Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சுற்றிலும் சுற்றுமுற்றும்on all sides
சுற்றிவர சுற்றிலும்around (a place)
சுற்றிவளை (ஒரு விஷயத்தை) நேரடியாகச் சொல்லாமல் தொடர்பில்லாத விஷயங்களையும் சேர்த்தல்beat about the bush
சுற்று1(ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே) குறிப்பிட்ட திசையில் சுழலுதல்/(ஒரு பொருளை) சுழலச்செய்தல்spin
சுற்றுக்கட்டு வீட்டின் உட்புறத்தில் முற்றத்தைச் சுற்றி அமைந்திருக்கும் தாழ்வாரப் பகுதிenclosed verandah around the open space inside the house
சுற்றுச்சுவர் (கட்டடத்தின்) வெளி எல்லையாக எழுப்பப்படும் சுவர்wall surrounding a building
சுற்றுச்சூழல் உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவை அடங்கிய இயற்கை நிலைenvironment
சுற்றுப்பயணம் (பணி காரணமாகவோ மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ) பல இடங்களுக்குப் போய்வரும் பயணம்tour (for some purpose or sightseeing)
சுற்றுப்புறம் (குறிப்பிட்ட இடத்தை) ஒட்டியுள்ள அல்லது சார்ந்த பகுதிsurroundings
சுற்றுமுற்றும் நான்கு பக்கமும்on all sides
சுற்றுலா பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்tour
சுற்றுலா மாளிகை (அரசு) விருந்தினர் விடுதி(government) guesthouse
சுற்றுவட்டாரம் (ஓர் இடத்தை, ஊரை) சுற்றியுள்ள பகுதிvicinity
சுற்றுவாடை சுற்றுப்புறம்nearby places
சுறா பல வரிசை கூரிய பற்களைக் கொண்டதும் வலிமைமிக்க வாலால் வேகமாக நீந்தக் கூடியதுமான சாம்பல் நிறக் கடல் மீன்shark
சுறுசுறு-என்று (கோபத்தைக்குறித்து வருகையில்) மெள்ள அதிகரித்துfly into (a rage)
சுறுசுறுப்பு (சோம்பல் இல்லாமல்) செயல்படுவதற்கான ஊக்கம்stimulant
சுன்னத்துக் கல்யாணம் (இஸ்லாமிய ஆடவர்) ஆண்குறியின் முன்தோலை அகற்றும் சடங்குcircumcision and ceremony connected with it
சுனை (காடு, மலை முதலிய இடங்களில்) இயற்கையாக நீர் ஊறித் தேங்கும் சிறு குட்டைpool of water (in a mountain, forest, etc.)
சூசகம் (-ஆக, -ஆன) ஒன்றை ஊகித்து அறியும் வகையில் வெளிப்படுத்தும் முறைsuggestion
சூட்சுமம் மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம்intricacy
சூட்டடுப்பு சூட்டை எளிதில் விட்டுவிடாமல் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கரி அடுப்புcoke oven
சூட்டிகை (பொதுவாக) அறிவுக் கூர்மை/(ஒரு துறையில்) திறமை(generally) brightness/(in a specific field) smartness
சூட்டுக்கோல் (மாடு முதலியவற்றின் மேல் அடையாளம் இடுவதற்காகவோ நோய் நீக்கவோ பயன்படுத்தப்படும்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிbranding iron
சூட்டோடுசூடாக முந்தைய செயல் செய்த வேகத்திலேயே அல்லது நடந்த வேகத்திலேயேclose on sth
சூட்டடி (சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்தெடுக்கும் பணிcollecting the grains from the (paddy) sheaves kept in சூடு
சூடடி (சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்து எடுத்தல்collect grains from the (paddy) sheaves kept in சூடு
சூடம்/சூடன் கற்பூரம்camphor
சூடு1(தலையில் மலர் போன்றவற்றை அல்லது கழுத்தில் மாலையை) அணிதல்put on (flowers, crown on the head, garland around the neck)
சூடு2(-ஆக, -ஆன) தொட்டு அல்லது உணர்ந்து அறியக் கூடிய அளவில் இருக்கும் வெப்பத்தின் தன்மைwarmth
சூடு3(களத்துமேட்டில் ஒரு முறை அடித்த பிறகு குவித்துவைக்கப்பட்டிருக்கும்) நெல் மணிகள் சிறு அளவில் உடைய நெல் தாள்sheaves of paddy (which have still a few grains to be threshed)
சூடுசுரணை (அவமானப்படுத்தப்படும்போது) எதிர்த்துச் செயல்பட வேண்டும் என்று உந்துகிற உணர்ச்சிsense of shame
சூடுபிடி (வியாபாரம், விவாதம் முதலியவை) தீவிரம் அடைதல்(of business, discussion) warm up
சூத்திரக்கயிறு (பொம்மலாட்டத்தில்) பொம்மைகளை இயக்க அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிறுstring attached to a puppet
சூத்திரதாரி (கூத்தில்) கட்டியங்காரன்the clown and the announcer in கூத்து
சூத்திரம்1நூற்பாterse stanzaic form (used in grammatical or philosophical treatise)
சூத்தை கெட்டுப்போனது(of fruits) rotten
சூதகப்பெருக்கு இரத்தப் பெருக்கு அதிகமாக உள்ள மாதவிலக்குexcessive menstrual bleeding
சூதகம் மாதவிடாய்menses
சூதாட்டம் காசு வைத்துப் பந்தயம் கட்டி ஆடும் (சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற) ஆட்டம்gambling
சூதாடி சூதாட்டங்களில் ஈடுபடுபவன்gambler
சூதாடு சூதாட்டத்தில் ஈடுபடுதல்gamble
சூது கெடுக்கும் சூழ்ச்சி அல்லது தந்திரம்deceit
சூதுவாது கள்ளங்கபடம்guile
சூப்பு1வாய்க்குள் வைத்து நாக்கால் அழுத்தி உறிஞ்சுதல்suck (finger, nipple, etc.)
சூப்பு2இறைச்சி அல்லது காய்கறியை வேகவைத்துத் தயாரிக்கும் திரவ உணவுsoup
சூம்பு1(கை, கால் முதலிய உறுப்புகள்) குச்சியாக மெலிதல்(of limb) be or become thin
சூம்பு2(விரல்) சூப்புதல்suck (the finger)
சூ மந்திரகாளி மாயாஜால வித்தைகள் காட்டுபவர் மந்திரம் போல உச்சரிக்கும் தொடர்a magical incantation used by magicians while performing
சூரணம் அரைத்தோ பொடித்தோ பெறப்படும் தூள் வடிவ மருந்துmedicine obtained by grinding or powdering certain substances
சூரத்தனம் (கேலியாக) வீரம் அல்லது துணிச்சல்(sarcastically) daring
சூரப்புலி (கேலியாக) வீரம் அல்லது துணிச்சல் நிறைந்தவர்(sarcastically) daring one
சூரன் அநாயாசமான திறமை படைத்தவன்one who is extraordinarily smart
சூரிக்கத்தி கூர்மையான முனையையும் இரு பக்கங்களிலும் வெட்டு விளிம்பையும் கொண்ட ஒரு வகைக் கத்திsharp and pointed double-edged knife
சூரியகாந்தி சூரியன் இருக்கும் திசையை நோக்கி மலரக் கூடிய பெரிய மஞ்சள் நிறப் பூsunflower
சூரிய சக்தி சூரிய வெப்பத்திலிருந்து பெறும் சக்திsolar energy
சூரிய நமஸ்காரம் (இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்) காலையில் சூரியனை நோக்கிச் செய்யும் வழிபாடுworshipping the sun in the morning
சூரியன் பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்the sun
சூல் கரு embryo
சூல்முடி (பூவில்) மகரந்தத் தூள் ஒட்டிக்கொள்ளும் பசையுடைய குமிழ் போன்ற சூலகத்தின் மேல்பகுதிstigma
சூலகம் பூக் காம்பின் தொடர்ச்சியாக அடிப்பகுதி பருத்த, மெல்லிய தண்டாலான, பெண்பால் இனப்பெருக்க உறுப்புovary
சூலம்1நீண்ட தண்டின் நுனியில் மூன்று கூரிய முனைகளை உடைய ஒரு வகை ஆயுதம்trident
சூலம்2குறிப்பிட்ட கிழமையில் குறிப்பிட்ட திசையில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறும் தடைtraditional prohibition of journey in certain directions on certain days
சூழ் (ஒருவரை, ஒன்றை, ஓர் இடத்தை) சுற்றி அமைதல்(மேகம் முதலியன) போர்த்துவது போல் கவிதல் அல்லது வந்து அணைதல்surround
சூழ்ச்சி தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தந்திரமான திட்டம்plot
சூழ்நிலை மனிதர்கள் வாழும் இடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கைப் பொருள்களின் தொகுதி/மனிதர்களின் செயல்களுக்கான மன அம்சங்களின் தொகுப்புsetting
சூழ (கூட்டமாக) பின்தொடரaccompanied by (many or a group)
சூழல் மனிதர்களின் செயல்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் குடும்ப, சமூகப் பின்னணிmilieu
சூளுரை2சபதம்vow
சூளை (செங்கல், பானை முதலியவற்றை) சுடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புkiln (for baking bricks, pot, etc.)
சூறாவளி மிகுந்த வேகத்துடன் சுழன்று வீசும் காற்றுwhirlwind
சூறைக்காற்று சூறாவளிwhirlwind
சூறையாடு வன்முறையைப் பயன்படுத்தி விருப்பப்படி கொள்ளையடித்தல்plunder
சூனாவயிறு (குழந்தைகளுக்கு ஈரல் நோயினால்) வீங்கிப் பெருத்துக் காணப்படும் வயிறுbloated abdomen (due to enlarged liver)
சூனியக்காரி தீமை பயக்கும் மாந்திரீகம் மற்றும் சூனிய வித்தைகளைச் செய்யும் பெண்witch
சூனியம்1முற்றிலும் ஒன்றுமே இல்லாத நிலைnothingness
செக்கச்சிவந்த மிகவும் சிவப்பானbright red
செக்கச்செவேல்-என்று/-என்ற (உடல் நிறத்தைக் குறிக்கையில்) மிகவும் சிவப்பாக/மிகவும் சிவப்பானruddy/of a fair complexion
செக்கர்வானம் (சூரியன் மறைகிறபோது காணப்படுகிற) சிவந்த வானம்red sky (at the time of sunset)
செக்கு பெரிய உரல் போன்ற மர அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன்மூலம் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் ஒரு வகைச் சாதனம்oil-press
செக்குலக்கை (செக்கில் பொருத்தப்பட்டிருக்கும்) உலக்கை போன்ற பெரிய மரத்தடிpestle of oil-press
செங்கண்மாரி மஞ்சள் காமாலைjaundice
செங்கல் (கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும்) சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டிbaked brick
செங்காய் பழுக்கும் நிலையிலுள்ள காய்fruit almost ripe
செங்குத்து (-ஆக, -ஆன) பக்கச் சாய்வு இல்லாத நிலைsteepness
செங்கோணம் 900 பாகை கொண்ட கோணம்right angle
செங்கோல் (அரசனின்) நீதி, நேர்மை தவறாத நல்லாட்சிjust rule or administration (of a king)
செஞ்சிலுவைச் சங்கம் யுத்தம், பஞ்சம் மற்றும் இயற்கைச் சீரழிவுகளினால் பாதிப்படைந்த மக்களுக்கு மருத்துவச் சேவை முதலியவை புரியும் ஒரு சர்வதேசத் தொண்டு நிறுவனம்red Cross Society
செஞ்சோற்றுக்கடன் (உணவு, உடை கொடுத்து ஆதரவு தந்த ஒருவருக்கு) நன்றி மறவாமல் உயிரைக் கொடுத்தாவது உதவி செய்ய வேண்டிய கடமைindebtedness (to a person)
செட்டு சிக்கனம்frugality
செட்டை (பறவையின்) சிறகுwing
செடி உயரத்தில் மரத்தைவிடக் குறைவாக வளரக் கூடிய, மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்any plant
செண்டு கட்டப்பட்ட (மலர்) தொகுப்புbouquet (of flowers)
செண்டை (கேரள மாநிலத்தில் அதிகமாகப் பயன்படும்) இரு பக்கத்திலும் அடித்து இசைக்கக் கூடிய மேளம் போன்ற வாத்தியம்a kind of large drum
செண்பகம் வாசனை மிகுந்த மஞ்சள் நிறப் பூப் பூக்கும் ஒரு வகை மரம்a flower of golden hue
செத்தல்மிளகாய் மிளகாய் வற்றல்dried chilli
செத்துப்பிழை (மிகைப்படுத்திக் கூறும் முறையில்) நெருக்கடிக்கு உள்ளாகி மீள்தல்have a narrow escape
செத்தை (செடிகொடிகளில்) காய்ந்த இலை(கரும்பின்) கழிக்கப்பட்ட தோகைதாவரக் குப்பைdry leaves
செதில்/செதிள் (மீன், ஓணான் போன்றவற்றின்) உடல் மேல் செறிவாக மூடியிருக்கும் விறைப்பான தோல் அடுக்குscale (of fish, garden lizard, etc.)
செதுக்கு (மரம், கல் முதலியவற்றின் அளவைக் குறைக்க) சிறிதுசிறிதாக வெட்டுதல்chip or shave off (wood, etc.)
   Page 85 of 204    1 … 83 84 85 86 87 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil