Conversation
Mom and Kavin
Uraiyaadal –Ammaavum Kavinum
உரையாடல் – அம்மாவும் கவினும்
Phone conversation between Mom and Kavin
CONVERSATION – 12
Mother AND SON
Phone conversation between Mother and son
Ammaa: Hello Kavin, ennadaa seira?
Mother: Hello Kavin, what are you doing?
அம்மா: ஹலோ கவின், என்னடா செய்ற?
Kavin: Ippa dhaan thoongi endhiruchchaen.
Kavin: Just now I woke up.
கவின்: இப்பதான் தூங்கி எந்திருச்சேன்.
Ammaa: Mani pathinonnu aagudhu. Yaen ivvalavu naeram-aa thoongittu irundha?
Mother: Now the time is 11’O clock. Why did you sleep so long?
அம்மா: மணி பதினொன்னு ஆகுது. ஏன் இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருந்த?
Kavin: Innaikku Sunday dhaana maa??!!
Kavin: Today is Sunday mom!!
கவின்: இன்னைக்கு சன்டே (ஞாயிற்றுக்கிழமை) தானா மா??!!
Ammaa: Oru vaaramaa poattu irundha dress ellaam thuvaikkaama appadiae irukkum-la,
adhellaam eppa thuvaikka poara?
Mother: The week’s used clothes will be there right? When are you going to wash them?
அம்மா: ஒரு வாரமா போட்டு இருந்த டிரஸ் (உடை) எல்லாம் துவைக்காம
அப்படியே இருக்கும்ல. அதெல்லாம் எப்ப துவைக்க போற?
Kavin: Naeththu saayandhiram college-la irundhu seekkiramaavae vandhuttaen.
Vandhadhum ellaaththaiyum thuvaichchittaen.
Kavin: Yesterday evening I came very soon from college. I washed everything.
கவின்: நேத்து சாயந்திரம் காலேஜ்ல (கல்லூரி) இருந்து சீக்கிரமாவே வந்துட்டேன்.
வந்ததும் எல்லாத்தையும் துவைச்சிட்டேன்.
Ammaa: Nee saapputtiyaa?
Mother: Did you eat?
அம்மா: நீ சாப்புட்டியா?
Kavin: IllAmmaa, inimael dhaan kulichchittu saappudanum. Enakku konjam panam
vaenum. Anuppa mudiyumaa?
Kavin: No mom. I have to take bath and eat. I need some money. Can you send it?
கவின்: இல்லம்மா, இனிமேல்தான் குளிச்சிட்டு சாப்புடனும். எனக்கு கொஞ்சம் பணம்
வேணும். அனுப்ப முடியுமா?
Ammaa: Edhukku?
Mother: What for?
அம்மா: எதுக்கு?
Kavin: Varra pudhankizhama enga college-la cultural program irukku. Adhukku
rendaayiram ruvaa kudukkanum.
Kavin: There is a cultural program in our college coming Wednesday. For that, I
have to give two thousand rupees.
கவின்: வர்ற புதன்கிழம எங்க காலேஜ்ல கல்சுரல் ப்ரோக்ராம் (கலாச்சார நிகழ்ச்சி)
இருக்கு. அதுக்கு ரெண்டாயிரம் ருவா குடுக்கணும்.
Ammaa: Ennenna events (nigazhchchi) irukku?
Mother: What are the programs?
அம்மா: என்னென்ன நிகழ்ச்சி இருக்கு?
Kavin: Music and speech competition, drama and dance.
Kavin: Music, speech competition, drama and dance.
கவின்: மியூசிக் (இசை) & ஸ்பீச் காம்பெட்டிசன் (பேச்சு போட்டி), டிராமா ( நாடகம்)
மற்றும் டான்ஸ் (நாட்டியம்).
Ammaa: Nee edhavathu poattiyila saendhu irukkiyaa?
Mother: Are you participating in any competition?
அம்மா: நீ ஏதாவது போட்டியில சேந்து இருக்கியா?
Kavin: AamaAmmaa. Shakespeare paththi oru speech kudukka poaraen. Namma
veettula avara paththi oru book (puththagam) irukku-la?
Kavin: Yes mom. I have to give a speech about Shakespeare. We have a book about
him in our home, isn’t it?
கவின்: ஆமாம்மா. ஷேக்ஸ்பியர் பத்தி ஒரு ஸ்பீச் குடுக்க போறேன். நம்ம வீட்டுல
அவரை பத்தி ஒரு புக் (புத்தகம்) இருக்கு-ல??
Ammaa: Aamaa. Nee ettaavadhu padikkum bodhu school-la (palli) unakku parisaa
kuduththa book irukku. Anupavaa?
Mother: Yes. When you studied eighth standard, the book you were gifted in school.
Shall I send it?
அம்மா: ஆமா. நீ எட்டாவது படிக்கும்போது ஸ்கூல்ல (பள்ளி) உனக்கு பரிசா குடுத்த
புக் இருக்கு. அனுப்பவா?
Kavin: VaendaAmmaa. Ennoada friend (nanban) oorukku vandhu irukkaan, naan avana namma veettukku vara solraen, neenga avan kitta puththagaththa kuduththu
vidunga.
Kavin: No mom. My friend has come to town, I will tell him to come to our house, and
you give that book to him.
கவின்: வேண்டாம்மா. என்னோட ஃப்ரெண்ட் (நண்பன்) ஊருக்கு வந்து இருக்கான்,
நான் அவனை நம்ம வீட்டுக்கு வர சொல்றேன், நீங்க அவன் கிட்ட புத்தகத்த
கொடுத்து விடுங்க.
Ammaa: Saridaa. Unakku snacks , fruits ellaam kuduththu vidavaa?
Mother: Shall I send snacks and fruits with him?
அம்மா: சரிடா. உனக்கு ஸ்நாக்ஸ் (சிற்றுண்டி), ஃப்ரூட்ஸ் (பழங்கள்) எல்லாம் குடுத்து
விடவா?
Kavin: Irunga, naan avan kitta paesittu solraen.
Kavin: I will discuss with him and tell you.
கவின்: இருங்க, நான் அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன்.
Kavin: Hello David, nee eppo kilambura?
Kavin: Hello David, when are you leaving?
கவின்: ஹலோ டேவிட், நீ எப்போ கிளம்புற?
David: Naalu mani-kku. Edhukku kaekura?
David: At 4’O clock. Why are you asking?
டேவிட்: நாலு மணிக்கு. எதுக்கு கேக்குற?
Kavin: Enga veettula Shakespeare book irukku. Naan Cultural programme-la speech kodukka andha book enakku vaenum. En veettukku poi adha vaangittu vara unakku naeram irukkumaa?
Kavin: We have Shakespeare book in my home. I need that book for the speech in the
culturals. Do you have time to go my home and collect it?
கவின்: எங்க வீட்டுல ஷேக்ஸ்பியர் புக் இருக்கு. நான் கல்சுரல் ப்ரோக்ராம்ல ஸ்பீச்
கொடுக்க அந்த புக் எனக்கு வேணும். என் வீட்டுக்கு போயி அதை
வாங்கிட்டு வர உனக்கு நேரம் இருக்குமா?
David: Oh! Dhaaralamaa poittu varaen. Eththana manikku poaganum?
David: Yes sure I will go. At what time should I go there?
டேவிட்: ஓ! தாராளமா போயிட்டு வரேன். எத்தன மணிக்கு போகணும்?
Kavin: Oru mani naeram kazhichchi po. Enga Ammaa snacks vaangi vachchu
iruppaanga. Adhaiyum saeththu vaangikko. Appuram panam naalaayiram ruvaa kudupaanga. Sariyaa?
Kavin: Go after an hour. My mom would buy snacks. Get that too. Then she will give
four thousand rupees, Ok?
கவின்: ஒரு மணி நேரம் கழிச்சி போ. எங்க அம்மா ஸ்நாக்ஸ் வாங்கி வச்சு
இருப்பாங்க. அதையும் சேத்து வாங்கிக்கோ. அப்புறம் பணம் நாலாயிரம் ருவா
குடுப்பாங்க. சரியா?
