1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
CONVERSATION 30– In the House
Uraiyaadal 30 – Veettil
உரையாடல் 30 – வீட்டில்
Conversation between Pradeep and Prakash
Pradeep-kkum Prakash-kkum idaiyae nadaiperum uraiyaadal
பிரதீப்புக்கும் பிரகாஷ்க்கும் இடையே நடைபெறும் உரையாடல்:
SPOKEN TAMIL
Pradeep: Hai! I am Pradeep.
Pradeep: Hai! En peyar Pradeep.
பிரதீப்: ஹாய்! என் பெயர் பிரதீப்.
Prakash: Hai! I am Prakash.
Prakash: Hai! En peyar Prakash.
பிரகாஷ்: ஹாய்! என் பெயர் பிரகாஷ்.
Pradeep: We just migrated to this house yesterday.
Pradeep: Naanga naeththudhaan indha veettukku pudhusaa kudi vandhurukkoam.
பிரதீப்: நாங்க நேத்து தான் இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்துருக்கோம்.
Prakash: Oh, very happy.
Prakash: Oh, rombasandhosam.
பிரகாஷ்: ஓ, ரொம்ப சந்தோஷம்.
Pradeep: We are four in our house. Myself, my father, mother and sister.
Pradeep: Enga veetla naanga naalu paeru itukkoam. Naan, appaa, ammaa, thangachchi.
பிரதீப்: எங்க வீட்ல நாங்க நாலு பேரு இருக்கோம். நான், அப்பா, அம்மா, தங்கச்சி.
Prakash: Oh! Is it!
Prakash: Ohh! Appadiyaa!
பிரகாஷ்: ஓ! அப்படியா!
Pradeep: How many people are there in your house?
Pradeep: Unga veetla eththana peru irukkeenga?
பிரதீப்: உங்க வீட்ல எத்தன பேரு இருக்கீங்க?
Prakash: In my house also we are four. Myself, my father, mother and brother.
Prakash: Enga veetlayum naalu paeru itukkoam. Naan, Appaa, Ammaa, Annan.
பிரகாஷ்: எங்க வீட்லயும் நாலு பேரு இருக்கோம். நான், அப்பா, அம்மா, அண்ணன்.
Pradeep: In which school you study?
Pradeep: Nee endha school-a (palli) padikkira?
பிரதீப்: நீ எந்த ஸ்கூல்ல (பள்ளி) படிக்கிற?
Prakash: I am studying 6th Standard at Little Flower Convent.
Prakash: Naan Little Flower Convent-la 6th Standard (aaraam vaguppu) padikkiraen.
பிரகாஷ்: நான் லிட்டில் ஃப்ளவர் கான்வெண்ட்ல சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் (ஆறாம் வகுப்பு) படிக்கிறேன்.
Pradeep: Where is your brother studying?
Pradeep: Unnoda annan aenga padikkiraanga?
பிரதீப்: உன்னோட அண்ணன் எங்க படிக்கிறாங்க?
Prakash: My brother is studying 11th Standard. He is staying in the hostel. Where are you studying?
Prakash: En annaan 11th Standard (Padhinoraam Vaguppu) padikkiraan. Avan hostel-la (vidudhi) thangi padikkiraan. Nee endha school-la padikkira?
பிரகாஷ்: என் அண்ணன் லெவென்த் ஸ்டாண்டர்ட் (பதினொராம் வகுப்பு) படிக்கிறான். அவன் ஹாஸ்டல்ல (விடுதி) தங்கி படிக்கிறான். நீ எந்த ஸ்கூல்ல படிக்கிற?
Pradeep: I am studying 6th Standard and my sister is studying 4th Standard. We are studying at KVS School.
Pradeep: Naan 6th Standard padikkiraen. En thangachchi 4th Standard padikkiraa. Naanga KVS school-la padikkiroam.
பிரதீப்: நான் சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். என் தங்கச்சி ஃபோர்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறா. நாங்க KVS ஸ்கூல்ல படிக்கிறோம்.
Prakash: Will you be free in the evening? Shall we play every day in the park after finishing our homework?
Prakash: Nee evening time-la free-a iruppiya? Daily (dhinam) evening (maalai) home work-a (veettupaadam) mudichchittu, park-la(poongaa) poyvilayaadalaamaa?
பிரகாஷ்: நீ ஈவ்னிங் டைம் ல ஃப்ரீயா இருப்பியா? டெய்லி (தினம்) ஈவினிங் (மாலை) ஹோம் ஓர்க் முடிச்சுட்டு (வீட்டுப் பாடம்) பார்க்ல (பூங்கா) போய் விளையாடலாமா?
Pradeep: Oh! Sure. We can start playing tomorrow onwards.
Pradeep: Ohh! Nichchayamaa!. Naalai muthal naama vilaiyaadalam.
பிரதீப்: ஓ! நிச்சயமா!.நாளை முதல் நாம விளையாடலாம்.
Prakash: Ok, thank you. We will meet tomorrow.
Prakash: Sari. Nandri. Naalaikku meet (Sandhippu) pannuvoam.
பிரகாஷ்: சரி.நன்றி.. நாளைக்கு மீட் (சந்திப்பு) பண்ணுவோம்.