Conversation
At the Hospital
Uraiyaadal – Aaspaththiriyil
உரையாடல் – ஆஸ்பத்திரியில்
Conversation between a Doctor and Patient Kamala
Kamala: Vanakkam, Doctor!
Kamala: Good morning, Doctor.
கமலா: வணக்கம் டாக்டர்.
Maruthuvar: Vanakkam-ma! Inga vandhu ukkaarunga. Sollunga, enna prachchanai?
Doctor: Good morning! Come and have a seat. Tell me, what’s wrong?
மருத்துவர்: வாங்கம்மா! இங்க வந்து உக்காருங்க. சொல்லுங்க, என்ன பிரச்சனை ?
Kamala: Rendu naala kaaichchal Doctor, vayiru vali vaera.
Kamala: I’ve been having a fever for two days, and stomach ache too.
கமலா: ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர், வயிறு வலி வேற.
Maruthuvar: Vaandhi, loose motion (baedhi) yedhaavadhu irukkaa?
Doctor: Do you have vomiting or diarrhoea?
மருத்துவர்: வாந்தி, லூஸ் மோஷன் (பேதி) ஏதாவது இருக்கா?
Kamala: Illa, Doctor.
Kamala: No, Doctor.
கமலா: இல்ல, டாக்டர்.
Maruthuvar: Veliya yedhaavadhu saappitteengala-ma?
Doctor: Did you eat anything from outside?
மருத்துவர்: வெளிய ஏதாவது சாப்பிட்டீங்களா?
Kamala: Aamaa Doctor, leave la Kodaikaanal poanoam; anga hotel la saappittoam.
Kamala: Yes, Doctor. We went to Kodaikanal for vacation. There we had food from the
hotel.
கமலா: ஆமா, டாக்டர்.விடுமுறைக்கு கொடைக்கானல் போனோம்.அங்க
ஹோட்டல்-ல சாப்பிட்டோம்.
Maruthuvar: Ippa varra neraiya prachchanaikku suththam illaadha saappaadu saappidradhu dhaan kaaranam.
Mudinja alavu veliya saappiduradha thavirkkanum.
Doctor: Most diseases these days are caused by eating unhygienic food.Try to avoid
eating from outside.
மருத்துவர்: இப்ப வர்ற நெறையா நோய்களுக்கு சுத்தமில்லாத சாப்பாடு
சாப்பிடறது தான் காரணம். முடிஞ்ச அளவு வெளிய சாப்பிடுவத
தவிர்க்கணும் மா.
Kamala: Sari, Doctor.
Kamala: Ok, Doctor.
கமலா: சரி, டாக்டர்.
Maruthuvar: Temperature noothi-rendu irukku. Naan ungalukku kaaichchalukkum,
vayithu (vayiru) valikkum maaththirai tharaen. Moonu naal-la sariyaagala-na blood
test (raththa parisodhanai) pannanum.
Doctor: Temperature is 102. I’ll give you medicines for fever and stomach ache. If it
doesn’t subside in 3 days, we should do a blood test.
மருத்துவர்: டெம்பெரெசர் நூத்திரெண்டு இருக்கு. நான் உங்களுக்கு
காய்ச்சலுக்கும் வயித்து (வயிறு) வலிக்கும் மாத்திரை தரேன். மூணு
நாள்ல சரியாகலனா ரத்த பரிசோதனை பண்ணனும்.
Kamala: Sari, Doctor.
Kamala: Ok, Doctor.
கமலா: சரி, டாக்டர்.
Maruthuvar: Pressure sariyaa dhaan irukku; unga weight dhaan konjam adhigama irukku.
Walking (nadaippayirchi) ellaam poaradhu illayaa?
Doctor: Your blood pressure is normal, but your weight is slightly high. Don’t you go
for walking?
மருத்துவர்: பிரஷர் சரியாதான் இருக்கு. உங்க உடல் எட தான் கொஞ்சம் அதிகமா
இருக்கு. நடைப்பயிற்சி எல்லாம் பண்றது இல்லையா?
Kamala: Onnumae panradhu illa Doctor; veettu vaelaiyae sariyaa irukku.
Kamala: I don’t do anything (exercise) Doctor, busy with household chores.
கமலா: ஒண்ணுமே பண்றது இல்ல டாக்டர். வீட்டு வேலையே சரியா இருக்கு.
Maruthuvar: Oru mani naeramaavadhu udarpayirchikku odhukkunga ma – ippa illa, udambu sariyaana appuram.
Doctor: Set aside at least one hour for exercise – not now, once you are well.
மருத்துவர்: ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்க மா. இப்ப இல்ல உடம்பு
சரியான அப்புறம்.
Kamala: Sari, Doctor.
Kamala: OK, Doctor.
கமலா: சரி, டாக்டர்.
Maruthuvar: Indha maaththiraya moonu vaela saappaattukku appuram moonu naalu-kku saappidanum.
Indha capsula kaalailayum raathiriyum saappattukku appuram moonu naal saappidanum.
Doctor: Take this tablet thrice a day after food for three days. Take this capsule morning and night after food for three days.
மருத்துவர்: இந்த மாத்திரைய மூணு வேளை சாப்பாட்டுக்கு அப்புறம் மூணு
நாளுக்கு சாப்பிடணும். இந்த கேப்சுல காலையிலும் ராத்திரியும்
சாப்பாட்டுக்கு அப்புறம் மூணு நாள் சாப்பிடணும்.
Kamala: Saringa Doctor ! Bread, kanji,pazhangal-idhellam saappidalaama?
Kamala: Ok Doctor.Thank you. Doctor, can I eat foods like bread, porridge and fruits?
கமலா: சரிங்க டாக்டர் ! பிரட், கஞ்சி, பழங்கள் இதெல்லாம் சாப்பிடலாமா?
Maruthuvar: Bread vaendaam. Kanji, appuram neraiya pazhangal saappidunga.
Doctor: Don’t eat bread, but have porridge and lots of fruits.
மருத்துவர்: பிரட் வேணாம்மா , கஞ்சி அப்புறம் நெறையா பழங்கள் சாப்பிடுங்க.
Kamala: Nandri Doctor.
Kamala: Thank you Doctor.
கமலா: நன்றி டாக்டர்.
