Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சில்லு2(வண்டி முதலியவற்றின்) சக்கரம்wheel (of a cart, etc.)
சில்லுக் கருப்பட்டி சிறு வில்லை அளவில் இருக்கும் ஒரு வகைக் கருப்பட்டிsmall round shaped flakes of கருப்பட்டி
சில்லுண்டி சிறு அளவிலானதுpettiness
சில்லுமூக்கு உடை (பெரும்பாலும் சிறுவர்களுக்கு) மூக்கினுள் இருக்கும் மெல்லிய இரத்தக் குழாய் அறுபடுதல்(of children) bleed through the nose (as a result of the bursting of blood vessel)
சில்வண்டு (பொதுவாக மழைக் காலத்து இரவுகளில்) ரீங்காரமிடக் கூடிய சற்றுப் பெரிய தலையுடைய கருநீல வண்டுcicada
சில (பலவற்றுள்) குறிப்பிடும் எண்ணிக்கையில் உள்ளதுsome
சிலசமயம் எப்போதாவதுat times
சிலந்தி1தன் உடலில் உள்ள சுரப்பைக்கொண்டு பூச்சிகளைச் சிக்கவைக்கும் வகையில் வலை பின்னக் கூடியதும் எட்டு கால்களை உடையதுமான சிறு பூச்சிspider
சிலந்தி2(பெரும்பாலும் காலில், தொடையில்) சிறு கட்டியாகத் தோன்றிப் பருத்து உடைந்து சீழ் வடியும் ஒரு வகை நோய்abscess
சிலம்பம் கழியை இரு கையாலும் பிடித்து முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்றித் தாக்கவும் தாக்குதலைத் தடுக்கவும் மேற்கொள்ளும் பயிற்சி(a kind of martial art where) fencing is done with a staff
சிலம்பமாடு (சண்டையில் அல்லது விளையாட்டுக்காக) சிலம்பக் கழியை முறைப்படி சுழற்றுதல்brandish a staff
சிலம்பு உள்ளீடு அற்ற வளையத்தினுள் கல் போன்றவற்றால் ஒலி எழுப்பக் கூடியதாகச் செய்யப்பட்ட தண்டை போன்ற (முற்காலத்தில் பெண்கள் காலில் அணிந்த) அணிtinkling anklets (worn by women in former times)
சிலர் சில நபர்a few persons
சிலாக்கியம் (ஒன்றைவிட மற்றொன்று) சிறந்தது that which is better
சிலாசாசனம் கல்வெட்டுinscription (cut on a stone)
சிலாம்பு (விறகில் அல்லது கட்டையில்) கூர்கூராக நீட்டியிருக்கும் துண்டுsplinter (of firewood, etc.)
சிலிர் (குளிர், பயம் முதலியவற்றால் முடி) மேலெழுதல்(உதறுவதால்) குத்திடுதல்get the gooseflesh
சிலுசிலு-என்று (காற்று உடலுக்கு இதம் தருமளவுக்கு) குளிர்ச்சியாக(of breeze) with an enjoyable coolness
சிலுப்பு (முடி, இறகு முதலியவற்றை) பக்கவாட்டில் வேகமாக அசைத்தல்shake vigorously (the hair, feathers, etc to get rid of dust, etc.)
