Conversation – 17

At the ENT Hospital

Uraiyaadal – ENT Aaspaththiriyil
உரையாடல் – இ.என்.டி ஆஸ்பத்திரியில்

One on One Tamil class

Conversation between Ganesh and Maruththuvar

CONVERSATION – 17
At the ENT Hospital
Conversation between Ganesh and Doctor.

Ganesh: Good morning, Doctor.
Ganesh: Good morning Doctor.
கணேஷ்: குட் மார்னிங், டாக்டர் (மருத்துவர்).

Maruththuvar: Good morning. Yaen unga kural viththiyaasamaa irukku?
Doctor: Good morning. Why is your voice different?
மருத்துவர்: குட் மார்னிங். ஏன் உங்க வாய்ஸ் (சத்தம்) வித்தியாசமா இருக்கு?

Ganesh: Romba thonda vali-yum, kaachchal-um irukku, Doctor.
Ganesh: I am having severe throat pain and fever, Doctor.
கணேஷ்: பயங்கரமான தொண்ட வலியும், காச்சலும் இருக்கு, டாக்டர்.

Maruththuvar: Eththana naalaa irukku?
Doctor: How many days is it?
மருத்துவர்: எத்தன நாளா இருக்கு?

Ganesh: Naeththu raaththiri-la irundhu irukku.
Ganesh: From yesterday night.
கணேஷ்: நேத்து ராத்திரில இருந்து இருக்கு.

Maruththuvar: Irunga naan check (sodhanai) pannuraen.
Doctor: I will check.
மருத்துவர்: இருங்க நான் செக் (சோதனை) பண்ணுறேன்.

Maruththuvar: Aamaa, kaachchal 101 irukku. Nallaa vaaya thorandhu aaahh-nnu kaattunga.
Doctor: Yes, fever is 101, open your mouth and show me.
மருத்துவர்: ஆமா, காச்சல் 101 இருக்கு. நல்லா வாய தொறந்து ஆன்னு காட்டுங்க.

Ganesh: Romba valikkudhu, Doctor. Vaaya thorakka mudiyala.
Ganesh: Very painful, Doctor. Unable to open the mouth.
கணேஷ்: ரொம்ப வலிக்குது, டாக்டர். வாய தொறக்க முடியல.

Maruththuvar: Thondai-la romba infection aagirukku. Adhanaal-a dhaan thonda vali. Rendu pakkam-um veengi irukku. Chill-nnu (kulirchchi) yaedhaavadhu saappitteengalaa?
Doctor: There is more infection in the throat. That’s why throat pain. Both sides are
Swollen. Did you eat something cold?
மருத்துவர்: தொண்டையில ரொம்ப இன்ஃபெக்சன் (தொற்று) ஆயிருக்கு. அதனால தான் தொண்ட வலி. ரெண்டு சைடும் (பக்கம்) வீங்கி இருக்கு. சில்லுன்னு (குளிர்ச்சி) ஏதாவது சாப்புட்டீங்களா?

Ganesh: Rendu naalai-kku munnaadi oru party-kku poanaen. Anga ice-cream moonu cup
saappittaen.
Ganesh: I went to a party two days ago. I ate 3 cups of ice cream there.
கணேஷ்: ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பார்ட்டிக்கு (விருந்து) போனேன். அங்க ஐஸ்-கிரீம் (பனிகூழ்) மூணு கப் (குவளை) சாப்புட்டேன்.

Maruththuvar: Adhanaala dhaan infection aagi irukku. Sari panniralaam, kavalappadaatheenga.
Doctor: That’s why infected. It can be cured, don’t worry.
மருத்துவர்: அதனால தான் இன்ஃபெக்சன் ஆகி இருக்கு. சரி பண்ணிரலாம்,
கவலப்படாதீங்க.

Ganesh: Sari Doctor.
Ganesh: Ok Doctor.
கணேஷ்: சரி டாக்டர்.

Maruththuvar: Ippoa oru oosi pottukkoanga, adhoada moonu naalai-kku maaththirai-um ezhudhi thaaraen. Kandippaa maaththirai-ya saappidanum, appao dhaan muzhusaa sari aagum.
Doctor: Now you take an injection. I will give prescription for three days. You must
eat the tablets, and then only it will be fully cured.
மருத்துவர்: இப்போ ஒரு ஊசி போட்டுக்கோங்க, அதோட மூணு நாளைக்கு மாத்திரையும் எழுதி தரேன். கண்டிப்பா மாத்திரைய சாப்புடணும், அப்பதான் முழுசா சரியாகும்.

Ganesh: Sari Doctor. Saappaadu ennenna saappudalaam?
Ganesh: Okay Doctor. What kind of food shall I eat?
கணேஷ்: சரி டாக்டர். சாப்பாடு என்னென்ன சாப்புடலாம்?

Maruththuvar: Rendu naalai-kku kanji-um, paruppu saadham-um saappudunga. Kaachchal vittrum. Adhukku appuramaa kaaramae illaadha saappaadu edhu naalum saappudalaam.
Doctor: Have porridge and dhal rice for two days. The fever will be cured. After that,
you can eat whatever you want but less spicy.
மருத்துவர்: ரெண்டு நாளைக்கு கஞ்சியும், பருப்பு சாதமும் சாப்புடுங்க. காச்சல் விற்றும். அதுக்கு அப்புறமா காரமே இல்லாத சாப்பாடு எதுன்னாலும் சாப்புடலாம்.

Ganesh: Vaera enna care edukkanum Doctor?
Ganesh: What else to take care of Doctor?
கணேஷ்: வேற என்ன கேர் (கவனிப்பு) எடுக்கணும் டாக்டர்?

Maruththuvar: Thanniya kodhikka vachchu, aara vachchu kudinga. Warm water-la (vedhu vedhuppaana thanneer) uppu kalandhu oru naalai-kku naalu thadava gargle pannunga.
Doctor: Drink warm water. Mix salt with warm water and gargle four times a day.
மருத்துவர்: தண்ணிய கொதிக்க வச்சு, ஆற வச்சு குடிங்க. வார்ம் வாட்டர்ல (வெது வெதுப்பான தண்ணீர்) உப்பு கலந்து ஒரு நாளைக்கு நாலு தடவ கார்கில் (கொப்பளி) பண்ணுங்க.

Ganesh: Office-kku eppoa poalaam Doctor?
Ganesh: Doctor, when can I go to office?
கணேஷ்: ஆஃபீஸ்க்கு (அலுவலகம்) எப்போ போலாம் டாக்டர்?

Maruththuvar: Thondai-la veekkam irukkuradhaala neenga romba paesavae koodaadhu. Paesinaa veekkam kuraiyaadhu. Moonu naal kalichchu thirumbavum vaanga. Check pannittu office-kku poalaamaa, vaendaamaannu solraen.
Doctor: You should not talk too much as there is swelling in the throat. Swelling will
not reduce if you speak. Come after three days. I will check and tell you whether
you can go to the office or not.
மருத்துவர்: தொண்டையில வீக்கம் இருக்குறதால நீங்க ரொம்ப பேசவே கூடாது. பேசினா வீக்கம் குறையாது. மூணு நாள் கழிச்சி திரும்பவும் வாங்க. செக் பண்ணிட்டு ஆஃபீஸ்க்கு போலாமா, வேண்டாமான்னு சொல்றேன்.

Ganesh: Leave romba eduththaa medical certificate kudukkanum.
Ganesh: If I take too much leave, I have to give medical certificate.
கணேஷ்: லீவு (விடுமுறை) ரொம்ப எடுத்தா மெடிக்கல் சர்டிபிகேட் (மருத்துவ சான்றிதழ்) குடுக்கணும்.

Maruththuvar: Adha naan thaaraen. Innaikkae vaenumaa, illa neenga office-kku poarappoa kuduththaa poadhumaa?
Doctor: I will give that. Do you need today or on the day you go to the office?
மருத்துவர்: அத நான் தரேன். இன்னைக்கே வேணுமா, இல்லை நீங்க ஆஃபீஸ்க்கு
போறப்போ குடுத்தா போதுமா?

Ganesh: Vaelai-kku poarappoa kuduththaa poadhum.
Ganesh: It is enough to give when I go to the office.
கணேஷ்: வேலைக்கு போறப்போ குடுத்தா போதும்.

Maruththuvar: Moonu naal kazhichchu varum bodhu marakkaama vaangikkoanga. Aduththa room-la nurse iruppaanga. Avanga kitta indha prescription (marundhu seettu) kudunga. Avanga kaachchal-kku oru oosi poaduvaanga. Adhukku appuram, pharmacy-la thonda vali-kkum, kaachchal-kkum maaththirai vaangikkoanga.
Doctor: Do not forget to get it when you come after three days. The nurse is in the
next room. Give this prescription to her. She will give you an injection for
fever. After that you buy tablets for throat pain and fever at the pharmacy.
மருத்துவர்: மூணு நாள் கழிச்சு வரும்போது மறக்காம வாங்கிக்கோங்க. அடுத்த ரூம்ல (அறை) நர்ஸ் (செவிலியர்) இருக்காங்க (இருப்பாங்க). அவங்க கிட்ட இந்த பிரிஸ்கிரிப்சன (மருந்து சீட்டு) குடுங்க. அவங்க காச்சலுக்கு ஒரு ஊசி போடுவாங்க. அதுக்கு அப்புறம், ஃபார்மசில (மருந்தகம்) தொண்ட வலிக்கும், காச்சலுக்கும் மாத்திரை வாங்கிக்கோங்க.

Ganesh: Sari Doctor. Romba thanks (nandri).
Ganesh: Ok Doctor, Thank you very much.
கணேஷ்: சரி டாக்டர். ரொம்ப தேங்க்ஸ் (நன்றி).

Maruththuvar: Take care (kavaniththuk kollungal).
Doctor: Take care.
மருத்துவர்: டேக் கேர் (கவனித்துக் கொள்ளுங்கள்).

Conversation

32 Conversations in colloquial Tamil and English

Book a Demo with Us

    Tamil lesson
    author avatar
    ilearntamil