At the Hospital- 21

At the Hospital

Conversation between Doctor and Janani and Sunil.

One on One Tamil class

At the Hospital

CONVERSATION – 21
At the Hospital

Conversation between Doctor and Janani and Sunil.

Maruththuvar: Vaangammaa, paiyanukku ennaachchu?
Doctor: Welcome, what happened to this child?
மருத்துவர்: வாங்கம்மா, பையனுக்கு என்னாச்சு?

Janani: Sir, avanukku pallu valikkudhunnu azhudhuttae irukkaan.
Janani: Sir, he is crying for tooth pain.
ஜனனி: சார், அவனுக்கு பல் வலிக்குதுன்னு அழுதுட்டே இருக்கான்.

Maruththuvar: Eththana naalaa irukku?
Doctor: How many days is this?
மருத்துவர்: எத்தன நாளா இருக்கு?

Janani: Adikkadi pallu valikkudhunnu sollitae irundhaan. Aanaa indha rendu naalaa vali adhigam-aa irukku. Adhanaala naan pain killer (vali nivaarani) paadhi tablet (maththirai) kuduththaen. Vali kuraiyala, adhanaala unga-kitta check (sodhanai) panna koottittu vandhaen.
Janani: He said that he was suffering from frequent tooth pain. But the pain is too
much for the last two days. That’s why I gave half a tablet of pain killer.
Since pain is not reduced, I brought him to you for checkup.
ஜனனி: அடிக்கடி பல்லு வலிக்குதுன்னு சொல்லிட்டே இருந்தான். ஆனா இந்த ரெண்டு நாளா வலி அதிகமா இருக்கு. அதனால நான் பெயின் கில்லர் (வலி நிவாரணி) பாதி டேப்லெட் (மாத்திரை) குடுத்தேன். வலி குறையல, அதனால உங்ககிட்ட செக் (சோதனை) பண்ண கூட்டிட்டு வந்தேன்.

Maruththuvar: Neengalaa yaen pain killer kudukkureenga? Vali vandhaa Doctor-kitta (Maruththuvar) koottittu poganum. Neengalaa maaththirai-ya kudukka koodaadhu.
Doctor: Why do you give the pain killer? If the pain comes, take him to the Doctor.
You should not give the tablet.
மருத்துவர்: நீங்களா ஏன் பெயின் கில்லர் குடுக்குறீங்க? வலி வந்தா டாக்டர்கிட்ட (மருத்துவர்) கூட்டிட்டு போகணும். நீங்களா மாத்திரைய குடுக்க கூடாது.

Janani: Sorry (mannikkavum) Doctor.
Janani: Sorry Doctor.
ஜனனி: சாரி (மன்னிக்கவும்) டாக்டர்.

Maruththuvar: Thambi inga vaa, un paer enna?
Doctor: Come here my child. what’s your name?
மருத்துவர்: தம்பி இங்க வா, உன் பேரென்ன?

Sunil: En paeru Sunil.
Sunil: My name is Sunil.
சுனில்: என் பேரு சுனில்.

Maruththuvar: Sunil, nee endha class (vaguppu) padikkura?
Doctor: Sunil, which class are you studying?
மருத்துவர்: சுனில், நீ எந்த கிளாஸ் (வகுப்பு) படிக்குற?

Sunil: First standard (onnaavadhu) padikkuraen.
Sunil: I am studying in first standard.
சுனில்: ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் (ஒன்னாவது) படிக்குறேன்.

Maruththuvar: Nallaa padippiyaa?
Doctor: Do you study well?
மருத்துவர்: நல்லா படிப்பியா?

Sunil: Aamaa.
Sunil: Yes.
சுனில்: ஆமா.

Maruththuvar: Sari. Unnoada palla paakka poaraen. Vaaya thorandhu aahh-nnu kaattu.
Doctor: Ok. I am going to see your teeth. Open your mouth and show me.
மருத்துவர்: சரி. உன்னோட பல்ல பாக்க போறேன். வாய தொறந்து ஆன்னு காட்டு.

Sunil: Aaahh… Valikkudhu!
Sunil: AhAh … painful!
சுனில்: ஆஆ… வலிக்குது!

Maruththuvar: Pallu soththaiyaaga aarambichchu irukku. Nee oru naalai-kku eththana biscuit, chocolates (mittaai) saappuduva.
Doctor: Cavity formed on teeth. How many biscuits and chocolates do you eat per day?
மருத்துவர்: பல்லு சொத்தையாக ஆரம்பிச்சிருச்சு. நீ ஒரு நாளைக்கு எத்தன பிஸ்கட்,
சாக்லேட் (மிட்டாய்) சாப்புடுவ?

Sunil: Snacks-kku (sittrundi) oru packet (pai) biscuit-um, rendu chocolate-um saapuduven.
Sunil: I will eat packet of biscuits and two chocolates as snacks.
சுனில்: ஸ்நாக்ஸ்க்கு (சிற்றுண்டி) ஒரு பாக்கெட் (பை) பிஸ்கட்டும், ரெண்டு சாக்லேட்டும் சாப்பிடுவேன்.

Maruththuvar: Sunil, unnoada palla sari panniruvoam. Aanaa nee chocolate saappudaama irukkanum.
Doctor: Sunil, I will set right your tooth. But you should not eat chocolate.
மருத்துவர்: சுனில், உன்னோட பல்ல சரி பன்னிருவோம். ஆனா நீ சாக்லேட் சாப்புடாம
இருக்கனும்.
Sunil: Sari uncle. Aanaa enakku aasaiyaa irukkumae!
Sunil: Ok uncle. But I like it!
சுனில்: சரி அங்கிள். ஆனா எனக்கு ஆசையா இருக்குமே!

Janani: Doctor, yaar sonnaalum kaekka maattaenguraan. Fridge-la (kulir saadhana petti) irundhu avanae eduththu saappiduvaan.
Janani: Doctor, he won’t listen to anyone. He himself takes it from the fridge and eats
It.
ஜனனி: டாக்டர், யார் சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான். ஃபிரிஜ்ல (குளிர்
சாதன பெட்டி) இருந்து அவனே எடுத்து சாப்புட்டுருவான்.

Maruththuvar: Pillaigal-a kora solla koodaadhummaa. Naama dhaan avangaloada health-a (aaroakkiyam) paaththukkanum. Biscuit, chocolate-kku badhil-aa fruits (pazhangal), nuts (kottaigal) kuduththu vidunga.
Doctor: We shouldn’t blame children. We have to protect their health. Give them fruits
and nuts instead of biscuits and chocolates.
மருத்துவர்: பிள்ளைகள கொற சொல்ல கூடாதும்மா. நாம தான் அவங்களோட ஹெல்த்த (ஆரோக்கியம்) பாதுகாக்கணும். பிஸ்கட், சாக்லேட்க்கு பதிலா ஃப்ரூட்ஸ் (பழங்கள்), நட்ஸ் (கொட்டைகள்) குடுத்து விடுங்க.

Janani: Sari Doctor. Inimae appadiyae seiraen.
Janani: Okay Doctor. I will do that.
ஜனனி: சரி டாக்டர். இனிமே அப்படியே செய்றேன்.
Maruththuvar: Sunil, nee nalla paiyan dhaana.
Doctor: Sunil, are you a good boy?
மருத்துவர்: சுனில், நீ நல்ல பையன் தான?

Sunil: Aamaa uncle.
Sunil: Yes uncle.
சுனில்: ஆமா அங்கிள்.

Maruththuvar: Appadinnaa naan solradha nee kaekkanum.
Doctor: If so, you should listen to me.
மருத்துவர்: அப்படின்னா நான் சொல்றத நீ கேக்கணும்.

Sunil: OK uncle.
Sunil: Okay uncle.
சுனில்: ஓகே அங்கிள்.

Maruththuvar: Oru naalai-kku kaalai-yilum, raaththiri-yum pal thaekkanum. Biscuit, Chocolate saapputta udanae vaai-ya koppalikkanum.
Doctor: You brush your teeth every day morning and night. Wash your mouth if you
eat biscuit and chocolates.
மருத்துவர்: ஒரு நாளைக்கு காலையிலும், ராத்திரியிலும் பல் தேக்கணும். பிஸ்கட், சாக்லேட் சாப்புட்டா உடனேயே வாய கொப்பளிக்கணும்.

Janani: Niraiya pal soththaiyaa irukkaa Doctor?
Janani: Does any other teeth have cavities?
ஜனனி: நிறைய பல் சொத்தையா இருக்கா டாக்டர்?

Maruththuvar: Rendu pallu-la dhaan irukku. Adha clean (suththam) panni viduraen. Vali vitturum. Idhu vandhu milk teeth (paal parkal) dhaan. Vizhundhu mulaikkum bodhu nalla pall-aa varum. Adhu dhaan permanent (nirandharam) teeth. Adhula cavity (soththa) varaama paaththukkanum.
Doctor: Just two teeth. The pain will go away. It’s milk teeth only. A good teeth will
come in once after milk teeth falls. That’s permanent teeth. We should take
care of it from cavity formation.
மருத்துவர்: ரெண்டு பல்லுல தான் இருக்கு. அதை கிளீன் (சுத்தம்) பண்ணி விட்டுறேன். வலி வுட்டுரும். இது வந்து மில்க் டீத் (பால் பற்கள்) தான். விழுந்து முளைக்கும்போது நல்ல பல்லா வரும். அது தான் பெர்மனேண்ட் (நிரந்தரம்) டீத். அதுல கேவிட்டி (சொத்த) வராம பாத்துக்கணும்.

Janani: Oh appadiyaa!
Janani: Oh! Really!
ஜனனி: ஓ அப்படியா!

Maruththuvar: Chinna vayasula irundhae, dhinamum rendu thadava pal thaekkavum, saapputta udanae vaaya koppalikkavum naama dhaan pazhakkanum.
Doctor: From earlier stage, we should train them for brushing two times every day and
wash the mouth immediately after eating.
மருத்துவர்: சின்ன வயசுல இருந்தே, தினமும் ரெண்டு தடவ பல் தேக்கவும், சாப்புட்ட உடனே வாய கொப்புளிக்கவும் நாம தான் பழக்கணும்.
Janani: Inimae neenga sonnapadiyae pazhakkuraen. Romba nandri, Doctor.
Janani: I shall train him as you said. Thank you very much, Doctor.
ஜனனி: இனிமே நீங்க சொன்னபடியே பழக்குறேன். ரொம்ப நன்றி, டாக்டர்.

Sunil: Bye uncle.
Sunil: Bye uncle.
சுனில்: பை அங்கிள்.

Maruththuvar: Bye. Poyittu vaanga.
Doctor: Bye.
மருத்துவர்: பை. போயிட்டு வாங்க.

[ninja_tables id="239051"]

Conversation

32 Conversations in colloquial Tamil and English

Book a demo with Us

    Tamil lesson
    author avatar
    ilearntamil