Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
தத்து2சுவீகாரம்adoption (of a child)
தத்துப்பித்து-என்று முன்னுக்குப்பின் முரணாகbabblingly
தத்துவஞானி தத்துவக் கோட்பாடுகளை உருவாக்குபவர்philosopher
தத்துவார்த்தம் தத்துவரீதியான தன்மைphilosophical nature
தத்ரூபம் (சிறிய நுணுக்கங்கள்கூட விடுபட்டுப்போகாமல்) ஒன்றை அப்படியே வெளிப்படுத்துவதுexact resemblance
ததிங்கிணத்தோம்போடு திண்டாடுதல்suffer greatly
ததும்பு (பாத்திரத்தில் நீர் அல்லது கண்களில் கண்ணீர்) வழியக் கூடிய நிலையில் காணப்படுதல்(of liquids) heave with fullness
தந்தம் (ஆண் யானையின் வாயிலிருந்து) கொம்பு போன்ற வடிவில் வெளியே நீண்டிருக்கும் தூய வெண்மை நிறம் உடைய உறுப்புtusk
தந்தி1(வீணை, வயலின் முதலிய இசைக் கருவிகளில்) நாதத்தை எழுப்புவதற்காகக் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மெல்லிய கம்பிstring (of musical instruments)
தந்தி2(அரசுத் துறை அலுவலகத்தால்) ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றிச் சேவையாக வழங்கப்படும் செய்திtelegram
தந்திக்கம்பி தந்திக்கான அல்லது தொலைபேசிக்கான மின் அலைகளைத் தாங்கிச் செல்லும் கம்பிoverhead wires meant for telecommunications
தந்தியடி (இயந்திரப் பொறியில் குறியீட்டு முறையில் செய்தியை) விரல்களால் கடகடவென்று தட்டி அனுப்புதல்tap the telegraph to send messages
தந்திரம் (-ஆக, -ஆன) (ஒருவரை ஏமாற்ற அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும்) சாமர்த்தியமான வழிமுறைguile
தந்துகி மிக நுண்ணிய இரத்தக் குழாய்capillary
தந்தை அப்பாfather
தப்பட்டை தோளில் மாட்டிக்கொண்டு குச்சியால் அடித்து ஒலி எழுப்பப்படும் வட்டமான ஒரு வகைத் தோல் கருவிa small one headed drum hung from the shoulder and tapped with a pair of small sticks
தப்படி காலை அகட்டி எடுத்துவைக்கும் அடிdistance between the two legs when stretched to full length from each other
தப்பாமல் தவறாமல்without fail
தப்பித்தவறி (ஒன்றைக் கருதிச் செய்யும்) நோக்கம் இல்லாமல்by accident or chance
தப்பிதம் தவறுmistake
தப்பிப்பிழை (ஆபத்திலிருந்து, அழிவிலிருந்து) விடுபடுதல்escape
தப்பு2(துணியைக் கல்லில்) அடித்தல்beat (a cloth on a slab of stone by way of washing)
தப்பு3முறை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு மாறானதுwrong doing
தப்புக்கணக்குப் போடு உண்மையான நிலைக்கு மாறாக மதிப்பிடுதல்miscalculate
தப்புதண்டா முறையற்ற காரியம்(involving oneself in) quarrel
தப்பும்தவறுமாக அதிகத் தவறுகளுடன்faultily
தப்பை குறுக்காக வெட்டப்பட்ட மூங்கில் குச்சிbamboo split
தபசு/தபஸ் (கடவுளை நோக்கி) மனத்தை நிலைப்படுத்திச் செய்யும் தியானம்(religious) austerities
தபா தடவை(the number of) time(s)
தபால் அட்டை அஞ்சல் அட்டைpost card
தபால்காரன் (கடிதம் முதலியவற்றை) முகவரியில் குறிப்பிட்டுள்ளவரிடம் சேர்ப்பிக்கும் பணியைச் செய்யும் அஞ்சல் நிலைய ஊழியர்postman
தபால் தலை அஞ்சல் தலை(postage) stamp
தபால் பெட்டி அஞ்சல் நிலையத்தாரால் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும், கடிதம் போடுவதற்கும் எடுப்பதற்கும் சிறு திறப்பை உடைய பெட்டி போன்ற அமைப்புpost box
தபாலதிபர் அஞ்சல் நிலைய அதிகாரிpostmaster
தபாற்கட்டளை அஞ்சல் ஆணைpostal order
தபேலா (விரல்களாலும் உள்ளங்கையாலும் தட்டி வாசிக்கப்படும்) அரைக்கோள வடிவில் ஒன்றும் நீள் உருளை வடிவில் ஒன்றுமாக அமைந்த தாளக் கருவிtabla
தம்2(உடல் வலிமையை உபயோகித்துச் செய்ய வேண்டிய கடினமான காரியத்திற்காக) உள்ளிழுக்கும் அல்லது அடக்கும் மூச்சுbreath drawn in or held (during exertions)
தம்பட்டம் (கிராமப்புறங்களில் செய்தி அறிவிக்கும் பொருட்டு அடிக்கப்படும்) அகன்ற தட்டு வடிவத் தோல் கருவிa large, round tom-tom
தம்பட்டமடி (ஒரு செய்தியைப் பலர் அறியும்படி) பரப்புதல்/(ஒன்றை) தற்பெருமையுடன் கூறுதல்spread (the news)
தம்பதி திருமணம் செய்துகொண்ட ஓர் ஆணும் பெண்ணும்married couple
தம்பி உடன்பிறந்தவர்களில் தனக்கு இளையவன்younger brother
தம்பிடி மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம்coin of lowest value
தம்பிரான் சைவ மத குரு ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட மடத்தில் இருந்து சமயப் பணியும் நிர்வாகப் பணியும் செய்யும் துறவிa Saiva monk in the institution founded by a guru, performing religious and administrative duties
தம்பூரா (செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டிச் சுருதி சேர்ப்பதற்கான) குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்தியம்a four-stringed instrument for maintaining the basic note
தம்ளர் (தண்ணீர் முதலியன குடிக்கப் பயன்படுத்தும்) விளிம்பு உள்ள குவளைdrinking vessel
தமக்கை அக்காelder sister
தமனி இதயத்திலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் இரத்தம் செல்வதற்கான குழாய்artery
தமாஷ் (-ஆக, -ஆன) சிரிப்பை வரவழைத்தல்humour
தமாஷா வரி கேளிக்கை வரிentertainment tax
தமிழ் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராலும் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் சிறுபான்மையினராலும் பேசப்படுகிற, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த (தொன்மையான) மொழிtamil (language)
தமிழ்நாடு (மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட இந்தியாவில்) தமிழ்மொழி பேசுவோர் வாழும், கிழக்குக் கடற்கரையை ஒட்டித் தென்முனைவரையில் உள்ள மாநிலம்state of Tamil Nadu
தமிழ்ப்படுத்து (பிற மொழியில் உள்ள நூலை) தமிழில் மொழிபெயர்த்தல்/(பிற மொழிச் சொல், தொடர் முதலியவற்றை) தமிழ் ஒலிப்பு முறையில் அமைத்தல்translate (a work) into Tamil/tamilize (a foreign word, phrase, etc.)
தமிழ்வாணர் தமிழில் புலமை மிகுந்தவர்one who has mastery of Tamil
தமிழகம் தமிழ்நாடுstate of Tamil Nadu
தமிழன் தமிழைத் தாய்மொழியாகவோ பண்பாட்டு-பயன்பாட்டு மொழியாகவோ கொண்டவன்one whose mother tongue is Tamil or one who uses Tamil for socio-cultural activities
தமிழாக்கம் தமிழ் மொழிபெயர்ப்பு/(பிற மொழிச் சொல், தொடர் முதலியவற்றின்) தமிழ் ஒலிப்படுத்திய முறைtamil translation/tamilization
தமிழியல் தமிழ் மொழி, பண்பாடு, அறிவியல் துறைகள் முதலியன பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுstudy related to Tamil language, people and culture
தமுக்கடி (ஒரு செய்தியை) பலர் அறிய அறிவித்தல்notify the public by tom-tom
தமுக்கு (கிராமப்புறங்களில் மக்களுக்குச் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும்) மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு இடுப்பில் தொங்கவிட்டுக்கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறைa kind of small drum for tom-tomming
தமையன் அண்ணன்elder brother
தயக்கம் தடுமாற்றம்hesitation
தயங்கு (செயல்பட அல்லது முடிவெடுக்க முடியாமல்) தடுமாறுதல்hesitate
தயவு (பிறர்) தாராள மனப்பான்மையோடு நடப்பதால் (தனக்கு) கிடைக்கும் ஆதரவுfavour (that one wins or receives)
தயவுதாட்சண்யம் (பெரும்பாலும் எதிர்மறை வினை வடிவங்களுடன் இணைந்து) ஈவிரக்கம்pity or consideration
தயார் (ஒருவர்) மன அளவில் அல்லது செயல் அளவில் உடனடியாக ஒன்றைச் செய்யத் தகுந்தவாறு இருக்கும் நிலை/(ஒன்று) உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிற நிலை(state of) preparedness/(kept in) readiness
தயாரி (பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) உருவாக்குதல்produce
தயாரிப்பாளர் (பொருள்களை) தயாரிப்பவர்manufacturer
தயாரிப்பு (பொருளை) தயாரித்தல்the act of producing or manufacturing
தயாளம் பெருந்தன்மையான குணம்generosity
தயிர் பாலில் உறை மோர் ஊற்றுவதால் புளிப்பு அடைந்து கிடைக்கும் சற்றுக் கெட்டியான உணவுப் பொருள்curd(s)
தயை கருணைcompassion
தர்க்கம் விவாதம்discussion (in the nature of an argument)
தர்க்கரீதி-ஆக,-இல்/-ஆன (பேச்சு, செயல்பாடு, சிந்தனை முதலியவற்றின் ஒழுங்கு, அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கையில்) காரணகாரிய அடிப்படையில்/காரணகாரிய அடிப்படையிலானlogically/logical
தர்க்கி தர்க்கம்செய்தல்argue
தர்கா முஸ்லிம் மகான்கள் அடக்கம்செய்யப்பட்ட இடம்the place where the muslim saints are buried
தர்ணா (அலுவலகத்தின் முன் அல்லது ஒரு பொது இடத்தில் கோரிக்கைகளைத் தீர்க்குமாறு கோரி) வழி மறித்துக் கோஷங்கள் எழுப்பி நடத்தும் போராட்டம்picketing
தர்ப்பூசணி வெளித் தோல் பச்சையாகவும் சதைப் பகுதி சிவப்பாகவும் இருக்கும் இனிப்புச் சுவை கொண்ட நீர் நிறைந்த பூசணி போன்ற பழம்sweet watermelon
தர்ப்பை (சடங்குகளில் பயன்படுத்தும்) வெளிர்ப் பச்சை நிறமுடைய ஒரு வகை நீண்ட புல்kaus (grass considered sacred)
தர்பார் அரசர் அல்லது அரசரின் பிரதிநிதி ஆலோசகருடன் அமர்ந்து நிர்வாகம் நடத்தும் சபைroyal court
தர்ம கட்டணம் எதுவும் வசூலிக்காதfree (of cost)
தர்ம அடி (குற்றம் செய்து பிடிபட்டவருக்குப் பாதிக்கப்பட்டவரும்) சம்பந்தப்படாத பிறரும் சேர்ந்து கொடுக்கும் அடி அல்லது உதைbeating of a culprit by all those present at the spot
தர்மகர்த்தா (கோயில்) அறங்காவலர்trustee (of a temple)
தர்மத்துக்கு (வேலை முதலியவற்றைக் குறிக்கையில்) இலவசமாக(இலவசமாகச் செய்பவதைப் போல) எந்த விதக் கவனமும் இல்லாமல்(when referring to a work done badly) as if it was done for no consideration
தர்மப்பிரபு அதிக அளவில் தர்மம் செய்பவர்philanthropist
தர்மபத்தினி (உயர்வாக அல்லது கேலியாக) மனைவி(respectfully or humorously) wife
தர (கணிதத்தில்) பெருக்கல் குறி(in arithmetic) sign of multiplication
தரக் கட்டுப்பாடு உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரம் குறையாமல் இருக்க ஏற்படுத்தும் கண்காணிப்புcontrolling the quality of goods manufactured
தரகர் இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒப்பந்தம் முதலியவற்றைப் பெற்று முடித்துத் தரும் தொழிலைச் செய்பவர்middleman
தரகு இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒன்றைப் பணம் பெற்று முடித்துத் தரும் தொழில்work of a broker
தரணி உலகம்world
தரதர-என்று (இழு என்னும் வினையோடு) (ஒருவரின் உடல் பகுதி அல்லது ஒரு பொருளின் பகுதி) தரையில் உராய்ந்துகொண்டே வரும் வகையில்(drag) forcibly along the ground
தரப்படுத்து (பல வித வடிவங்களில் வழங்கிவருபவற்றைப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) ஒரே சீராக அமைத்தல்standardize
தரப்பில் பிரதிநிதித்துவம் தரும் முறையில்on behalf of
தரப்பு (வழக்கு, போர், பேச்சுவார்த்தை முதலியவற்றில் ஏதேனும்) ஒரு நிலை மேற்கொண்டதால் அமையும் பிரிவுone of the two parties to a dispute, war, etc
தரம்1(-ஆக, -ஆன) (ஒன்றை) நிர்ணயம் செய்வதற்கு உரிய அளவு அல்லது நிலைquality
தரம்2தடவை(number of) time(s)
தரவு (ஆய்விற்கு ஆதாரமாகத் திரட்டப்படும்) அடிப்படைத் தகவல்கள்data (for research or analysis)
தராசு எடைக்கல்லை வைக்க ஒரு தட்டும் பொருளை வைக்க மற்றொரு தட்டும் எடையின் அளவைக் காட்டக் கூடிய முள்ளும் உடைய, பொருளை நிறுக்கப் பயன்படும் சாதனம்balance (for weighing)
தராதரம் (அந்தஸ்து, வயது அடிப்படையில்) வேறுபாட்டுக்குக் காரணமான தகுதிstatus
தரி1(உடை, மாலை முதலியன) அணிதல்/(திருநீறு, சந்தனம் முதலியவை) பூசுதல்wear
   Page 91 of 204    1 89 90 91 92 93 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil