2     4     6     8   9   10  11  12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29  30  31  32

 

CONVERSATION 32In the classroom

Uraiyaadal 31  – Vagupparaikku Ullae
உரையாடல் 31 – வீட்டில்

 

 

Conversation between Ajay and Anand

Ajay-kkum Anand-kkum idaiyae nadaiperum uraiyaadal

Ajay-kkum Anand-kkum idaiyae nadaiperum uraiyaadal

 

SPOKEN TAMIL

 

Ajay: Anand, why are you sad?
Ajay:  Anand yaen dull-aa (kavalai) irukka?
அஜய்: ஆனந்த் ஏன் டல்லா (கவலை) இருக்க?

 

Anand: Nothing Ajay!
Anand: Onnumilla Ajay!
ஆனந்த்: ஒண்ணும் இல்ல அஜய்!

 

Ajay: No, you have some problem. Tell me what.
Ajay: Illa, unakku yaedho problem (pirachchanai) irukku. Enna-nu sollu.
அஜய்: இல்ல, உனக்கு ஏதோ ப்ராப்ளம் (பிரச்சனை) இருக்கு.  என்ன-னு சொல்லு.

 

Anand: How do you say?
Anand: Eppadidaa solra?
ஆனந்த்: எப்படிடா சொல்ற?

 

Ajay: It’s seen on your face.
Ajay:  Unnoda face-a (mugam) paaththaalae theriyudhu.
அஜய்: உன்னோட  ஃபேஸ்ஸ (முகம்) பாத்தாலே தெரியுது.

 

Anand: Annual exam comes by next month. That is why I am feared.
Anand:  Aduththa maasam annual exam (aandu thaervu) varapogudhula. Athaan enakku payamaa irukku.
ஆனந்த்: அடுத்த மாசம் அனுவல் எக்ஸாம் (ஆண்டு தேர்வு) வரப் போகுதுல. அதான் எனக்கு பயமா இருக்கு.

 

Ajay: Why do you fear for that?
Ajay: Athukku yaen payappadura?
அஜய்:  அதுக்கு ஏன் பயப்படுற?

 

Anand:  I do not understand Maths properly. I fear that I will fail in Maths.
Anand: Enakku Maths (Kanidham) sariyaa puriyamaattaengudhu. Naan Maths-la fail (tholvi) aagiruvaennu bayamaa irukku.
ஆனந்த்: எனக்கு மேத்ஸ் (கணிதம்) சரியா புரியமாட்டேங்குது. நான் மேத்ஸ்ல ஃபெயில் (தோல்வி) ஆகிருவேன்னு பயமா இருக்கு.

 

Ajay:  Is this your problem?
Ajay:  Idhudhaan unnoda pirachchanaiyaa?
அஜய்: இது தான் உன்னோட பிரச்சனையா?

 

Anand: Yes, I was just thinking about this.
Anand: Aaamaa, naan idha paththidhaan yosichchittu irundhaen.
ஆனந்த்:  ஆமா, நான் இத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.

 

Ajay: You don’t worry. I will teach you Maths.
Ajay: Nee kavala padaadha. Naan unakku Maths (Kanidham) sollithaaraen.
அஜய்: நீ கவலப்படாத. நான் உனக்கு மேத்ஸ் (கணிதம்) சொல்லி தாரேன்.

 

Anand: When will you teach?
Anand: Eppa solli tharuva?
ஆனந்த்: எப்ப சொல்லிதருவ?

 

Ajay: After school hours, we can sit and practice maths in the evening.
Ajay:  Evening (saayandhiram) school (palli) mudinjathukku appuramaa, naama rendu paerum ukkaandhu Maths paakkalaam.
அஜய்:  ஈவினிங் (சாயந்திரம்) ஸ்கூல் (பள்ளி) முடிஞ்சதுக்கு அப்புறமா, நாம ரெண்டு பேரும் உக்காந்து மேத்ஸ் பாக்கலாம்.

 

Anand: It may be late for you to go home!
Anand:  Unakku veettukku poga late (thaamadham) aagumla!
ஆனந்த்:  உனக்கு வீட்டுக்கு போக லேட் (தாமதம்) ஆகும்ல!

 

Ajay: No problem, I will inform my mother and come.
Ajay:   No problem, naan en ammaakitta naalaikku sollittu vaaraen.
அஜய்: நோ ப்ராப்ளம், நான் என் அம்மாகிட்ட நாளைக்கு சொல்liட்டு வாறேன்.

 

Anand: Okay.
Anand: Sari.
ஆனந்த்: சரி.

 

Ajay: You can understand Maths only when you practice that often.
Ajay: Adikkadi senju paaththaaththaan Maths puriyum.
அஜய்: அடிக்கடி செஞ்சு பாத்தாத்தான் மேத்ஸ் புரியும்.

 

Anand: Okay, I will do that.
Anand: Sari, Naan appadiyae seyraen.
ஆனந்த்: சரி. நான் அப்படியே செய்றேன்.

 

Ajay: We will practice tomorrow onwards. You inform your mother and come.
Ajay: Naalai-la irundhu practice (payirchi) pannuvoam. Nee unnoda ammaa-kitta sollittu vandhuru.
அஜய்: நாளைல இருந்து பிராக்டிஸ் (பயிற்சி) பண்ணுவோம். நீ உன்னோட அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துரு.

 

Anand: Thank you very much!
Anand: Romba Thanks! (Mikka nanri)
ஆனந்த்: ரொம்ப தேங்க்ஸ்! (மிக்க நன்றி)
× Have Questions?