Conversation
At the Airport
Uraiyaadal –Vimaana Nilaiyaththil
உரையாடல் – விமான நிலையத்தில
Conversation between a Passenger and Airport Staff
Passenger: Hello!
பயணியர்: வணக்கம்
Vimaana Nilaiya Paniyaalar: Vanakkam Madam! Sollunga.
Airport Staff: Hello Ma’am! Tell me.
விமான நிலைய பணியாளர்: வணக்கம் மேடம்! சொல்லுங்க.
Passenger: Naan Airport-kku (vimaana nilaiyam) varuvadhu idhu dhaan mudhal thadava. Enakku inga ulla process (nada murai) theriyaadhu.
Passenger: This is my first time at the Airport. I don’t know the process here.
பயணியர்: நான் ஏர்போர்ட்டுக்கு (விமான நிலையம்) வருவது இது தான் முதல் தடவ. எனக்கு இங்க உள்ள பிராசஸ் (நட முறை) தெரியாது.
Vimaana Nilaiya Paniyaalar: Neenga kavala padaadheenga. Naan ungalukku help (udhavi) pannuraen. Neenga endha ooru-kku poreenga?
Airport Staff: Don’t worry. I’ll help you. Which city are you going to?
விமான நிலைய பணியாளர்: நீங்க கவல படாதீங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் (உதவி) பண்ணுறேன். நீங்க எந்த ஊருக்கு போறீங்க?
Passenger: British Airways flight-la (vimaanam) London poraen. Andha flight eppo varum-nnu solla mudiyumaa?
Passenger: I’m traveling to London by British Airways. Can you tell me when that flight will arrive?
பயணியர்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஃப்ளைட்ல (விமானம்) லண்டன் போறேன். அந்த ஃப்ளைட் எப்போ வருமுன்னு சொல்ல முடியுமா?
Vimaana Nilaiya Paniyaalar: Flight delay (thaamadham) aanadhu naala, raaththiri paththu mani-kku dhaan varum.
Airport Staff: Since the flight is delayed, it will arrive only at 10 pm.
விமான நிலைய பணியாளர்: ஃப்ளைட் டிலே (தாமதம்) ஆனதுனால ராத்திரி பத்து மணிக்கு தான் வரும்.
Passenger: Sari. Flight-la yaerradhu-kku munnaadi naan ennadhu ellaam pannanum?
Passenger: OK. What must I do before boarding the flight?
பயணியர்: சரி. ஃப்ளைட்ல ஏர்றதுக்கு முன்னாடி நான் என்னது எல்லாம் பண்ணனும்?
Vimaana Nilaiya Paniyaalar: Mudhala unga luggage-a (saamaan) scan (oodukadhir) seyyanum.
Airport Staff: First you need to scan your luggage.
விமான நிலைய பணியாளர்: முதல உங்க லக்கேஜ (சாமான்) ஸ்கேன் (ஊடு கதிர்) செய்யனும்.
Passenger: Company (aluvalaga) vaelayaa oru vaaram mattum poradhunaala enkitta dress (udai), Laptop (madi kanini), sila puththagangal-a thavira vaera edhuvum illa.
Passenger: As I am going on an official trip for just one week, apart from my clothes, laptop and some books, I don’t have anything else with me.
பயணியர்: கம்பெனி (அலுவலக) வேலயா ஒரு வாரம் மட்டும் போறதுனால என்கிட்ட டிரஸ் (உடை), லேப்டாப் (மடி கணினி), சில புத்தகங்கள தவிர வேற எதுவும் இல்ல.
Vimaana Nilaiya Paniyaalar: Irundhaalum neenga unga porutkala scan senjae aaganum. Idhu ingulla process.
Airport Staff: Nevertheless, you must scan all your things (bags). This is the process here.
விமான நிலைய பணியாளர்: இருந்தாலும் நீங்க உங்க பொருட்கள ஸ்கேன் செஞ்சே ஆகணும். இது இங்குள்ள பிராசஸ்.
Passenger: Sari. Aduththu naan enna seyyanum?
Passenger: Alright. What must I do next?
பயணியர்: சரி. அடுத்து நான் என்ன செய்யனும்?
Vimaana Nilaiya Paniyaalar: Neenga unga visa-va-yum (nuzhaivu seettu), passport-a-yum (kadavu seettu), ticket-ai-um (payana seettu) ready-aa (thayaar) vachchirukkeengalaa?
Airport Staff: Do you have your Visa, Passport and Ticket handy?
விமான நிலைய பணியாளர்: நீங்க, உங்க விசாவயும் (நுழைவு சீட்டு), பாஸ்போர்ட்டையும் (கடவுசீட்டு) டிக்கெட்டையும் (பயண சீட்டு) ரெடியா (தயார்) வச்சிருக்கீங்களா?
Passenger: Aamaa, Ready-aa irukku..
Passenger: Yes, I do.
பயணியர்: ஆமா. ரெடியா இருக்கு.
Vimaana Nilaiya Paniyaalar: Unga visa, passport, ticket, ID proof (adaiyaala saandru), ellaamey anga irukkira British Airways Staff-kitta (paniyaalar) kuduththu sari paaththu, unga boarding pass-a vaanganum. Adhula unga flight details (vibaram) ellaamey irukkum.
Airport Staff: You need to have your Visa, Passport, Ticket and ID proof checked by the British Airways staff over there, and get your Boarding pass. All your flight details will be on it.
விமான நிலைய பணியாளர்: உங்க விசா, பாஸ்போர்ட், டிக்கெட், ஐடி ப்ரூஃப் (அடையாள சான்று), எல்லாமே அங்க இருக்கிற பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்டாஃப்-கிட்ட (பணியாளர்) குடுத்து சரி பாத்து, உங்க போர்டிங் பாஸ வாங்கணும். அதுல உங்க ஃப்ளைட் டீடெயில்ஸ் (விபரம்) எல்லாமே இருக்கும்.
Passenger: Sari. Boarding pass-a vaangeettu naan enna seyyanum?
Passenger: OK. What should I do after getting my Boarding pass?
பயணியர்: சரி. போர்டிங் பாஸ வாங்கீட்டு நான் என்ன செய்யணும்?
Vimaana Nilaiya Paniyaalar: Opposite side-la (edhir thisai) security checking-kaga (paadhukaapu sodhanai) varisai-la nikkanum. unga kai-la irukkira luggage-ai-yum ungalayum sodhana senjittu, unga boarding pass-la seal (muththirai) vaippaanga. Seal vachchu kidaichchadhukku appuram, neenga waiting lounge-la (oayvu arai) relaxed-aa (nidhaanamaaga) irukkalaam.
Airport Staff: On the opposite side, you should stand in a queue for Security Check. After security check of you and your hand luggage is complete, they will put a seal on your Boarding pass. After you get this seal, you can relax in the waiting lounge.
விமான நிலைய பணியாளர்: ஆப்போஸிட் சைடுல (எதிர் திசை) செக்யூரிட்டி செக்கிங்காக (பாதுகாப்பு சோதனை) வரிசைல நிக்கணும். உங்க கைல இருக்கிற லக்கேஜையும் உங்களயும் சோதன செஞ்சிட்டு, உங்க போர்டிங் பாஸ்ல சீல் (முத்திரை) வைப்பாங்க. சீல் வச்சு கிடைச்சதுக்கு அப்புறம், நீங்க வெயிட்டிங் லௌஞ்ச்ல (ஓய்வு அறை) ரிலேக்ஸ்டா (நிதானமாக) இருக்கலாம்.
Passenger: Birtish Airways vimaanam vandha udana-yey London-kku purappadumaa?
Passenger: Will the British Airways flight depart for London soon after arrival?
பயணியர்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வந்த உடனயே லண்டனுக்கு புறப்படுமா?
Vimaana Nilaiya Paniyaalar: Illa. Airport-la rendu mani naeram nikkum.
Airport Staff: No. It will halt at the airport for 2 hours.
விமான நிலைய பணியாளர்: இல்ல. ஏர்போர்ட்ல ரெண்டு மணி நேரம் நிக்கும்.
Passenger: Yaen?
Passenger: Why?
பயணியர்: ஏன்?
Vimaana Nilaiya Paniyaalar: Saappaadu eduppaanga, suththam seyvaanga. Seat (irukkai) cover (urai) maaththuvaanga, fuel (eri porul) nirappuvaanga.
Airport Staff: They load food, clean the flight, change the seat covers and refuel the airplane.
விமான நிலைய பணியாளர்: சாப்பாடு எடுப்பாங்க, சுத்தம் செய்வாங்க. சீட்(இருக்கை) கவர் (உறை) மாத்துவாங்க, ஃப்யூல் (எரி பொருள்) நிரப்புவாங்க.
Passenger: Oh! Appadiyaa! Sari. Kadaisiyaa orey oru kaelvi – inga ulla cafeteria-la (unavagam) saiva unavu kidaikkumaa?
Passenger: Oh! Really! OK, one last question – Are vegetarian meals available in the cafeteria here?
பயணியர்: ஓ! அப்படியா! சரி. கடைசியா ஒரே ஒரு கேள்வி – இங்க உள்ள கேஃப்டேரியால (உணவகம்) சைவ உணவு கிடைக்குமா?
Vimaana Nilaiya Paniyaalar: Kidaikkum.
Airport Staff: Yes, they are.
விமான நிலைய பணியாளர்: கிடைக்கும்.
Passenger: Romba nalladhaa pochchu! Neenga kuduththa ellaa information-kku (thagaval) romba thanks (nandri).
Passenger: That’s great! Thank you for all the information you provided.
பயணியர்: ரொம்ப நல்லதா போச்சு! நீங்க குடுத்த எல்லா இன்ஃபர்மேஷனுக்கு (தகவல்) ரொம்ப தேங்க்ஸ் (நன்றி).
Vimaana Nilaiya Paniyaalar: You’re welcome (paravaayilla), madam. Happy journey (Ungal payanam inidhaaga irukkattum)!
Airport Staff: You are welcome, Ma’am. Happy Journey.
விமான நிலைய பணியாளர்: யு ஆர் வெல்கம் (பரவாயில்ல) மேடம். ஹேப்பி ஜர்னி (உங்கள் பயணம் இனிதாக இருக்கட்டும்).
Conversation
32 Conversations in colloquial Tamil and English
Book a Demo with Us
