Conversation – 18
Vanaja and the Florist
Uraiyaadal – Vanajavum Pookkaariyum
உரையாடல் – வனஜாவும் பூக்காரியும்
Conversation between Vanaja and Pookkaari
CONVERSATION – 18
Conversation between Vanaja and florist
Pookkaari: Poo vaenuma ammaa?
Florist: Do you want flowers, mam?
பூக்காரி: பூ வேணுமாம்மா?
Vanaja: Idhoa varaen.
Vanaja: Here I come.
வனஜா: இதோ வரேன்.
Pookkaari: Vaegamaa vaangammaa.
Florist: Please come quickly mam.
பூக்காரி: வேகமா வாங்கம்மா.
Vanaja: Innaikku enna ivvalavu seekkiramae vandhutta?
Vanaja: Why did you come so early today?
வனஜா: இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமாவே வந்துட்ட?
Pookkaari: Kovil-ukku poo kondu poaganum. Adhanaal-a dhaan seekkiramaavae vandhuttaen.
Florist: Yes, I should give the flowers to the temple. That’s why I have come so quickly.
பூக்காரி: ஆமா, கோவிலுக்கு பூ கொண்டு போகணும். அதனால தான் வாடிக்கையா பூ குடுக்குற வீட்டுக்கு எல்லாம் குடுத்துட்டு போலாம்-னு சீக்கிரமாவே வந்துட்டேன்.
Vanaja: Ennenna poo kondu vandhurukka?
Vanaja: What flowers have you brought?
வனஜா: என்னென்ன பூ எல்லாம் கொண்டு வந்துருக்க?
Pookkaari: Malligai poo, manjal roja, sigappu roja, vella sevandhi, kadhambam, chinna maalaium
irukku. Ungalukku edhu vaenum?
Florist: Jasmine, yellow rose, red rose, white chrysanthemum, jabon and small garlands are
available. What do you want?
பூக்காரி: மல்லிகை பூ, மஞ்சள் ரோஜா, சிகப்பு ரோஜா, வெள்ள செவந்தி, கதம்பம்,
சின்ன மாலைகளும் இருக்கு. உங்களுக்கு எது வேணும்?
Vanaja: Saami padaththukku rendu maala, malligai poo oru muzham, anju manjal rojaa, anju
sivappu rojaa-vum kudu.
Vanaja: Please give two garlands for swami photos, one feet jasmine, five yellow roses and
five red roses.
வனஜா: சாமி படத்துக்கு ரெண்டு மால, மல்லிகை பூ ஒரு முழம், அஞ்சு மஞ்சள் ரோஜா, அஞ்சு சிவப்பு ரோஜாவும் குடு.
Pookkaari: Indhaanga neenga kaettadhu.
Florist: Here, what you asked.
பூக்காரி: இந்தாங்க நீங்க கேட்டது.
Vanaja: Moththam evvalavu aachchu?
Vanaja: What is the total amount?
வனஜா: மொத்தம் எவ்வளவு ஆச்சு?
Pookkaari: Maalai-kku ambadhu ruvaa, malligai poo muppadhu ruvaa, rosaappoo-kku iruvadhu
ruvaa, moththam nooru ruvaa aachchu.
Florist: Fifty rupees for garlands, thirty rupees for Jasmine and twenty rupees for roses,
Total amount is 100 rupees.
பூக்காரி: மாலைக்கு அம்பது ருவா, மல்லிகை பூ முப்பது ருவா, ரோசாப்பூக்கு இருவது ருவா, மொத்தம் நூறு ருவா ஆச்சு.
Vanaja: Iru panam eduththuttu varaen.
Vanaja: Wait, I will bring the money.
வனஜா: இரு பணம் எடுத்துட்டு வரேன்.
Pookkaari: Ammaa, varum boadhu kudikka thanni kondu vaanga.
Florist: Mam, can I get some water to drink
பூக்காரி: அம்மா, வரும்போது குடிக்க தண்ணி கொண்டு வாங்க.
Vanaja: Enga veettula moar irukku, kudikkiriyaa?
Vanaja: We have buttermilk, do you want?
வனஜா: எங்க வீட்டுல மோர் இருக்கு, குடிக்கிறீயா?
Pookkaari: Sarimmaa, kudunga.
Florist: Ok mam, give it.
பூக்காரி: சரிம்மா, குடுங்க.
Vanaja: Indhaa kudi.
Vanaja: Here it is.
வனஜா: இந்தா, குடி.
Pookkaari: Moar romba nallaa irukkummaa. Aduththu poo ennaikku kondu varanum?
Florist: Buttermilk is very tasty mam. Next, when should I bring the flowers?
பூக்காரி: மோர் ரொம்ப நல்லா இருக்குமா. அடுத்து பூ என்னைக்கு கொண்டு வரணும்?
Vanaja: Vellikizhama kondu vandhaa poadhum. aamaa, unga veettula eththana paeru poo
kattureenga?
Vanaja: It is enough to bring it on Friday. Ok, how many persons are tieing flowers in your
home?
வனஜா: வெள்ளிக்கிழம கொண்டு வந்தா போதும். ஆமா, உங்க வீட்டுல எத்தன பேரு பூ
கட்டுறீங்க?
Pookkaari: Naalu paerumaa – Naan, en kanavar, maamanaar, maamiyaar.
Florist: Four people – I, my husband, father-in-law and mother-in-law.
பூக்காரி: நாலு பேருமா – நான், என் கணவர், மாமனார், மாமியார்.
Vanaja: Aduththa apartment -la irukkura ennoada friend (thozhi) Seetha ponnu-kku kalyaanam
varudhu. Avangala unakkitta order kudukka solluraen. Nallaa senju tharuviyaa?
Vanaja: My friend Sita’s daughter marriage is coming, who is in the next apartment. I will
tell her to give order to you. Will you do well?
வனஜா: அடுத்த அபார்ட்மெண்ட் பில்டிங்ல (அடுக்கு மாடி கட்டிடம்) இருக்குற என்னோட ஃப்ரெண்ட் (தோழி) சீதாவோட பொண்ணுக்கு கல்யாணம் வருது. அவங்ககிட்ட உனக்கு ஆர்டர் (பதிவு) குடுக்க சொல்லுறேன். நல்லா செஞ்சு தருவியா?
Pookkaari: Kattaayamaa senju kudukkuraen. Eppadiyaavadhu indha order-a vaangi kudunga.
Florist: Definitely I will do. Get this order for me somehow.
பூக்காரி: கட்டாயமா செஞ்சு குடுக்குறேன். எப்படியாவது இந்த ஆர்டர வாங்கி குடுங்க.
Vanaja: Oru nimisham iru. ennoada friend-kitta phone-la kaekkuraen.
Vanaja: One minute. I will ask my friend over phone.
வனஜா: ஒரு நிமிஷம். என்னோட ஃப்ரெண்ட் கிட்ட ஃபோன்ல (தொலைபேசி)
கேக்குறேன்.
Vanaja: Seetha sari-nnu sollitaanga. Innai-ku avanga veetla dhaan irukkaanga. Flat number
pathinaalu. Nee eppoa avangala poayi paakka poara?
Vanaja: Sita said ok. She is in her home today. Plot No. is 14. When are you going to see
her?
வனஜா: சீதா சரின்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு அவங்க வீட்ல தான் இருக்காங்க.
ஃப்ளாட் நம்பர் (எண்) பதினாலு. நீ எப்போ அவங்கள போயி பாக்க போற?
Pookkaari: Innaikku saayandhiram ennoada kanavarai-yum koottittu poayi paakkuraen. Avarukku
dhaan poo-oda vila theriyum.
Florist: Today evening I will bring my husband and meet her. He knows the price of the
flowers.
பூக்காரி: இன்னைக்கு சாயந்திரம் என்னோட கணவரையும் கூட்டிட்டு போயி பாக்குறேன். அவருக்கு தான் பூவோட வில தெரியும்.
Vanaja: Sari. Poayi paaru. Order kidachchaa en-kitta sollu.
Vanaja: Ok. Go and meet her. Inform me if you get the order.
வனஜா: சரி. போயி பாரு. ஆர்டர் கிடச்சா என்கிட்ட சொல்லு.
Pookkaari: Saringammaa. Romba nandri maa.
Florist: Ok. Thank you very much mam.
பூக்காரி: சரிங்கம்மா. ரொம்ப நன்றி மா.