Conversation

At the college campus

Uraiyaadal – Kalloori Valaagaththil
உரையாடல் – கல்லூரி வளாகத்தில்

Conversation between Mala and Daniel

Mala: Hello! Ungala disturb (thondharavu) panradhukku mannikkanum. Neenga indha college (kalloori) dhaanaa?
Mala: Hello! Sorry for the disturbance. Are you from this college?
மாலா: ஹலோ! உங்கள டிஸ்டர்ப் (தொந்தரவு) பண்றதுக்கு மன்னிக்கணும். நீங்க இந்த காலேஜ் (கல்லூரி) தானா?

Daniel: Aamaanga.
Daniel: Yes, I am.
டேனியல்: ஆமாங்க.

Mala: Main entrance-kku (piradhaana nuzhaivu vaayil) eppadi poganummunnu sollunga.
Mala: (Please) Tell me how to reach the main entrance?
மாலா: மெயின் என்ட்ரன்சுக்கு (பிரதான நுழைவு வாயில்) எப்படி போகணும்முன்னு சொல்லுங்க.

Daniel: Neenga college-kku pudhusaa?
Daniel: Are you new to this college?
டேனியல்: நீங்க காலேஜ்க்கு புதுசா?

Mala: Aamaa.
Mala: Yes.
மாலா: ஆமா.

Daniel: Inga irundhu oru kilometer nadandhu poganum. Edhukku kaekkureenga?
Daniel: You have to walk about a kilometer from here. Why do you ask?
டேனியல்: இங்க இருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து போகணும். எதுக்கு கேக்குறீங்க?

Mala: Ennoda friends (nanbarkal) ellaarum main entrance-la meet (sandhikka) pannanumnnu sonnaanga. Call taxi (vaadagai vandi) driver (oattunar) maaththi inga irakki vittuttaaru. Enakku vazhi theriyaadhu. Adhaan unga kitta vazhi kaettaen.
Mala: My friends decided to meet at the main entrance. The taxi driver dropped me here, by mistake. I don’t know the way, so I asked.
மாலா: என்னோட ஃபிரண்ட்ஸ் (நண்பர்கள்) எல்லாரும் எண்ட்ரன்ஸ்ல மீட் (சந்திக்க) பண்ணணுமுன்னு சொன்னாங்க. கால் டாக்ஸி டிரைவர் (வாடகை வண்டி ஓட்டுனர்) மாத்தி இங்க இறக்கி விட்டுட்டாரு. எனக்கு வழி தெரியாது. அதான் உங்க கிட்ட வழி கேட்டேன்.

Daniel: Neenga enna branch (pirivu) eduththurukkeenga?
Daniel: Which branch (of Engineering) have you chosen?
டேனியல்: நீங்க என்ன பிரான்ச் (பிரிவு) எடுத்துருக்கீங்க?

Mala: Civil Engineering (kudi muraip poriyiyal). Neenga?
Mala: Civil Engineering. And you?
மாலா: சிவில் இன்ஜினியரிங் (குடி முறைப் பொறியியல்). நீங்க?

Daniel: Naan Computer Science (kanini ariviyal). Unga department (thurai) opposite-la (edhirpuram) dhaan irukku. Neenga yaen main entrance-kku poganum? Unga friends ellaarum car-la (vandi) dhaana vaaraanga. Avangala indha department kitta vandhu iranga sollunga.
Daniel: Computer Science. Your department is right here, opposite us. Why do you need to go to the main entrance? Since all your friends are coming by car, tell them to get out of the car near this department.
டேனியல்: நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் (கணினி அறிவியல்). உங்க டிபார்ட்மெண்ட் (துறை) ஆப்போஸிட்ல (எதிர்புறம்) தான் இருக்கு. நீங்க ஏன் மெயின் என்ட்ரன்ஸ்க்கு போகணும்? உங்க ஃபிரண்ட்ஸ் எல்லாரும் கார்ல (வண்டி) தான வாராங்க. அவங்கள இந்த டிபார்ட்மெண்ட் கிட்ட வந்து இறங்க சொல்லுங்க.

Mala: Naanga ellaarum fees (kattanam) kattanum. Adhanaal-a entrance-la irukkura office-kku (aluvalagam) poganum.
Mala: We’ve got to pay the fees. So, we need to go to the office at the entrance.
மாலா: நாங்க எல்லாரும் பீஸ் (கட்டணம்) கட்டணும். அதனால என்ட்ரன்ஸ்ல இருக்குற ஆபீஸ்க்கு (அலுவலகம்) போகணும்.

Daniel: Fees-a online-la (inaiya dhalam) dhaana kattanum. Neenga yaen cash (panam) katta poreenga?
Daniel: Fees should be paid online. Why are you paying by cash?
டேனியல்: பீஸ்ஸ ஆன்லைன்ல (இணைய தளம்) தான கட்டணும். நீங்க ஏன் கேஷ் (பணம்) கட்ட போறீங்க?

Mala: Bus (paerundhu) fees-a cash-aa katta solleettaanga. Adhukku dhaan office-kku poroam. Neenga fees ellaam kattitteengalaa?
Mala: They told us to pay the bus fees with cash. That’s why we’re going to the office. Have you paid your fees?
மாலா: பஸ் (பேருந்து) பீஸ்ஸ கேஷா கட்ட சொல்லீட்டாங்க. அதுக்கு தான் ஆபீஸ்க்கு போறோம். நீங்க பீஸ் எல்லாம் கட்டிட்டீங்களா?

Daniel: Enakku scholarship (udhavi thogai) varum. Adhula adjust (sari seyya) pannikkuvaanga.
Daniel: I get scholarship, so they’ll adjust the fees accordingly.
டேனியல்: எனக்கு ஸ்காலர்ஷிப் (உதவி தொகை) வரும். அதுல அட்ஜஸ்ட் (சரி செய்ய) பண்ணிக்குவாங்க.

Mala: Scholarship undaa?
Mala: Are scholarships provided?
மாலா: ஸ்காலர்ஷிப் உண்டா?

Daniel: Aamaa. Unga appaa-oda income-a (varumaanam) vachchu scholarship kidaikkum. Neenga office-la clerk-kitta (kumaashthaa) kaelunga. Avanga ellaa details-um (vibaram) solluvaanga.
Daniel: Yes, they are – based on your father’s income. You’ll have to ask the clerk in the office; he will furnish all the details.
டேனியல்: ஆமா. உங்க அப்பாவோட இன்கம (வருமானம்) வச்சு ஸ்காலர்ஷிப் கிடைக்கும். நீங்க ஆபீஸ்ல கிளார்க்கிட்ட (குமாஸ்தா) கேளுங்க. அவங்க எல்லா டீடெயில்ஸ்ஸும் (விபரம்) சொல்லுவாங்க.

Mala: Clerk paeru enna?
Mala: What’s the name of the clerk?
மாலா: கிளார்க் பேரு என்ன?

Daniel: Avar paeru John.
Daniel: His name is John.
டேனியல்: அவர் பேரு ஜான்.

Mala: Sari, naan avar-kitta kaekkuraen. Romba thanks-nga (nandri).
Mala: I’ll ask him. Thank you very much.
மாலா: சரி, நான் அவர்கிட்ட கேக்குறேன். ரொம்ப தேங்க்ஸ்ங்க (நன்றி).

Daniel: Enakku aduththa period (vaguppu) mukkiyamaana subject (paadam) irukku. Adhanaal-a naan udaney kilambanum. Bye. All the best (vaazhththukkal).
Daniel: I’ve got an important subject in the next period. So, I need to leave right away. Bye. All the best.
டேனியல்: எனக்கு அடுத்து பீரியட் (வகுப்பு) முக்கியமான சப்ஜெக்ட் (பாடம்) இருக்கு. அதனால நான் உடனே கிளம்பணும். பாய். ஆல் த பெஸ்ட் (வாழ்த்துக்கள்).

Mala: Thank you. Bye.
Mala: Thank you. Bye.
மாலா: தேங்க் யு. பாய்.

Conversation

32 Conversations in colloquial Tamil and English

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?