சிலும்பு (முடி) படியாமல் நீண்டு நிற்றல்(of hair on the head) be sticking out
சிலுவை (முற்காலத்தில் சில நாடுகளில் குற்றவாளியின் கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்துத் தொங்கவிடுவதற்குப் பயன்பட்ட) கம்பத்தின் மேற்பகுதியில் இரு பக்கமும் சம அளவுள்ள கட்டை உடைய மரச் சட்டம்cross (to crucify)
சிலுவையிடு (கிறித்தவர்கள்) நெற்றி, மார்பு, தோள் ஆகிய இடங்களில் வலது கையால் தொட்டுச் சிலுவைக்குறி போடுதல்make the sign of the cross
சிலுவையில் அறை (முற்காலத்தில் சில நாடுகளில் கொலைத் தண்டனையாகக் குற்றவாளியை) கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்துச் சிலுவையில் தொங்கவிடுதல்crucify
சிலேட்டு (சிறுவர் எழுதப் பயன்படுத்தும்) சட்டம் போட்ட சதுர, செவ்வக வடிவ மாக்கல் அல்லது தகரம்slate (for children to write on)
சிலேட்டுக் குச்சி சிலேட்டில் எழுதப் பயன்படும் குச்சி வடிவக் கல்pencil-like stone to write with on a slate
சிலேட்டுமம் கபம்phlegm
சிலேடை சொல் அல்லது சொற்றொடர் பல பொருள் தருமாறு அமைய இயற்றும் செய்யுள்(in poetry) paronomasia
சிலை கல்லில் செதுக்கப்பட்ட அல்லது உலோகத்தை உருக்கி வார்த்த உருவம்statue
சிவ சிவப்பு நிறம் அடைதல்become red
சிவகணம் (புராணத்தில்) சிவபெருமானின் பரிவாரம்(in purana) celestial guards of Siva
சிவப்பணு பிராணவாயுவை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறம் கொண்ட உயிர் அணுred blood cell
சிவப்பழம் சிவபக்தியில் திளைத்து உடம்பெங்கும் விபூதிப் பட்டையோடு இருக்கும் தோற்றம்appearance with sacred ash, etc manifesting devotion to Siva
சிவப்பு இரத்தம், குங்குமம் முதலியவற்றைப் போன்ற நிறம்red (colour)
சிவப்பு அட்டை (கால்பந்தாட்டத்தில்) ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட ஆட்டக்காரரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றும் பொருட்டுக் காண்பிக்கப்படும் சிவப்பு நிற அட்டை(in football) red card
சிவப்புக்கம்பள வரவேற்பு (பிறநாட்டுத் தலைவர் போன்ற முக்கிய விருந்தினருக்கு) சிறந்த வரவேற்புred-carpet welcome
சிவப்புக்கல் ரத்தினம்ruby
சிவப்பு விளக்கு ஆபத்தை அறிவிக்கும் அல்லது (சாலைப் போக்குவரத்தில்) நிற்க வேண்டும் என்பதை அறிவிக்கும் சிவப்பு நிற விளக்குred light
சிவப்பு விளக்குப் பகுதி விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ள பகுதிred-light district
சிவபதம் அடை சிவனடிசேர்தல்reach the feet of Siva
சிவம் தூய அறிவுருவாக இருக்கும் இறைவன்god as pristine knowledge
சிவராத்திரி (மாசி மாதத்தில்) விரதமிருந்தும் விழித்திருந்தும் சிவனை வழிபடும் இரவுkeeping awake and spending the night offering prayers to Siva (in the month of மாசி)
சிவலிங்கம் (சைவர்கள்) சிவனின் உருவமாகக் கருதி வழிபடும் லிங்கம்image symbolizing Siva
சிவலோகம் (புராணத்தில்) சிவனின் இருப்பிடமாகக் கூறப்படும் மேலுலகம்(in purana) abode of Siva
சிவன் (இந்து மதத்தில்) அழித்தல் தொழிலுக்கு உரிய இறைவன்siva, the god responsible for the dissolution of the universe
சிவனடிசேர் (சைவர்களிடையே மங்கல வழக்காக) இறத்தல்(among the Saivites used euphemistically) reach the feet of Siva
சிவனே-என்று எதிலும் தலையிடாமல்without interfering
சிவிகை பல்லக்குpalanquin
சிற்சில அளவில் குறைவானslight or minor
சிற்பம் கல், மரம் ஆகியவற்றில் செதுக்கப்பட்ட (தெய்வம், மனிதன் அல்லது விலங்கு முதலானவற்றின்) உருவம்statue (of gods, etc.)
சிற்பி சிலை, சிற்பம் ஆகியவற்றை உருவாக்குபவர்sculptor
சிற்றரசன் ஒரு பேரரசின் மேலாண்மையை ஏற்று அதற்குக் கீழ்ப்பட்டுக் கப்பம் செலுத்தி ஒரு நிலப் பகுதியை ஆளும் அரசன்chieftain (who accepts the overlordship of a king)
சிற்றலை (வானொலியில்) நூறிலிருந்து பத்து மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட ஒரு மின் காந்த அலைshortwave
சிற்றறிவு (அடக்கத்துடன் கூறுகையில்) அறிவு(an expression of deference) limited knowledge
சிற்றாடை சிறு பெண்கள் கட்டிக்கொள்ளும் அகலத்தில் குறைந்த சேலைa small saree worn by girls
சிற்றிலக்கியம் பிரபந்தம்minor literary genre
சிற்றின்பம் உலக வாழ்வில் பெறும் இன்பம்earthly pleasures
சிற்றுண்டி இட்லி, வடை போன்ற உணவு வகைtiffin
சிற்றுண்டிச்சாலை சிற்றுண்டியும் காப்பி போன்ற பான வகைகளும் சாப்பிடக் கிடைக்கும் இடம்snack restaurant or bar
சிற்றூர் சிறிய ஊர்small town
சிற்றெறும்பு (கடித்தால் வலி ஏற்படுத்தும் ஒரு வகை) சிறிய பழுப்பு நிற எறும்புsmall red ant
சிற உயர்ந்த நிலை பெறுதல்be eminent
சிறகு இறக்கை(of birds) wing
சிறகுப்பந்து (விளையாட்டில் மட்டையால் அடிப்பதற்கான) அடிப்பகுதி உருண்டையாகவும் மேற்பகுதி பூப்போன்று விரிந்தும் இருக்கிற பொருள்shuttlecock
சிறந்த (தரத்தில்) உயர்ந்த(பலவற்றுள்) மேலோங்கி விளங்குகிற(qualitywise) best
சிறப்பங்காடி வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கிவிடக் கூடிய அளவில் ஒரே கட்டடத்தில் அமைந்திருக்கும் பல கடைகளின் தொகுதிsupermarket
சிறப்பாசிரியர் குறிப்பிட்ட இதழை மட்டும் தொகுத்து வெளியிடும் பொறுப்பு ஏற்பவர்guest editor (of a journal)
சிறப்பு (-ஆக, -ஆன) மேம்பட்டு விளங்கும் திறமைexcellence
சிறப்புப் பாயிரம் (பொதுவாக) நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் பெயர், நூற்பெயர், கருத்து, காரணம் முதலியவற்றைப் பற்றி ஆசிரியரோ உடன் படித்த மாணவரோ செய்யுள் வடிவில் தரும் முன்னுரைpreface in verse form (by the author) or foreword by someone who knows the author (normally in old treatises)
சிறப்புப் பெயர் பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர்appellation
சிறப்புப் பேராசிரியர் ஓய்வு பெற்ற பிறகும் உயர் தகுதி கருதிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற நியமிக்கப்படும் பேராசிரியர்emeritus professor
சிறாய் மரத்துண்டு, பலகை முதலியவற்றை இழைக்கும்போது அல்லது செதுக்கும்போது கிடைக்கும் மெல்லிய துண்டு(wooden) chip
சிறார் சிறுவரும் சிறுமியரும்children
சிறிது1(உருவில், வடிவத்தில்) குறைந்த அளவானது(of size) small
சிறிது2ஓரளவுto some extent
சிறிய அளவில் குறைந்தsmall
சிறு1(உடல்) சுருங்குதல்(அவமானம், அவமதிப்பு முதலியவற்றால் ஒருவரின் முகம், உடல்) குறுகுதல்(of body) shrink
சிறு2சிறியsmall
சிறுகச்சிறுக கொஞ்சம்கொஞ்சமாகlittle by little
சிறுகதை (பெரும்பாலும்) ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை (அதிகம் நீண்டு போகாமல்) உரைநடையில் விவரிக்கும் ஓர் இலக்கிய வகைshort story
சிறுகுடல் பல மடிப்பாகக் காணப்படுவதும் இரைப்பையிலிருந்து வரும் சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்ப்பதுமாகிய குடலின் பகுதிsmall intestine
சிறுசு சிறிதுsmall (in size)
சிறுசேமிப்பு (வங்கியிலோ அஞ்சலகத்திலோ) தொகை குறைவாக இருந்தாலும் அவ்வப்போது செலுத்திச் சேமிக்கும் முறைsmall savings (scheme in a bank or post office)
சிறுத்தை செம்பழுப்பு நிறத் தோலில் கரும் புள்ளிகளை உடையதும் வேகமாக ஓடக் கூடியதும் புலியைவிடச் சிறியதுமான ஒரு விலங்குleopard
சிறுதீனி நொறுக்குத் தீனிsnack
சிறுதெய்வம் மக்கள் தம் குறை நீங்க வழிபடும், (பெரும்பாலும்) அந்தணர் அல்லாத பூசாரி பூசை செய்யும் தெய்வம்deity worshipped by people for alleviation and whose puja is conducted by a non-brahmin priest
சிறுதொழில் ஒரு வரையறைக்குட்பட்ட மூலதனத்தில் நடத்தப்படும் தொழில்small scale industry
சிறுநீர் (மனித) உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேறும் உப்புநீர்urine
சிறுநீர்ப்பை சிறுநீரகங்களில் பிரிக்கப்படும் சிறுநீர் வந்து தங்கும் பகுதியாக உள்ள பை போன்ற உறுப்புurinary bladder
சிறுநீரகம் (உடலில்) இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக வெளியேற்றும், அவரை விதை வடிவில் இருக்கும் உறுப்புkidney
சிறுபத்திரிகை (இலக்கியம், அறிவியல் போன்ற குறிப்பிட்ட துறைகளில்) குறைந்த அளவு வாசகர்களையே கொண்டு லாப நோக்கமற்ற முறையில் நடத்தப்படும் பத்திரிகைjournal with limited circulation and run without profit motive
சிறுபயறு பாசிப்பயறுgreengram
சிறுபான்மை (மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது) குறைவான அளவுminority
சிறுபிள்ளை சிறுவன் அல்லது சிறுமிboy or girl
சிறுபிள்ளைத்தனம் குழந்தையைப் போல முதிர்ச்சி இல்லாமலும் பொறுப்பில்லாமலும் செயல்படும் தன்மைchildishness
சிறுமி (பருவம் அடையாத) சிறு பெண்girl (who has not attained puberty)
சிறுமை மதிப்பிழந்து வெட்கப்பட வேண்டிய நிலைmeanness
சிறுவயது இள வயதுyoung age
சிறுவர் சீர்திருத்தப்பள்ளி குற்றம் புரிந்த சிறுவர் சிறுமியரை நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நல்வழிப்படுத்த அரசு ஏற்படுத்தியிருக்கும் அமைப்புreform school for juvenile offenders
சிறுவன் (பருவ வயதுக்குக் கீழ் உள்ள) இளைஞன்boy (not yet an adult)
சிறுவாடு (வீட்டை நிர்வகிக்கும் பெண் வீட்டுச் செலவுக்கான பணத்தில் மிச்சம்பிடித்தோ தேவைக்கு மிஞ்சிய பொருளை விற்றோ) சேமிக்கும் சிறு தொகைsavings (by a woman from the sum allotted for household expenses or by selling what is left in excess in the house)
   Page 81 of 204    1 … 79 80 81 82 83 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil