Conversation – 25

At the ENT Hospital

One on One Tamil class

Conversation between Virpanaiyaalar and Daniel

CONVERSATION – 25
Buying shoes
Conversation between Virpanaiyaalar and Daniel

Virpanaiyaalar: Vaanga Sir! Shoe vaenumaa illa sandal vaenumaa?
Salesman: Welcome sir. Do you want shoe or sandals?
விற்பனையாளர்: வாங்க சார்! ஷூ (காலணி) வேணுமா, இல்ல சாண்டல் (செருப்பு) வேணுமா?

Daniel: Leather shoes vaenum.
Daniel: I want leather shoes.
டேனியல்: லெதர் ஷூஸ் வேணும்.

Virpanaiyaalar: Neenga enna size podureenga?
Salesman: What is the size you wear?
விற்பனையாளர்: நீங்க என்ன சைஸ் (அளவு) போடுறீங்க?

Daniel: Yezhu.
Daniel: Seven.
டேனியல்: ஏழு.

Virpanaiyaalar: Endha brand-kku Sir?
Salesman: Which brand sir?
விற்பனையாளர்: எந்த பிராண்டுக்கு ஸார்?

Daniel: Ovvoru brand-kkum alavu maarumaa? Ellaa brand-layum size same-aa irukkaadhaa?
Daniel: Will there be any change in size for each brand? Won’t all brand have same size?
டேனியல்: ஒவ்வொரு பிராண்டுக்கு அளவு மாறுமா? எல்லா பிராண்ட்லயும் சைஸ்
ஒரே மாதிரி இருக்காதா?

Virpanaiyaalar: Sila brand-kku size maarum.
Salesman: Size will change for some brands.
விற்பனையாளர்: சில பிராண்டுக்கு சைஸ் மாறும்.

Daniel: Oh! Naan eppavum Woodland brand-la shoe size yezhu dhaan poduraen. Enakku adhu ok.
Daniel: Oh! I always wear number 7 woodland shoes. It is okay for me.
டேனியல்: ஓ! நான் எப்பவும் உட்லேண்ட் பிராண்ட்ல ஷூ சைஸ் ஏழு தான் போடுறேன். எனக்கு அது சரி.
Virpanaiyaalar: Sari Sir. Indha rack-la irukkuradhu ellaamae puthusaa vandhadhu. Idhula ungalukku yaedhaavadhu pidichchu irukkaa?
Salesman: This rack has all new arrivals. Do you like any of these?
விற்பனையாளர்: சரி சார். இந்த ரேக்ல இருக்கிறது எல்லாமே புதுசா வந்தது. இதுல உங்களுக்கு ஏதாவது புடிச்சிருக்கா?

Daniel: Yaen varieties kammiya irukku?
Daniel: Why are the varieties less?
டேனியல்: ஏன் வெரைட்டீஸ் (வகைகள்) கம்மியா இருக்கு?

Virpanaiyaalar: Pudhusaa vandhadhu weekend-la neraiyaa viththuruchchu.
Salesman: Due to week end sales, most new arrivals were sold out.
விற்பனையாளர்: புதுசா வந்தது வீக்எண்ட்ல நெறைய வித்துருச்சு.

Daniel: Woodland brand-la vaera yaedhaavadhu model irukkaa?
Daniel: Is there any other model available in woodland brand?
டேனியல்: உட்லேண்ட் பிராண்ட்ல வேற ஏதாவது மாடல் இருக்கா?

Virpanaiyaalar: Woodland leather boots-um irukku, leather casual shoe-vum irukku. Ungalukku edhu vaenum?
Salesman: Woodland leather boots and leather casual shoes are available. Do you want?
விற்பனையாளர்: உட்லேண்ட் லெதர் பூட்சும் இருக்கு, லெதர் கேஷுவல் ஷூவும்
இருக்கு. உங்களுக்கு எது வேணும்?

Daniel: Rendume try panni paakuraen. Black color irukkaa?
Daniel: I shall try both. Is there black color?
டேனியல்: ரெண்டுமே ட்ரை (போட்டு) பண்ணி பாக்குறேன். ப்ளாக் (கருப்பு) கலர் இருக்கா?

Virpanaiyaalar: Irukku Sir. Konjam wait pannunga. Naan eduththuttu varaen.
Salesman: Yes sir. Please wait a minute – I shall bring it.
விற்பனையாளர்: இருக்கு சார். கொஞ்சம் வெயிட் (காத்திரு) பண்ணுங்க. நான் எடுத்துட்டு வரேன்.

Virpanaiyaalar: Rendum fresh piece sir. Poattu paarunga.
Salesman: Both are fresh piece sir. You wear both and check.
விற்பனையாளர்: ரெண்டும் ஃபிரெஷ் பீஸ் (புதிய துண்டு, புதியது) சார். போட்டு
பாருங்க.

Daniel: Rendum comfortable-a irukku. Vilai evvalavu?
Daniel: Both are comfortable. What is the price?
டேனியல்: ரெண்டும் கம்பர்ட்டபுலா இருக்கு. விலை எவ்வளவு?

Virpanaiyaalar: Leather boots naalaayiram ruvaa, casual shoes moovaayiram ruvaa. Rendaiyum pack pannavaa Sir?
Salesman: Leather boots are four thousand rupees and casual shoes are three thousand rupees. Can I pack both?
விற்பனையாளர்: லெதர் பூட்ஸ் நாலாயிரம் ருவா, கேஷுவல் ஷூ மூவாயிரம் ருவா. ரெண்டையும் பேக் (கட்டு) பண்ணவா சார்?

Daniel: Saringa. Bill-a poadunga.
Daniel: Okay. Get me the bill.
டேனியல்: சரிங்க. பில்ல (ரசீது) போடுங்க.

Virpanaiyaalar: Ungalukku belt, socks, shoe polish edhuvum vaenumaa Sir?
Salesman: Do you want belt, socks and shoe polish?
விற்பனையாளர்: உங்களுக்கு பெல்ட் (வார்), சாக்ஸ் (காலுறை), ஷூ பாலிஷ் எதுவும் வேணுமா சார்?

Daniel: Socks mattum kaattunga, combo offer edhuvum irukkaa? Irundhaa adha modhalla kaattunga.
Daniel: Show only socks. Is there any combo offer? If it is, show them first.
டேனியல்: சாக்ஸ் மட்டும் காட்டுங்க, கோம்போ ஆப்பர் (கோம்போ சலுகை) எதுவும் இருக்கா? இருந்தா அத மொதல்ல காட்டுங்க.

Virpanaiyaalar: Inga irukku, Sir. Idhula endha design pidikkudho adha eduththukkoanga. Oru pair eranooru ruvaa.
Salesman: Sir, here it is. Take whatever design you like. Rs.200 for a pair.
விற்பனையாளர்: இங்க இருக்கு சார். இதுல எந்த டிசைன் பிடிக்குதோ அத
எடுத்துக்கோங்க. ஒரு பேர் (ஜோடி) இறநூறு ருவா.

Daniel: Naan naalu pair eduththukkuraen. Idhayum saeththu bill poadunga.
Daniel: I shall take four pair. Add this also in the bill.
டேனியல்: நான் நாலு பேர் எடுத்துக்குறேன். இதையும் சேத்து பில் போடுங்க.

Virpanaiyaalar: Moththam yezhaayiraththi ennooru ruvaa aachchu. Payment eppadi Sir?
Salesman: Total amount is Rs.7800/-. How do you like to pay sir?
விற்பனையாளர்: மொத்தம் ஏழாயிரத்தி எண்ணூறு ருவா ஆச்சு. பேமண்ட் (கட்டணம்)
எப்படி சார்?

Daniel: Card-la pay pannuraen.
Daniel: I will pay by Card.
டேனியல்: கார்ட்ல பே பண்ணுறேன்.

Virpanaiyaalar: Sari Sir.
Salesman: Okay sir.
விற்பனையாளர்: சரி சார்.

Virpanaiyaalar: Indhaanga unga raseedhum, shoe-vum. Romba nandri, Sir.
Salesman: This is your bill and shoes. Thank you very much sir.
விற்பனையாளர்: இந்தாங்க உங்க ரசீதும், ஷூவும். ரொம்ப நன்றி சார்.

Daniel: Thanks. Bye.
Daniel: Thanks. Bye.
டேனியல்: தாங்க்ஸ். பை.

Conversation

32 Conversations in colloquial Tamil and English

Book a Demo with Us

    Tamil lesson