David: Saridaa. Ammaa kudukkura ellaaththaiyum vaangittu varaen.
David: Ok. I get everything mom gives.
டேவிட்: சரிடா. அம்மா குடுக்குற எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன்.
Kavin: Thanks (nandri) daa.
Kavin: Thanks.
கவின்: தாங்க்ஸ்(நன்றி) டா.
Kavin: Ammaa, David sarinnu sollittaan. Innum oru mani naeraththu-la
namma veettukku varuvaan. Avan kitta book, snacks, ruvaa kuduththu
vidunga.
Kavin: Mom, David said ok. He will come to our home within an hour. You give the book, snacks and Money to him.
கவின்: அம்மா, டேவிட் சரின்னு சொல்லிட்டான். இன்னும் ஒரு மணி நேரத்து-ல
நம்ம வீட்டுக்கு வருவான். அவன் கிட்ட புக், ஸ்நாக்ஸ், ருவா குடுத்து
விடுங்க.
Ammaa: Ruvaa evvalavu kuduththu vidanum?
Mother: How much you need?
அம்மா: ருவா எவ்வளவு குடுத்து விடணும்?
Kavin: Friends ellaam saendhu orey color-la sattai edukkalaam-nu irukkoam.
Adhoada en selavukkum saeththu naalaayiram ruvaa kuduththu vidunga.
Kavin: We, all friends have decided to buy same color shirt. Please add my expenses
and give me four thousand rupees.
கவின்: ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேந்து ஒரே கலர்ல (நிறம்) ஷர்ட் (சட்டை)
எடுக்கலாம்முன்னு இருக்கோம். அதோட என் செலவுக்கும் சேத்து நாலாயிரம்
ருவா குடுத்து விடுங்க.
Ammaa: Sari, kuduththu viduraen. sikkanamaa selavu pannu.
Mother: All right.Will give it. spend money very thriftily.
அம்மா: சரி, குடுத்து விடுறேன். சிக்கனமா செலவு பண்ணு.
Kavin: Sarimmaa. Paaththu sikkanamaa selavu pannurean.
Kavin: Ok mom. Will do.
கவின்: சரிம்மா. பாத்து சிக்கனமா செலவு பண்ணுறேன்.
Ammaa: Exam time table vandhuruchchaa?
Mother: Has the exam schedule arrived?
அம்மா: எக்ஸாம் டைம் டேபிள் (தேர்வு கால அட்டவணை) வந்துருச்சா?
Kavin: IllAmmaa. Innum oru vaaraththu-la varumaam.
Kavin: No mom. It will come within a week.
கவின்: இல்லம்மா. இன்னும் ஒரு வாரத்து-ல வருமாம்.
Ammaa: Sari. Cultural programme mudinja appuramaa, exam-kku nallaa prepare panu.
Mother: Ok. Prepare well for exam, after completing the cultural program.
அம்மா: சரி. கல்சுரல் ப்ரோக்ராம் முடிஞ்ச அப்புறமா, எக்ஸாமுக்கு நல்லா ப்ரிப்பேர்
(தயார்) பண்ணு.
Kavin: Sarimmaa. Shalini-ayum nallaa padikka sollunga.
Kavin: Ok mom. Tell Shalini to study well too.
கவின்: சரிம்மா. ஷாலினியையும் நல்லா படிக்க சொல்லுங்க.
Ammaa: Solraen da. Speech competition-kku All the best ! Nallaa pannu!
aduththa vaaram phone pannu.
Mother: I will tell her. All the best for speech competition. Good luck! Call me next
week.
அம்மா: சொல்றேன்டா. ஸ்பீச் காம்பெட்டிசனுக்கு ஆல் தி பெஸ்ட்! (வாழ்த்துக்கள்)
நல்லா பண்ணு! அடுத்த வாரம் போன் பண்ணு.
Kavin: Sari. Bye maa.
Kavin: Ok mom. I will call you. Bye.
கவின்: சரி, பை மா.
Ammaa: Bye da. Take care.
Mother: Bye. Take care.
அம்மா: பை டா. டேக் கேர் (கவனிச்சுக்கோ).