Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| செந்தட்டி | உடலின் மீது பட்டால் அரிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு வகைச் சிறு கொடி | a creeper which when touched, causes irritation to the skin |
| செந்தமிழ் | செம்மையான உயர் வழக்குத் தமிழ் | tamil of a high variety |
| செந்தூக்காக | (தூக்குதல் என்னும் வினையோடு) செங்குத்தாக | straight upward |
| செந்நாய் | (கூட்டமாக வேட்டையாடும்) செந்நிற உடலும் கறுப்பு நிற வாலும் உடைய காட்டு நாய் | dhole |
| செந்நீர் | இரத்தம் | blood |
| செந்நெறி | மரபு சார்ந்து ஒழுகும் தூய பண்பு | righteous path |
| செப்படிவித்தை | செப்புப் போன்றவற்றுள் பொருளைத் தோன்றச்செய்தல், மறையச்செய்தல் முதலியவற்றைச் செய்து காட்டும் தந்திர வித்தை | conjuring tricks |
| செப்பம் | ஒழுங்கு | perfection |
| செப்பம்செய் | (பழுது, குறைபாடு, பிழை முதலியவற்றை நீக்கி) சரிசெய்தல் | restore |
| செப்பனிடு | சரிசெய்தல் | repair |
| செப்பு1 | (குங்குமம் முதலியவை போட்டுவைக்கப் பயன்படும் மரத்தால் அல்லது உலோகத்தாலான) சிறிய பெட்டி | little box (of metal, wood, etc to keep குங்குமம், etc.) |
| செப்பேடு | (பழங்கால அரசர்களின் ஆணைகள், அவர்கள் வழங்கிய கொடைபற்றிய விபரங்கள் முதலியவை பொறிக்கப்பட்ட) செப்புத் தகடு | documents inscribed on copper-plates (of ancient kings) |
| செம்1 | சிவப்பு நிறமுடைய | red (in colour) |
| செம்2 | சிறப்பான | refined |
| செம்பட்டை | (முடியின் நிறத்தைக் குறிக்கையில்) வெளிர்ச் சிவப்பு | brown colour (of hair) |
| செம்படவன் | (கடலில்) மீன்பிடிக்கும் தொழில் செய்பவன் | fisherman |
| செம்பருத்தி | புதர் போல் வளர்வதும் சிவப்பு நிறப் பூப் பூப்பதுமான ஒரு வகைச் செடி | a shrub with red flowers |
| செம்பாட்டு நிலம் | செம்மண் நிலம் | red earth |
| செம்பாதி | சரிபாதி | one half |
| செம்பு1 | வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர்ச் சிவப்பு நிற உலோகம் | copper |
| செம்பு2 | (நீர், பால் முதலியவற்றை எடுத்துச் செல்ல வசதியாக) குறுகிய கழுத்தும் உருண்டை வடிவக் கீழ்ப்பகுதியும் உடைய ஓர் உலோகப் பாத்திரம் | a small vessel with a narrow neck (for carrying water, milk, etc.) |
| செம்போத்து | உடல் கறுப்பாகவும் இறக்கை பாக்கு நிறமாகவும் இருக்கும் (காக்கை அளவிலான) பறவை | crow pheasant |
| செம்மண் | (மட்பாண்டங்கள் மீது பூசவும் சாலைகள் அமைக்கவும் பயன்படும்) ஒரு வகைச் சிவப்பு நிற மண் | red soil |
| செம்மல் | (பெரும்பாலும் தொடர்களில்) (குறிப்பிடப்படுவதில்) சிறந்தவர் | (mostly in phrases) one who has excellence |
| செம்மறியாடு | (கம்பளிக்குத் தேவையான ரோமத்தைப் பெறுவதற்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகைச் செம்பழுப்பு நிற ஆடு | common brown sheep |
| செம்மாந்து/செம்மாந்த | பெருமிதம் கொண்டு/பெருமிதம் கொண்ட | in an exalted manner/exalted |
| செம்மை1 | சிவப்பு | redness |
| செம்மை2 | (-ஆக, -ஆன) பண்பட்ட நிலை | fineness |
| செம்மைப்படுத்து | மேம்படுத்துதல் | improve |
| செம்மையாக | (அடித்தல், திட்டுதல் போன்றவற்றைக் குறிக்கையில்) கடுமையாக | (with reference to thrashing, abusing) severely |
| செமத்தி-ஆக/-ஆன | பலமாக/பலமான | severely/severe |
| செய்கூலி | (பொற்கொல்லர், தச்சர் முதலியோர் பொருளின் விலை அல்லாமல்) செய்த வேலைக்குப் பெறும் கூலி | labour charges |
| செய்தி | குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்ச்சிபற்றிய தகவல் | news (item) |
| செய்திக்குறிப்பு | (ஓர் அமைப்பு தனது நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும்முகமாகப் பத்திரிகை, வானொலி போன்ற தொடர்புச்சாதனங்களுக்கு அனுப்பிவைக்கும்) எழுத்து வடிவச் செய்தி | press release |
| செய்தித்தாள் | நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, விற்பனைக்கு வரும், நாட்டு நடப்பைக் காட்டும் பத்திரிகை | newspaper |
| செய்தித் துணுக்கு | (கவனத்தை ஈர்க்கும் வகையில் பத்திரிகைகளில் வெளியாகும்) சுவையான சிறு விஷயம் | titbits (in periodicals) |
| செய்திப்படம் | தகவல் தரும் முறையில் எடுக்கப்படும் திரைப்படம் | documentary (film) |
| செய்தி மடல் | (ஒரு துறையினரின் பார்வைக்கு மட்டும் அனுப்பும்) துறையின் செய்திகள் அடங்கிய தாள் | newsletter (of a particular profession for private circulation or for the subscribers only) |
| செய்தியறிக்கை | (வானொலியில், தொலைக்காட்சியில்) (சிறப்பு நிகழ்ச்சிபற்றிய) செய்தித் தொகுப்பு | news bulletin |
| செய்தியாளர் | (பத்திரிகை, வானொலி முதலியவற்றின்) நிருபர் | reporter |
| செய்நேர்த்தி | (செயலைச் செய்வதில்) ஒழுங்கு | perfection |
| செய்முறைப் பயிற்சி | மாணவனைச் சோதிப்பதற்காகப் பாடத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாப் பட்டியல் | exercise (in a textbook) |
| செய்யுள் | யாப்பு விதிகளுக்கு உட்பட்டு அடி வரையறையுடன் எழுதப்படுவது | verse |
| செய்வினை1 | (ஒருவருக்கு) கெடுதல் உண்டாக்கச் செய்யும் மந்திரவாதச் செயல் | sorcery |
| செய்வினை2 | கருத்தா செய்யும் செயலை உணர்த்தும் வினைச்சொல் | verb in the active voice |
| செயப்படுபொருள் குன்றாவினை | (வாக்கிய அடிப்படையில்) செயப்படுபொருளை ஏற்கும் வினைச்சொல் | transitive verb |
| செயப்பாட்டுவினை | (படு என்னும் துணை வினை சேர்ந்து) செயப்படுபொருளை எழுவாயாகக் கொள்ளும் நிலையில் உள்ள வினை | verb in the passive voice |
| செயல் | (உறுப்புகளை இயக்குவதன்மூலம் ஒன்றை) செய்வது(சக்தி, திறமை போன்றவற்றைப் பயன்படுத்தி) நிகழ்த்துவது | action |
| செயல்திட்டம் | குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டிய பெரிய திட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு | action programme |
| செயல்திறன் | (கால, பண விரயம் இல்லாமல்) செலவழிக்கப்படும் சக்தியின் முழுமையான பயன்பாடு | efficiency |
| செயல்படு | செயல் நிகழ்த்தி இயங்குதல் | function |
| செயல்படுத்து | (திட்டம், சட்டம் முதலியவற்றை) நடைமுறைப்படுத்துதல் | enforce |
| செயல்பாடு | செயல்படுகிற முறை | style of functioning |
| செயல்முறை | (உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை) இயங்கும் அல்லது செயல்படும் முறை | mode of functioning |
| செயல்வடிவம் | (சிந்தனை, திட்டம் முதலியவற்றை) செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறை | implementation |
| செயல்விளக்கம் | (உற்பத்தி, கலை, கல்வி முதலியவற்றில் குறிப்பிட்ட செயல்முறையை) எவ்வாறு செய்வது அல்லது மேற்கொள்வது என்பதை நிகழ்த்திக்காட்டும் முறை | demonstration |
| செயல்வீரர் | (பொதுவாழ்க்கையில்) ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் அல்லது குறிக்கோளை அடைவதில் ஏற்படும் தடைகளையெல்லாம் கடந்து நடைமுறையில் நிறைவேற்றி முடிப்பவர் | man of action |
| செயலகம் | (ஓர் அமைப்பின்) உயர்மட்ட நிர்வாக அலுவல்கள் நடைபெறும் இடம் | secretariat |
| செயலர் | (அரசில்) ஒரு துறையின் நிர்வாகப் பொறுப்புள்ள தலைமை அதிகாரி | secretary (to departments, ministry) |
| செயலாளர் | (கட்சி, சங்கம் முதலியவற்றின்) கொள்கை, தீர்மானம், முடிவு முதலியவற்றைச் செயல்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் | secretary (of a party, of a union or an organization) |
| செயலாற்று | செயல்படுதல் | function |
| செயலிழ | செயல்படும் திறனை இழத்தல் | become impaired |
| செயற்கரிய | எளிதில் செய்வதற்கு முடியாத | not easily achieved |
| செயற்குழு | (கட்சி, அமைப்பு முதலியவற்றின்) நிர்வாகத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குழு | executive committee |
| செயற்கை | இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றிற்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது | artificial (as opposed or alternative to what is naturally available) |
