Conversation – 10
BUY A BIRTHDAY CAKE
Uraiyaadal –Prandhanaal Cake
உரையாடல் – பிறந்த நாள் கேக்
Conversation between a Salesman and Mani
CONVERSATION – 10
BUY A BIRTHDAY CAKE
Conversation between a Salesman & Mani
Salesman: Vaanga Sir. Enna vaenum?
Salesman: Welcome Sir, what do you want?
விற்பனையாளர்: வாங்க சார். என்ன வேணும்?
Mani: Birthday (pirandha naal) cake vaenum.
Mani: Birthday cake.
மணி: பர்த்டே (பிறந்த நாள்) கேக் வேணும்.
Salesman: Idhula yaedhaavadhu vaenumaa illa pudhusaa order panreengalaa? Neenga ippoa order pannaa naalu Mani naeraththu-la kidaikkum.
Salesman: Do you want any of these cakes or new? You can get this order within
4 hours.
விற்பனையாளர்: இதுல ஏதாவது வேணுமா இல்ல புதுசா ஆர்டர் (பதிவு) பண்றீங்களா?
நீங்க இப்ப ஆர்டர் பண்ணா நாலு மணி நேரத்துல கிடைக்கும்.
Mani: Naan ippa pudhusaa order kudukkuraen. Cake-la ennalaam flavor (suvai) irukku?
Mani: I will give new order. What all flavors are there ?
மணி: நான் இப்ப புதுசா ஆர்டர் குடுக்குறேன். கேக்ல என்னலாம் ப்ளேவர்
(சுவை) இருக்கு?
Salesman: Vanilla, strawberry, chocolate flavor irukku. Ungalukku edhu vaenum?
Salesman: Vanilla, strawberry, chocolate flavors are available. Which flavor do you want?
விற்பனையாளர்: வெண்ணிலா, ஸ்டிராபெர்ரி, சாக்லேட் ப்ளேவர் இருக்கு. உங்களுக்கு
எது வேணும்?
Mani: Strawberry.
Mani: Strawberry.
மணி: ஸ்டிராபெர்ரி.
Salesman: Mutta saeththa cake vaenumaa, illa saekkaadha cake vaenumaa?
Salesman: Do you want egg or egg less cake?
விற்பனையாளர்: முட்ட சேத்த கேக் வேணுமா, இல்ல சேக்காத கேக் வேணுமா?
Mani: Mutta saekkaadha cake dhaan vaenum.
Mani: I want egg less cake only.
மணி: முட்ட சேக்காத கேக் தான் வேணும்.
Salesman: Eththana kilo?
Salesman: How many kgs?
விற்பனையாளர்: எத்தன கிலோ?
Mani: Rendu kilo. Adhukku evvalavu aagum?
Mani: 2 kgs. How much does it cost?
மணி: ரெண்டு கிலோ. அதுக்கு எவ்வளவு ஆகும்?
Salesman: Rendu kilo cake aayiraththi ennooru ruvaa.
Salesman: Rs.1800 for 2 kgs.
விற்பனையாளர்: ரெண்டு கிலோ கேக் ஆயிரத்தி எண்ணூறு ருவா.
Mani: Saringa.
Mani: Ok.
மணி: சரிங்க.
Salesman: Cake-la photo print edhuvum poadanumaa?
Salesman: Do you want to put a photo print on a cake?
விற்பனையாளர்: கேக்ல போட்டோ பிரிண்ட் ( புகைப்பட அச்சு) எதுவும் போடணுமா?
Mani: Mickey mouse padaththa cake-la poadunga. Paiyan romba sandhoshap paduvaan.
Mani: Put a picture of Mickey Mouse on the cake. My son will be very happy.
மணி: மிக்கி மவுஸ் படத்த கேக்ல போடுங்க. பையன் ரொம்ப சந்தோஷ படுவான்.
Salesman: Adhu sulabama poadalaam. Neenga indha paper-la vaenungura message-um, photo print name-um ezhudhunga. Keezha, unga paerum, cell number-um ezhudhunga.
Salesman: It can be done easily. You write the message and photo print name in this paper. Write down your name and mobile number below.
விற்பனையாளர்: அதுசுலபமாபோடலாம். நீங்க இந்த பேப்பர்ல வேணுங்கிற மெஸ்ஸேஜும் (செய்தி), போட்டோ பிரிண்ட் நேமும் எழுதுங்க. கீழ உங்க பேரும், செல் நம்பரும் (கைபேசி எண்) எழுதுங்க.
Mani: Saringa. Vaera edhaavadhu ezhudhanumaa?
Mani: Ok. Should I write anything more?
மணி: சரிங்க. வேற ஏதாவது எழுதணுமா?
Salesman: Illa sir. Idhu poadhum. Ungalukku samosa, mini pizza, puffs edhaavadhu order pannunnaa, naangalae soodaa senju kuduppoam.
Salesman: No sir. This is enough. If you order samosa, mini pizza and puffs, we will prepare and give it hot.
விற்பனையாளர்: இல்ல சார். இது போதும். உங்களுக்கு சமோசா, மினி பீட்ஸா, பஃப்ஸ் ஏதாவது ஆர்டர் பண்ணுனா நாங்களே சூடா செஞ்சு குடுப்போம்.
Mani: Vaenaanga. Snacks veetlayae ready panniduvoam.
Mani: No, we will prepare the snacks at home.
மணி: வேணாங்க. ஸ்நாக்ஸ்(சிற்றுண்டி) வீட்லயே ரெடி பண்ணிடுவோம்.
Salesman: Birthday candles , snow spray , partyhats (thoppi) ellaamae irukku. Vaenumaa?
Salesman: Birthday candles, snow spray and party hats are available. Do you want?
விற்பனையாளர்: பர்த்டே கேண்டில்ஸ் (மெழுகுவர்த்தி) ஸ்னோ ஸ்ப்ரே (குழை பனி
தெளிப்பான்), பார்ட்டி ஹேட்ஸ் (தொப்பி) எல்லாமே இருக்கு.
வேணுமா?
Mani: Aamaa, kudunga. Naanum marandhuttaen, Ennoada manaivi vaangittu vara sonnaanga.
Mani: Yes. please Give it. I forgot. My wife asked me to buy it.
மணி: ஆமா, குடுங்க. நானும் மறந்துட்டேன். என்னோட மனைவி வாங்கிட்டு வர
சொன்னாங்க.
Salesman: Ennalaam vaenum Sir?
Salesman: What are the items you want?
விற்பனையாளர்: என்னலாம் வேணும் சார்?
Mani: Ennoada maganukku idhu aaraavadhu pirandha naal. Adhanaala aarunnu number potta candle onnu, cake-a suththi vaikkiradhukku chinna candle box moonu poadhum. Snow spray vaenaam, chinna pasanga kannula patturum.
Mani: This is sixth birthday for my son. So, six number candle-1, small candles box -3 to put around the cake is enough. No snow spray, it will affect kids’ eyes.
மணி: என்னோட மகனுக்கு இது ஆறாவது பிறந்த நாள். அதனால ஆறுன்னு நம்பர்
(எண்) போட்ட கேண்டில் ஒண்ணு, கேக்க சுத்தி வைக்கிறதுக்கு சின்ன
கேண்டில் மூணு போதும். ஸ்னோ ஸ்ப்ரே வேணாம், சின்ன பசங்க
கண்ணுல பட்டுரும்.
Salesman: Ippavae vaangittu poareengalaa illa cake vaanga varum bodhu vaangikkureengalaa?
Salesman: Do you want to buy it now or while buying the cake?
விற்பனையாளர்: இப்பவே வாங்கிட்டு போறீங்களா இல்ல கேக் வாங்க வரும்போது வாங்கிக்குறீங்களா?
Mani: Illa, ippavae kudunga.
Mani: No. Give it now itself.
மணி: இல்ல இப்பவே குடுங்க.
Salesman: Vaera yaedhaavadhu vaenumaa Sir? Enga kadayila sweet bread, wheat rusk rendum famous. Illa cutlet, pizza vaangureengalaa?
Salesman: Anything else sir. Sweet bread and wheat rusk are famous in our shop.
Do you want cutlet or pizza?
விற்பனையாளர்: வேற ஏதாவது வேணுமா சார்? எங்க கடையில ஸ்வீட் பிரட் (இனிப்பு ரொட்டி), வீட் ரஸ்க் (கோதுமை ரொட்டி துண்டு) ரெண்டும் ஃபேமஸ் (பிரபலம்). இல்ல கட்லெட், பீஸா வாங்குறீங்களா?
Mani: Oru sweet bread packet-um, veg cutlet moonum kudunga. Bill poatturunga.
Mani: You give one packet sweet bread and 3 veg cutlets. Please give the bill.
மணி: ஒரு ஸ்வீட் பிரட் பாக்கெட்டும், வெஜ் கட்லெட் மூணும் குடுங்க. பில் (ரசீது)
போட்டுருங்க.
Salesman: Payment eppadi – cash-aa, card-aa?
Salesman: How are you going to pay the bill, cash or credit card?
விற்பனையாளர்: பேமண்ட் எப்படி- கேஷா, கார்டா?
Mani: Paytm pannalaamaa?
Mani: Can I pay by Paytm?
மணி: பேடிஎம் பண்ணலாமா?
Salesman: Pannalaam sir. Paytm app-la indha code-a scan pannunga.
Salesman: Yes sir. Please scan this code in paytm app.
விற்பனையாளர்: பண்ணலாம் சார். பேடிஎம் ஆப்ல இந்த கோட ஸ்கேன் (ஊடுகதிர்) பண்ணுங்க.
Mani: Amount transfer aayiruchchu. Check pannunga.
Mani: Money transferred. Please check it.
மணி: அமெளண்ட் ட்ரான்ஸ்பர் (பரிமாற்றம்) ஆயிருச்சு. செக் பண்ணுங்க.
Salesman: Yes sir. Payment kidachchiruchchu. Indhaanga unga raseedhu. Cake innaikku saayandharam anju Manikku ready aayirum. Neenga varum bodhu raseedha marakkaama kondu vaanga.
Salesman: We received payment sir. Cake will be ready by evening 5’o clock. Bring the bill when you come. Don’t forget.
விற்பனையாளர்: யெஸ் சார். பேமண்ட் கிடைச்சுருச்சு. இந்தாங்க உங்க ரசீது. இன்னைக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு ரெடி ஆயிரும். நீங்க வரும்போது ரசீத மறக்காம கொண்டு வாங்க.
Mani: Sari, varaen.
Mani: Ok. Bye.
மணி: சரி, வரேன்.