Conversation – 6
Buy a Refrigerator
Uraiyaadal – Oru Fridge Vangudhal
உரையாடல் – ஒரு ஃபிரிஜ் வாங்குதல்
Conversation between Salesman and Customers
CONVERSATION – 6
BUYING A REFRIGERATOR
Virpanaiyaalar: Vaanga Sir, vaanga Madam. Enna vaenum?
Sales Man: Welcome Sir, Welcome Madam
விற்பனையாளர்: வாங்க சார், வாங்க மேடம். என்ன வேணும்?
Ragu: Fridge vaangalaam-nnu vandhoam.
Ragu: We have come to buy a fridge
ரகு: ஃபிரிஜ் வாங்கலாம்-ன்னு வந்தோம்
Virpanaiyaalar: Ulla vaanga. Enna vilai-la vaenum?
Salesman: Come inside. At what price?
விற்பனையாளர்: உள்ள வாங்க. என்ன விலை-ல வேணும்?
Raji: Paththu-aayiram ruvaa-la irundhu padhinanju-aayiram ruvaa-kkulla irukkiradhakaaminga.
Raji: From Rs.10,000 to Rs.15,000.
ராஜி: பத்து-ஆயிரம் ருவா-ல இருந்து பதினஞ்சு-ஆயிரம் ருவா-க்குள்ள
இருக்கிறத காமிங்க.
Virpanaiyaalar: Indha vilai-kku Godrej, Whirlpool, Voltas company fridge kidaikkum.
Salesman: Godrej, Whirlpool, Voltas company fridges are available at this price.
விற்பனையாளர்: இந்த விலை-க்கு கோத்ரெஜ், வேர்ல்பூல், வோல்டாஸ்
கம்பெனி ஃபிரிஜ் கிடைக்கும்
Ragu: Engalukku Godrej fridge-a kaattunga.
Ragu: Show us Godrej company fridge.
ரகு: எங்களுக்கு கோத்ரெஜ் ஃபிரிஜ்-அ காட்டுங்க
Virpanaiyaalar: Single door vaenumaa illa double door-aa?
Salesman: Single door or double door?
விற்பனையாளர்: சிங்கிள் டோர் வேணுமா இல்ல டபுள் டோர்-ஆ?
Ragu: Single door.
Ragu: Single door.
ரகு: சிங்கிள் டோர்
Virpanaiyaalar: Indha catalogue-a paarunga. Adhulaye ellaa vivaramum irukku. Ungalukku edhu vaenumo select (thaervu) pannunga.
Salesman: Look at the catalogue. All details are given in it. Please select what you want.
விற்பனையாளர்: இந்தாங்க கேட்-லாக்-அ பாருங்க. அதுலயே எல்லா
விவரமும் இருக்கு. செலக்ட் (தேர்வு) பண்ணுங்க.
Raji: Idhula moonaavadhu appuram aaraavadhu pakkaththila irukkira model-la red(sigappu) color-la irukkaa?
Raji : Among these ,will 3rd and 6th page models be available in red color?
ராஜி: இதுல மூணாவது அப்புறம் ஆறாவது பக்கத்தில இருக்கிற மாடல்-ல
ரெட்(சிகப்பு) கலர்-ல இருக்கா
Virpanaiyaalar: Neenga kaetta rendu model-um irukku. Aanaa aaravadhu pakkaththila irukkira model-la double door fridge-kku New Year discount (pudhu varusha thallupadi) irukku. Single door vaangura vilaya vida konjam dhaan adhigam. Paththu varusha warranty irukku. Stand-um free-yaa (ilavasam) kudukkuroam, delivery-um free dhaan.
Salesman: Both models you asked are available. But, the sixth page double door fridge gets a New Year discount. It is little more expensive than buying single door. We are giving 10 years warranty and stand for free. Delivery is also free.
விற்பனையாளர்: நீங்க கேட்ட ரெண்டு மாடல்-உம் இருக்கு. ஆனா ஆறாவது
பக்கத்தில இருக்கிற மாடல்-ல டபுள் டோர் ஃபிரிஜ்-க்கு நியூ இயர் டிஸ்கௌண்ட் (புது வருஷ தள்ளுபடி) இருக்கு. சிங்கிள் டோர் வாங்குற விலய விட கொஞ்சம் தான் அதிகம். பத்து வருஷ
வாரண்ட்டி இருக்கு, ஸ்டாண்ட்-உம் ஃப்ரீ-யா
(இலவசம்) குடுக்கிறோம். டெலிவரி-யும் ஃப்ரீ தான்
Ragu: Sari. Fridge-a kaattunga, paakkalaam.
Ragu: Ok, show the fridge. Let us see.
ரகு : சரி ஃபிரிஜ்-அ காட்டுங்க, பாக்கலாம்.
Virpanaiyaalar: Vaanga.
Salesman: Come
விற்பனையாளர்: வாங்க.
Ragu: Indha fridge-oda vilai enna?
Ragu: What’s the price for this fridge?
ரகு : இந்த ஃபிரிஜ்-ஓட வெல என்ன?
Virpanaiyaalar: 17,200 ruvaa.
Salesman: Rs.17,200/-
விற்பனையாளர்: 17,200 ருவா
Ragu: Unga manager-kitta paesi innum konjam vilaya kuraikka mudiyumaa?
Ragu: Can you discuss with your manager and get little more discounts?
ரகு : உங்க மேனஜர்-கிட்ட பேசி இன்னும் கொஞ்சம் விலை
குறைக்க முடியுமா
Virpanaiyaalar: Illa Sir. Idhukku yaerkanave discount irukkuradhu naala vila kuraiyaadhu. Indha vila dhaan.
Salesman: No sir. It has discount already, so no further reduction. This is the final price.
விற்பனையாளர்: இல்ல சார். இதுக்கு ஏற்கனவே டிஸ்கௌண்ட்
இருக்குறதால வில குறையாது. இந்த வில தான்
Ragu: Sari, parava illa. Bill kudunga.
Ragu: It’s ok. Give me the bill.
ரகு : சரி பரவாயில்ல பில் குடுங்க.
Virpanaiyaalar: Enga kadai-la 0% instalment plan-um (vatti illaa thavanai murai) irukku. Neenga payment eppadi panna poareenga? cash-aa, credit card-aa, illa 0% instalment plan-aa?
Salesman: 0% installment scheme is available to pay the bill in our shop. How are you
going to pay the bill? By cash, credit card or 0% installment?
விற்பனையாளர்: எங்க கடையில 0% இன்ஸ்டால்மெண்ட்
ப்ளான்-உம் (வட்டியில்லா தவணை முறை) இருக்கு. நீங்க பேமண்ட்
எப்படி பண்ண போறீங்க. கேஷ்-ஆ (பணமா)
கிரெடிட் கார்டு-ஆ இல்ல 0% இன்ஸ்டால்மெண்ட்
ப்ளான்-ஆ?
Ragu: Naan cash-aavae kudukkuraen. Panam enga kattanum?
Ragu: I will pay by cash. Where to pay?
ரகு: நான் கேஷ்-ஆவே குடுக்கிறேன். பணம் எங்க கட்டணும்?
Virpanaiyaalar: Cash counter-la katteettu vaanga. Adhukku munnaadi, indha form-la unga paeru, address, mobile number vivaram ezhudhunga.
Salesman: You can pay at cash counter. Before that you write your name, address and
mobile number in this form
விற்பனையாளர்: கேஷ் கவுண்டர்-ல (பணம் செலுத்துமிடம்) கட்டீட்டு வாங்க. அதுக்கு
முன்னாடி, இந்த ஃபார்ம்-ல உங்க பேரு,
அட்ரஸ் (முகவரி), மொபைல் நம்பர் விவரம் எழுதுங்க.
Ragu: Sari.
Ragu: Ok.
ரகு: சரி.
Virpanaiyaalar: Naan Bill-a ready (thayaar) panni, warranty card-um kondu varaen. Adhuvara neengal-um, madam-um vaera edhaavadhu vaenumaa-nnu paarunga.
Salesman: I will get the bill and warranty card. Until then, check if you need anything
விற்பனையாளர்: நான் ரசீத ரெடி (தயார்) பண்ணி, வாரண்ட்டி கார்டு-உம்
கொண்டு வரேன். அது வர நீங்கள்-உம், மேடம்-உம்
ஏதாவது வேணுமா-ன்னு பாருங்க
Ragu & Raji: Saringa.
Ragu&Raji: Ok.
ரகு & ராஜி : சரிங்க.
Virpanaiyaalar: Indhaanga Sir, unga Bill-um, warranty card-um. Fridge pack panni ready aayiruchchu. Innum rendu mani naeraththula unga veettu-kku vandhurum.
Salesman: Here is your bill and warranty card. Your fridge is packed and ready for
dispatch. It shall reach your home within two hours.
விற்பனையாளர்: இந்தாங்க சார், உங்க ரசீதும், வாரண்ட்டி கார்டு-உம். ஃபிரிஜ் பேக்
பண்ணி ரெடி ஆயிருச்சு. இன்னும் ரெண்டு மணி நேரத்துல உங்க
வீட்டு-க்கு வந்துரும்.
Ragu: Anuppi vainga. Naanga kilamburoam.
Ragu: Send it. We are leaving
ரகு: அனுப்பி வைங்க. நாங்க கிளம்புறோம்
Virpanaiyaalar: Nandri sir. Adikkadi enga kadai-kku vaanga.
Salesman: Thanks sir. Visit our shop frequently.
விற்பனையாளர்: நன்றி சார். அடிக்கடி எங்க கடை-க்கு வாங்க.
Ragu: Kandippaa varoam.
Ragu: Oh! Sure.
ரகு : கண்டிப்பா வர்றோம்.