| செயற்கைக்கோள் | (தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு முதலியவற்றுக்காக) பூமியை அல்லது ஒரு கிரகத்தைச் சுற்றிவரும்படி செலுத்தப்பட்ட அறிவியல் சாதனம் | satellite |
| செயற்கை சுவாசம் | மூச்சு தடைபட்டுத் திணறும் நிலையில் உள்ள ஒருவர் மீண்டும் சீரான முறையில் சுவாசிப்பதற்காகப் பிராண வாயுவைச் செலுத்தி அளிக்கும் சிகிச்சை | artificial respiration |
| செரி | (குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக) உணவில் உள்ள சத்துகள் வயிற்றுத் தசைகளினால் அரைக்கப்பட்டுக் கூழாதல் | get digested |
| செரிமானம் | செரித்தல் | digestion |
| செருக்கு | (மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற நினைப்பில்) பிறரை மதிக்காத போக்கு | conceit |
| செருகு | ஒரு பிடிப்பில் நிற்கும்படி (ஒன்றை) நுழைத்தல் அல்லது திணித்தல் | insert |
| செருப்பு | காலில் பொருந்தி நிற்கும்படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி | sandal |
| செருமு | இருமுதல் | cough |
| செல்1 | (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி) நகர்ந்து பெயர்தல் | go/(of vehicles) go |
| செல்2 | (பரிமாற்றத்திற்கு அல்லது விளைவைத் தருவதற்கு) தகுதிவாய்ந்ததாக அமைதல் | be valid or current |
| செல்3 | கறையான் | white ant |
| செல்4 | உயிரணு | cell |
| செல்கதி | உய்வு | salvation |
| செல்லப்பிள்ளை | செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளை | pet child |
| செல்லரித்துப்போன | (காலப் போக்கில்) மதிப்பிழந்துவிட்ட அல்லது பயன் இல்லாமல் போன | old and worn-out |
| செல்லாக்காசு | செல்வாக்கும் மதிப்பும் இழந்த நிலை | nonentity |
| செல்லுபடியாகு | உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல் | be valid |
| செல்வந்தன் | மிகுந்த செல்வம் உடையவன் | rich man |
| செல்வம் | (ஒருவருக்கு உரிய) மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு | wealth |
| செல்வன் | திருமணமாகாத இளைஞனின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல் | a form of address for an unmarried young man (on ceremonial occasions) |
| செல்வாக்கு | (பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றால்) பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச்செய்ய அல்லது வழிநடத்த இருக்கும் திறன் | influence |
| செல்வி | திருமணமாகாத இளம் பெண்ணின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல் | a form of address for an unmarried young woman (on ceremonial occasions) |
| செலவழி1 | (பணம், பொருள், நேரம் போன்றவை) தீர்தல் | be spent |
| செலவழி2 | (பணம், நேரம் போன்றவற்றை) வசதி, சேவை முதலியவற்றுக்காகப் பயன்படுத்துதல் | spend |
| செலவாளி | தாராளமாகச் செலவு செய்பவர் | one who spends freely |
| செலவினம் | (பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு பணிகளுக்கான செலவு வகை | items of expenditure |
| செலவு | (பணம், பொருள் முதலியவற்றுக்கான) தேவை | expenses |
| செலவுவை | செலவழிக்கும் நிலைக்கு உள்ளாக்குதல் | make (one) spend |
| செவ்வகம் | நீண்ட சதுரம் | rectangle |
| செவ்வட்டை | உடலின் ஓரத்தில் சிவப்புப் பட்டைகள் கொண்டதும் சிறு கால்களால் ஊர்ந்து செல்வதுமான உயிரினம் | millipede |
| செவ்வட்டை நோய் | நெற் பயிரின் தோகையில் எள் வடிவத்தில் பழுப்பு நிறப் புள்ளிகளாகத் தோன்றிப் பச்சையத்தைச் சேதப்படுத்தும் பூசண நோய் | helmin thosporium |
| செவ்வந்தி | சாமந்தி | wild chamomile |
| செவ்வரளி | சிவப்பு நிறப் பூப் பூக்கும் அரளி | oleander rose bay |
| செவ்வனே | (ஒரு செயல்) சிறந்த முறையில் | in an excellent manner |
| செவ்வாய் | சூரியனிலிருந்து நாலாவதாகவும் பூமியை அடுத்தும் உள்ள கிரகம் | (planet) Mars |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.