு தெய்வ அருளால் ஆவேசம் வந்து குறிசொல்லுதல்give oracular responses while possessed by a spirit
சாமியார் சன்னியாசிascetic
சாமுத்திரிகாலட்சணம் அழகான பெண்ணுக்கோ ஆணுக்கோ இருக்க வேண்டிய அங்க அமைப்புphysical features of a beautiful woman or handsome man
சாய்1நேர் நிலையிலிருந்து ஒன்றை நோக்கிப் பக்கவாட்டில் தாழ்தல்lean (against, towards, over)
சாய்மணக் கதிரை சாய்வு நாற்காலிeasy chair
சாய்மானம் சாய்ந்துகொள்ளத் தேவையானதுfor reclining or leaning
சாய்வு (-ஆன) சரிவுdeclivity
சாய்வு நாற்காலி கெட்டியான துணியைத் தொட்டில் போல் தொங்கவிட்ட, சாய்ந்துகொள்வதற்கான நாற்காலிdeck-chair
சாய்வு மேஜை (எழுதுவதற்கு வசதியாக) சற்றுக் கீழ்நோக்கிச் சாய்ந்த மேற்பரப்பை உடைய மேஜைa desk with a sloping top
சாயங்காலம் மாலை (நேரம்)evening
சாயந்திரம் சாயங்காலம்evening
சாயபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பிடும் சொல்term used to refer to a follower of Islam
சாயம் துணி முதலியவற்றிற்கு நிறம் சேர்க்கப் பயன்படும் ரசாயனக் கலவைdye
சாயம் வெளு (உள்நோக்கம், கூறிய பொய், சுய ரூபம் முதலியவை) அம்பலமாகி உண்மை வெளிப்படுதல்(of motive, lie, etc.) come to light
சாயரட்சை சாயங்காலம்evening
சாயல் (தோற்றம், செயல், தன்மை முதலியவற்றில் மற்றொருவரை அல்லது மற்றொன்றை) நினைவுபடுத்தும் ஒத்த தன்மைtrace
சாயா தேநீர்tea
சாயை மெல்லிய பிரதிபலிப்புweak suggestion
சாயை காட்டு (கோயிலில் சுவாமிக்கு முன் சாஸ்திரப்படி) கண்ணாடி காட்டுதல்hold a mirror before an idol (in temples)
சார்1(மற்றொருவரை) ஆதரவாக நம்பியிருத்தல்(மற்றொன்றை) பொறுத்து அமைதல்depend (on s
சார்2பதவியில் உயர்நிலை வகிப்பவர், வயதில் மூத்தவர் போன்றோரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல்a term of respect
சார்நிலை மாவட்ட அளவில் உள்ள மேலதிகாரிக்கு அல்லது அரசு அலுவலகத்துக்கு அடுத்த நிலைsubordinate to district (level officer or office)
சார்ப்பு (மேல்தளம், கூரை ஆகியவற்றின் தொடர்ச்சியாக) நீட்டப்பட்ட சாய்வான கூரைsloping roof
சார்பியல் கோட்பாடு இயக்கத்திலிருக்கும் பொருளின் அளவு, நிறை, காலம் ஆகியவை வேகத்தைச் சார்ந்து மாறுபடும் என்பதை விளக்கும் கோட்பாடுtheory of relativity
சார்பு நூல் முதல் நூலிலிருந்தும் வழி நூலிலிருந்தும் பல அம்சங்களில் வேறுபட்டதாக இயற்றப்படும் நூல்a treatise which differs in many respects from முதல் நூல் and வழி நூல்
சாரட்டு வண்டி (சிறப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும்) குதிரைகளால் இழுக்கப்படும் அலங்கார வண்டிchariot-like coach drawn by horses (used on ceremonial occasions)
சாரணர் சாரணரியக்கச் சிறுவர்boy Scouts
சாரணரியக்கம் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளுதல், பிறருக்கு உதவுதல் போன்ற பழக்கங்களையும் பண்புகளையும் பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் இயக்கம்scout movement
சாரணியர் சாரணரியக்கச் சிறுமியர்girl Guides
சாரம்2(கட்டட வேலையில் உயரமான இடத்திலிருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டி) கம்புகளை ஊன்றி அவற்றின் மேல் கட்டைகளைப் பரப்பிய தள அமைப்புscaffolding
சாரம்3கைலிa kind of வேட்டி the two ends of which are sewn together
சாராயம் கரும்பின் கழிவையோ சில வகைக் கிழங்கையோ புளிக்க வைத்துக் காய்ச்சி வடித்தெடுக்கும் போதையூட்டும் திரவம்local alcoholic brew
சாரார் குழுவினர்group or party ( of people)
சாரி1(வீடு முதலியவை) அடுத்தடுத்து இருக்கும் ஒழுங்குrow
சாரி2மனிதரையோ விலங்குகளையோ போல நடந்துகாட்டும் முறைgait (imitating the human or non-human)
சாரிசாரியாக வரிசைவரிசையாகin rows
சாரியை விகுதி, வேற்றுமை உருபு முதலியவற்றை ஏற்பதற்கு முன் சொல்லில் வரும் பொருளற்ற எழுத்து அல்லது இடைச்சொல்letter or increment that appears in a word before admitting a suffix, case marker, etc
சாரீரம் (பாடுவதற்கு ஏற்ற) குரல்voice
சாரை மேல்பகுதி வெளிர்க் கறுப்பாகவும் அடிப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும் ஒரு வகை விஷமற்ற பாம்புrat snake
சால்1ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன்container used in ஏற்றம் and கமலை
சால்2உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீள்வட்டமான பள்ளம்furrow
சால்பு நிறைந்த பண்புexcellence
சால்வை (தோளைச் சுற்றி அணிந்துகொள்ளும்) மென்மையாக நெய்யப்பட்ட அலங்காரத் துணிshawl
சால்ஜாப்பு சாக்குப்போக்குlame excuse
சால (பாராட்டத்தக்கதற்கு அடையாக) மிகவும்(attribute used in appreciations) very
-சாலி குறிப்பிடப்படும் தன்மையையோ நிலையையோ உடையவர் என்ற பொருளில் வரும் ஒரு விகுதிsuffix indicating that one possesses the quality or character or state mentioned
சாலிக்கிராமம் தெய்வீகமானதாகக் கருதி வீட்டில் வைத்து வழிபடும் கறுப்பு அல்லது கறுப்பும் பழுப்பும் சேர்ந்த நிறத்தில் இருக்கும் வழவழப்பான அபூர்வமான ஒரு வகைக் கல்a rare variety of stone either in black or brownish black which is kept in the house as an object of worship
சாலை1வாகனங்கள் செல்லவும் மக்கள் நடக்கவும் ஏற்றதாக அமைக்கப்படும் பாதை(public) road
-சாலை2(பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) (ஏதேனும் ஒன்றிற்காக ஏற்படுத்தப்பட்ட) கூடம்(mostly in compounds) a constructed structure (for some work or purpose)
சாவகாசம் (-ஆக) அவசரம் காட்டாத தன்மைleisureliness
சாவடி (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) (சுங்கம் வசூலித்தல், சோதனை போடுதல் முதலியவை நடைபெறுவதற்கு) தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட கொட்டகை அல்லது கட்டடம்temporary shed or a building (used for collecting tax, etc.)
சாவதானம் சாவகாசம்leisureliness
சாவி1(பூட்டு போன்றவற்றை) திறக்கவும் பூட்டவும் அல்லது (வாகனம், கடிகாரம் போன்றவற்றின்) இயக்கத்தைத் துவக்கவும் பயன்படும் உள்செலுத்தித் திருகக் கூடிய உலோகத் துண்டுkey
சாவி2(நெல் போன்ற பயிர்களில்) தானிய மணி உண்டாகாமல்போன பயிர்blighted empty grain
சாவிகொடு (கடிகாரம், விளையாட்டுப் பொம்மை முதலியவற்றை இயங்கச்செய்வதற்காக அவற்றில் உள்ள சுருள்வில்லுக்கு) விசை ஏற்றுதல்wind (a clock, a toy, etc.)
