Conversation
Meeting of Friends
Uraiyaadal 22 – Nanbargalin Sandhippu
உரையாடல் 22– நண்பர்களின் சந்திப்பு
Conversation between Malini and Geetha and Kavin
Malini: Hi Kavin, how are you?
Malini: Hi Kavin, eppadi irukka?
மாலினி: ஹை கவின், எப்படி இருக்க?
Geetha: Are you okay, Kavin?
Geetha: Nallaa irukkiyaa Kavin?
கீதா: நல்லா இருக்கியா கவின்?
Kavin: Yes, I am fine.
Kavin:Aamaa, naan nallaa irukkaen.
கவின்:ஆமா,. நான் நல்லா இருக்கேன்.
Geetha:What happened to you, Kavin? How did you get flu?
Geetha:Unakku ennaachu Kavin? Eppadi kaachchal vandhuchchu?
கீதா:உனக்கு என்னாச்சு கவின்? எப்படி காய்ச்சல் வந்துச்சு?
Kavin: I played in the swimming pool for long time. That’s why I got cold and fever.
Kavin: Naan swimming pool-la (neechchal kulam) romba naeram kulichchaen, adhanaala sali pudichchu; kaachchal vandhuruchchu.
கவின்:நான் ஸ்விம்மிங் பூல்ல (நீச்சல் குளம்) ரொம்ப நேரம் குளிச்சேன், அதனால சளி புடிச்சு; காச்சல் வந்துருச்சு.
Malini: Are you okay now?
Malini: Ippo unakku paravaayillayaa?
மாலினி: இப்போ உனக்கு பரவாயில்லயா?
Kavin: I am okay now. I was in the hospital for two days. They did blood test.
Kavin: Ippo enakku paravaayilla. Two days (rendu naal) hospital-la irundhaen. Blood test (raththa parisodhanai) pannaanga.
கவின்:இப்ப எனக்கு பரவாயில்ல. டூ டேய்ஸ் (ரெண்டு நாள்) ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். பிளட் டெஸ்ட் (ரத்த பரிசோதனை) பண்ணாங்க.
Geetha: What is the blood test report?
Geetha: Blood test result (mudivu) eppadi vanthirukku?
கீதா: பிளட் டெஸ்ட் ரிசல்ட் (முடிவு) எப்படி வந்திருக்கு?
Kavin: Nothing to worry. It is just an ordinary fever. The doctor gave me tablets for five days.
Kavin: Payappadura alavukku onnum illa. Ithu saadhaarana fever thaan. Doctor (Maruththuvar) five (anju) days-kku (naal) tablet (maaththirai) kuduththurukkaaru
கவின்: பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. இது சாதாரண ஃபீவர்தான் (காய்ச்சல்). டாக்டர் (மருத்துவர் )ஃபைவ் (அஞ்சு) டேஸ்க்கு (நாள்) டேப்லெட் (மாத்திரை) குடுத்துருக்காரு.
Malini: Do you take the medicines regularly? You need to take rest also.
Malini: Correct time-kku nee medicine (sariyaana naeraththukku maaththirai) eduththukkireeya? Unakku nallaa rest-m (oayvu) thevai.
மாலினி: கரெக்ட் டைம்க்கு நீ மெடிசின் (சரியான நேரத்துக்கு மாத்திரை) எடுக்கிறீயா? உனக்கு நல்ல ரெஸ்டும் (ஓய்வு) தேவை.
Geetha: When will you come to school? All our friends are missing you.
Geetha: Nee eppa school-kku (palli) varuva? Namma friends (nanbargal) ellaarum unna miss (thaedudhal) pannuranga.
கீதா: நீ எப்ப ஸ்கூலுக்கு (பள்ளி) வருவ? நம்ம ஃபிரண்ட்ஸ் (நண்பர்கள்) எல்லாரும் உன்ன மிஸ் (தேடுதல்) பண்ணுறாங்க.
Kavin:Doctor advised me to take rest for next two days. I shall come by Wednesday.
Kavin: Innum two days doctor (maruththuvar) rest edukka sollirukkaaru. Wednesday (pudhan kizhamai) naan varuvaen.
கவின்:இன்னும் டூ டேஸ் டாக்டர் (மருத்துவர்) ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காரு. வெட்னஷ்டே (புதன்கிழமை) நான் வருவேன்.
Geetha: Take this Kavin, we bought some fruits for you.
Geetha: Indhaa daa Kavin, unakkaaga fruits (pazham) vaangittu vandhoam.
கீதா: இந்தாடா கவின், உனக்காக ஃப்ரூட்ஸ் (பழம்) வாங்கிட்டு வந்தோம்.
Kavin: Why do you buy all these? It is enough that you came.
Kavin:Edhukku idhallaam vaanguneenga. Neenga vandhadhey enakku poothum.
கவின்: எதுக்கு இதல்லாம் வாங்குனீங்க. நீங்க வந்ததே எனக்கு போதும்
Geetha: It’s okay Kavin. Get well soon.
Geetha: Paravaa illa Kavin. Get well soon (seekkiramaa kunamaayidu).
கீதா: பரவா இல்ல கவின். சீக்கிரமா குணமாயிடு.
Malini: Okay Kavin, we are leaving.
Malini: Sari Kavin, Naanga kilamburoam.
மாலினி: சரி கவின். நாங்க கிளம்புறோம்
Geetha:We shall meet in the school on Wednesday.
Geetha:Wednesday school-la meet (sandhikka) pannalaam.
கீதா:வெட்னஸ்டே ஸ்கூல்ல மீட் (சந்திக்க) பண்ணலாம்.
Malini: Take care Kavin. Bye.
Malini:Udamba paaththukko Kavin, Bye.
மாலினி:உடம்ப பாத்துக்கோ கவின், பை.
Kavin:Ok, thanks for coming. Bye.
Kavin:Ok, vanthathukku thanks. Bye.
கவின்: ஓகே. வந்ததுக்கு தேங்க்ஸ் பை.
Conversation
32 Conversations in colloquial Tamil and English
Book a Demo with Us
