Conversation 15

At the School

Uraiyaadal – Palliyil
உரையாடல் – பள்ளியில்

One on One Tamil class

Conversation between Sanjiv and Sachin

CONVERSATION – 15
At School
Conversation between Sanjev & Sachin.

Sanjev: Vaadaa Sachin, lunch saappuda poagalaam.
Sanjev: Come on Sachin, let’s go for lunch.
சஞ்சீவ்: வாடா சச்சின், லஞ்ச் (மதிய உணவு) சாப்புட போகலாம்.

Sachin: Innaikku unga veettula enna saappaadu?
Sachin: What’s the meal at your home today?
சச்சின்: இன்னைக்கு உங்க வீட்டுல என்ன சாப்பாடு?

Sanjev: Lemon (elumichchai) saadham-um, urulai kizhangu poriyal-um. Unga veettula enna?
Sanjev: Lemon rice and potato roast. What’s in your home?
சஞ்சீவ்: லெமன் (எலுமிச்சை) சாதமும், உருளை கிழங்கு பொரியலும். உங்க வீட்டுல என்ன?

Sachin: Ammaa innaikku late-aa (thaamadhamaa) endhiruchchaanga. Adhanaal-a verum bread-um , Jam-um dhaan.
Sachin: Mom woke up very late today. So bread and jam only.
சச்சின்: அம்மா இன்னைக்கு லேட்டா (தாமதமா) எந்திருச்சாங்க. அதனால வெறும்
பிரட்டும் (ரொட்டி), ஜாமும் (பழப்பாகு) தான்.

Sanjev: Sari. Rendu paerum share panni saappudalaam. Yaendaa ammaa late-aa endhiruchchaanga? avangalukku udambu sari-illaiyaa?
Sanjev: Ok. We will share and eat. Why did mom wake up late? Is she not well?
சஞ்சீவ்: சரி. ரெண்டு பேரும் சேர் (பகிர்ந்து) பண்ணி சாப்புடலாம். ஏன்டா அம்மா லேட்டா எந்திருச்சாங்க? அவங்களுக்கு உடம்பு சரி இல்லையா?

Sachin: Appadi ellaam onnum illa. Oorula irundhu thaaththaa, paatti, maamaa, aththai, avangaloda paiyan Karthick vandhu irundhaanga. Ellaarum saerndhu Zoo-kku poayittu, raaththiri late-aa vandhoam.
Sachin: There is no such thing. Grandpa, grandma, uncle, aunty and their son Karthick came from home town. We all went to Zoo and arrived late.
சச்சின்: அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. ஊர்ல இருந்து தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அவங்களோட பையன் கார்த்திக் வந்து இருந்தாங்க. எல்லாரும் சேர்ந்து ஜூக்கு (மிருகக்காட்சி சாலை) போயிட்டு, ராத்திரி லேட்டா வந்தோம்.

Sanjev: Enna, Zoo-kku poaniyaa?
Sanjev: What, did you go to the Zoo?
சஞ்சீவ்: என்ன, ஜூ-க்கு போனியா?

Sachin: Amaa da! Romba nallaa irundhadhu. Saaputtuttae ellaaththaiyum solraen.
Sachin: Yes! Very nice. I will tell you everything while eating.
சச்சின்: ஆமா டா! ரொம்ப நல்லா இருந்தது. சாப்புட்டுட்டே எல்லாத்தையும் சொல்றேன்.

Sanjev: Veettula irundhu eppadi poaneenga?
Sanjev: How did you go from home?
சஞ்சீவ்: வீட்டுல இருந்து எப்படி போனீங்க?

Sachin: Car-la (vandi) idam paththaadhu, adhanaala appaa van arrange (yaerpaadu) pannanga. Naanum Karthick-um onnaa ukkaandhu paesikkittae poanadhu romba jolly-aa irundhuchchu.
Sachin: There is not enough space in the car, so arranged a van. I and Karthick sat together and travelled. It was very good.
சச்சின்: கார்ல (வண்டி) இடம் பத்தாது, அதனால வேன் அரேஞ்ச் (ஏற்பாடு) பண்ணாங்க. நானும் கார்த்திக்கும் ஒண்ணா உக்காந்து பேசிக்கிட்டே போனது ரொம்ப ஜாலியா இருந்துச்சு.

Sanjev: Unga veettula irundhu zoo-kku poaga evvalavu naeram aachchu?
Sanjev: How long does it take to go to the Zoo from your home?
சஞ்சீவ்: உங்க வீட்டுல இருந்து ஜூக்கு போக எவ்வளவு நேரமாச்சு?

Sachin: Ombadhu manikku kilambi paththu manikku poayittoam. Appaa ellaarukkum entrance ticket eduththaanga. Thaaththaa paatti-kku suththi paakka Battery car-kkum ticket eduththaanga.
Sachin: We left at 9 O’clock and reached at 10 O’clock. Daddy took the entrance ticket for everyone, took the ticket for grandparents to look around by battery car.
சச்சின்: ஒம்பது மணிக்கு கிளம்பி பத்து மணிக்கு போயிட்டோம். அப்பா எல்லாருக்கும் எண்ட்ரன்ஸ் டிக்கெட் (நுழைவு கட்டணம்) எடுத்தாங்க. தாத்தா, பாட்டிக்கு சுத்தி பாக்க பேட்டரி காருக்கும் (மின்கலம் வண்டி) டிக்கெட் எடுத்தாங்க.

Sanjev: Entrance ticket evvalavu, battery car-kku evvalavu ruvaa?
Sanjev: How much is the entrance ticket and how much for battery car?
சஞ்சீவ்: எண்ட்ரன்ஸ் டிக்கெட் எவ்வளவு, பேட்டரி காருக்கு எவ்வளவு ருவா?

Sachin: Oru aalukku nooru ruvaa, Battery car-kku oru aalukku iranooru ruvaa.
Sachin: Rs.100 per person, Rs.200 per person for battery car.
சச்சின்: ஒரு ஆளுக்கு நூறு ருவா, பேட்டரி காருக்கு ஒரு ஆளுக்கு இறநூறு ருவா.

Sanjev: Zoo-la ennenna paaththeenga?
Sanjev: What did you see at Zoo?
சஞ்சீவ்: ஜூல என்னென்ன பாத்தீங்க?

Sachin: Ulla poanona oru mountain (malai) vachchu, adhula falls-um (aruvi), adhukku keezha kulamum irundhadhu. Kulaththula vaaththu, meen, kokku ellaam irundhadhu. Aduththu ulla marangal-la neraiya kurangugal-a paaththoam.
Sachin: Near the entrance there was a mountain with waterfalls and a pond beneath it. There was a duck, fish, and crane, everything in the pond. We saw lot of monkeys in the trees nearby.
சச்சின்: உள்ள போனோன ஒரு மௌண்டைன் (மலை) வச்சு, அதுல ஃபால்சும் (அருவி), அதுக்கு கீழே குளமும் இருந்தது. குளத்து-ல வாத்து, மீன், கொக்கு, எல்லாம் இருந்தது. அடுத்து உள்ள மரங்கள்ள நெறைய குரங்குகள பாத்தோம்.

Sanjev: Kurangukku pazhangal, snacks edhuvum kuduththiyaa?
Sanjev: Did you give monkeys fruits and snacks?
சஞ்சீவ்: குரங்குகளுக்கு பழங்கள், ஸ்நாக்ஸ் (சிற்றுண்டி) எதுவும் குடுத்தியா?

Sachin: Illadaa. Naama edhuvum kondu poaga koodaadhu. Edhaiyum thodavum mudiyaadhu.
Sachin: No. We should not carry anything. Can’t touch anything.
சச்சின்: இல்லடா. நாம எதுவும் கொண்டு போக கூடாது. எதையும் தொடவும் முடியாது.

Sanjev: Appadiyaa?
Sanjev: Really?
சஞ்சீவ்: அப்படியா?

Sachin: Mayil paaththaen. Vella mayilum, koondukkulla panchavarna kiliyum irundhuchchu. Mayil thoagaiya viruchchu aadittu irundhadha paakka romba sandhoshamaa irundhadhu.
Sachin: I saw the peacock. There was a white peacock and macaw inside the cage. It was so nice to see the peacock dance.
சச்சின்: மயில் பாத்தேன். வெள்ள மயிலும், கூண்டுக்குள்ள பஞ்சவர்ண கிளியும் இருந்துச்சு. மயில் தோகைய விருச்சு ஆடிட்டு இருந்தத பாக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.

Sanjev: Maan paaththia?
Sanjev: Did you see the deer?
சஞ்சீவ்: மான் பாத்தியாடா?

Sachin: Pulli maan-um, kavari maan-um paaththaen. Adhukku pakkaththila irundha kulaththula neer naai-um irundhadhu.
Sachin: I have seen chital deer and others. There was also water dog in the pond next to it.
சச்சின்: புள்ளி மானும், கவரி மானும் பாத்தேன். அதுக்கு பக்கத்தில இருந்த குளத்துல நீர் நாயும் இருந்தது.

Sanjev: Zoo-la paambu irundhadhaa?
Sanjev: Were there snakes in the Zoo?
சஞ்சீவ்: ஜூல பாம்பு இருந்ததா?

Sachin: Paambukkunnae oru area irundhadhu. Adhula neraiya vagai vagaiyaana paambugal-a paaththoam. Sila paambugal-a paakkavae bayamaa irundhadhu da.
Sachin: There was an area for the snakes itself. We saw different kind of snakes. It was scary to see some snakes.
சச்சின்: பாம்புக்குன்னே ஒரு ஏரியா (பரப்பு) இருந்தது. அதுல நெறைய வகை வகையான பாம்புகள பாத்தோம். சில பாம்புகள பாக்கவே பயமா இருந்ததுடா.

Sanjev: Kaattu vilangugal-a paaththiyaa?
Sanjev: Did you see wild animals?
சஞ்சீவ்: காட்டு விலங்குகள பாத்தியா?

Sachin: Yaanai, puli, singam, kaandaa mirugam, karadi innum neraiya vilangugal-a paaththoam. Puli maraththu maela paduththu irundhadha paakka nallaa irundhadhu.
Sachin: We saw elephant, tiger, lion, rhinoceros, bear and other animals. It was nice to see the tiger lying on the tree.
சச்சின்: யானை, புலி, சிங்கம், காண்டா மிருகம், கரடி இன்னும் நெறைய விலங்குகள பாத்தோம். புலி மரத்து மேல படுத்து இருந்தத பாக்க நல்லா இருந்தது.

Sanjev: Puli namma pakkaththula varaadhaa?
Sanjev: Will the tiger come near to us?
சஞ்சீவ்: புலி நம்ம பக்கத்துல வராதா?

Sachin: Varaadhu da. Adha suththi vaeli poattu irukkaanga. Singaththa kutti-oda paaththoam.
Sachin: Will not come. They have fixed fence around it. We saw the lion with cub.
சச்சின்: வராதுடா. அத சுத்தி வேலி போட்டு இருக்காங்க. சிங்கத்த குட்டியோட பாத்தோம்.

Sanjev: Idhai ellaam photo eduththeengalaa?
Sanjev: Have you taken pictures of all these?
சஞ்சீவ்: இதை எல்லாம் போட்டோ (புகைப்படம்) எடுத்தீங்களா?

Sachin: Appaa mobile-la eduththaanga. Nee veettukku varum bodhu naan unakku kaatturaen.
Sachin: Dad took in his mobile. I will show you when you come home.
சச்சின்: அப்பா மொபைல்ல (கைபேசி) எடுத்தாங்க. நீ வீட்டுக்கு வரும்போது நான் உனக்கு காட்டுறேன்.

Sanjev: Sari da. Nee solradha paakkum bodhu enakkum Zoo-kku poaganum-nu aasaiyaa irukku. Aduththa vaaram poalaamaa-nnu appaa-kitta kaekkanum.
Sanjev: Ok. Based on your words, I am eager to go to the Zoo. I will ask Dad to go to the Zoo next week.
சஞ்சீவ்: சரிடா. நீ சொல்றத பாக்கும்போது எனக்கும் ஜூக்கு போகணும்முன்னு ஆசையா இருக்கு. அடுத்த வாரம் போலாமான்னு அப்பாகிட்ட கேக்கணும்.

Sachin: Naeram aagudhu da. Class-kku (vaguppu) poalaamaa?
Sachin: Getting late. Shall we go to class?
சச்சின்: நேரமாகுதுடா. கிளாஸுக்கு (வகுப்பு) போலாமா?

Sanjev: Poalaam da.
Sanjev: Yes, we may go.
சஞ்சீவ்: போலாம் டா.

Conversation

32 Conversations in colloquial Tamil and English

Get In Touch with Us

    Tamil lesson
    × Want to join our classes?