சாவு உயிர் இழப்புdeath
சாவுமணி இறந்ததை அறிவிக்கும் விதத்தில் தேவாலயத்தில் அடிக்கப்படும் மணிdeath knell (in a church)
சாளரம் பலகணி(latticed) window
சாளேசுரம் வெள்ளெழுத்துlong sightedness
சாறன் கைலிa kind of வேட்டி the two ends of which are sewn together
சாறு பழத்திலிருந்து அல்லது இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம்juice
சான்றளி (சான்றிதழ், ஆவணம் முதலியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள) விபரம் உண்மையானது என்று அல்லது அவற்றின் நகல் உண்மையானது என்று (உரிய அதிகாரி முதலியோர்) கையெழுத்தும் முத்திரையும் போட்டு உறுதியளித்தல்certify (a fact)
சான்றிதழ் (ஒருவரின் பிறப்பு, கல்வி, திருமணம் முதலியவை பற்றி) குறிப்பிட்ட விபரத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரபூர்வமாக வழங்கும் எழுத்து வடிவிலான சான்றுtestimonial
சான்றோர் அறிவு, பண்பு முதலியவற்றில் சிறந்தோர்one who excels in noble acts
சாஷ்டாங்க நமஸ்காரம் (உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக விழுந்து வணங்கும் வணக்கம்a prostration in which eight spots of the body touch the ground (as a mode of paying respect)
சாஷ்டாங்கமாக (உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாகprostrating
சாஸ்திரம் (இந்து மதத்தில்) வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய சடங்குகள் முதலியவற்றைக் கூறும் நூல்treatise (of Hindu religion)
சாஸ்திரிய பழங்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு, தரம் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்டclassical
சிக்-என்று2(ஒருவரின் உடை அல்லது தோற்றம் குறித்து வருகையில்) கச்சிதமாகin a chic fashion
சிக்கரி (சுவை முதலியவற்றிற்காக) காப்பித் தூளுடன் சேர்க்கப்படும் ஒரு வகைக் கிழங்கின் பொடிchicory
சிக்கல் (-ஆன) எளிமையாக இல்லாததுcomplexity
சிக்கனம் கட்டுப்படுத்திச் செயல்படும் அல்லது பயன்படுத்தும் விதம்economy
சிக்கிமுக்கிக்கல் ஒன்றோடொன்றைத் தேய்த்தால் நெருப்பை உண்டாக்கக் கூடிய வழவழப்பான ஒரு வகைக் கல்flint stone (for making fire)
சிக்கு1மாட்டுதல்get stuck (in a manner difficult to extricate)
சிக்கு2(முடி, நூல் முதலியவை) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதபடி ஆகும் நிலைtangle
சிக்கு3(தலையணை முதலியவற்றில்) எண்ணெய் படிவதால் ஏற்படும் அழுக்குgreasiness
சிகரம் மலையின் உயர்ந்த பகுதிtop of a mountain
சிகிச்சை நோயை அல்லது காயத்தைக் குணப்படுத்துவதற்கான செயல்முறைtreatment
சிகை (தலை) முடிhair (on the head)
சிங்கநாதம் (கர்ச்சனை போன்ற) போர்வீரர் ஆரவாரம்victorious battle-cry
சிங்கப்பல் மேல் வரிசையில் கோரைப்பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல்projecting extra tooth just above the canine tooth
சிங்கம் (காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்) செம்பழுப்பு நிறம் உடைய கொடிய காட்டு விலங்குlion
சிங்காசனம்/சிங்காதனம் சிம்மாசனம்throne
சிங்காரம் அலங்காரம்beautification
சிங்காரி1அலங்கரித்தல்beautify
சிங்காரி2(பெரும்பாலும் கேலியாக) கவர்ச்சியாக அலங்கரித்துக்கொள்ளும் பெண்dolled-up woman (used in an uncomplimentary way)
   Page 79 of 204    1 … 77 78 79 80 81 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil