Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| செவ்வாழை | சிவப்பு நிறத் தோல் உடைய பருமனான பழங்களைத் தரும் ஒரு வகை வாழை | a kind of plantain tree yielding red-skinned fruits |
| செவ்வி | நேர்முகம் | interview |
| செவ்விந்தியர் | அமெரிக்கக் கண்டத்தில் வாழ்கிற பழங்குடியினர் | american Indians |
| செவ்விய1 | (வாழ்க்கை, வழிமுறைகள் முதலியவற்றைக் குறிக்கையில்) சிறந்த | most proper |
| செவ்விய2 | சிவந்த | red |
| செவ்வியல் | மரபு வழிப்பட்ட சிறந்த கலை அல்லது இலக்கியம் | classicalism |
| செவ்விளநீர் | செந்நிற மட்டையோடு கூடிய இளநீர் | tender coconut of the red-coloured variety |
| செவ்வை | (ஒரு செயலைக் குறிக்கையில்) சீர்மை | proper manner or order |
| செவல்காடு | செம்மண் பூமி | red soil |
| செவலை | (பெரும்பாலும் மாடுகளைக்குறித்து வரும்போது) சிவந்த நிறமுடையது | (of bovine animals) red-coloured one |
| செவி | காது | ear |
| செவிசாய் | அங்கீகரிக்கும் வகையில் கேட்டல்(வேண்டுகோளுக்கு) இணங்குதல் | lend ears to |
| செவிடன் | கேட்கும் திறன் இல்லாதவன் | deaf (man) |
| செவிடி | செவிடன் என்பதன் பெண்பால் | feminine of செவிடன் |
| செவிடு1 | கேட்கும் திறன் இல்லாமை | deafness |
| செவிடு2 | (காதுப் பக்கத்து) கன்னம் | cheek (at the region of the ear) |
| செவிப்பறை | காதின் உட்பகுதியில் ஒலியை உணர்வதற்காக இருக்கும் மெல்லிய தோலாலான உறுப்பு | eardrum |
| செவிலித்தாய் | (பண்டைய இலக்கியங்களில்) தலைவியின் வளர்ப்புத்தாய் | foster-mother of the heroine (in ancient literature) |
| செவிவழிச் செய்தி | ஒருவர் கூற மற்றொருவர் கேட்பது என்ற முறையில் வழங்கிவரும் செய்தி | that which is orally transmitted |
| செவுள் | மீன் தலையின் இருபுறத்திலும் இருக்கும் சுவாச உறுப்பு | gills (of a fish) |
| செழி | (செடி, கொடி, பயிர் முதலியன) நல்ல வளர்ச்சியுடன் அமைதல் | flourish |
| செழித்த | அடர்ந்த/ஊட்டமான | thick/ chubby |
| செழிப்பு | (பயிர் முதலியவை) வளத்துடன் காணப்படும் நிலை | (of fields, crops) flourishing |
| செறி | அடர்ந்து நிறைதல் | be full of |
| செறிவு | நெருக்கமாக அடர்த்தியுடன் அமையும் நிலை | thickness |
| சென்ட்1 | நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடப் பயன்படும் ஓர் அலகு | (of land measure) cent |
| சென்ட்2 | இனிய மணமுடைய திரவம் | perfume |
| சென்ற | (காலத்தைக் குறிக்கையில்) கடந்த/(புத்தகத்தின் பக்கம் முதலியவற்றைக் குறிக்கையில்) குறிப்பிடப்படுவதற்கு முன்னுள்ள | (of time) last/(of book) previous (page, para, etc.) |
| சேகண்டி | சிறு குச்சியால் தட்டி ஒலியெழுப்பக் கூடிய வட்ட வடிவத் தட்டு | round shaped metal plate to produce sound by striking with a stick |
| சேகரம் | சேகரிப்பு அல்லது தொகுப்பு | collection |
| சேகரி | (குறிப்பிட்ட ஒரு நோக்கம் கருதி) ஒன்றுதிரட்டுதல்(செய்தி) சேர்த்தல் | collect (coins, etc.) |
| சேகரிப்பு | (நோக்கம் கருதி ஒரு பொருளை) சேகரிக்கும் செயல் | collection (of stamps, tales, etc.) |
| சேட்டு1 | (தமிழ்நாட்டில்) வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிற வட இந்தியர் | a person belonging to mercantile community (from certain states of north India) doing business in Tamil Nadu |
| சேட்டு2 | சட்டை | shirt |
| சேடி | (முற்காலத்தில்) (இளவரசியின்) பணிப்பெண் | (in olden times) maid (of a princess) |
| சேடை | நடவு நடுவதற்கு ஏற்ற நிலையில் சேறாகும்படி தண்ணீரைத் தேக்கிக் கட்டியுள்ள வயல் | puddled field made ready for transplantation |
| சேணம் | (குதிரை போன்ற விலங்குகளின் முதுகில் உட்கார்ந்து) சவாரி செய்வதற்குப் போடப்படுகிற தோலினால் ஆன இருக்கை | saddle |
| சேதம் | (புயல், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் உயிர், பொருள்) அழிவு | loss (of life, property, things) |
