Conversation – 19
Inside the Train
Uraiyaadal – Thodarvandiyin Ulley
உரையாடல் – தொடர்வண்டின் உள்ளே
Conversation between Two Passengers
CONVERSATION – 19
Inside the train
Conversation between two passengers
Payaniyar 1: Hello Sir!
Passenger 1: Good morning sir.
பயணியர் 1: வணக்கம் ஐயா.
Payaniyar 2: Hello.
Passenger 2: Good morning.
பயணியர் 2: வணக்கம்.
Payaniyar 1: Indha luggage-a (saamaan) naan inga vachchukkalaamaa?
Passenger 1: May I keep this luggage here?
பயணியர் 1: இந்த லக்கேஜ (சாமான்) நான் இங்க வச்சுக்கலாமா?
Payaniyar 2: Sari! dhaaralamaa vachchukkoanga.
Passenger 2: Oh Yes! You can.
பயணியர் 2: சரி. தாராளமா வச்சுக்கோங்க.
Payaniyar 1: Thank you Sir. Neenga enga poreengannu therinjukkalaamaa?
Passenger 1: Thank you sir. May I know where you are going?
பயணியர்1: தேங்க் யு சார். நீங்க எங்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
Payaniyar 2: Ennoada paiyan Delhi-la irukkaan. Avanoada manaivi-kku kozhandha porandhu irukku. Ennoada manaivi-yum anga dhaan irukkaanga. Naan kozhandhaiya paakka poaraen. Neenga enga poareenga?
Passenger 2: My son is in Delhi. His wife Has delivered a baby. My wife is also there. I am going to see the baby. Where are you going?
பயணியர்2: என்னோட பையன் டெல்லில இருக்கான். அவனோட மனைவிக்கு குழந்தை பொறந்துருக்கு. என்னோட மனைவியும் அங்க தான் இருக்காங்க. நான் குழந்தைய பாக்க போறேன். நீங்க எங்க போறீங்க?
Payaniyar 1: Naanum Delhi-kku dhaan poaraen. Naan medical rep-aa Chennai-la vaela seiraen. Head office (thalaimai aluvalagam) Delhi-la irukku. Office vaelai-yaa Head office-kku poaraen.
Passenger 1: I am also going to Delhi. I am working in Chennai as a Medical rep. Head office is in Delhi. I am going to Head office for official work.
பயணியர்1: நானும் டெல்லிக்கு தான் போறேன். நான் மெடிக்கல் ரெப்-ஆ சென்னை-ல வேல செய்றேன். ஹெட் ஆஃபிஸ் (தலைமை அலுவலகம்) டெல்லி-ல இருக்கு. ஆஃபிஸ் வேலையா ஹெட் ஆஃபிஸ்க்கு போறேன்.
Payaniyar 2: Neenga adikkadi tour poaveengalaa?
Passenger 2: Will you go on tours often?
பயணியர் 2: நீங்க அடிக்கடி டூர் போவீங்களா?
Payaniyar 1: Maasam oru thadava business meeting nadakkum. Adhula senior officers (mooththa adhikaari) ellaarum kalandhukkuvoam.
Passenger 1: Business meetings will be held once a month. All senior officials will attend this.
பயணியர் 1: மாசம் ஒரு தடவ பிசினஸ் மீட்டிங் (வணிக கூட்டம்) நடக்கும். அதுல சீனியர் ஆஃபிஸர்ஸ் (மூத்த அதிகாரி) எல்லாரும் கலந்துக்குவோம்.
Payaniyar 2: Indha vaela ungalukku kashtamaa illayaa?
Passenger 2: Is this work difficult for you?
பயணியர் 2: இந்த வேல உங்களுக்கு கஷ்டமா இல்லயா?
Payaniyar 1: Illa Sir. Naan B.PHARM-la degree mudichchu irukkaen. Enakku travel pannuradhu pidikkum. Adhanaala indha vaelai-ya pidichchu dhaan seiraen. Neenga enna Sir pannureenga?
Passenger 1: I am a B.PHARM graduate. I like traveling. So, I enjoy doing this job. What are you doing sir?
பயணியர் 1: இல்ல சார். நான் பி.ஃபார்ம்-ல டிகிரி முடிச்சு இருக்கேன். எனக்கு டிராவல் (பயணம்) பண்ணுறது பிடிக்கும். அதனால இந்த வேலைய பிடிச்சு தான் செய்றேன். நீங்க என்ன சார் பண்ணுறீங்க?
Payaniyar 2: Naan government school-la (arasu palli) teacher-aa (aasiriyar) irundhu retire aayittaen. Ippoa oru book shop (puththaga kadai) vachchu irukkaen. Varumaanam-um varudhu, pozhudhum poagudhu.
Passenger 2: I am a retired Government school Teacher. Now I am having a book shop. Getting some Income and time pass too.
பயணியர் 2: நான் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல (அரசு பள்ளி) டீச்சரா (ஆசிரியர்) இருந்து ரிடையர் (ஓய்வு) ஆயிட்டேன். இப்போ ஒரு புக் ஷாப் (புத்தக கடை) வச்சு இருக்கேன். வருமானமும் வருது, பொழுதும் போகுது.
