Conversation – 31
Conversation between Ram and Ravi
Conversation between Ram and Ravi
CONVERSATION – 31
Cricket match
Conversation between Ram and Ravi
Ram: Hi Ravi, eppadi irukka?
Ram: Hi Ravi. How are you?
ராம்: ஹாய் ரவி, எப்படி இருக்க?
Ravi: Naan nallaa irukkaen Ram. Nee eppadi irukka?
Ravi: I’m fine Ram. How about you?
ரவி: நான் நல்லா இருக்கேன் ராம். நீ எப்படி இருக்க?
Ram: Naan nallaa irukkaen. Nandri. Ravi, naeththu cricket practice appoa (payirchiyin poadhu)
unna naan paakkalayae?
Ram: I’m fine. Thank you. Ravi, I did not see you during the cricket match practice yesterday.
ராம்: நான் நல்லா இருக்கேன், நன்றி. ரவி, நேத்து கிரிக்கெட் பயிற்சியின்போது உன்னை நான் பார்க்கலயே?
Ravi: Sorry Ram. Naeththu interschool cricket match (palligalukku idaiyilaana cricket
vilaiyaattu) vilaiyaada poyi irunthaen.
Ravi: Sorry Ram. Yesterday I had gone to play an interschool cricket match.
ரவி: மன்னிச்சிக்கோ ராம். நேத்து இண்டெர் ஸ்கூல் கிரிக்கெட் மேட்ச் (பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டு) விளையாடப் போயிருந்தேன்.
Ram: Oh, appadiya, nalladhu. Match (poatti) eppadi irunthuchu?
Ram: Oh, that’s good. How was the match?
ராம்: ஓ அப்படியா, நல்லது. மேட்ச் (போட்டி) எப்படி இருந்துச்சு?
Ravi: Romba nallaa irunthuchu. Aanaa, final match (iruthi poatti) kashtamaa irunthuchu.
Ravi: It was great. But the final match was very tough.
ரவி: ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா, ஃபைனல் மேட்ச் (இறுதிப் போட்டி) கஸ்டமா இருந்துச்சு.
Ram: Oh, yaaroada neenga final match (iruthi poatti) vilaiyaadineenga?
Ram: Oh, with whom did you play the final match?
ராம்: ஓ, யாரோட நீங்க ஃபைனல் மேட்ச் (இறுதிப் போட்டி) விளையாடினீங்க?
Ravi: Naanga St.John’s palli-oada vilaiyadinoam.
Ravi: We played with St.John’s school.
ரவி: நாங்க செயிண்ட் ஜான்’ஸ் பள்ளியோடு விளையாடினோம்.
Ram: Ravi, St.John’s school team (palliyin ani) romba strong-nnu kelvip pattirukkaen.
Ram: Ravi, I have heard that St.John’s is a tough team to play with.
ராம்: ரவி, செயிண்ட் ஜான்’ஸ் ஸ்கூல் டீம் (பள்ளியின் அணி) ரொம்ப ட்ராங்-ன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
Ravi: Aamaa Ram, avanga arputhamaa vilaiyaadinaanga. Naanga avangala 126 runs ku
(oattangalukku) all out pannitoam. Aanaa, andha rungal-ah edukka dhaan kastamaa irunthuchu.
Ravi: Yes Ram, they played fantastically. We restricted them to a score of 126. But, chasing that
score was really tough.
ரவி: ஆமா ராம், அவங்க அற்புதமா விளையாடினாங்க. நாங்க அவங்கள 126 ரன்ஸ்க்கு (ஓட்டங்களுக்கு) ஆல் அவுட் பண்ணிட்டோம். ஆனா, அந்த ரன்களை எடுக்க தான் கஷ்டமா இருந்துச்சு.
Ram: Eppadi samalicheenga?
Ram: How did you manage?
ராம்: எப்படி சமாளிச்சீங்க?
Ravi: Mudhal anju ball-la naanga 6 run eduththoam. Kadaisi ball-la 4 run thevai
irunthuchu.
Ravi: We got 6 runs in the first five balls and we had to get another 4 runs in the last ball.
ரவி: முதல் அஞ்சு பந்துகளில் நாங்க 6 ரன்கள் எடுத்தோம். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை இருந்துச்சு.
Ram: Idhu viruviruppaa irukkae. Kadaisiyila enna nadanthuchu?
Ram: Wow, it is thrilling. What happened finally?
ராம்: இது விறுவிறுப்பா இருக்கே. கடைசியில என்ன நடந்துச்சு?
Ravi: Adhu pathattamaana naeRamaa irunthuchu. Aanaa, en friend (nanban) Raheem vetrikku
thaevaiyaana rungala (oattangala) adichaan.
Ravi: It was a nervous moment. But, my friend Raheem scored the winning runs.
ரவி: அது பதட்டமான நேரமா இருந்துச்சு. ஆனா, என் ஃப்ரெண்ட் (நண்பன்) ரஹீம் வெற்றிக்குத் தேவையான ரன்களை (ஓட்டங்களை) அடிச்சான்.
Ram: Wow, naan andha urchaagamaana aattaththa paakka miss pannitaen.
Ram: Wow, I missed that exciting match.
ராம்: வாவ், நான் அந்த உற்சாகமான ஆட்டத்த பார்க்கத் தவறிட்டேன்.
Ravi: Unmaiyilaeyae adhu romba urchaagamaa irunthuchu.
Ravi: Indeed, it was an exciting match.
ரவி: உண்மையிலேயே அது ரொம்ப உற்சாகமாக இருந்துச்சு.
Ram: Vaazththukkal Ravi.
Ram: Congratulations Ravi.
ராம்: வாழ்த்துக்கள் ரவி.
Ravi: Nandri. Unakku naeRam iruntha aduththa poattikku engaloada vaa.
Ravi: Thank you. Join us for the next match if you are free.
ரவி: நன்றி. உனக்கு நேரம் இருந்தா அடுத்த போட்டிக்கு எங்களோட வா.
Ram: Kandippa varaen.
Ram: Sure, I will come.
ராம்: கண்டிப்பா வரேன்.