| சேதாரம் | (பொருள்களுக்கு ஏற்படும்) நஷ்டம் | (of crops, commodities) loss |
| சேந்து | (நீர்) இறைத்தல் | draw (water, esp |
| சேப்பங்கிழங்கு | (உணவாகப் பயன்படும்) வழுவழுப்புத் தன்மை கொண்ட பழுப்பு நிறக் கிழங்கு | indian kales root |
| சேம்பு | நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பெரிய இலைகளோடு கூடிய, உணவாக உண்ணும் கிழங்கு தரும் ஒரு வகைச் செடி | indian kales |
| சேமக்கலம்1 | (வெப்பமானி போன்ற உபகரணங்களில்) பாதரசத்தைக் கொண்டுள்ள சேமிப்புக்கலம் | a structure at the bottom of thermometer, barometer, etc for keeping mercury |
| சேமக்கலம்2 | சேகண்டி | a kind of gong |
| சேமநல நிதி | பொதுநலனுக்காகச் சேமித்துவைக்கப்படும் பணம் | welfare fund |
| சேமி | (பணத்தைச் சிறிதுசிறிதாக) சேர்த்தல்(நீர் முதலியவற்றைப் பின்னர் பயன்படுத்துவதற்காக) நிறைத்தல் | save (money, water, etc.) |
| சேமிப்பு | (எதிர்காலத் தேவை கருதி வங்கி முதலியவற்றில் சிறிதுசிறிதாக) சேர்த்துவைத்தல் அல்லது சேர்த்துவைத்திருக்கும் பணம் | savings (in a bank, etc.) |
| சேமிப்புப் பத்திரம் | (அரசு நேரடியாகவோ அஞ்சலகம் முதலிய அமைப்புகள் வழியாகவோ) ஒருவர் சேமிப்பாகச் செலுத்திய தொகையைக் குறிப்பிட்ட கால முடிவில் வட்டியுடன் திருப்பித் தருவதாக எழுத்துமூலம் உறுதியளித்துத் தரும் பத்திரம் | savings certificate |
| சேமியா | (பாயசம், சிற்றுண்டி ஆகியவை செய்யப் பயன்படும்) கோதுமை, கிழங்கு முதலியவற்றின் மாவிலிருந்து மெல்லிய கம்பி போல் பிழிந்து உலர்த்திய உணவுப் பொருள் | vermicelli |
| சேய் | குழந்தை | child |
| சேய்மை | தூரம் | being at a distance |
| சேர்1 | கூட்டாக இருத்தல் | (of men) come together |
| சேர்2 | (நபர்களை) ஒன்றுதிரட்டுதல்(பொருள்களை) சேகரித்தல் | assemble (people) |
| சேர்3 | (தற்போது வழக்கில் இல்லாத) முந்நூற்றிருபது கிராம் கொண்ட நிறுத்தலளவை | (a former) measure of weight, roughly about 320 grams |
| சேர்க்கை | ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலை | combination |
| சேர்த்தி | (ஒன்றுடன்) இணைத்துப் பார்க்கக் கூடியது | that which can be identified with (something) |
| சேர்த்து | (குறிப்பிடப்படுவதுடன்) கூட | also |
| சேர்த்துவை | ஒத்துப்போகுமாறு செய்தல் | reconcile |
| சேர்ந்த | (குறிப்பிட்ட ஊர், நாடு முதலியவற்றை) பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ கொண்ட(ஒன்றை) எல்லையாகக் கொண்டு அதற்கு உட்பட்ட | belonging to (a country, nation, etc.) |
| சேர்ந்தாற்போல் | தொடர்ச்சியாக | continuously |
| சேர்ந்து | (செயலைச் செய்யும்போது) ஒன்றாக | together |
| சேர்ப்பி | (ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல் | hand over |
| சேர்ப்பு | (பட்டியலில்) பதிவுசெய்தல் | enrolment |
| சேர்மம் | பொருள்களின் அல்லது திரவங்களின் கலப்பால் ஏற்படும் கூட்டுப் பொருள் | (chemical) compound |
| சேர்மானம் | (நகை செய்வதற்காகச் சுத்தத் தங்கத்தில் செம்பின்) கலப்பு விகிதம் | ratio of (copper) added (to pure gold) |
| சேரன் | (முற்காலத்தில் வில்லையும் அம்பையும் அரசுச் சின்னமாகக் கொண்டு) கேரளத்தை உள்ளடக்கிய நிலப் பகுதியை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன் | any king of the Chera dynasty which ruled over modern Kerala and parts of Tamil Nadu |
| சேரி | (கிராமங்களில்) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதி | that part of the village where people of certain castes (whose traditional occupation is agriculture) live |
| சேலை | புடவை | saree |
| சேவகம் | (இறைவனுக்கு அல்லது உயர்நிலையில் உள்ளவர்களுக்கு) தொண்டு | working as a servant |
| சேவகன் | (அரசனின் அல்லது செல்வந்தரின்) பணியாள் | servant (of a king or a rich man) |
| சேவல் | (பெரும்பாலும் கோழிகளில்) ஆண் பறவை | (in poultry) male bird |
| சேவார்த்தி | (கோயில்களில் இறைவனை) வழிபட வரும் பக்தர் | devotee |
| சேவாஸ்ரமம் | சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்கள் தம் சேவைக்காக அமைத்துக்கொண்ட குடில் | an establishment or institution where people who dedicate themselves to social service live and work together |
| சேவு | கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் (கார அல்லது இனிப்புச் சுவையுடைய) தின்பண்டம் | a savoury or sweet in the shape of short stick-strips made of chickpea paste fried in oil |
| சேவை1 | மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி | public service (by an individual, organization or government to people) |
| சேவை2 | அரிசி மாவை நூல் போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு | a noodle-like steamed rice preparation |
| சேவைநாழி | சேவை தயாரிப்பதற்காக மாவைப் பிழியும் சாதனம் | the press used in the preparation of சேவை |
| சேறு | நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண் | mud |
| சேனை1 | (அரசர்களின் ஆட்சிக்காலங்களில்) படை | (formerly) army (of a king) |
| சேனை2 | (சமையலில் பயன்படும்) கறுப்பு நிறத் தோலும் வெளிர்ச் சிவப்பு நிறச் சதைப் பகுதியும் கொண்ட அரைக் கோள வடிவத்தில் இருக்கும் ஒரு வகைக் கிழங்கு | a kind of yam |
| சைக்கிள் | மிதிவண்டி | bicycle |
| சைக்கிள் ரிக்ஷா | பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் மூன்று சக்கர மிதிவண்டி | a three wheeler (mostly pedalled) used as a passenger transport |
| சைகை | (செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்) அசைவு | gesture |
| சைத்தியம் | புத்த மதத்தினரின் ஆலயம் | buddhist shrine |
| சைத்திரிகன் | ஓவியன் | painter |
| சைவசித்தாந்தம் | இறைவன் (=பதி), ஆன்மா (=பசு), ஆன்மாவுக்குத் தடையாக இருப்பது (=பாசம்) ஆகிய மூன்று அடிப்படைகளில் அமைக்கப்பட்ட இந்து சமயத் தத்துவம் | a philosophical system of Hindu religion based on the three entities viz |
| சைவம்1 | சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்ட இந்து மதப் பிரிவு | (a sect of) Hindu religion which regards Siva as the Supreme God |
| சைவம்2 | (இறைச்சி, மீன் முதலியவற்றைத் தவிர்த்து) காய்கறிகளை உணவாகக்கொள்ளும் முறை | vegetarianism |
| சைவன்1 | இந்துக்களின் சைவப் பிரிவைச் சார்ந்தவன் | one who follows Saivism |
| சைவன்2 | சைவ உணவு உண்பவன் | vegetarian |
| சொக்கட்டான் | உருட்டிப் போடும் கட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விளையாடும் தாய விளையாட்டு | a game played according to the number obtained in the dice |
| சொக்கப்பனை | கார்த்திகைத் திருவிழாவில் கோயில் முன்பு வைத்து எரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் காய்ந்த பனை ஓலைகளைக் கொண்ட கூடு போன்ற அமைப்பு | a bonfire made in front of temples as part of கார்த்திகை festival |
| சொக்கு1 | (அழகு, திறமை முதலியவற்றால்) தன் வசம் இழத்தல் | be bewitched (by beauty, etc.) |
| சொக்கு2 | கன்னக் கதுப்பு | plumpness of the cheek |
| சொக்குப்பொடி | (ஒரு பெண் ஒருவரைத் தன் வசத்திலேயே வைத்திருக்கப் பயன்படுத்துவதாகக் கூறப்படும்) மயக்குப் பொடி | a magical powder (said to be used by women to enslave men) |
| சொகுசு | சகல ஆடம்பரமான வசதிகளும் நிறைந்தது | luxury |
| சொச்சம் | (குறிப்பிட்ட தொகைக்கும் சற்று) அதிகம் | a little more (than the specified sum) |
| சொட்டச்சொட்ட | வழிந்தோடும் அளவுக்கு | drenched |
| சொட்டு1 | (திரவம்) சிறுசிறு துளிகளாக விழுதல் | drip |
| சொட்டு2 | (திரவம் கீழே விழும்போது) சிறு உருண்டை வடிவ அளவிலானது | drop |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.