CONVERSATION – 7
HUSBAND AND WIFE
Uraiyaadal –Kanavanum Manaiviyum
உரையாடல் – கணவனும் மனைவியும்
Husband and Wife
CONVERSATION – 7
Husband AND Wife
Husband: Night saappuda enna irukku? Sariyaana pasi.
Husband: What’s for dinner? Very hungry.
கணவன்: நைட் (இரவு) சாப்புட என்ன இருக்கு. சரியான பசி.
Wife: Idly, saambaar, chatni vachchu irukkaen.
Wife: Idli, sambar and chutney are ready.
மனைவி: இட்லி, சாம்பார், சட்னி வச்சு இருக்கேன்.
Husband: Rathi saappittaalaa?
Husband: Did Rathi eat?
கணவன்: ரதி சாப்பிட்டாளா?
Wife: Ava appavae saappittu homework (veettu paadam) pannittu irukkaa.
Wife: She ate already and doing homework.
மனைவி: அவ அப்பவே சாப்பிட்டு ஹோம்வொர்க் (வீட்டு பாடம்) பண்ணிட்டு இருக்கா.
Husband: Electrician-a vara sonnaen. Vandhu fan-a sari senjaanaa?
Husband: I told the electrician to come here. Did he come and fix the fan?
கணவன்: எலெக்ட்ரீஷியன்-அ (மின் பணியாளர் ) வர சொன்னேன். வந்து
ஃபேன்-அ (மின்விசிறி) சரி செஞ்சானா?
Wife: Aamaanga. Kaalaiyilayae vandhu sari senjittu nooththi ambadhu ruvaa vaangittu poayittaan.
Wife: Yes. He came in the morning and fixed the fan. He took Rs.150.
மனைவி: ஆமாங்க. காலையிலேயே வந்து சரி செஞ்சிட்டு நூத்தி அம்பது ருவா
வாங்கிட்டு போயிட்டான்.
Husband: Naalu naalaa fan saththaththula thookkamae varala.
Husband: Due to the noise, was not able to sleep for four days.
கணவன்: நாலு நாளா ஃபேன் (மின்விசிறி) சத்தத்துல தூக்கமே வரல.
Wife: Aamaa, naanum seriyaavae thoongala. Yaenga! Indha vaaraththula rendu kalyaana veedu irukku.
Wife: Yes. I was also not able to sleep well. There are two marriage functions in this week.
மனைவி: ஆமா, நானும் சரியாவே தூங்கல. ஏங்க! இந்த வாரத்துல ரெண்டு கல்யாண
வீடு இருக்கு.
Husband: Ennanaikku ellaam irukku?
Husband: Which date?
கணவன்: என்னனைக்கு எல்லாம் இருக்கு?
Wife: Vellikkizhamai namma apartment Vasu maamaa paiyanukku. Gnayitrukkizhamai unga periyammaa paiyan Saravananukku.
Wife: Our apartment resident Vasu uncle’s son marriage is on Friday and your aunty’s son Saravanan marriage is on Sunday.
மனைவி: வெள்ளிக்கிழமை நம்ம அபார்ட்மெண்ட் வாசு மாமா பையனுக்கு.
ஞாயிற்றுக்கிழமை உங்க பெரியம்மா பையன் சரவணனுக்கு.
Husband: Vellikkizhamai enakku leave (vidumurai) poada mudiyaadhu. Namma apartment-la un friend Nalini kooda po. Gnayitrukkizhamai namma oorukku poagalaam.
Husband: I can’t take leave on Friday. You can go with your apartment friend Nalini. We will go to native on Sunday.
கணவன்: வெள்ளிக்கிழமை எனக்கு லீவு (விடுமுறை) போட முடியாது. நம்ம
அபார்ட்மெண்ட்-ல (அடுக்கு மாடி குடியிருப்பு) உன் ஃப்ரெண்ட் (தோழி)
நளினி கூட போ. ஞாயிற்றுக்கிழமை நாம ஊருக்கு போகலாம்.
Wife: Saringa. Nalini-ta kaekkuraen.
Wife: Ok. I will ask Nalini.
மனைவி: சரிங்க. நளினி-ட கேக்குறேன்.
Husband: Mandabam irukkura idam unakku theriyumaa?
Husband: Do you know where the marriage hall is?
கணவன்: மண்டபம் இருக்குற இடம் உனக்கு தெரியுமா?
Wife: Theriyaadhunga. Nalinikku theriyumaannu phone panni kaekkuraen.
Wife: I don’t know. I will ask Nalini over phone whether she knows.
மனைவி: தெரியாதுங்க. நளினிக்கு தெரியுமான்னு ஃபோன்(தொலைபேசி) பண்ணி
கேக்குறேன்.
Wife: Hello Nalini.
Wife: Hello Nalini.
மனைவி:ஹலோ நளினி.
Nalini: Hi Malini! Sollu.
Nalini: Hi Malini! Tell me.
நளினி: ஹாய் மாலினி! சொல்லு.
Wife: Vellikizhamai Vasu maamaa veettu kalyaanam nadakkura mandabam unakku theriyumaa?
Wife: Do you know the marriage hall where Vasu uncle’s son’s marriage is going to be
held on Friday?
மனைவி: வெள்ளிக்கிழமை வாசு மாமா வீட்டு கல்யாணம் நடக்குற மண்டபம் உனக்கு
தெரியுமா?
Nalini: Aamaa, theriyum.
Nalini: Yes, I know.
நளினி: ஆமா, தெரியும்.
Wife: Nee eppadi poaga poara?
Wife: How will you go there?
மனைவி: நீ எப்படி போக போற?
Nalini: Ennoaada car-la (vandi) poga poaraen.
Nalini: I will go in my Car.
நளினி: என்னோட கார்-ல(வண்டி) போக போறேன்.
Wife: Unnoada car-la (vandi-la) oru aal-kku idam irukkumaa?
Wife: Will there be place for one more person?
மனைவி: உன்னோட கார்-ல(வண்டி) ஒரு ஆள்-க்கு இடம் இருக்குமா?
Nalini: Irukkum. Nee variyaa?
Nalini: Yes. Are you coming?
நளினி: இருக்கும். நீ வரியா?
Wife: Aamaa. Romba thanks. Suresh-kku office-la leave poada mudiyaadhu. Adhanaala enga veettula irundhu naan mattum dhaan varaen. Enakku mandabam irukkura idam theriyaadhu. Adhunaala naan unga kooda varalaam-nu ninaichaen.
Wife: Yes. Thanks Nalini. Suresh can’t take leave in his office. So, I am the only person
from my home. I don’t know the marriage hall where it is. That’s why I thought
I could come with you.
மனைவி: ஆமா. ரொம்ப தேங்க்ஸ்(நன்றி). சுரேஷ்-க்கு ஆஃபிஸ்-ல(அலுவலகம்) லீவு
(விடுமுறை) போட முடியாது. அதனால எங்க வீட்டுல இருந்து நான் மட்டும்
தான் வரேன். எனக்கு மண்டபம் இருக்குற இடம் தெரியாது. அதனால நான்
உங்க கூட வரலாம்-ன்னு நினைச்சேன்.
Nalini: Adhu pirachanai-ye illa. Nee kandippaa va. Seri, eththana mani-kku poagalaam?
Nalini: That’s not a problem. You come with me. Well, when shall we leave?
நளினி: அது பிரச்சனை-யே இல்ல. நீ கண்டிப்பா வா. சரி, எத்தன மணி-க்கு
போகலாம்?
Wife: Muhoorththam pathth-arai la irundhu padhinonn-arai mani-kkulla. Car-la (vandi) mandabaththukku poaga evvalavu naeram aagum?
Wife: Muhurththam is between 10.30 and 11.30am. How long does it take to reach the
marriage hall by car?
மனைவி: முகூர்த்தம் பத்து-அரை-ல இருந்து பதினொன்னு-அரை மணி-க்குள்ள.
கார்-ல(வண்டி) மண்டபத்துக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்?
Nalini: Naappadhu illa ambadhu nimisham aagum.
Nalini: It takes 40 to 50 minutes.
நளினி: நாப்பது இல்ல அம்பது நிமிஷம் ஆகும்.
Wife: Appoa namma ombadh-arai mani-kku poanaa sariyaa irukkum.
Wife: If we leave by 9.30am, it will be fine.
மனைவி: அப்போ நாம ஒம்பது-அரை மணி-க்கு போனா சரியா இருக்கும்.
Nalini: Sari. Kilamburadhukku munnadi naan call pannuraen.
Nalini: Ok. I will call you before leaving.
நளினி: சரி. கிளம்புறதுக்கு முன்னாடி நான் கால்(தொலைபேசி அழைப்பு)
பண்ணுறேன்.
Wife: Yaenga, Nalini sarinnu sollittaa.
Wife: Nalini said ok.
மனைவி: ஏங்க, நளினி சரி-ன்னு சொல்லிட்டா.
Husband: Romba nalladhaa pochchu!
Husband: That’s good!
கணவர்: ரொம்ப நல்லதா போச்சு!
Wife: Appoa rendu kalyaanaththukkum gift (parisu) vaanganum-la? Adhukku naalai-kku kadaikku poaganum.
Wife: We have to purchase gift for both marriages. We will go shopping tomorrow.
மனைவி: அப்போ ரெண்டு கல்யாணத்துக்கும் கிஃப்ட் (பரிசு) வாங்கணும்-ல? அதுக்கு
நாளை-க்கு கடைக்கு போகணும்.
Husband: Sari. Modhala konjam saambar ooththu.
Husband: Ok. First give some sambar.
கணவர்: சரி. மொதல கொஞ்சம் சாம்பார் ஊத்து.
Wife: Saambar kaaramaa irukkaa?
Wife: Is sambar spicy?
மனைவி: சாம்பார் காரமா இருக்கா?
Husband: Illayae, romba nallaa irukku. Murungakkaai pottaalae sambaar thani rusi dhaan.
Husband: No. It is very tasty. Sambar has an unique taste when we add drumstick.
கணவர்: இல்லயே, ரொம்ப நல்லா இருக்கு. முருங்கக்காய் போட்டாலே சாம்பார் தனி
ருசி தான்.
Wife: Dosa vaenumnaa onnu poadavaa, illa rendu idli vaikkavaa?
Wife: Do you want one dosa or two idlies?
மனைவி: தோச வேணும்னா ஒண்ணு போடவா, இல்ல ரெண்டு இட்லி வைக்கவா?
Husband: Idli-ae vai.
Husband: One idli will do.
கணவர்: இட்லியே வை.
Wife: saringa.
Wife: Ok.
மனைவி: சரிங்க.