Payaniyar 1: Romba sandhosham Sir. Indha vayasila-um surusuruppaa irukkeenga.
Passenger 1: Very happy sir. You are very active in this age.
பயணியர் 1: ரொம்ப சந்தோஷம் சார். இந்த வயசிலும் சுறுசுறுப்பா இருக்கீங்க.
Payaniyar 2: Aamaa thambi. Appoa dhaan endha prachchanaiyum varaadhu. Enakku BP (raththa azhuththam), sugar (sarkkarai) edhuvum kidaiyaadhu. Dhinamum oru mani naeram walking (nadai payirchchi) poavaen.
Passenger 2: Yes. Then there will be no illness. I have no BP and no sugar. I go walking for an hour everyday.
பயணியர்2: ஆமா தம்பி. அப்போ தான் எந்த பிரச்சனையும் வராது. எனக்கு பிபி (ரத்த அழுத்தம்), சுகர் (சர்க்கரை) எதுவும் கிடையாது. தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் (நடை பயிற்சி) போவேன்.
Payaniyar 1: Naanum walking poagalaam-nu nenaippaen. Aanaa mudiyala. Doctor ellaaraiyum paaththuttu veettukku varavae raaththiri late (thaamadham) aayirum.
Passenger 1: I will also think to go for walking. But could not. It will be late night to return home after meeting doctors.
பயணியர் 1: நானும் வாக்கிங் போகலாம்-னு நெனைப்பேன். ஆனா முடியல. டாக்டர் எல்லாரையும் பாத்துட்டு வீட்டுக்கு வரவே ராத்திரி லேட் (தாமதம்) ஆயிரும்.
Payaniyar 2: Naan eppavumae sariyaana naeraththukku saapputturuvaen. Ippa saappudura naeram aachchu.
Passenger 2: I always eat at right time. This is the time to eat.
பயணியர் 2: நான் எப்பவுமே சரியான நேரத்துக்கு சாப்பிட்டுருவேன். இப்ப சாப்பிடுற நேரமாச்சு.
Payaniyar 1: Saappaadu kondu vandhu irukkeengalaa?
Passenger 1: Have you brought food?
பயணியர் 1: சாப்பாடு கொண்டு வந்து இருக்கீங்களா?
Payaniyar 2: Aamaa. Railway canteen-la tiffin (sittrundi) vaangittu vandhuttaen.
Passenger 2: Yes. I bought tiffin from railway canteen.
பயணியர் 2: ஆமா. ரயில்வே கேண்டீன்ல டிஃபன் (சிற்றுண்டி) வாங்கிட்டு வந்துட்டேன்.
Payaniyar 1: Indha maadhiri tour poagum bodhu, ennoada wife (manaivi) rendu naeraththukku saappaadu kuduththu viduvaanga. Ippoa chappaaththi-yum, kurumaavum irukku. Share panni saappidalaama Sir?
Passenger 1: My wife prepares a meal for two times while I go on a tour like this. Now I have chapatti and kuruma. Can we share and eat, sir?
பயணியர் 1: இந்த மாதிரி டூர் போகும் போது, என்னோட வொய்ஃப் (மனைவி) ரெண்டு நேரத்துக்கு சாப்பாடு குடுத்து விடுவாங்க. இப்போ சப்பாத்தியும், குருமாவும் இருக்கு. ஷேர் (பகிர்ந்து) பண்ணி சாப்பிடலாமா சார்?
Payaniyar 2: Sari thambi. Seekkiramaa saappittu thoonguvoam.
Passenger 2: Ok. We can eat quickly and go to sleep.
பயணியர் 2: சரி தம்பி. சீக்கிரமா சாப்பிட்டு தூங்குவோம்.
Payaniyar 1: Ungalukku endha berth?
Passenger 1: Which berth is yours?
பயணியர் 1: உங்களுக்கு எந்த பெர்த்?
Payaniyar 2: Enakku upper (mael) berth. Avasaramaa tatkal-la book (padhivu) pannanaa-la lower (keezh) berth kidaikkala. Ungalukku?
Passenger 2: Upper berth. I booked Tatkal ticket for emergency, so, I did not get lower berth. What about you?
பயணியர் 2: எனக்கு அப்பர் (மேல்) பெர்த். அவசரமா தட்கல்ல புக் (பதிவு) பண்ணனா-ல லோயர் (கீழ்) பெர்த் கிடைக்கல. உங்களுக்கு?
Payaniyar 1: Lower berth. Neenga ennoada berth-la paduththukkoanga. Naan unga berth-la paduththukkuraen.
Passenger 1: Lower berth. You can sleep in my berth, I will sleep in yours.
பயணியர் 1: லோயர் பெர்த். நீங்க என்னோட பெர்த்ல படுத்துக்கோங்க. நான் உங்க பெர்த்ல படுத்துக்குறேன்.
Payaniyar 2: Sari thambi. Romba nandri.
Passenger 2: Ok. Thank you very much.
பயணியர் 2 சரி தம்பி. ரொம்ப நன்றி.